வியாழன், 29 ஜூலை, 2010

மத உணர்வுகளை அவமதித்தலும் தண்டனையும் .

''முன்னறிதல்'' , ''விருப்பம்'' இரண்டும் சேர்ந்து கருத்து ஆகிறது .
ஒருவர் தான் செய்யும் செய்கையிலிருந்து இயல்பாக எழக்கூடிய விளைவுகளை அறிவர் .ஒரு செயலின் விளைவை முன்னறிந்து ,அந்த விளைவை விரும்பி ,அவ்விருப்பத்தால் உந்தப்பட்டு செய்கையைச் செய்வது ''கருதியசெயல் '' எனப்படுகிறது .

கருதியசெயல் எதை அடையவேண்டும் என்று செய்யப்படுகிறதோ அதை நோக்கம் (MOTIVE) என்கிறோம் .நல்ல நோக்கத்துடன் செய்த குற்றமனச்செயல் ,நோக்கம் நல்லது என்பதற்காக சட்டம் மன்னிப்பதில்லை .
சில நேர்வுகளில் குற்றமனத்தை கருத்தில் கொள்ளாமலும் குற்றவாளியின் குற்றச்செயலை தண்டிக்கலாம்.
சுருக்கமாக'' குற்றமனத்துடன் புரிந்த முடிவடைந்த கருதியசெயல் குற்றம் ''என சட்டம் கூறுகிறது .

நம்ம இந்திய தண்டனைச்சட்டம் குற்றமனம் என்ற பதத்தை அப்படியே பயன்படுத்துவதில்லை.ஆனால் கருத்துடன், தன்னிச்சையாக, மோசடியாக, நேர்மையற்ற, இழிந்த,குரோதமான,வேண்டுமென்றே ...என்ற சொற்களை குற்றமனத்தினை குறிப்பிடும் வண்ணம் கூறுகிறது .

இந்தியாவிற்குள் குற்றம் செய்யும் ஒவ்வொருவரும் இந்திய தண்டனைச்சட்டத்தின் படி தண்டிக்கப்படுவர் . மற்றும் சில சட்டங்களில் வரும் பிரிவுகளின் படி இந்தியாவிற்கு வெளியிலிருந்து்ம் செய்யும் செயல்களுக்கும் தண்டிக்கப்படுவர்.இதில் இந்திய இறையாண்மைக்கு எதிரான செய்யும் தவறான செயல்கள் ,இணையதளத்தின் மூலம் செய்யும் தவறான செயல்கள் ஆகிய குற்றங்கள் அடங்கும் .

சட்டம் தெரியாது என்பது ஒரு எதிர்வாதமாகாது .அதனாற்காக மன்னித்து சட்டம் தண்டிக்காமல் இருப்பதில்லை .

மத உணர்வுகளை அவமதித்தல் ,அவதூறு,அவமதிப்பு,தொந்தரவு செய்தல்,பெண்ணை அவமதித்தல் ஆகியவற்றிற்கான தண்டனைகள் பற்றி சட்டம் கூறுவதை பார்க்கலாம் .
நமது அரசியல் சாசனம் சரத்து 25 முதல் 28 வரை கொடுக்கப்பட்ட உரிமைகள் வழிபாட்டுச்சுதந்திரம் ஆகும் .அதன் படி தான் விரும்பிய மதத்தை சர்வசுதந்திரமாக பின்பற்ற உரிமை உண்டு .ஒருவருக்கு மற்றவர் மதத்தை பழிக்க உரிமை கிடையாது .அவ்வாறு பழித்தல் ,அவமதித்தல் இந்திய தண்டனைச்சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும் .
கருத்துரிமையும் தண்டனையும் -2 .
தொடரும் ...

.
..

Download As PDF

7 கருத்துகள் :

cheena (சீனா) சொன்னது…

அன்பின் நண்டு

அருமை அருமை - சட்டத்தினை விளக்கும் முறை அருமை - என்ன வென்று தெரியாமலேயே பல குற்றங்களைச் செய்கிறோம் - தெரிந்தோ தெரியாமலோ தவறுகளை / குற்றங்களைச் செய்கிறோம்.

தொடர்க தொடர்க - அறிமுக இடுகை நன்று.

நல்வாழ்த்துகள் நண்டு
நட்புடன் சீனா

சாந்தி மாரியப்பன் சொன்னது…

நிறைய தெரிஞ்சுக்க முடியுது.. தொடருங்கள்.

Unknown சொன்னது…

அண்ணே நீங்களுமா?... போலி மதவாதிகள் முகத்திரை கிழிந்து தொங்கிக் கொண்டுதான் இருக்கிறது கேசு போட ஆள் இல்லாமல்தான் இருக்கிறார்கள்..
முட்டாள்தனமான மதம் மனிதனை ஆண்டால் அவன் மதங்கொண்ட யானையாய் எல்லோரையும் சாகடிப்பான்...

முதலில் சிந்திக்க முயலுங்கள்... மதத்தை விட மனிதம் முக்கியம்.. நல்ல மனிதனாக இருப்பதே சரி.. மதத்தை சட்டங்களை விட சர்வ வல்லமை கொண்ட கடவுள்கள்? காப்பார்கள்....

priyamudanprabu சொன்னது…

தொடர்க

Nathanjagk சொன்னது…

ஏன் சட்டம் தெரியாது என்பது எதிர்வாதமாகக் கூடாது?
நல்ல விவாதம். கச்சேரி களை கட்டுகிறது.
தொடர வாழ்த்துக்கள்!

NO சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

தங்களின் வருகைக்கும் ,பின்னூட்டத்திற்கும்
மிக்க மகிழ்ச்சி
cheena (சீனா)@
அமைதிச்சாரல் @
கே.ஆர்.பி.செந்தில் @
பிரியமுடன் பிரபு @
ஜெகநாதன்@
NO
அவர்களே ,
மிக்க நன்றி .

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "