ஒருவர் தான் செய்யும் செய்கையிலிருந்து இயல்பாக எழக்கூடிய விளைவுகளை அறிவர் .ஒரு செயலின் விளைவை முன்னறிந்து ,அந்த விளைவை விரும்பி ,அவ்விருப்பத்தால் உந்தப்பட்டு செய்கையைச் செய்வது ''கருதியசெயல் '' எனப்படுகிறது .
கருதியசெயல் எதை அடையவேண்டும் என்று செய்யப்படுகிறதோ அதை நோக்கம் (MOTIVE) என்கிறோம் .நல்ல நோக்கத்துடன் செய்த குற்றமனச்செயல் ,நோக்கம் நல்லது என்பதற்காக சட்டம் மன்னிப்பதில்லை .
சில நேர்வுகளில் குற்றமனத்தை கருத்தில் கொள்ளாமலும் குற்றவாளியின் குற்றச்செயலை தண்டிக்கலாம்.
சுருக்கமாக'' குற்றமனத்துடன் புரிந்த முடிவடைந்த கருதியசெயல் குற்றம் ''என சட்டம் கூறுகிறது .
நம்ம இந்திய தண்டனைச்சட்டம் குற்றமனம் என்ற பதத்தை அப்படியே பயன்படுத்துவதில்லை.ஆனால் கருத்துடன், தன்னிச்சையாக, மோசடியாக, நேர்மையற்ற, இழிந்த,குரோதமான,வேண்டுமென்றே ...என்ற சொற்களை குற்றமனத்தினை குறிப்பிடும் வண்ணம் கூறுகிறது .
இந்தியாவிற்குள் குற்றம் செய்யும் ஒவ்வொருவரும் இந்திய தண்டனைச்சட்டத்தின் படி தண்டிக்கப்படுவர் . மற்றும் சில சட்டங்களில் வரும் பிரிவுகளின் படி இந்தியாவிற்கு வெளியிலிருந்து்ம் செய்யும் செயல்களுக்கும் தண்டிக்கப்படுவர்.இதில் இந்திய இறையாண்மைக்கு எதிரான செய்யும் தவறான செயல்கள் ,இணையதளத்தின் மூலம் செய்யும் தவறான செயல்கள் ஆகிய குற்றங்கள் அடங்கும் .
சட்டம் தெரியாது என்பது ஒரு எதிர்வாதமாகாது .அதனாற்காக மன்னித்து சட்டம் தண்டிக்காமல் இருப்பதில்லை .
மத உணர்வுகளை அவமதித்தல் ,அவதூறு,அவமதிப்பு,தொந்தரவு செய்தல்,பெண்ணை அவமதித்தல் ஆகியவற்றிற்கான தண்டனைகள் பற்றி சட்டம் கூறுவதை பார்க்கலாம் .
நமது அரசியல் சாசனம் சரத்து 25 முதல் 28 வரை கொடுக்கப்பட்ட உரிமைகள் வழிபாட்டுச்சுதந்திரம் ஆகும் .அதன் படி தான் விரும்பிய மதத்தை சர்வசுதந்திரமாக பின்பற்ற உரிமை உண்டு .ஒருவருக்கு மற்றவர் மதத்தை பழிக்க உரிமை கிடையாது .அவ்வாறு பழித்தல் ,அவமதித்தல் இந்திய தண்டனைச்சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும் .
கருத்துரிமையும் தண்டனையும் -2 .
தொடரும் ...
.
.
.
Download As PDF
Tweet |
|