வெள்ளி, 26 நவம்பர், 2010

கவிதையென்கிறார்கள் கவலையாய் போய்விடுகிறது

நான் எழுதும்
வார்த்தைகளை
கவிதையென்கிறார்கள்
கவலையாய் போய்விடுகிறது .

அடிபட்டு அடிபட்டு
சிதலமடைந்து
குக்கிப்போனதை
வார்த்தைகளில்
வெடித்து சிதறுகிறேன்
புதுப்பிக்க
உயிர்ப்பிக்க
இருப்பினும்
கவிதையென்கிறார்கள்
கவலையாய் போய்விடுகிறது .

உயிர்ப்பு
கவிதையாய்
மடிகிறதே  
என
கவலையாய் போய்விடுகிறது .
. Download As PDF

11 கருத்துகள் :

ஹேமா சொன்னது…

எழுதும் வார்த்தைகள் உயிர்ப்புள்ள கவிதைகளாகத்தன்னும் சேகரிப்படுகிறது.
கவலை வேண்டாம் !

சௌந்தர் சொன்னது…

அடிபட்டு அடிபட்டு
சிதலமடைந்து
குக்கிப்போனதை
வார்த்தைகளில்
வெடித்து சிதறுகிறேன்
புதுப்பிக்க
உயிர்ப்பிக்க
இருப்பினும்
கவிதையென்கிறார்கள்
கவலையாய் போய்விடுகிறது .////

இந்த வரிகள் கலக்குறிங்க

பெயரில்லா சொன்னது…

//உயிர்ப்பு
கவிதையாய்
மடிகிறதே
என
கவலையாய் போய்விடுகிறது .//

ரசித்த வரிகள்...

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

நல்லா இருக்கு

goma சொன்னது…

வெடித்துச் சிதறும் வார்த்தைகள்
பலருக்கு வேடிக்கை காட்டும் பட்டாசாக ஒளி வீசுகிறது

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

//கவிதையென்கிறார்கள்
கவலையாய் போய்விடுகிறது .//

சிறப்பான வெளிப்பாடு!

Jeyamaran சொன்னது…

Anna enna panrathu ithayum nanga kavithainu than solluvom ithukku solution vivek style la sollanum na
"yele don't worry be happy".............

எம்.ஏ.சுசீலா சொன்னது…

வெளிப்பாடு கவிதையாக இருந்தால் என்ன..அதன் பயன்பாடுதானே முக்கியமானது?
வாழ்த்துக்கள்.

Chitra சொன்னது…

உயிர்ப்பு
கவிதையாய்
மடிகிறதே
என
கவலையாய் போய்விடுகிறது .


..... உங்கள் உணர்வுகளும் எண்ணங்களும், உங்கள் கவிதைகளில் வாழ்கின்றன.

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

எனது வலைப்பூவிற்கு வருகை தந்து
தமிழ்மணம் மற்றும் இன்ட்லி யில் வாக்களித்தவர்களுக்கும்
பின்னூட்டமிட்டவர்களுக்கும்
எனது மனமார்ந்த நன்றி கலந்த வணக்கத்தை
தெரிவித்துக்கொள்கிறேன் .

ப.கந்தசாமி சொன்னது…

கவிதைன்னா என்னான்னா, மொதல்லே உரைநடையாய் எழுதிவிட்டு பிறகு வார்த்தைகளை முன்னும் பின்னுமாய் மாத்திப்போடுவதுதானே?

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "