கலாச்சாரம் பண்பாடு பேசிவரும் இவ்வேளையில்
மொழியைப்பற்றி
மொழியில்
ஓசை ஒரு கூறு ,
ஒலி ஒரு கூறு ,
ஓசையின் ஒலி ஒரு கூறு ,
எழுத்து ஒரு கூறு ,
எழுத்தும் ஒலியும் ஓசையும் கொடுக்கும் கருத்து ஒரு கூறு ,
கருத்து கொடுக்கும் பொருள் ஒரு கூறு ,
பொருள் கொடுக்கும் இயக்கம் ஒரு கூறு ,
இயக்கத்தின் பொருண்மை ஒரு கூறு ,
பொருண்மையின் வெளிப்பாடு ஒரு கூறு ,
வெளிப்பாட்டின் தன்மை ஒரு கூறு ,
தன்மையில் வடிவம் ஒரு கூறு ,
வடிவத்தின் உரு ஒரு கூறு ,
உருவின் நிலைப்பாடு ஒரு கூறு ,
நிலைப்பாட்டின் அமைப்பு ஒரு கூறு ,
அமைப்பின் பயன்பாடு ஒரு கூறு ,
பயன்பாட்டின் நீட்சி ஒரு கூறு ,
நீட்சியின் நிலைத்தன்மை ஒரு கூறு ,
நிலைத்தன்மையின் செயல்பாடு ஒரு கூறு ,
செயல்பாட்டின் ஆக்கம் ஒரு கூறு ,
ஆக்கத்தின் தொடர்ச்சி ஒரு கூறு ,
தொடர்ச்சியில் பண்படுதல் ஒரு கூறு ,
பண்படுதலில் பழக்கம் ஒரு கூறு ,
பழக்கத்தின் திரட்சி ஒரு கூறு ,
திரட்சியின் ஆளுமை ஒரு கூறு ,
ஆளுமையின் ஆதிக்கம் ஒரு கூறு ,
ஆதிக்கத்தின் எழுச்சி ஒரு கூறு ,
எழுச்சியின் மிச்சம் ஒரு கூறு ,
மிச்சத்தின் எச்சம் ஒரு கூறு ,
எச்சத்தின் வீரியம் ஒரு கூறு ,
வீரியத்தின் தேடல் ஒரு கூறு ,
தேடலில் பயணம் ஒரு கூறு ,
பயணத்தின் பாதை ஒரு கூறு ,
பாதையின் பார்வை ஒரு கூறு ,
பாதையில் பார்வை ஒரு கூறு ,
பார்வையில் மாற்றம் ஒரு கூறு ,
மாற்றத்தின் மதிப்பு ஒரு கூறு ,
மதிப்பின் வழிமுறைகள் ஒரு கூறு ,
வழிமுறைகளில் உண்மை ஒரு கூறு ,
உண்மையின் தன்மை ஒரு கூறு ,
தன்மையின் மென்மை ஒரு கூறு ,
மென்மையின் மேன்மை ஒரு கூறு ,
மேன்மையின் விரிவு ஒரு கூறு ,
விரிவின் வாழ்வு ஒரு கூறு ,
வாழ்வின் உயிர் ஒரு கூறு ,
உயிரின் மொழி ஒரு கூறு .
.
(படங்கள் உதவி : Claudio Tomassini , நன்றி )
. Download As PDF
Tweet |
|
16 கருத்துகள் :
இத்தனை கூறு இருந்தும்.நமக்குத்தான் வாழ்க்கையைப் புரிந்து கொள்ளும் கூறு ,கொஞ்சம்கூட இல்லை...
//இத்தனை கூறு இருந்தும்.நமக்குத்தான் வாழ்க்கையைப் புரிந்து கொள்ளும் கூறு ,கொஞ்சம்கூட இல்லை... //
repeatu
//இத்தனை கூறு இருந்தும்.நமக்குத்தான் வாழ்க்கையைப் புரிந்து கொள்ளும் கூறு ,கொஞ்சம்கூட இல்லை... //
வாழ்க்கையைப் புரிந்து கொள்ளும் கூறு கொஞ்சம்கூட இல்லைஎன்பதை விட மொழியைப்புரிந்து கொள்ளும் கூறு கொஞ்சம்கூட இல்லை
goma & LK
மொழிக்கே இத்தனை கூறு என்றால் வாழ்க்கைக்கு....
உங்கள் கூற்றின் கடைசி 14 வரிகள்,வாழ்க்கையின் கூறுகளைத்தான் கூறு போடுகின்றன...
நானும் எல்.கேவும் சொன்னது சரிதான்
எனக்கு கவிதை எழுதவே வராது.
வியந்த வரிகள்
அந்தாதி நடையில் தங்கள் ஆக்கம் அருமை!!
எனது முனைவர் பட்ட ஆய்வின் தலைப்பு
சங்க இலக்கியத்தில் ஒலிக்கூறுகள்
அதனை எண்ணிப்பார்க்க வைத்தது தங்கள் படைப்பு..
நயம்!
//இத்தனை கூறு இருந்தும்.நமக்குத்தான் வாழ்க்கையைப் புரிந்து கொள்ளும் கூறு ,கொஞ்சம்கூட இல்லை... //
repeatuuuuuuuuu
பிரமாதம்...
''ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது ''
நிதர்சனம்தான் :-)
நல்ல ஒரு அலசலான, அசத்தலான கூற்று. கூற்று முழுக்க கவிதைக் கீற்று. தேடும் நெஞ்சங்களுக்கு மாற்று. இன்னும் இன்னும் இதுபோல் பதிவில் ஏற்று.
வர..வர..வண்டி டாப் கியர்ல எகிறுது.
நல்ல சிந்தனை..
கூறு கெட்ட மனிதனுக்கு இத்தனையும் இருந்துவிட்டால் மனிதனை மனிதன் கூறு போடாமல் இருப்பானே !
கூறு என்பதை வைத்து வார்த்தை விளையாட்டு நடக்கிறதே பின்னூட்டத்திலும்..:)
எனது வலைப்பூவிற்கு வருகை தந்து
தமிழ்மணம் மற்றும் இன்ட்லி யில் வாக்களித்தவர்களுக்கும்
பின்னூட்டமிட்டவர்களுக்கும்
எனது மனமார்ந்த நன்றி கலந்த வணக்கத்தை
தெரிவித்துக்கொள்கிறேன் .
simply super
கருத்துரையிடுக
" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "