வியாழன், 26 ஜனவரி, 2017

எதிர்மறை எண்ணங்கள் .எண்ணிய எண்ணங்கள்
எதிர்மறையாய் வரும்பொழுது
எதிர்மறையில் சில எண்ணங்கள்
எழாமல் இருப்பதில்லை.

வளைந்து வளைந்து
பாதை சென்றாலும்
பாதை பாதையினின்று
வளைந்து சென்றதில்லை .

வளமான பாதையில்
சுழல நினைத்தாலும்
சுழலும் பாதையில் சுகம்கண்டதால்
வளமான வாழ்விற்கு வக்கில்லை.

எப்பொழுதும் எல்லோர்க்கும்
எப்பொழுதும்  வாய்ப்பதில்லை
எப்பொழுதென்பது  எப்பொழுது என்றாலும்
எப்பொழுதென்பது  எப்போதும் இங்கில்லை.

சோக ரேகை
மனதினில் தோன்ற
சோம்பல் ரேகை
முகத்தில் தொலைவதில்லை .

மறக்கும் எண்ணம்
நினைவினில் தோன்ற
நினைக்கும் எண்ணம்
மறப்பதை தொலைப்பதில்லை.

எதற்காகவோ வாழ்வு என்றாலும்
எதற்காக வென்பதே
நமக்காகும் போது
நமக்கா வென்பது ஏதும் இங்கில்லை.

இல்லை யென்பது
இங்கில்லை யென்றாலும்
இல்லை இல்லாமல்
இங்கொன்றும் இல்லை .

எண்ணிய எண்ணங்கள்
எதிர்மறை யென்றாலும்
எதிர்மறை எண்ணங்கள்
எண்ணாமல் முடிவதில்லை.

எப்படி யென்றாலும்,

எண்ணிய எண்ணங்கள்
எதிர்மறையாய் வரும்பொழுது
எதிர்மறையில் சில எண்ணங்கள்
எழாமல் இருப்பதில்லை.Download As PDF

12 கருத்துகள் :

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல பகிர்வு. நன்றி.

KILLERGEE Devakottai சொன்னது…

இரசித்தேன் நண்பரே அருமை
குடியரசு தின வாழ்த்துகள் நண்பரே
த.ம.2

கும்மாச்சி சொன்னது…

அருமையான பதிவு.

Chandravathanaa சொன்னது…

ரசித்தேன்

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

(சில சமயம்) உண்மை...

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

அருமையான வரிகள்..

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

யதார்த்தம். ரசித்தேன்.

வலிப்போக்கன் சொன்னது…

எண்ணிய எண்ணங்கள்
எதிர்மறையாய் வரும்பொழுது
எதிர்மறையில் சில எண்ணங்கள்
எழாமல் இருப்பதில்லை.---உண்மை....

வலிப்போக்கன் சொன்னது…

எண்ணிய எண்ணங்கள்
எதிர்மறையாய் வரும்பொழுது
எதிர்மறையில் சில எண்ணங்கள்
எழாமல் இருப்பதில்லை.---உண்மை....

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

உண்மைதான் நண்பரே
ரசித்தேன்

Unknown சொன்னது…

#சோக ரேகைமனதினில் தோன்ற
சோம்பல் ரேகை முகத்தில் தொலைவதில்லை#
அகத்தின் அழகு முகத்திலா :)

ஸ்ரீராம். சொன்னது…

புரிகிறது என்றுதான் நினைக்கிறேன்.

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "