சனி, 27 நவம்பர், 2010

என் இன அவலம் அழ

.

ஓவியன்
நான்
வரையமுடியா
வேதனைகள் அவை.கவிஞன்
நான்
எழுதமுடியா
வலிகள் அவை.பாடகன்
நான்
பாடமுடியா
கண்ணீர் நதிகள் அவை.எனக்கொரு இசைக்கருவி
கண்டுபிடித்து தாருங்கள்
மீட்பு குறிப்புடன்
பாணனாகி
என் இன அவலம் அழ.

. Download As PDF

19 கருத்துகள் :

goma சொன்னது…

வாசகன் நான்
ரசித்து
வாசிக்க முடிந்த
வரிகள் அவை

Unknown சொன்னது…

//பாடகன்
நான்
பாடமுடியா
கண்ணீர் நதிகள் அவை////
ஒரு நாள் தீரும் நமது சோகம்

cheena (சீனா) சொன்னது…

இதயத்தின் வலி அதன் ஆழத்திலிருந்து வந்திருக்கிறது - சிந்தனை அருமை - சொற்கள் அருமை - கவிதை அருமை - நல்வாழ்த்துகள் நண்டு - நட்புடன் சீனா

மோனி சொன்னது…

//..எனக்கொரு இசைக்கருவி
கண்டுபிடித்து தாருங்கள்
மீட்பு குறிப்புடன்
பாணனாகி
என் இன அவலம் அழ..//

சேர்ந்தே தேடுவோம் தோழா

சசிகுமார் சொன்னது…

அருமை

nis சொன்னது…

வித்தியசமான கவி வரிகள். கொஞ்சம் கவலையோடு வாசித்து முடித்தது.

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

அருமை. நன்றி

Unknown சொன்னது…

தாயகத்துக்காக தன் இன்னுயிரை தியாகம் செய்த அத்தனை வீரர்களுக்கும் என் வீர வணக்கம்...

பெயரில்லா சொன்னது…

அண்மையில் வாசித்த கவிதைகளுள் இது முதலிட பெறுகிறது. ரணவலியை ஒரு சில வரிகளில் அருமையாய் படம் பிடிததுக் காண்பித்துள்ளார்.

அ.முத்து பிரகாஷ் சொன்னது…

இயக்க வேறுபாடுகள் ஏதுமின்றி அனைத்து இயக்கத்தவர்களின் மாவீரர்களுக்கும் போராளிகளுக்கும் எளியோனின் வீர வணக்கங்கள்!

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

கவிதை டாப் அண்ணே

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

ஈரோட்டுக்காரரா கொக்கா?

VELU.G சொன்னது…

நல்லாயிருக்குங்க

ஹேமா சொன்னது…

காலத்தையே வெல்வோம்.காத்திருப்போம் ஆணடுகள் கடந்தாலும்.இழப்புகளின் ஈடுகளைச் சமப்படுத்துவோம்.நம்புவோம்.தமிழரின் தாயகம் தமிழீழத் தாயகம் !

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! சொன்னது…

ஒரு நாள் தீரும் நமது சோகம்
அருமை

சங்கரியின் செய்திகள்.. சொன்னது…

அருமை நண்பரே........இன்னுயிர் ஈந்த பல்லாயிர உயிர்களுக்கு வீர வணக்கங்கள்.

ராஜ நடராஜன் சொன்னது…

ஒற்றைக் கீற்றாய் முகாரி பாடாமல்
மொத்தக் கூட்டாய் பண் பாடுவோம்.

ஜெயந்தி சொன்னது…

வலியை உணர வைக்கும் கவிதை.

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

எனது வலைப்பூவிற்கு வருகை தந்து
தமிழ்மணம் மற்றும் இன்ட்லி யில் வாக்களித்தவர்களுக்கும்
பின்னூட்டமிட்டவர்களுக்கும்
எனது மனமார்ந்த நன்றி கலந்த வணக்கத்தை
தெரிவித்துக்கொள்கிறேன் .

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "