எனக்குத் தெரிந்தவரை நான் என் வாழ்நாளில் ஒரு பாமர காங்கிரஸ் தமிழரையும் இது வரை பார்த்ததே இல்லை .இன்னும் தெளிவாக கூறவேண்டும் என்றால் ஒரு ஏழை காங்கிரஸ்காரரை நான் இது வரை சந்தித்ததே இல்லை .அப்புறம் காங்கிரஸுக்கு எப்படி ஓட்டு விழுதுனா . தமிழகத்தில் உள்ள எந்த ஒரு காங்கிரஸ் தலைவரையும் நம்பியோ ஆதரித்தோ இங்குள்ள யாரும் காங்கிரஸுக்கு ஓட்டுப்போடுவதில்லை .காங்கிரஸுக்கு ஓட்டு விழுவது நேரு குடும்பத்திற்கே தவிர இங்குள்ளவர்களின் மீது நம்பிக்கை வைத்து கிடையாது .
தமிழர்கள் காங்கிரஸின் மீது எத்தகைய நம்பிக்கை வைத்திருந்தனர் என்பதனை இங்கு கட்டாயம் கூறியே ஆக வேண்டும் .எனது அன்பர் வழக்கறிஞர் கி.சிதம்பரம் அவர்கள் சிங்களன் தமிழன் மீது வெறுப்புடன் ஒட்டாமல் இருக்க பல காரணங்கள் வெளிப்படையாக தெரிந்திருந்தாலும் மறைமுகமான பல காரணங்களின் ஒன்று எது தெரியுமா ?என கேட்டார் .சொல்லுங்கள் என்றேன் .அவர் சொன்னது எனக்கு ஆச்சரியத்தை தந்தது .அது என்னவெனில் ,இனப்பிரச்சனைக்கு முன்பு இலங்கையில் நாம் சாதாரணமாக ஒரு தமிழர் வீட்டிற்குள்( இது ஏழை வீடானாலும் ,பணக்கார வீடானாலும்) சென்று பார்த்தால் அங்கு சாமி படம் இருக்குதோ ,இல்லையோ கட்டாயம் நேரு ,இந்திராகாந்தி ஆகியோரின் படங்கள் இருக்கும் .அந்த அளவிற்கு அவர்கள் இந்தியத்தலைவர்களை விரும்பினர் .அதனாலும் சிங்களர்கள் இவர்கள் இந்திய விசுவாசிகள் நமக்கு என்றும் எதிரிகள் என்ற மனேபாவத்திலே பார்க்க ஆரம்பித்ததும் ஒரு காரணம் என்றார் . இலங்கையில் உள்ள தமிழனே அவ்வளவு நம்பிக்கை வைத்திருந்த பொழுது இங்குள்ள தமிழன் எவ்வளவு நம்பிக்கையுடன் எதிர்பார்த்துள்ளான் என்பதை காங்கிரஸ் எண்ணிப்பார்க்கவேண்டும் .காங்கிரஸ் மீது நம்பிக்கை வைத்துள்ளனர் மக்கள். ஆனால், அதனை ஒருங்கிணைக்க இங்கு ஒரு மக்கள் தொண்டரும் இல்லை .தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்ற வேண்டுமானால் அப்படி ஒரு மக்களின் தொண்டரை இனம்காண வேண்டும் .காமராஜர் போல .
தமிழகத்தில் கோஷ்டிக்குத் தலைவர்கள் ஆவதையும் ,அதன் மூலம் பதவிகளில் அமரத்துடிப்பதுமாக இருக்கும் மக்கள் தொண்டர்களைப் பார்த்து பார்த்து பாமரன், காங்கிரஸ் மீது உள்ள தனது அபிப்பராயத்தை மாற்றி மாற்றி இப்பொழுது அதை பணக்கார கட்சியாகவே பார்த்து ஒதுங்க ஆரம்பித்துவிட்டான் .இந்த நிலை மாற வேண்டும் . அப்பொழுது தான் "கடந்த 40 ஆண்டுகளுக்கு மேல், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இல்லை. காங்கிரஸ் ஆட்சியை கொண்டுவர, நாம் தொடர்ந்து முயற்சிகளில் ஈடுபடுகிறோம். இது தாமதமானாலும், ஒருநாள் நாம் அதை செய்து முடிப்போம். இளைஞர் காங்கிரசில் உள்ள ஒருவர், வரும் காலத்தில் தமிழக முதல்வராக வரும் வாய்ப்புள்ளது,'' என, அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் பேசிய பேச்சு சாத்தியமாகும் .
. Download As PDF
Tweet |
|
24 கருத்துகள் :
காங்கிரஸ் தமிழ்நாட்டில் தனியாக நின்றால் 234 தொகுதியிலும் டெபாசிட் அவுட்டு.........
காங்கிரசின் சமாதிக்கு அடிக்கல் நடப்பட்டு விட்டது.காமராசரை அவமதித்தவர்கள் இன்றைய புது டில்லிக் காங்கிரசு என்பதைத் தமிழர்கள் மறக்கவோ,மன்னிக்கவோ மாட்டார்கள்.தமிழனுக்கு எதிரி காங்கிரசு என்பதே உண்மை.
காங்கிரஸ் என்று ஒரு கட்சி தமிழ்நாட்டில் இருக்கிறதா...? அது எல்லாம் ஒரு கட்சியா
நான் வரலைப்பா இந்த ஆட்டத்துக்கு....
எதுவும் சொல்றதுக்கில்லை
அடிமைகளா நாம் இங்கு கோபம் கொக்கரிக்கிறது எம் மனதில் சார் வந்து பாருங்க புரியும் http://marumlogam.blogspot.com/2010/12/blog-post_22.html
அரசியலா மீ எஸ்கேப்
அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா, இங்கு தான் அதைக்கே வழி இல்லையே அப்புறம் எங்கே இருந்து சித்தப்பா????
சரியோ தவறோ காங்கிரஸ் என்றால் அது தமிழர்களின் விரோதி என்றே ஆகிவிட்டது (ஈழத்தமிழர் விவகாரங்களுக்கு முன்னரே )
அவர்களும் அப்படித்தான் தங்களை வெளிபடுத்தியுள்ளனர்.
கடந்த 43 ஆண்டுகளுக்கு மேல்,
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில்இல்லை.
குறிப்பாக ராஜீவ் காந்தி மரணம் விடுதலை புலிகளால், தமிழர்களால் நடத்தப் பட்டதாக கருதி, அதற்கு பழி வாங்கும் நோக்குடன், தமிழகத்தையும் தமிழர்களையும் வஞ்சிக்க,பல முக்கிய உயிர்நாடி பிரச்சினைகளில் பாராமுகத்துடன் இருப்பதோடன்றி, வேண்டுமென்றே பழி வாங்கும் நோக்குடன் முல்லை பெரியாறு, காவேரி நீர் பகிர்வு உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் அமல்படுதாமை மற்றும் அரசு கெஜட்டில் வெளியிடாமல் பழிவாங்குதல், கட்ச தீவு தாரை வார்த்ததோடன்றி, இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை தாக்குவதை தமக்கு சம்பந்தமில்லாததை போன்று காங்கிரசும் மத்திய அரசும் வேடிக்கை பார்ப்பதோடு, எப்படியாவது தமிழகமும், தமிழர்களும் அழிய வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டு, பாலாற்றின் குறுக்கே அணை கட்ட ஆந்திராவுக்கு அனுமதியளித்தால், முல்லை பெரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்ட சம்மதித்தால் என மற்றவர்களுக்கு சாதகமாக இருந்து வருகிறது
http://saigokulakrishna.blogspot.com/2010/12/blog-post_22.html
ஏங்க.. மத்தியில சுருட்டுனது போதாதாமா ? இங்க அதுக்கு நிறைய
பேரு இருக்காங்க
இதையும் கேளுங்க சகோதரா.. ஈழப் பிரச்சனையை பற்றி கதை விடும் ராகுல் ஈழத்தில் தந்தை கொன்ற தமிழருக்கு ஒன்றுமில்லை ஆனால் அவர்களால் கொல்லப்பட்ட தந்தைக்கு மட்டும் நிஜாயம் வேண்டுமாம்...
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
மறக்கப்பட்ட பிரபல பாடகர்கள் Boney M (கிறிஸ்மஸ் சிறப்பு பதிவு)
//சாமி படம் இருக்குதோ ,இல்லையோ கட்டாயம் நேரு ,இந்திராகாந்தி ஆகியோரின் படங்கள் இருக்கும் .அந்த அளவிற்கு அவர்கள் இந்தியத்தலைவர்களை விரும்பினர் /
நம்பவே முடியல ..!!!
அரசியலுக்கு எத்தனை நாக்கு !
//காங்கிரஸ் என்றால் அது தமிழர்களின் விரோதி என்றே ஆகிவிட்டது (ஈழத்தமிழர் விவகாரங்களுக்கு முன்னரே )
அவர்களும் அப்படித்தான் தங்களை வெளிபடுத்தியுள்ளனர்//
ஒரு விதவை எம் இன பெண்களையெல்லாம் விதவை ஆக்கிய கொடூரத்தை எப்படி மறப்பது?
தமிழனுக்கு எதிரி காங்கிரசு என்பதே உண்மை.
உங்கள் பதிவைப் படித்தால் தெரியும். காங்கிரஸ் என்ற கட்சி தமிழகத்தில் இல்லை. அது ஒரு இந்திய தேசிய காங்கிரசின் கிளை. தலைமையிடம் டெல்லி. அதை ஆட்டுவிப்பவர்கள் வட்விந்தியர்கள்.
மேலும், இந்தக்கிளையின் தமிழகப்பிரதினிதிகள், டெல்லியில் பதவுகள் பெற்று சுக வாழ்க்கை, அல்லது பேரும் புகழும் இந்தியா, உலகமுழுக்க, சிதம்பரம் போன்று, வாழவே ஆசைப்படுகிறார்க்ள். முடியவில்லையென்றால், அங்கு அவரைத்தெரியும் இவரைத்தெரியும் என்று ஏமாற்றவும், எம்.பி பதவிகளைப்பெற்று ஏதாவது கமிட்டியில் சேர்ந்து ஐந்தாண்டு சுகம் அனுபவிப்பதிலேயே இருப்பதால், இவர்க்ளுக்கும் தமிழகத்துச் சாதாரண தமிழனுக்கும் தொடர்பில்லாமல் போக, காங்கிரஸ் ஒரு கற்பனைக்கட்சி அதாவது ஏட்டுச்சுரைக்காய் என்றளவில் இருக்கிறது.
இவற்றுக்கெல்லாம் மேலே, இங்கே பலர் சொன்னதுபோல, தமிழர்கள் நலத்தில் காங்கிரசுக்கு அக்கறையில்லை.
எனவே, காங்கிரஸ் என்றுமே இனி தமிழகத்தில் வராது. கூட்டணி சேர்ந்து கொஞ்சம் பொறுக்கலாம். தனித்து நின்றால், டெபாசிட் காலி.
ஒரு டம்மி பீசுக்கு இவ்வளவு வெளம்பரம் தேவையா?
//டம்மி பீசுக்கு இவ்வளவு வெளம்பரம் தேவையா?//
Repeat
Congress has betrayed the trust and love reposed in it for several decades now. It has helped, guided, assisted and supervised the racist and fanatical Srilankan Forces to conduct the shockingly horrid and horrible genocide on Eezham Thamizhs. The hands of Sonia are stained and drenched in the blood of thousands and thousands of innocent Thamizhs which include innocent civilian people like pregnant women, teachers, students, youth, aged, sick, injured, hospitalized, surrendered, physically handicapped, mentally ill, children of tender years etc. The looting, arson, maiming, violence and inhuman atrocities that followed have not yet been sufficiently revealed to the World at large and it is the Congress Indian Government that is shielding the Hitler of modern times, Rjapakse till date.
Can the Thamizhs of Thamizh Nadu ever forget that ?
அரசியலில் ஆதாயம் கருதி ----கூட கழுவி விடுவார்கள் இவர்கள். தமிழ் நாட்டில் இருக்கும் ஒவ்வொரு குடிசையிலும் ராகுல் போயி படுத்து எழுந்தாலும் தமிழ் நாட்டில் காங்கிரஸ் தனியாக கரையேற முடியாது. அதற்க்கு பாடை கட்டி 40 வருடங்களுக்கு மேலாகி விட்டது.
//நான் வரலைப்பா இந்த ஆட்டத்துக்கு....
எதுவும் சொல்றதுக்கில்லை//
REPEATTTTUUUUUUU
>>>காங்கிரஸுக்கு ஓட்டு விழுவது நேரு குடும்பத்திற்கே தவிர இங்குள்ளவர்களின் மீது நம்பிக்கை வைத்து கிடையாது .
ரொம்ப சரி.ஆனா இனி இது தொடராதுன்னு நினைக்கறேன்
//ஒரு டம்மி பீசுக்கு இவ்வளவு வெளம்பரம் தேவையா? //
சிம்பிள்.... செந்தில் ஜீ தி கிரேட் :)))
எனது வலைப்பூவிற்கு வருகை தந்து
தமிழ்மணம் மற்றும் இன்ட்லி யில் வாக்களித்தவர்களுக்கும்
பின்னூட்டமிட்டவர்களுக்கும்
எனது மனமார்ந்த நன்றி கலந்த வணக்கத்தை
தெரிவித்துக்கொள்கிறேன் .
கருத்துரையிடுக
" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "