திங்கள், 22 நவம்பர், 2010

மருத்துவபடிப்பு முற்றிலும் இலவசம் பெற்றோர்களே முன்பதிவுக்கு இன்றே முந்துங்கள்




நண்டு : என்ன நொரண்டு பையன எங்க கூட்டிட்டு போர .தறி ஓட்ட போலயா ? .ஓனர் ஒழுங்கா கூலா தர மாட்டேங்கராருனு சொல்லீட்டிருந்த ...

கூலி நொரண்டு :   அட உனக்கு விசயம் தெரியாதா .

நண்டு : என்ன ?

கூலி நொரண்டு : நீ பேப்பர் பாக்கலையா ...

நண்டு :என்ன செய்தி சொல்லு .

கூலி நொரண்டு : இனி +2 வரை ஆல் பாஸாம் .

நண்டு :அதனால

கூலி நொரண்டு :எப்படியும் எம்பையன பாஸ் ஆக்கீடுவாங்க

நண்டு :சரி

கூலி நொரண்டு : அவன் ஸ்கூலுக்கு போய் என்ன செய்யப்போரான் .

நண்டு : அதனால்

கூலி நொரண்டு : என் வேலையை பாத்துட்டு எனக்கு உதவியா இருக்கட்டுனு கூட்டீட்டு போரோன் .

நண்டு :அட நொரண்டு .+1 படிக்கும் பையன இப்படி ...நல்லா படிச்ச நம்மலாலே நாலு வார்த்தை தப்பில்லாமல் எழுத முடியல ...


------

சில நாட்கள் கழித்து

நொரண்டு :  எங்க நண்டு இவ்வளவு அவசரமா போற

நண்டு :அட விசயம் தெரியாத

நொரண்டு :என்ன ?

நண்டு :  நீ பேப்பர் பாக்கலையா ...

நொரண்டு :என்ன செய்தி சொல்லு .

நண்டு : மருத்துவபடிப்பு முற்றிலும்  இலவசம் பெற்றோர்களே முன்பதிவுக்கு இன்றே முந்துங்கள்  உடனே விரைக  ,உங்களின் குழந்தைகளின் எதிர்காலத்தை இன்றே முடிவு செய்யுங்கள் என கோல்மால் யுனிவர்சிடி அறிவிச்சிருக்கு

நொரண்டு :ஓ ...அப்படியா ...

நண்டு :முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமையாம் .

நொரண்டு :அட ...ஆமா  உன் பையன் இப்பத்தானே 3 வது  படிக்கரான் !!!! ????

நண்டு : அதனால தான்  முன் பதிவு செய்ய போரேன் .



-----



ஆசிரிய நொரண்டு : ஆல் பாஸ்னு யாரும் ஸ்கூலுக்கு வரமாட்டேங்கராங்க .

தலைமையாசிரிய நண்டு :  பள்ளிக்கு முதல் நாள் எல்லாரும் வந்தார்களே

ஆசிரிய நொரண்டு :  அவ்வளவு தான் இனி முழுப்பரிட்சைக்குத்தான் எல்லாத்தையும் பாக்க முடியும் .

தலைமையாசிரிய நண்டு :இப்ப வருகைப்பதிவு .

ஆசிரிய நொரண்டு : கல்வி அடிப்படை உரிமை .

தலைமையாசிரிய நண்டு : அதனால் .

ஆசிரிய நொரண்டு :  அது வருகைப்பதிவை கட்டாயப்படுத்தவில்லை .

தலைமையாசிரிய நண்டு : ஓ .

ஆசிரிய நொரண்டு : வந்தாலும் வராவிட்டாலும் கல்வி என்னும் அடிப்படை உரிமை காக்கப்படவேண்டும் .  

தலைமையாசிரிய நண்டு :  ?????


-------



நொரண்டு :இது எதுக்கு கொண்டு வராங்க ?

நண்டு :  சமுதாயத்தை நாசமாக்க .

நொரண்டு :....

நண்டு :  குலத்தொழிலை மறைமுகமாக வளர்க்க  .

நொரண்டு : ...

நண்டு : குட்டிச்செவரான இந்தியாவை உருவாக்க .








. Download As PDF

13 கருத்துகள் :

Unknown சொன்னது…

செம நக்கல்...

மோனி சொன்னது…

தனியாத்தான்
நம்மளைமாதிரி ஆளுங்க
பொலம்பிட்டு இருக்கணும் தோழா .. :-(
சமுதாயத்தை திருத்த
ஒராயிரம் கோடி பெரியார்கள் வந்தாளும்...................
:-(

இருக்கும் வரைக்கும் போராடுவோம் :-)

Romeoboy சொன்னது…

:)

மோனி சொன்னது…

இதை நகைச்சுவை Category யில நீங்க சேர்த்ததைதான் என்னால ஜீரணிக்க முடியலை :-(
உண்மை எப்பவும் சுடும்
(தமிழிஷ் அப்படித்தான் காட்டுது) :-(

cheena (சீனா) சொன்னது…

aakaa ஆதங்கம் புரிகிறது - என்ன செய்வது .... - நாடும் நாமும் மாற வேண்டும்

ரோகிணிசிவா சொன்னது…

:))

goma சொன்னது…

நக்கலோ நக்கல்

மதுரை சரவணன் சொன்னது…

கல்வி சிந்தனை ... அருமை...வாழ்த்துக்கள்

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

:))

பவள சங்கரி சொன்னது…

நல்ல சிந்தனை.......

அ.சின்னதுரை சொன்னது…

super thought

அ.சின்னதுரை சொன்னது…

super thought

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

எனது வலைப்பூவிற்கு வருகை தந்து
தமிழ்மணம் மற்றும் இன்ட்லி யில் வாக்களித்தவர்களுக்கும்
பின்னூட்டமிட்டவர்களுக்கும்
எனது மனமார்ந்த நன்றி கலந்த வணக்கத்தை
தெரிவித்துக்கொள்கிறேன் .

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "