இன்று
சமச்சீர் கல்வி என்றால் என்னவென்று ஓரளவிற்கு தெரியவந்துவிட்டது.ஆனால்,இன்னும் கல்வி சம்பந்தமாக விழிப்பு வரவில்லை.அதுவும் ஒரு ஜனநாயக
நாட்டில் எத்தகைய கல்வி இருக்கவேண்டும் என்ற விழிப்புணர்வு அரசியல்
தளத்தில் முதலில் இருக்கவேண்டும் என்பதுவே முக்கிமான ஒன்றாகும் .
இன்றைக்கு
நமக்கு சமச்சீர் கல்வி என்பதை விட பொதுக்கல்வியே மிகவும் அவசியமான
கட்டாயமான ஒன்று. ஆனால்,இதன் தேவை மற்றும் அவசியம் பற்றி எந்தவித
கவலையும்,பார்வையும் இல்லாமல் மக்களும், சமத்துவம்
, சகோதரத்துவம்,பகுத்தறிவு ,முதலாளி,தொழிலாளி ,ஒடுக்கப்பட்டவர் என , எதையாவது
கூறிக்கொண்டு ,அனுதினம் ,போராட்டத்தில் குதித்து, தாங்களை மக்களின் காவலர்களாக
காட்டிக்கொள்ளும் ,அனைத்து கட்சிகளும், இருப்பது அறியாமையிலா? இல்லை
,அனைத்திலும் பாசிச குணம் புகுந்துவிட்டதாலா ? என்பது ஆராயக்கூடிய விசயமாக
உள்ளது .
அறியாமையில் என்றால் உணர்த்தலாம்,
பாசிசம் என்றால் துரத்தி துடைப்பதைத்தவிர்த்து வேறு வழியே கிடையாது .
தீண்டாமை
ஒழிப்புக்காக காந்தி,பெரியார்,அம்பேத்கார் மற்றும் பல பெயர் தெரிந்த,தெரியாத தலைவர்கள் மற்றும் முகம் தெரியாத ,பாதிக்கப்பட்ட அனைவரின்
உயிர்,உழைப்பு ,கஷ்டம் மற்றும் கனவிற்கு மருந்தாக உள்ளது தான் நமது
அரசியலமைப்பு கூறும் கல்வி என்ற அடிப்படை உரிமை. அப்படிப்பட்ட அடிப்படை
உரிமையான கல்வியில், பொதுக்கல்வி முக்கியமான காரணியாக இருந்து நமது
அரசியலமைப்பு சட்டத்திற்கு மேலும் உயர்வு சேர்க்கிறது என்றால் அது
மிகையாகாது .
அடிப்படை உரிமை கல்வி என்னும் பொழுது
,
அனைத்து கல்வி நிலையங்களையும் ,அரசே நடத்த வேண்டும்.
அது தான் சரி,அது தான்
சட்டமும் கூறுகிறது.
அப்படி அரசே ஏற்று நடத்தும் பொழுது ,
அண்மைப்பள்ளியில்
தான் அனைவரும் படிக்கவேண்டும் .
அப்பொழுது தான் அனைவரும் ஒரே குடையின் கீழ்
படிப்பர்.
அப்படி குழந்தைகள் அரசு பள்ளிகளில் படிக்கும் பொழுது
,
குழந்தைகளின் மனதில் எத்தகைய ஜாதி மதபோதங்களும் இல்லாத காரணத்தினால்,அவர்கள்
இயல்பாகவே, தாங்கள் எந்தவித ஜாதி ,மத , தீண்டாமை பேதமின்றி,ஒருவருடன் ஒருவர்,நன்றாக
பழகி,
ஒரே தன்மையினராக வளர்வர்.
இவ்வாறு ஜாதி மத போதமின்றி ,தங்களுக்கிடையே
,தீண்டாமை என்னும் பாவங்கள் இன்றி ,ஒத்த மாணாக்கர்களாய் வளர்வர்.
அவ்வறு
அவர்களை வளர்த்தெடுப்பதன் மூலம் தான் ஜாதி,மத,தீண்டாமை என்னும் கொடுமைகளை
சமுதாயத்திலிருந்து மாய்க்கமுடியும்.
அதை விடுத்து
நாம்
ஜாதியை,மதத்தை மரமாக பள்ளியில் வளரவிட்டு ,
பின் அதனை சமுதாயத்தில் வெட்ட நினைப்பது
முட்டாள் தனமாகும் ,
5 ல் வளையாதது 50 ல் வளையாது .
ஜாதி,மத போதம்
ஒழியவேண்டும், தீண்டாமை ஒழிய வேண்டும் என நினைக்கும் மக்களின் காவலர்கள்
இதனை உணர்ந்து உடனே பொதுக்கல்வி என்னும் அனைவருக்குமான தரமான ஒரே கல்வியை
அமுல்படுத்த இணைந்து போராட வேண்டும் .
ஜாதி ,மதம் ஒழிந்தால்,வேற்றுமை என்ற ஒன்று இல்லாமலே போய்விடும்.
தீண்டாமை என்ற அறியாமை அகன்றுவிடும் .
குழந்தைகளை பாருங்கள் .....
அவர்களிடம் அன்பு என்ற ஒன்றைத்தவிர்த்து வேறு எதுவும் இருப்பது இல்லை .
நாமாவது
குழந்தைகளை குலம் தை யாக வளர்த்தாமல்
குழந்தைகளை குழந்தைகளாக வளர்ப்போமாக .
.
சற்றே மாற்றத்துடன் இது ஒரு மீள்வு.
அசலை இங்கே பார்க்க.