அறுவைச்சிகிச்சை செய்யும்போது நோயாளி் பிழைக்காவிட்டாலும் அல்லது நோயாளிக்கு வேறு தீங்கு ஏற்பட்டாலும் மருத்துவர் தூக்கிலிடப்படுவர் அல்லது தண்டிக்கப்படுவர் என்ற அவலம் இருந்து வந்ததால் மருத்துவர்கள் அறுவைச்சிகிச்சை மருத்துவத்தினின்று விலகினர் 16 ம் நூற்றாண்டு வரை. மேலும் மிரட்டல் ,தாக்குதல் , கொன்றுவிடும் வழக்கங்கள்இருந்ததாலும் மருத்துவர்கள் அறுவைச்சிகிச்சை மருத்தும் செய்ய பயந்தனர் . மேலும் அறுவைச்சிகிச்சை மருத்துவர்கள் அரசாங்கத்திலுள்ள உயர் அதிகாரிகளுக்கு முடிவெட்டல் மற்றும் முகச்சவரம் செய்தல் போன்ற பணிகளும் செய்யவேண்டும் என்ற கட்டளைக்கும் பணியவேண்டியிருந்தது.இதன் விளைவாக இத்துறை இழிவான செயல் என்று கருதவேண்டிய சூழ்நிலை ஏற்படவே இக்கலை அழிய நேரிட்டது . வேறு வேலை செய்யும் நாவிதர்கள் ,செருப்புத்தொழில்செய்பவர் தான் இந்தத் தொழிலை செய்தனர் .16ம் நூற்றாண்டு வரை இது தொடர்ந்தது .
பிரான்சில் ஏழை நாவிதக்குடும்பத்தில் 1510 ல் பிறந்த
ஆம்ரோஸ் பாரி என்பவரின் அயராத முயற்சியினால் அறுவைச்சிகிச்சை மருத்துவம் உயிர் பெற்று உயர்வு பெற்றது .
அறுவைச்சிகிச்சை மருத்துவர்கள் குற்றவாளிகள் அல்ல ,
அவர்கள் மக்களின் சேவகர்கள் என்ற உணர்வினை தனது அயராத நிகரில்லாத சேவையின் முலம் உலகிற்கு உணர்த்தினார் .
ஆதலால்
ஆம்ரோஸ் பாரி அவர்கள்
அறுவைச்சிகிச்சை மருத்துவத்தின் தந்தை எனப்போற்றப்படுகிறார் .
இன்றைய மருத்துவத்துறையையும் ,மருத்துவர்களின் அர்ப்பணிப்பையும்
நினைத்துப் பார்க்கையில்...
. Download As PDF
Tweet |
|
8 கருத்துகள் :
இண்ட்ரஸ்டிங்...
இன்றைய அறுவை சிகிச்சை நிபுணர்களில் பெரும்பாலோர் [.அதாவது 85%]..நோயாளியிடமிருந்து எவ்வளவு அறுவடை செய்யலாம் என்பதில்தான் நிபுணர்களாகத்தான் இருக்கின்றனர்.
ஆம்ரோஸ் பாரி அவர்கள் "நவீன" அறுவைச்சிகிச்சை மருத்துவத்தின் தந்தை என கருதப்படுகிறார்.
பொதுவாக அறுவை சிகிச்சை என சொல்லமுடியாது.
ஏன்னா நம்ம பாட்டன் சுஸ்ருதா இருக்காப்ல, இல்லையா...
தகவலுக்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
தகவலுக்கு நன்றி
நல்ல தகவல்
தகவலுக்கு நன்றி! :-)
எனது வலைப்பூவிற்கு வருகை தந்து
தமிழ்மணம் மற்றும் இன்ட்லி யில் வாக்களித்தவர்களுக்கும்
பின்னூட்டமிட்டவர்களுக்கும்
எனது மனமார்ந்த நன்றி கலந்த வணக்கத்தை
தெரிவித்துக்கொள்கிறேன் .
கருத்துரையிடுக
" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "