ஞாயிறு, 11 ஜூலை, 2010

சுழிய சூனியம்.

சுழிய
மாய வெளியில்
சுற்றித்திரிந்து

வானவில்லில்
கருமை காண புறப்பட்ட
கவுதாரியின் இச்சை

ஊர்ந்து ஊர்ந்து
ராவுகளின்
ஏகாந்த வெளியில்

உந்தன்
பிம்பம் பிம்பமாய்
சுற்றிப்பார்க்கும்

எங்கும்எங்குமான
என்
சூனியம்

.


.


.

Download As PDF

16 கருத்துகள் :

ரோகிணிசிவா சொன்னது…

நல்லா இருக்குங்க ,ஆனா புரியல ,போன கவிதை மாதிரி ,ஹெவி சிலபஸ்

சௌந்தர் சொன்னது…

உந்தன்
பிம்பம் பிம்பமாய்
சுற்றிப்பார்க்கும்//

நல்ல வரிகள்....

தேவன் மாயம் சொன்னது…

மாய வெளியில் உலவும் வரிகள்!!!நல்லா இருக்கு!!!

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

கவிதை அருமை. தனிமையில் அன்பே உன்னைத் தேடுகிறேன். சுற்றிசுற்றி எங்கு காணினும் நீ இல்லாத வெறுமைதான் மிஞ்சுகிறது.

வரிகள் அருமை. நல்லாருக்கு கவிதை.

ஜோதிஜி சொன்னது…

கிராமத்து வாசனையை முயற்சித்துப் பாருங்களேன்.

அம்பிகா சொன்னது…

\\தனிமையில் அன்பே உன்னைத் தேடுகிறேன். சுற்றிசுற்றி எங்கு காணினும் நீ இல்லாத வெறுமைதான் மிஞ்சுகிறது.\\
கவிதை நல்லாயிருக்கு.

cheena (சீனா) சொன்னது…

அன்பின் நண்டு

கவிதை அருமை - சுழியத்தில் சூனியமாய்ச் சுற்றி, ஒன்றும் காணாமல், வெறுமையினைக் கண்டு புலம்புவது அருமை. நன்று நன்று

நல்வாழ்த்துகள் நண்டு
நட்புடன் சீனா

Unknown சொன்னது…

கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கு ...

ஹேமா சொன்னது…

தேடல் ..மிஞ்சியது சூன்யம்தான்.
நல்லாயிருக்கு.

நேசமித்ரன் சொன்னது…

//வானவில்லில்
கருமை காண புறப்பட்ட
கவுதாரியின் இச்சை//

இன்மையை நிராசையை அதில் இருக்கும் இருப்பின் மீதானப் புனைவை பேசியிருக்கும் வரிகள் நன்று

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

On 12/07/2010 06:18, Sengai Podhuvanar செங்கைப் பொதுவன் \ பொதுவன் அடிகள wrote:


சுழிய
மாய வெளி
சூன்யம்

சூழ், சூழல், சூழ்ந்திருப்பவை போன்றவற்றைச் சுழித்துக் காண்டுவதால் 'சுழியம்' தமிழ். சூன்யம் என்பது இதன் வடமொழி வடிவம்.

அண்டத்திற்குள்ளும் அண்டத்துக்கு அப்பாலும் உள்ள மாய வெளியை நினைவூட்டிய தங்களின் குறும்பா நன்று.

அன்புள்ள

பொதுவன் அடிகள
22, 13-வது தெரு, தில்லை கங்கா நகர், சென்னை 600 061

Dr.Sengai Podhuvan
Phone: (91-44) 2267 0203 Cell (91) 99406 41510
http://ancient1tamil.wordpress.com/
www.tamiliyam.blogspot.com

சாந்தி மாரியப்பன் சொன்னது…

//வானவில்லில்
கருமை காண புறப்பட்ட
கவுதாரியின் இச்சை//

சூன்யத்தில் தன்னைக்காண விழைந்து நிராசையான ஆசை..

கவிதை நல்லாருக்கு.

VELU.G சொன்னது…

அருமை மிகவும் ரசித்தேன்

பெயரில்லா சொன்னது…

shuzhiyam, soonyam ellamae ondrum illatha nilaiyai sollum varthaikal. varthai jalam mattumae enakku therikirathu. kavithayin karuporul (meetham ellavartraiyum vittu kavithayin saram) innum elithaga irukkalam. samaniya manitharukku thanae aiyya kavithai?

pichaikaaran சொன்னது…

superb

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

தங்களின்
வருகைக்கும் ,பின்னூட்டத்திற்கும்
மிக்க மகிழ்ச்சி
ரோகிணிசிவா@
சௌந்தர் @
தேவன் மாயம் @
Starjan ( ஸ்டார்ஜன் )@
ஜோதிஜி @
அம்பிகா @
cheena (சீனா)@
கே.ஆர்.பி.செந்தில் @
ஹேமா @
நேசமித்ரன்@
Sengai Podhuvanar செங்கைப் பொதுவன் \ பொதுவன் அடிகள @
அமைதிச்சாரல்@
VELU.G @
Anonymous @
பார்வையாளன்
அவர்களே,
மிக்க நன்றி .

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "