சிங்கள மொழியில் மாத்திரமே இனி தேசிய கீதம்! - மஹிந்த ராஜபக்ச .
மதிப்பிற்குரிய இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ச அவர்களே உங்களின் இந்த அறிவிப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது .நான் இது போன்று மேலும் உங்களிட்ம் எதிர்பார்க்கின்றேன் .அதையும் செய்துவிடுங்கள் இலங்கையின் மதம் புத்தம் அதனால் மற்ற மதத்தினர் அனைவரும் உடனே புத்தத்திற்கு மாறவேண்டும் என்றும் .அனைத்து மத வழிபாட்டு மையங்களையும் புத்த பிக்குகளின் கையில் ஒப்படைக்கவேண்டும் என்றும் ஆணையிடுங்கள் .இது தான் மிகசரியாக இருக்கும் .இதையும் செய்வீர்கள் என நம்புகிறேன் .
உங்களை நான் மிகப்பெரிய ராஜதந்திரி என நினைத்திருந்தேன் .ஆனால் தாங்கள் ஏன் இப்படி ஆகிவிட்டீர் என்றுதான் தெரியவில்லை .உலக நாடுகளின் பார்வைக்கு புலிகளை தீவிரவாதிகளாக ஆக்கி நீங்களும் உங்களின் முன்னவர்களும் தமிழர்களை அடக்கி ஒடுக்கி வந்தீர்கள் .அனைவரும் அதையே நம்பினார்கள் . நீங்கள் அனைத்து உரிமைகளையும் தமிழருக்கு தந்தாலும் அவர்கள் போராடுகின்றனர் என இத்தனை நாள் கூறிவந்தீர் அதையும் அனைவரும் நம்பினார்கள் .ஆனால் ,இப்ப சிங்களத்தில தான் தேசியகீதம் இலங்கையில் பாடப்படும் என அறிவித்து உங்களின் உண்மை முகத்தை உலகிற்கு காட்டிவிட்டீரே ..இனிமே சர்வதேச சமுதாயத்தை எப்படி ஏய்ப்பீர்கள் ? .ஐ.நா .சபையில் எப்படி மனிதஉரிமைக்குரல் எழுப்பப்போகின்றீர்கள் ?.இத்தனை நாள் உங்களின் முன்னேர்கள் அணிந்திருந்த முகமூடியை நீங்கள் ஏன் கழட்டுனீர்கள் ? .
எது எப்படி இருந்தாலும் உம்மை நான் பாராட்டுகிறேன் .ஏனெனில் ,என்ன சென்னாலும் சிங்கள அரசை ஒரு அரசு தன் பிரசைகளுக்கு இப்படியெல்லாம் செய்யுமா ? .அதுவும் சுதந்திர நாட்டில .தமிழர்கள் தான் தப்பு செஞ்சுக்கிட்டு வர்ராங்கனு தங்களின் விரோதப்போக்கை காட்டிவந்த உலக நாடுகளுக்கு தாங்களே வெளிச்சம் போட்டு காட்டிவிட்டீர் .குற்றவாளி சிங்கள அரசு தான் என .சர்வதேச நீதிமன்றத்தில் குற்றவாளியாக தாங்கள் அறிவிக்கப்பட இது ஒன்றே போதும் .அதனால் தான் என்னால் தாங்கள் பாராட்டப்படுகின்றீர் . விரைவில் விசரணைக்கு தயாராகுங்கள் .
மக்களிடம் தாங்கள் இப்பொழுது விதைத்துள்ள ஒரு விதை என்னை மிகவும் கவர்ந்துள்ளது .அது ,இந்த தேசிய கீதம் உனது அல்ல என்பது. ஒரு தேசிய கீதம் ஒருவனுடையது அல்ல என்றால் அவன் தேசமும் அது அல்ல என்பது பொருள் . அப்படியெனில் தனது தேசத்தை அவன் சுட்டிக்காட்டிக்கொள்ள வேண்டும் அல்லவா.அப்பொழுது அவன் என்ன செய்வான் ? .விருட்சமாக வேர் ஊன்றுவான் . அதைத்தான் தமிழன் செய்யப்போகின்றான் .சோர்வுற்றிருந்தவனை வேர்விட்டு எழ வித்திட்ட உம்மை எமக்கு பிடிக்காமலா போகும் .
இருந்தாலும் ஒன்றை உம்மிடம் கூறிக்கொள்ள விரும்புகிறேன் .ஹிட்லருடன் உம்மை ஒப்பிட நினைத்தேன் .ஆனால் ,அது முடியாமல் போனது .ஏனெனில்,என்ன இருந்தாலும் ஹிட்லர் ஒரு வீரன் . நீ ஒரு கோழை .ஒரு கோழையை ஒரு வீரனுடன் எவ்வாறு ஒப்பிடுவது .
.............
சர்வதேச மக்களே ...
உங்களிடம் நான் முறையிடுகின்றேன் ...
மனிதப்பிறப்பால் நாம் எல்லொரும் சகோதரர்களே ...
இது உண்மை என்றால் நான் கூறுவதை செவிமடுத்து கேளுங்கள் ...
உங்களின் நாட்டில் ,உங்களின் தாய் மொழியில் ,உங்களின் தேசிய கீதத்தைத் தானே நீங்கள் பாடுகின்றீர்கள் ...
இது உண்மை தானே ...
உங்களின் நாட்டில் ,உங்களின் தாய் மொழியில் ,உங்களின் தேசிய கீதத்தைத் பாடாதே என சென்னால் உங்களின் உணர்வு என்னவாக இருக்கும் ,நீங்கள் என்ன நினைப்பீர்கள் ,என்ன செய்வீர்கள் ...
சற்றே ஒரு நிமிடம் எனக்காக சிந்தியுங்கள்...
நம்மைப்போற்று தானே தமிழனும் மனிதன் ...
நாம் கற்பனை செய்யமுடியாத துயரத்தை அவன் கஷ்டப்பட்டு சுமக்கின்றானே ...இது முறையா ? ...ஞாயமா ? ...
சிந்திப்பீர் உலக சமுதாயமே ....
சகோதரர்களே
ஒன்றுபட்டு குரல் கொடுப்போம் ...
இலங்கை அரசின் தமிழர் மீதான அடக்குமுறையை கைவிடச்செய்வோம் ...
அது வரை இலங்கையரசின் மீது பொருளாதாரத்தடை விதிக்க வேண்டி போராடுவோம் ...
உலகெங்கும் ....
சர்வதேச சமுதாயமாய் ...
அனைத்து பதிவர்களும் இதற்கான கண்டனத்தை தங்களின் வலைப்பூக்களில் பதியுமாறு கேட்டுக்கொள்கிறேன் .
. Download As PDF
Tweet |
|
20 கருத்துகள் :
சோர்வுற்றிருந்தவனை வேர்விட்டு எழ வித்திட்ட உம்மை எமக்கு பிடிக்காமலா போகும்'
உங்கள் துணிச்சலுக்கு பாராட்டுக்கள்
//இருந்தாலும் ஒன்றை உம்மிடம் கூறிக்கொள்ள விரும்புகிறேன் .ஹிட்லருடன் உம்மை ஒப்பிட நினைத்தேன் .ஆனால் ,அது முடியாமல் போனது .ஏனெனில்,என்ன இருந்தாலும் ஹிட்லர் ஒரு வீரன் . நீ ஒரு கோழை .ஒரு கோழையை ஒரு வீரனுடன் எவ்வாறு ஒப்பிடுவது .//
சரியான சாட்டையடி வரிகள்...
தொடருங்கள்.........
கவலையான விடயமாக உள்ளது
இந்தச் செய்தி வந்து மூன்று நாளாகிறது.என்ன செய்ய முடியும்.புலம்பியபடிதான் இருக்கிறேன்.
இருக்கிறோம்.இலண்டனின் நடந்த அவமானத்தை ஏதோ ஒரு வழியில் தமிழன் தலையில் இறக்கியேதானே ஆவார்கள் சிவப்புத் துண்டுக்காரர்கள்.திரும்பவும் எங்கோ ஒரு மூலையில் ஆவேசத்தை முளைத்தெழ வைக்கும் நிகழ்வுகளே இவைகள் எல்லாம்.பொறுத்திருப்போம் !
குட் போஸ்ட் சார்
உங்களின் இந்தக் கட்டுரைக்கு எனது பாராட்டுக்கள். நான் ஒரு ஈழத் தமிழன், ஆனால், இதுவரை தமிழில் மறந்தும் கூட சிறீலங்கா தேசிய கீதத்தை நான் பாடியதில்லை. இனியும் அதனைப் பாடும் உத்தேசமில்லை. எனவே அதனை அவர்கள் சிங்களத்திலேயே வைத்துக் கொள்ளட்டும். மேலும், இன்று வெளிவந்த செய்திகளின்படி அப்படியான ஒரு முடிவு எடுக்கப்படவில்லையென சிங்கள அரசின் முஸ்லீம் அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ம்ம்ம் ஆதங்கம் கோபம் எல்லாம் புரிகிறது - என்ன செய்ய இயலும் நண்டு - பொறுத்திருக்க வேண்டியது தான்
நாம காட்டு கத்து கத்தினாலும் கேக்கவா போறாங்க
// .ஹிட்லருடன் உம்மை ஒப்பிட நினைத்தேன் .ஆனால் ,அது முடியாமல் போனது .ஏனெனில்,என்ன இருந்தாலும் ஹிட்லர் ஒரு வீரன் . நீ ஒரு கோழை .ஒரு கோழையை ஒரு வீரனுடன் எவ்வாறு ஒப்பிடுவது .//
இவைகளை ராஜா பக்சே படிக்க வேண்டும் என்று ஆசை. யாரவது சிங்களம் தெரிந்த தமிழர்கள் இதனை மொழி பெயர்த்து அந்த உலக மகா கோழைக்கு அனுப்புங்களேன் .
// .ஹிட்லருடன் உம்மை ஒப்பிட நினைத்தேன் .ஆனால் ,அது முடியாமல் போனது .ஏனெனில்,என்ன இருந்தாலும் ஹிட்லர் ஒரு வீரன் . நீ ஒரு கோழை .ஒரு கோழையை ஒரு வீரனுடன் எவ்வாறு ஒப்பிடுவது .//
-:))
//ஒரு தேசிய கீதம் ஒருவனுடையது அல்ல என்றால் அவன் தேசமும் அது அல்ல என்பது பொருள் . அப்படியெனில் தனது தேசத்தை அவன் சுட்டிக்காட்டிக்கொள்ள வேண்டும் அல்லவா//
ரொம்ப சரியா சொன்னீங்க அண்ணா ..!
ரொம்ப தெளிவான பதிவு ..!!
arumaiyaana pathivu
anna unarchi ponkiya varigal
இருந்தாலும் ஒன்றை உம்மிடம் கூறிக்கொள்ள விரும்புகிறேன் .ஹிட்லருடன் உம்மை ஒப்பிட நினைத்தேன் .ஆனால் ,அது முடியாமல் போனது .ஏனெனில்,என்ன இருந்தாலும் ஹிட்லர் ஒரு வீரன் . நீ ஒரு கோழை .ஒரு கோழையை ஒரு வீரனுடன் எவ்வாறு ஒப்பிடுவது .
Hitlarodaya compar pannuringa ithu sariyana saattaiyadi.......
//.ஹிட்லருடன் உம்மை ஒப்பிட நினைத்தேன் .ஆனால் ,அது முடியாமல் போனது .ஏனெனில்,என்ன இருந்தாலும் ஹிட்லர் ஒரு வீரன் . நீ ஒரு கோழை .ஒரு கோழையை ஒரு வீரனுடன் எவ்வாறு ஒப்பிடுவது//
superb
//ஒரு கோழையை ஒரு வீரனுடன் எவ்வாறு ஒப்பிடுவது//
:)
உம்மை ஒப்பிட நினைத்தேன் .ஆனால் ,அது முடியாமல் போனது .ஏனெனில்,என்ன இருந்தாலும் ஹிட்லர் ஒரு வீரன் . நீ ஒரு கோழை .ஒரு கோழையை ஒரு வீரனுடன் எவ்வாறு ஒப்பிடுவது .
//
வாவ்... அருமை....
அருமையான பதிவு . சிங்களனுக்கு இனவெறி என்பது சர்வதேச சமூகத்திற்கு இப்போது புரிந்திருக்கும் இப்போது தான் மார்க்சிஸ்டு கம்மியுனிஸ்ட் களுக்கு சிங்கள இனவெறி புரிந்திருக்கு . ஏன் தமிழர்கள் ஆயுதம் எடுத்தார்கள் என்பதும் சர்வதேச சமூகத்திற்கு புரிய வைத்ததற்காக இனவெறியன் அரக்கன் ராஜ பக்சேவை பாராட்ட வேண்டும்
nalla pathivu nanbare,thamizh vaazha.
Well done, my friend. Well said. You have hit the nail on its head.
Everyone in the World knows the Singhalese fascism and nazism of Srilanka except the Thamizhs of Thamizh Nadu ! This chauvinism and horrid racial fanaticism has engulfed and corroded all institutions including the Constitution and other laws, the various political parties, government policies and schemes, media, legislative bodies, police, civic bodies, academic institutions, education, armed forces,even personal relationships of ordinary people etc. This enmity and desire to suppress and obliterate the Thamizh identity is continuously and constantly fuelled by powerful Buddhist monastries who decide the politics of Srilanka. Remember the World renowned library of Jaffna containing rare, precious and invaluable documents and artefacts which are nothing but World Heritage and wealth of Mankind being wilfully, wantonly and schemingly burned repeatedly and none taken to task.State sponsored, State patronized, State protected genocide and violence and enslaving of Thamizhs is nothing new there.
Although I disagree with your estimate of Hitler, I endorse your view that Rajapakse, by coming forward to strip himself of all the various varied and multihued masks of democracy he was forced to wear till now by the Government of India ,has helped Thamizhs to think about themselves afresh , their plight, their identity and their present and future.... I join you in applauding Rajapakse because, as you have rightly put it, he is atleast now candid and honest, unlike the hypocrites we see daily like Manmohan, Sonia, Karunanidhi, M.K.Narayanan, Shiva Sankara Menon, Chidambaram, The Hindu etc
It is time for Eezham Thamizhs to learn from Jews and also work internationally.
One more thing,such essays have to be translated and spread over in ALL the languages of the World so that people all over the World and the international human rights organizations come to know and understand the political aspirations of Eezham Thamizhs and the absolute need and indispensable necessity for a distinct, separate and safe homeland....
None can deny that the international community has before them an imperatively moral duty to prevent genocides and enslavement of people belonging to one race/ religion/language enslaving another...
Like thousands of freedom lovers all over the globe, I too hope and expect that Justice would touch the lives of Eezham Thamizhs soon ...
எனது வலைப்பூவிற்கு வருகை தந்து
தமிழ்மணம் மற்றும் இன்ட்லி யில் வாக்களித்தவர்களுக்கும்
பின்னூட்டமிட்டவர்களுக்கும்
எனது மனமார்ந்த நன்றி கலந்த வணக்கத்தை
தெரிவித்துக்கொள்கிறேன் .
கருத்துரையிடுக
" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "