சனி, 12 ஜூன், 2010

நேரு- ஹிட்லர் -சாப்ளின் -குழந்தைகள் வதை
நொரண்டு : வணக்கம் நண்டு .

நண்டு : வாங்க நொரண்டு .

நொரண்டு :வந்து

நண்டு : என்னப்பா

நொரண்டு : இல்ல இப்பவெல்லாம் வெளிநாட்டு உறவுகள் என்று கூறிக்கொண்டு நடக்கும் அரசியல் சந்திப்புகளில் மனிதநேயம் இல்லாதவர்கள் ,
கொலைகாரர் கூட பெரிய கனவான்களாக ......

நண்டு : ஹிட்லர் தெரியுமா. அவர் தான் உலகின் சக்கரவர்த்தி என்னும் முடிவுக்கு உலகம் வந்து கொண்டிருந்த நேரம் அது .அப்படித்தான் உலகிலுள்ள புல் பூண்டு கூட நினச்சுக்கிட்டுருந்துச்சு . நம்ம சென்னை மயிலாப்பூர்ல கூட ஜெர்மன் மொழி கத்துத்தரப்படுமுனு பள்ளியே ஆரம்பிச்சுட்டாங்க .

நொரண்டு : எதுக்கு ....?

நண்டு :ஹிட்லர் சென்னைக்கு வரும்பொழுது அவரின் மொழியில் வரவேற்கவேண்டாமா அதுக்கு .மக்களும் படிக்க ஆரம்புச்சுட்டாங்க .

நொரண்டு :அடுத்து சிங்களம் கத்துக்குவாங்களா ...?!

நண்டு :அட ,சொல்ல வர்ரத சொல்லவிடுப்பா .

நொரண்டு :சரி,சரி ...சொல்லுப்பா ..

நண்டு :அப்படியிருந்த காலகட்டத்தில் .சாப்ளின்னூ ஒரு நடிகர் இருந்தார் தெரியுமா ?

நொரண்டு :ஓ....அவரா...சிரிப்புகாட்டுவாரே .

நண்டு :அவரின் விசிறி இந்த ஹிட்லர் .

நொரண்டு :அட !!!!!

நண்டு :ஹிட்லர சந்திக்க உலகத்திலிருந்த அத்தனை தலைவர்களும் தவமா தவமிருந்தனர் .அப்படிப்பட்ட ஹிட்லர் சாப்ளினுக்கு செய்தி அனுப்புரார் .நான் உங்க விசிறி உங்கள நேருல பாக்கனுமுனு .

நொரண்டு :அப்படியா!!!!!!!!!!!!!!!!

நண்டு :சாப்ளினுக்கும் யூதர்களுக்கும் எந்தத்தொடர்பும் கிடையாது .ஆனா,ஹிட்லர் யூதர்களை இன அழிப்பு செய்து வந்த ஒரே காரணத்திற்காக சாப்ளின் அவரின் கோரிக்கைய நிராகரிக்கிறார் .அதோடு மட்டுமல்லாமல் அவ்விசயம் நடந்த சில நாட்களிலேயே 'தி கிரேட் டிக்டேட்டர் ' எனும் படம் எடுக்கிறார் .அதப்பாத்திட்டு ஹிட்லர் நான் உங்க பரம விசிறி நீங்க இப்படி எடுத்தது வேதனை தருதுனு கடிதம் போட்டாராம் .

நொரண்டு :அவ்வளவு உயர்ந்த மனிதரா சாப்ளின் ?!!!!!!!!!!!!!!!.
நம்மால்களா இருந்தா ..

நண்டு :ம்...நேருவுக்கும் கூட அவர் சிறந்த ஸ்காலர்னு தெரிஞ்சு சந்திக்க அழைப்பு விடுத்ததாகவும் இதே காரணத்திற்காகவே நேரு சந்திக்க மறுத்ததாகவும் எங்கோ படிச்ச ஞாபகம் .

நொரண்டு :அதனால் தான் அவங்கல்லாம் மனித மாணிக்கங்கள் .

நண்டு :நேருனு சொன்னதால

நொரண்டு :என்ன

நண்டு :நேத்து உலகக்கோப்பை கால்பந்து முதலாட்டம் பாக்கலாமுனு ஆவலா டீவி பாத்தப்ப

நொரண்டு : என்னாச்சு

நண்டு :அதுல வீரர்களை அறிமுகப்படுத்தும் போது அந்த சிறப்பு பெரிய மனிதர்கள் வீரர்களுக்கு முன் சிரித்த முகத்தொடு நின்று கொண்டிருந்த மழலைகளை ஏதோ செடிகளை கண்டு ஒதுக்கி விலக்குவது போல் விலகி வீரர்களுக்கு கை கொடுத்தது ஒரு மாதிரியா இருந்துச்சு . அந்த சிரித்த மழலைகளை தட்டிக்கொடுத்து கை கொடுக்கும் குறைந்த பட்சம் மனிதாபிமானம் கூட இல்லாத மாமனிதர்களாக இன்றைய மேல்தட்டு வாதிகள் .

நொரண்டு :என்னப்பா நாகரிகம் இது. இப்படி அரசு விழாக்களில் குழந்தைகளை நிற்கவைத்து வேதனைப்படுத்துவது .மனித உரிமைக்காவலர்கள் என்ன செய்யராங்கனே தெரியல ?.மனிந உரிமை ...மனித உரிமைனு .

நண்டு :இப்பவெல்லாம் உலகத்தில பிரதமர்களும் ,அதிபர்களும் முன்ன மாதிரியில்லப்பா.

நொரண்டு :என்ன செய்ய மனிதத்தை வதைக்கும் இந்த மக்களாட்சி மாமனிதர்களை .
... Download As PDF

22 கருத்துகள் :

cheena (சீனா) சொன்னது…

அன்பின் நண்டு

ஆதங்கம் புரிகிறது - சார்லி சாப்ளின் நேரு எல்லாம் இப்பொழுது இல்லை - அந்தக் கால கட்டமே வேறு - இப்பொழுது இருக்கும் சுழ்நிலையே வேறு - ஒப்பு நோக்க இயலாது.

கால் பந்தாட்டம் - அறிமுகம் - மழலைகள் ஒதுக்கப்பட்டது தவறான அஎயல் தான் - என்ன செய்வது - பிரபலங்களைச் சந்திக்க வேண்டுமெனில் இப்படித்தான் நடக்க வேண்டும்.

நல்ல சிந்தனை நண்டு
நல் வாழ்த்துகள்
நட்புடன் சீனா

சாந்தி மாரியப்பன் சொன்னது…

வருத்தப்படுவதை தவிர ஒன்றும் செய்ய முடியவில்லை :-((

தேவன் மாயம் சொன்னது…

அதுல வீரர்களை அறிமுகப்படுத்தும் போது அந்த சிறப்பு பெரிய மனிதர்கள் வீரர்களுக்கு முன் சிரித்த முகத்தொடு நின்று கொண்டிருந்த மழலைகளை ஏதோ செடிகளை கண்டு ஒதுக்கி விலக்குவது போல் விலகி வீரர்களுக்கு கை கொடுத்தது ஒரு மாதிரியா இருந்துச்சு . அந்த சிரித்த மழலைகளை தட்டிக்கொடுத்து கை கொடுக்கும் குறைந்த பட்சம் மனிதாபிமானம் கூட இல்லாத மாமனிதர்களாக இன்றைய மேல்தட்டு வாதிகள் .
///

ஆம் !!நிலை உயர உயர மனிதம் குறைந்துதான் போகிறது!

goma சொன்னது…

காலங்கள் மாற மாற எத்தனையோ நல்ல விஷயங்கள் காணாமல் போய்க்கொண்டிருக்கின்றன.

அதில் ஒன்று மனித நேயம்.

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
cheena (சீனா) அவர்களே
மிக்க நன்றி

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

மாற்றவேண்டும்
அமைதிச்சாரல் அவர்களே
மிக்க நன்றி

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

உண்மை தான்
தேவன் மாயம் அவர்களே
மிக்க நன்றி

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

ஆம்
goma அவர்களே
மிக்க நன்றி

மதுரை சரவணன் சொன்னது…

ஆதங்கம் புரிகிறது.வாழ்த்துக்கள்

ஹேமா சொன்னது…

அந்தக் குழந்தைகளின் மலர்ந்த முகத்தை
நானும் ரசித்தேன்.நீங்களும் சொல்கிறீர்கள்.
பக்கம் நின்றவர்கள் கண்களுக்குத்
தெரியவில்லை அந்தக் குழந்தைகள் !

மற்றைய தகவல்கள் எனக்குப் புதிது.
அறிந்துகொண்டேன்.நன்றி.

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
மதுரை சரவணன் அவர்களே
மிக்க நன்றி

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
ஹேமா அவர்களே
மிக்க நன்றி

பெயரில்லா சொன்னது…

நல்ல ஆதங்கம்,எனக்கு பிடித்திருந்தது.ஒட்டு போட்டு விட்டேன்.

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
ஒருவார்த்தை அவர்களே
மிக்க நன்றி

jillthanni சொன்னது…

சிந்திக்க வேண்டிய விசயம் தான்
நண்டு-நொரண்டு உரையாடல்கள் அற்புதமா இருக்கு
உங்கள் சமுதாய கோபம் புரிகிறது

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
jillthanni அவர்களே
மிக்க நன்றி

Unknown சொன்னது…

அது அப்ப.. இப்ப வெளில அடிச்சுக்குவோம் ..
உள்ளே கை குலுக்குவோம் ..
இப்போது அரங்கேறும் அனைத்தும் நாடகமே

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

நாடகம் பார்க்க
நாம் ஒன்றும் பார்வையாளர்கள் அல்லவே ...
கே.ஆர்.பி.செந்தில் அவர்களே
மிக்க நன்றி

pichaikaaran சொன்னது…

உங்கள் கோபம் புரிகிறது.... ஆனால் நேரு கொள்கை வீரர் என தோன்றவில்லை... எனினயும் இப்போதுள்ள தலைவர்களை விட அவர் நல்லவரே....

Swengnr சொன்னது…

சார் - நான் ஒரு புது பதிவர்.தயவு செய்து என்னுடைய வலைபக்கத்துக்கு ஒரு முறை வருகை தந்து ஒரு கமெண்ட் போடுங்க.
http://kaniporikanavugal.blogspot.com/ நன்றி!

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
பார்வையாளன் அவர்களே
மிக்க நன்றி

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

//நான் ஒரு புது பதிவர் //
வாழ்த்துக்கள் தோழாரே.
//தயவு செய்து என்னுடைய வலைபக்கத்துக்கு ஒரு முறை வருகை தந்து ஒரு கமெண்ட் போடுங்க. //
சரிங்க தோழரே .
தங்களின் வருகைக்கு
மிக்க நன்றி

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "