நொரண்டு : வள்ளுவர் சமணரா ?
நண்டு : வள்ளுவர் சமணர் என்பது
மாபெரும் மடத்தனம் . இதனை மக்களிடையே
இன்னும் மக்கள் மடையர்களாகவே நினைத்துக்கொண்டு வரலாற்றுபார்வை மற்றும் அறிவு சிறிதும் இல்லாமல் எப்படித்தான் எழுதிவருகின்றனரே தெரியவில்லை .
நீ நான் சொன்ன குறள்களை படிச்சியா ?
நொரண்டு :நான் தான் சொன்னேன்ல ,
நீ பாட்டுக்க குறளைப்படினு நம்பரக்கொடுத்தினா .விளையாடுரையா .ஒன்னு புருஞ்சுக்க . நாங்க எல்லாம் பழத்தை உருச்சில்ல ஜிரணிச்சே கொடுக்க சொல்றவுங்க .
நண்டு : அப்புறம் எதற்கு கேள்வி கேக்கற ?
நொரண்டு :சும்மாதான் ,திருவள்ளுவர் திருவள்ளுவர் னு பேசராங்க , பெரிய சிலையல்லாம் வச்சிருக்காங்க அதான் .
அத விடு வள்ளுவர் சமணரா ? பதில் சரியில்லையே .
நண்டு : இதனை நான் பின்பு ஆதாரத்தோடு நிருபிக்கிறேன் .
குறள்களை படினு சென்னேன் முதலில் படிச்சியா.
நொரண்டு :அந்த 3 மட்டும் போதுமா .
நண்டு : அட அறிவுஜிவி , திருக்குறளை விமர்சிக்கவோ ,
பயன்படுத்தவோ , கேள்விகேட்கவோ விரும்பினால் முதலில்
நீ அதனை முழுமையாக , 1330 குறளையும் படிக்கவேண்டும் .
நொரண்டு :அவனவனுக்கு வேளையில்லையா . ஒரு குறளை பயன்படுத்தக்கூட எல்லாத்தையும் படிக்கச்சொல்லுவபோல .
நண்டு : ஆம் .
நொரண்டு :அதான பாத்தேன் ,எங்கடா சொல்லலனு .
நண்டு : அது தான் உண்மை .
நொரண்டு :அப்படி இல்லாது , எதையும் படிக்காம ஒரு குறளை விமரிசித்தால் ,பயன்படுத்தினால் ?
நண்டு : 4 குருடர்களும் யானையும் கதைதான் .
நொரண்டு :அப்ப ,இப்போ எல்லாம் அப்படித்தான் பயன்படுத்தராங்கனு சொல்லவர ,அது தானே?
நண்டு : உன் கருத்திலும் உண்மை உண்டு .
நொரண்டு : சரி , நீ சொல்ற மாதிரியே படிக்கலாமுனு இருக்கோன் . அதுக்கு உரை நிறையாப்பேர் எழுதியிருக்காங்களாம் . யாரை படிக்க .
நண்டு : யாரைவேணாலும் படி . ஆனால் குறைந்தது 9 உரைகளையாவது படித்தல் நலம் .
நொரண்டு : வா..வா..ஒரு குறலே படிக்கமுடியல ..
9 உரையா ...என்ன ஆராய்ச்சி பண்ணி விருதா வாங்கப்போரேன் . இல்ல எனக்கு வேலைவெட்டித்தான் இல்லையா , எங்குடும்பத்தையார் பாப்பா... இதனால் எனக்கென்ன ஆகப்போது . இனி கேள்வியே இவன் கேக்கக்கூடாதுனு ப்ளான் பண்ணிட்டயா ?. இப்படி வெளியில சொல்லாத , திருக்குறளை எவனும் படிக்கவும் வரமாட்டான் , உன்னையும் ஒரு மாதிரி பாப்பாங்க .
நண்டு : அதப்பத்தி எனக்கு கவலையில்லை .ஆனால் ,
முழுமையாக படித்தவரால் மட்டுமே திருக்குறளினையும்,
திருவள்ளுவரையும் ஓரளவிற்காவது தெரிந்துகொள்ள முடியும் .
நொரண்டு : அப்படினா திருக்குறளினை
முழுமையாக படித்தவர்களெல்லாம் முழுமைவாதிகளா ?
நண்டு : .....
நொரண்டு : சரி அதவிடு இன்னைக்கு எந்த குறளுக்கு விளக்கம் தர்ரா ,அதையாவது சொல் கேட்டுக்கரேன் .
நண்டு :
"ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின் ".
நொரண்டு :இதுக்கு எனக்கு அர்த்தம் தெரியும் .அது அரசன் ஒழுங்கா ஆளளைனா பசு பால் கொடுக்காது ,அந்தணர் ஓதுவதை மறப்பர் ...ஹ..ஹா..ஹ...சரிதானே ..எப்படி எங்களுக்கும் தெரியுமில ....நாங்க யாரு ...ஹ..ஹ..ஹா...
நண்டு : போடா மடையா .போய் நூல் போட்டுக்க .
நொரண்டு : இதா திட்ரத விடு . பிரச்சனையாப் போகும் .
ம்... சரி உன் விளக்க உரை சொல்லு பார்க்கரேன் .
நண்டு :
காவலன் காவான் எனின்
அரசு அரசாக உயர்வடையும் தன்மையும் ,
அதனால் சிறப்படையும் நன்மை குறையும் ,
மக்கள் அரசுடன் ஒத்துப்போகும் தன்மையில் ,
தாங்கள் பின்பற்றும் ஒழுக்க நெறியில் குன்றுவர் .
ஒரே இடந்தில் தங்கி தொழில் பார்க்கும் நிலை இல்லாமல் போவதால்
தொழில் செய்பவர்கள் அதன் நுட்பமான வழிமுறைகளையும்,
தாங்கள் வழிவழியாக சேர்த்துவைத்து வந்த அறிவினையும்,
படிப்பினைகளையும் மறப்பர் , என்கிறார் .
அதோடு இன்னும் சொல்கிறார் அதிகமாக .
.
.
.......
வள்ளுவர் -அறியப்படவேண்டிய உண்மைகள் ...தொடரும் .
.
. Download As PDF
Tweet |
|
8 கருத்துகள் :
சில இசுலாமியர்கள் (எனக்குத் தெரிந்து கவிக்கோ அப்துல் ரகுமான்) வள்ளுவரை சமண சமயத்தைச் சார்ந்தவர் என்கிறார்கள். கொல்லாமை போன்ற சமண தத்துவங்களை வலியுறுத்துவதால் என்றும் குறிப்பிட்டிருந்தார்கள். இன்னும் விரிவான விளக்கங்கள் எதிர்பார்க்கிறோம்.
நல்ல பகிர்வு
அன்பின் நண்டு - நல்ல சிந்தனை - குறளுக்கு விளக்கம் நன்று. வள்ளுவர் சமணரா - ம்ம்ம்ம் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
அருமை தோழரே தொடரட்டும் உங்கள் ஆராய்ச்சி.வெளிவரட்டும் உண்மைகள்.புரிந்துகொள்ளட்டும் அறியாத மக்கள்..
anna engal college la tamil lecture vela free ah irukku vanthu join panringala........
summa vilaiyattukku ketten rocking but 1330 kural 9 uraila padikkanumrathu konjam aniyayam anna engala partha ungalukku pavamatheriyala
அவர் யாராயிருந்தால் என்ன..?
happy diwali nandus.
கே.ஆர்.பி.செந்தில் said...
அவர் யாராயிருந்தால் என்ன..?
என் கேள்வியும் அதுவே..
கருத்துரையிடுக
" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "