நிபுணர் ஆக்கும் ; பயத்தை போக்கும்; பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் ;
முக்கியமாக பிரமிக்கத்தக்க வகையில் உபயோகமாகி புத்திசாலி என பிரபலப்படுத்தும் . சரித்திரத்தில் நல்ல அனுபவசாலிகள் தங்களின் லட்சியங்களை சிரமம் இல்லாமல் முழுதிருப்தியுடன் நினைத்தபடி அடைந்துள்ளனர் இதில் சந்தேகமேயில்லை . அதனால் தான் புத்திசாலி தமிழனுக்கு அனுபவம் அவசியம் தேவை . எனவே ,
அனைத்துத் தமிழர்களும் கரம் சேர்த்து சபதம் ஏற்ப்போம் ;
அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவேம்
நிச்சயம் உயர்வோம் புத்திசாலிகளாக .
நொரண்டு : எப்படி எனது பீடிகை ?
நண்டு : நன்றாக உள்ளது .இருந்தாலும் .....
நொரண்டு : என்ன இருந்தாலும் ...
நண்டு :இப்ப புத்திசாலிகளாகத்தான் நாம் அனைவரும் இருக்கின்றோம் .
தமிழர்களாகவும் ,தமிழ் உணர்வாளர்களாகவும் இருக்கின்றோம் .இதில் என்த வித மாற்றுக்கருத்துமில்லை . ஆனால் , தமிழைத்தான் செம்மைப்படுத்தாமல்
ஏதே சுயநலத்திற்காக நமது விருப்பம்போல் பயன்படுத்திவருகின்றோம் .
நொரண்டு :என்ன ... ?...
நண்டு :ஆம் ,மிகவும் கவலையாக உள்ளது .
நொரண்டு : என்ன கவலை ...
நண்டு :
அடுத்தவர்களை சொல்கின்றேன் .தமிழை தமிழாக பயன்படுத்து என்று . ஆனால்,நான் என்ன செய்கின்றேன் . அம்மா என்பதைக்கூட AMMA என்று தட்டச்சு செய்து ... எமது எண்ணங்களை ,ஆக்கங்களை வெளிப்படுத்த பிற மொழியினின்று தமிழை பிறப்பிக்கவைப்பதாகவே நினைக்கின்றேன் . அதுவும் ஒரு வழியில் சீரழிவாகவே ...
நொரண்டு : அப்படி ஏன் நினைக்கின்றாய் . அதை ஒரு கருவியாக பயன்படுத்துவதில் என்ன தவறு .
நண்டு : ஆம் ,மொழியை கருவியாகத்தான் பயன்படுத்துகின்றோம் . தமிழ் நமக்கு ஒரு கருவி தான் மொழியன்று என்ற நினைப்பில் வாழ்வதால் தான் இத்தகைய இடர் .கேடு .
நொரண்டு : ஓ...
நண்டு :நீ இந்த உரையாடலுக்கு முன் பீடிகை என்று ஒன்றை சொல்லியுள்ளாயல்லவா அதுவே மெய்ப்பிக்கும் தற்பொழுதைய தமிழின் நிலையை .
நொரண்டு :என்ன சொல்ற ..
நண்டு :
உனது ''பீடிகை'' யில்
அனுபவம் ,
அவசியம் ,
அத்தியாவசியமான,
அர்த்தத்தை ,
நிபுணர் ,
பயத்தை ,
பிரச்சினை,
பிரமிக்கத்தக்க ,
உபயோகமாகி ,
புத்திசாலி,
பிரபலப்படுத்தும் ,
சரித்திரத்தில் ,
அனுபவசாலிகள் ,
லட்சியங்களை ,
சிரமம் ,
முழுதிருப்தியுடன் ,
சந்தேகமேயில்லை ,
கரம் ,
சபதம் ,
நிச்சயம் ,
பீடிகை ...
இவைகள் எல்லாம் வட சொற்கள் இவைகளை நீக்கிப்பார்
தமிழால் தமிழர்களுக்கு நீ சொல்ல வந்ததை ...
நொரண்டு :
இவைகள் தமிழ் இல்லையா ? ...என்ன சொல்ர
நண்டு :
அப்படி நான் சொல்லவில்லை .
தமிழ் இலக்கணம் , வரலாறு கூறுகின்றது .
நொரண்டு :
என்னப்பா ஒன்னுமே புரியவில்லை .இப்படியே பாத்தா எப்படிப்பா ...
நண்டு:சில குழப்பங்கள் உள்ளன .
நொரண்டு : ஆமாம் ,ஆமாம் ... அனுப்புனர் ,பெருநர் ,மடப்புரம் , பழனி,நடத்துனர்,இப்படி ற,ர,ன,,ஞ,ந,ல,ள,ழ,ண- க்கள் பயன்படுத்தும் போது ....
நண்டு : அட கருவியாக பயன்படுத்துகின்றாய் .இதில் என்ன பிழைகள் காணும் பிழைப்பு ,புத்திசாலி தமிழன் தான் நீ .
நொரண்டு : அட போப்பா ....:
நண்டு: இருந்தாலும் தமிழை சரளமாக பயன்படுத்துவதில் சில இடர்கள் ...
நொரண்டு :
''ஸரல்'' என்ற சமஸ்கிருத சொல்லிலிருந்து வந்ததுதேனே சரளமாக ...
நண்டு :
நீ சென்ன ''ஸரல்'' என்பது சமஸ்கிருத சொல் ,''சரளமாக ''என்பது
தமிழ் சொல் .
நொரண்டு :என்ன ?
நண்டு :
வட சொல் வேறு , சமஸ்கிருத சொல் என்பது வேறு .
நொரண்டு : எப்படி ?...
நண்டு :தொல்காப்பியர்
'' இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல்லென்று
அனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே .'' -என்றும் ,
''வடசொற் கிளவி ,வடவெழுத்து ஒரிஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே
சிதைந்தன வரியினும் இயைந்தன வரையர் '' -என்றும் ,
மிக அழகாக கூறியுள்ளார் .
சமஸ்கிருதம் இங்கு வந்ததிலிருந்து இன்றுவரை செழுமையாகத்தான் உள்ளது .அப்படியிருக்க தொல்காப்பியர் ''சிதைந்தன வரியினும் இயைந்தன வரையர் '' என்கின்றார் .
நொரண்டு : ஓ....அப்படியா ?
நண்டு : காமம் என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம் .
நொரண்டு : ஆமாம் ,காமம் .
நண்டு : அது தமிழ் சொல் .
நொரண்டு : ஓ ... சரி அதவிடு .
கடந்த 30 ம் தேதி சின்னாளப்பட்டி கடந்த பொழுது உன் ஞாபகம் வந்தது .
நண்டு : ஏன் ?
நொரண்டு : இல்ல ,நமக்காக பல சிரமங்கள் பட்டு நமது தேசத்துக்கு சுதந்திரம் வாங்கித்தந்த மகாத்மா அவர்களின் பெயரால் இயங்கிவரும் பல்கலை சின்னாளப்பட்டியில் உள்ளது .
நண்டு : அது காந்தியாரின் கட்டளையல்ல ..
நொரண்டு : என்ன ?
நண்டு : காந்தியத்தை ஊட்டாமல் ,காந்தியை உணவாக மட்டுமே ஊட்டும் எதிலும் காந்தி இருக்கப்போவதில்லை .
நொரண்டு : என்ன உளருகின்றாய் ?
நண்டு : உண்மை உடனே புரியாது .
நொரண்டு : எது ....
நண்டு : அனைத்து கல்வி நிலையங்களும் வியாபார நோக்கத்தில் செயல்படுகிறது . அதில் கற்றுத்தரும் கல்வியும் உணவுக்கான கல்வியாக உள்ளது .எங்கும் அப்படியே .
நொரண்டு : அப்படித்தானே இருக்க முடியும் .'' தாயும் சேயுமே யானாலும் வாயும் வயிறும் வேறு வேறு தானே ''இந்த பழமொழி தெரியும் தானே .
நண்டு : ஆம், தாயால் பேசும் மொழியும் பயிலும் மொழியும் புத்திசாலி தமிழனுக்கு வேறு வேறு தான் .
. Download As PDF
Tweet |
|
8 கருத்துகள் :
தாயால் பேசும் மொழியும் பயிலும் மொழியும் புத்திசாலி தமிழனுக்கு வேறு வேறு தான் .
......பேச்சு தமிழே எழுத்திலும் முத்திரை பதிப்பதால், அப்படி ஆகி விட்டதோ?
அன்பின் நண்டு - சிந்தனை அருமை - வட சொல் தவிர்க்கலாம் - தூய் தமிழ்ச் சொல் பயன் படுத்தலாம் - ஆனால் வழக்கில் இருக்க வேண்டும். காதீயத்தினைப் பரப்ப முயற்சிக்க வேண்டும். நல்வாழ்த்துகள் நண்டு - நட்புடன் சீனா
//
தாயால் பேசும் மொழியும் பயிலும் மொழியும் புத்திசாலி தமிழனுக்கு வேறு வேறு தான் .
//
kitta thatta appadithan....
தாயால் பேசும் மொழியும் வாயால் பேசும் மொழியும் கூட புத்திசாலி தமிழனுக்கு வேறு வேறு தான் .
சரிதான் அண்ணே ...
தமிழை பிழை இல்லாமல் எழுதினாலே போதும் கருவி பற்றியெல்லாம் ஆராய்ச்சி தேவை இல்லை
anna innum padikka iyalavillai velai athaigam mannikkavum.....................
Neram kidaikkum pothu padithu commends poduren..........
எனது வலைப்பூவிற்கு வருகை தந்து
தமிழ்மணம் மற்றும் இன்ட்லி யில் வாக்களித்தவர்களுக்கும்
பின்னூட்டமிட்டவர்களுக்கும்
எனது மனமார்ந்த நன்றி கலந்த வணக்கத்தை
தெரிவித்துக்கொள்கிறேன் .
கருத்துரையிடுக
" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "