செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

மரணதண்டனையை ஒழித்திடு ...ஒன்றுபடு தமிழா ...ஓங்கி உயர்ந்திடு .


தமிழ்கூறும் நல்லுலகின் ஒன்றுபட்ட உயர்வுக்கு
இன்று பரிசு கிடைத்துள்ளது .

தாயின் கருணை 
இன்று தமிழின ஒற்றுமைக்கு ஊட்டம் கொடுத்துள்ளது .

மரணதண்டனை என்னும் காட்டுமிராண்டித்தனத்தை
ஒழிக்கும் மகத்தான ஆரம்பத்தின் வெற்றிவிழாவினை
இன்று தமிழகம் கொண்டாடி வரும் இதே வேளையில்
இனி தாமதிக்காமல் தமிழகத்தைச்சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து ஓரணியாக இருந்து ,
இந்த காண்டுமிராட்டித்தனத்தை ஒழிக்க
ஜனாதிபதி அவர்களையும்,
பிரதமர் அவர்களையும் சந்தித்து வலியுறுத்துவதுடன்,
இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரிலேயே
அதற்கான சட்டத்தை நிறைவேற்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளவேண்டுமாய் மனிதாபிமானத்துடன் வேண்டுகிறேன்.

தமிழக மக்களின் உள்ளத்தை ,உணர்வை புரிந்து
தமிழ் மக்களின் நலனுக்காகவே வாழும்
ஒப்பு உயர்வற்ற
உலக தமிழினத்தலைவி 
தமிழக முதல்வர் அம்மா ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கு
இத்தருணத்தில்
எனது தலைதாழ்ந்த
தாழ்மையான வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.



ஒன்றுபடு தமிழா ...ஓங்கி உயர்ந்திடு ...
மரணதண்டனையை ஒழித்திடு .





.



Download As PDF

ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2011

30 கோடி முகமுடையாள்




 

இன்று அன்னாவின் வெற்றியின் மூலம் சுதந்திர இந்தியா
தனது காந்தியத்தின் வெற்றிப்பயணத்தின்  ஒரு மைல் கல்லை
கடத்துள்ளது .இதில் கவனிக்கப்படவேண்டிய விசயம்
என்னவென்றால் ஒரு அகிம்சைப்போராட்டம் எத்தகைய வெற்றியை அடையும் என்பதுவே .ஆனாலும் சில உலகை  புரிந்துகொள்ளாத ஜடங்களைத்தவிர்த்து  குறிப்பாக 120 கோடி மக்களில் ஊழலுக்கு பிறந்தவர்களைத்தவிர்த்து மற்ற கிட்டத்தட்டஅனைவரும்
இதற்கு ஆதரவு தந்து மிகப்பெரிய வெற்றியை அடைந்ததை  சொல்லவும் வேண்டுமோ.இத்தருணத்தில் எனக்கு நமது தேசிய கவியின்

முப்பது கோடி முகமுடையாள் ,உயிர்
மொய்ம்புற வொன்றுடையாள் -இவள்
செப்பு மொழி பதினெட்டு உடையாள் எனிற் 
சிந்தனை ஒன்றுடையாள் . 

என்ற வரிகள் தான் நினைவுக்கு  வருகிறது .

 அன்னாவின்   வளர்ச்சியில் காழ்ப்புணர்வு கொண்ட சில எழுத்தும் சித்து தெரிந்த மடையர்களைத் தவிர்த்து மற்ற பொது நலத்தின் மீதும் , உண்மையான மனித நேயமும் ,தேசிய நலமும் கொண்ட மக்களால் பெற்ற உயர்வே அன்னாவின் இந்த  வெற்றியாகும் .

இதனை நாம் போற்றுவோம் . தொடர்வோம் .


வாழ்க பாரதம் .

வாழ்க மகாத்மா .









.




Download As PDF

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011

காந்தியின் முழக்கம் வழக்கறிஞர் உண்ணாவிரதபோராட்டத்தில் .



Corruption is worse than prostitution. The latter might endanger the morals of an individual, the former invariably endangers the morals of the entire country.   Kraus, Karl


ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரேவிற்கு ஆதரவாக
நேற்று 22.08.2011 ஈரோட்டில் வழக்கறிஞர்களின் உண்ணாவிரதப்போராட்டம் நடைபெற்றது ..
அனைத்து வழக்கறிஞர்களும்  கலந்துகொண்டு சிறப்பித்தனர் .
அதோடு  ஈரோட்டில் உள்ள அனைத்து சமூக ஆர்வலர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தது மிகவும் உவகை அளித்தது.
அதை விட வழக்காடிகள் இப்போராட்டத்திற்கு பேராதரவு தந்தது மிகவும் உற்சாகத்தை ஊட்டியது.

ஈரோடு  சண்முக காந்தி
மற்றும்
தமிழக பசுமை இயக்கம் தலைவர் டாக்டர் ஜீவானந்தம்
போன்ற காந்தியவாதிகள்  கலந்துகொண்டு முழங்கியது
எனக்கு மிகவும்  மனநிறைவை அளித்தது.





......................................


அன்னா மற்றும் அரசின் லோக்பால் பற்றி தெளிவாகஅறிந்துகொள்ள
கீழ்க்கண்ட இணைப்புகளை   பார்க்கவும்











வாழ்க பாரதம்.

வாழ்க மகாத்மா .







Download As PDF

திங்கள், 22 ஆகஸ்ட், 2011

அன்னா ஹசாரேவிற்கு இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு



 இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த மனிதர் அன்னா ஹசாரே ஆவார்.
அவரால் தான் ,இதை யாராலும் சரிசெய்யவே முடியாது என  வெம்பிக்கொண்டு வாழ்வை கழித்துவந்த 120 கோடி இந்தியர்களின்
உள்ள குமுறலுக்கு , வெளிப்படுத்த  முடியா அவலத்திற்கு,
ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது .இன்றைய ஆட்சியாளர்களின் கையாலாகாத தனத்தினால்  அன்று  நாமக்கு  சுதந்திரம் பெற்றுக்கொடுத்தவர்களை நாம் இன்றுதிட்டித்தீர்த்துக்கொண்டும்,
சுதந்திரமே வேண்டாம் ...போ... என்று  தள்ளப்பட்ட மனநிலையில் ,
நொந்து ,நம்மவனின் சுரண்டலிலும் ,சூழ்ச்சியிலும் சுண்ணாம்பாகி ஏதோ வாழ்கின்றோம் சுதந்திரம் என்று முணுமுணுப்புடன்  அடுத்தவனுக்கு அடிமையில்லாமல் வாழ்கின்றோமே அதுவே போதும் என்ற  சமாதானத்துடன் உழன்று அதிலும் மெல்ல மெல்ல நமக்கு நாமே உயர்ந்து உயர்ந்து உயரத்தை அடைய அதிலும் எங்கும் ,எதிலும் ஊழலலால்  எப்பொழுதும் அல்லல்பட்டு அல்லல்பட்டு .சரி விடு ,நடப்பது நடக்கட்டும் என்று நடந்து நடந்து அனைத்தையும் சகித்து  பின் தனித்தனி தனி நபர்களின் கடின உழைப்பினால் நாமாக  உயர்ந்த போதிலும் அடாவடி அராஜக அரசியல்வாதிகளாலும்  நாம் சொத்துகள் அபகரிக்கப்பட்டு  , உரிமைகள்  மறுக்கப்பட்டு நம் உழைப்பு உறிஞ்ப்பட்டு மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்டத்திற்கு தள்ளப்பட்ட  நிலையில் அன்னா ஹசாரே  அவர்கள் அதனை முன்னெடுக்க  ஒவ்வொரு இந்தியனும்  இந்த இரண்டாம் சுதந்திர போராட்டத்தில் தம்மை இணைத்து  சுதந்திர போராட்ட வீரராகியுள்ள வரலாறு இன்று நிகழ்ந்துள்ளது.இதன் மூலம்  அகிம்சை வழி போராட்டத்தின் உன்னதத்தினை , வலிமையை  நிரூபித்துள்ளனர் . 

ஆயுதப்  போராட்டத்தாலும், தீவிரவாதத்தினாலும்   அமைதியற்றுப்போயுள்ளது  இன்றைய உலகம் .
உலகில் அமைதி வழி போராட்டத்தினால் தான் உண்மையான
மன நிறைவான  மனிதனை மனிதன் துன்புறுத்தாத ,மனிதனை  மனிதன் கொன்றொழிக்காத மனித மாண்பை போற்றும் பரிபூரணமான நிம்மதியான வெற்றியினை அடையமுடியும் என்பதை ஊக்குவிக்கும் முகமாக
உலகின் மிக உயரிய விருதான
 நோபல் பரிசினை அமைதிக்காக 
அன்னா ஹசாரேவிற்கு இந்த ஆண்டு அளிப்பது மிகவும் சரியாக இருக்கும் என்பது எனது கருத்து. இதை விருப்புபவர்கள் அதற்கான பரிந்துரைகளை  செய்யலாம் .


வாழ்க பாரதம் .


வாழ்க மகாத்மா .
.
Download As PDF

சனி, 20 ஆகஸ்ட், 2011

அன்னா ஹசாரே போராட்டம் வெற்றி பெற்றால் என்ன நடக்கும்?



//அடுத்த 20 ஆண்டுகளுக்கு யாரும் வரி கட்டவேண்டிய அவசியமே இருக்காது. பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.25-க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.15-க்கும், பால் ஒரு லிட்டர் ரூ.8-க்கும் தாராளமாக வழங்க முடியும். மின்சார கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமே இல்லை. அனைவருக்கும் இலவசமாகவே மின்சாரம் கிடைக்கும்.

ரப்பர் சாலை

இந்திய எல்லையில் சீன பெருஞ்சுவரைவிட நீளமான, வலிமையான சுவரை எழுப்ப முடியும். உலக புகழ் வாய்ந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் போல், 1500 பல்கலைக்கழகங்களை இந்தியாவில் தொடங்கலாம்.//

....................


அன்னா ஹசாரே போராட்டம் வெற்றி பெற்றால் என்ன நடக்கும்?
இளைஞர்கள் மத்தியில் பரவும் எஸ்.எம்.எஸ். செய்தி

சென்னை.ஆக .20 -


அன்னா ஹசாரே போராட்டம் வெற்றி பெற்றால் என்ன நடக்கும் என்பது குறித்து, இளைஞர்கள் மத்தியில் பரபரப்பு எஸ்.எம்.எஸ். செய்திகள் பரவி வருகின்றன.

அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு

வலுவான லோக்பால் மசோதாவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யக்கோரி போராட்டம் நடத்தி வரும் காந்தியவாதி அன்னா ஹசாரேவிற்கு, நாடு முழுவதும் எதிர்பாராத அளவு ஆதரவு பெருகி வருகிறது.

இந்த நிலையில், இளைஞர்கள் மத்தியில் எஸ்.எம்.எஸ். மூலம் பல வித்தியாசமான தகவல்கள் பரவி வருகின்றன. அதில், அன்னா ஹசாரே போராட்டம் வெற்றி பெற்று, வெளிநாட்டு வங்கியில் உள்ள கறுப்பு பணம் மட்டும் மீட்டு கொண்டுவரப்பட்டால், என்னென்ன ஆச்சரியங்கள் நடக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? என்று, ஒரு பரபரப்பு பட்டியலே வருகிறது. அதில், கூறப்பட்டுள்ள விவரங்கள் வருமாறு:-

நிதி நிலைமையில் முதலிடம்

வெளிநாட்டு வங்கியில் உள்ள ரூ.1,456 லட்சம் கோடி கறுப்பு பணம் மீட்டு கொண்டுவரப்பட்டால், இந்தியா நிதி நிலைமையில் நம்பர் 1 இடத்தை பிடிக்கும். நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ரூ.60 ஆயிரம் கோடி நிதி ஒதுக்க முடியும். கிராமங்களுக்கு தலா ரூ.100 கோடி கிடைக்கும்.

அடுத்த 20 ஆண்டுகளுக்கு யாரும் வரி கட்டவேண்டிய அவசியமே இருக்காது. பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.25-க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.15-க்கும், பால் ஒரு லிட்டர் ரூ.8-க்கும் தாராளமாக வழங்க முடியும். மின்சார கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமே இல்லை. அனைவருக்கும் இலவசமாகவே மின்சாரம் கிடைக்கும்.

ரப்பர் சாலை

இந்திய எல்லையில் சீன பெருஞ்சுவரைவிட நீளமான, வலிமையான சுவரை எழுப்ப முடியும். உலக புகழ் வாய்ந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் போல், 1500 பல்கலைக்கழகங்களை இந்தியாவில் தொடங்கலாம்.

பாரீஸ் நகரில் அமைக்கப்பட்டுள்ளது போல், 28 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரப்பர் சாலை அமைக்க முடியும். அனைத்து வசதிகளையும் கொண்ட 2 ஆயிரம் நவீன ஆஸ்பத்திரிகளை தொடங்கி, இலவசமாக மருத்துவ சிகிச்சை அளிக்கலாம். 95 கோடி மக்களுக்கு சொந்த வீடு கட்டிக்கொள்ள முடியும்.

அன்னா ஹசாரேவின் போராட்டத்திற்கு ஒத்துழைக்க, ஒவ்வொருவரும் இந்த செய்தியை 10 இந்தியர்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தெரிவியுங்கள். நான் என் கடமையை செய்து விட்டேன். ஜெய்ஹிந்த்.

இவ்வாறு அந்த தகவல் பரவுகிறது.



............

இன்றைய செய்தி.
நன்றி : தினத்தந்தி .
பார்க்க : http://www.dailythanthi.com/article.asp?NewsID=668186&disdate=8/20/2011.


Download As PDF

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2011

ஈரோட்டில் நான் அன்னா ஹசாரே




இன்று  ஈரோட்டில்  அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக
வீரப்பன் சத்திரம் மாரியம்மன் கோவில் அருகில் 
ஊழல் ஒழிப்பு போராட்டம் நடைபெற்றது .
நான் அன்னா என குல்லா அணிந்து  ஆயிரக்கணக்கானேர் தானாகவே முன்வந்து கலந்துகொண்டனர். உண்மையில்  ஊழலுக்கு எதிராக இத்தனை மக்கள் கட்சி சார்பற்று கலந்துகொண்டது ,அதுவும் எந்த ஒரு பெரிய அறிவிப்பும்  இல்லாத பொழுதும், ஆயிரக்கணக்கானேர் கலந்துகொண்டது ,மிகவும் மகிழ்ச்சியை அளித்தது .


வாழ்க மகாத்மா.

வாழ்க பாரதம் .

ஒழிக ஊழல்.




..
Download As PDF

வியாழன், 18 ஆகஸ்ட், 2011

ஊழலை ஒழிக்க லோக்பாலை விட மிகவும் வலிமையான WHITE BOX தான் வேண்டும் .


லோக்பால் என்பது வீட்டிற்குள் சுத்தம் செய்வது போன்றது .


ஆனால் வீட்டை சுற்றி...அதையும் தாண்டி ஊரை நாட்டை என சுத்தம் செய்யாமல்?. யாருக்கும் பலன் இல்லாமல் ,மீண்டும் ,மீண்டும் பழைய இடத்திற்கே வந்து நிற்பதற்கு பதிலாக ,ஒட்டுமொத்த அமைப்பின் குறைபாடுகளையுமே களைய லோக்பாலை விட மிகவும் வலிமையான  WHITE BOX முறை தான் இன்று இப்பொழுது மிகவும் அவசியமாக உள்ளது . இந்த WHITE BOX முறையால் தான் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவர முடியும் .மற்றவைகளினால் சிறிய அதிர்வை மட்டுமே ஏற்படுத்த முடியுமே தவிர வேறு ஒன்றையும் சாதிக்கப்போவது இல்லை .

WHITE BOX  என்பது புகார் பொட்டி .இது தூய்மைப்படுத்தும் செயலை செய்வதால் .தூய்மையைக்குறிக்கும் வெண்மை நிறத்தின் பெயர் பெறுகிறது .இந்த புகார் பெட்டிக்கும் மற்றைய புகார் பெட்டிக்கும் உள்ள வித்தியாசம் என்னவெனில் ,இந்த WHITE BOX ல் அளிக்கப்படும் புகாரின் மீது நடத்தப்படும் விசாரணைக்கும் மற்றைய புகார் பெட்டிகளில் அளிக்கப்படும் புகாரின் மீது நடத்தப்படும் விசாரணைக்கும் உள்ள நடைமுறைகளினால் தான் இது  சிறப்பு பெறுவதோடு ,தனது தூய்மைச்செயலையும் இது செய்வதால் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது .

இப்படி சிறப்புவாய்ந்த WHITE BOX என்ற புகார் பெட்டி ஒவ்வொரு அரசு அலுவலகங்களிலும் மற்றும் அரசிடம் அனுமதி பெற்று இயங்கும் அனைந்து அலுவலகங்களிலும் ,நிறுவனங்களிலும் கட்டாயம் வைக்கப்படவேண்டும் .அலுவலகத்தில் பாதுகாப்பான இடத்தில் மக்கள் அணுகும் வண்ணம் ,அறியும் இடத்தில் வைக்கப்படவேண்டும் .24 மணி நேரமும் மக்கள் பயன்படுத்தும் படியான ஏற்பாட்டுடன் அதன் அமைவிடம் அமையவேண்டும்.பாதுகாப்பு இருக்கவேண்டும் ,ஆனால்,கண்காணிப்பு எதுவும் இருக்கக்கூடாது .இவ்வாறு அமைக்கப்பட்டுள்ள WHITE BOX ல் மக்கள் அச்சமின்றி புகார்களை தெரிவிக்க விழிப்புணர்வை அரசு ஏற்படுத்தவேண்டும் .


WHITE BOX  புகார் பெட்டியில்  ஊழல்,சுரண்டல்,லஞ்சம் பெறுதல், கொடுத்தல்,சரியான நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்துதல்,தங்களுக்கு கொடுக்கப்பட்ட கடமைகளை சரிவர செய்யாதிருத்தல்,கலப்படம் செய்தல், கையாடல் செய்தல் ,சுற்றுப்புற சீர்கேடுகள் செய்தல்....இன்ன பிற இது போன்ற எந்த புகார்களையும் எங்கும் வேண்டுமானாலும் மனுவாக அளிக்கலாம். இதற்கு கட்டணம் கிடையாது .இங்கு அளிக்கப்படும் புகாரின் மீது விசாரிந்து நடவடிக்கை எடுக்க குற்றம் சாட்டப்பட்டவர் முறையான அனுமதி என்ற பதத்தை  பயன்படுத்த தகுதியில்லாதவராகிறார் .அரசியல் அமைப்பு குறிப்பிட்டுள்ள அனைத்து நபர்களும் இதன் மூலம் விசாரிக்க எந்த தடையும் இல்லாத அளவில் உருவாக்கப்பட்ட ஒரு புகார் முறை . 

WHITE BOX ல்  புகார் கொடுப்பவர் தனது பெயரை தெரிவிக்கவேண்டிய அவசியம் இல்லை .பெயர் குறிப்பிட்டால் சரியான நடவடிக்கை உதவியாக இருக்கும் .

WHITE BOX ல் அளிக்கப்படும் புகார்களை வாரவாரம் கடைசி வேலை நாளில் கடைசி மணி நேரத்தில் WHITE BOX வைக்கப்பட்ட இடத்தில் உள்ள பணிப்பதிவேட்டில் முதலில் உள்ள நபர் முதலில் என தொடங்கி பின் அடுத்தவர் என சுழற்சிமுறையில் தலைமையை உருவாக்கி அனைவரின் முன்னிலையிலும் WHITE BOX  அவ்வலுவலத்தில் திறக்கப்படவேண்டும்.

தலைமை ஏற்றவரால் யார் யார் மீது என்ன என்ன புகார் வந்துள்ளது என்பதனை அனைவரும் அறிய படிக்கப்பட்டு ,புகாரின் தன்மைக்கேற்ப உரிய சட்டப்படியான உடனடியாக சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் .தலைமை ஏற்றவரின் மீதே புகார் இருக்கும் பட்சத்தில் அவருக்கு அடுத்த புகாரில்லாத பணிப்பதிவேட்டில் அடுத்துள்ள நபர் தலைமை ஏற்கவேண்டும்.இங்கு உயரதிகாரி ,கடைநிலை ஊழியர் என பேதம் இல்லை.அனைவரும் ஒரு வாரம் தலைமை வகிப்பர் .

புகார்கள் பற்றிய முழுவிவரங்களையும் அந்த அந்த அலுவலக அறிவிப்புப்பலகையில் கட்டாயம் ஒட்டப்படவேண்டும் .அன்றே வட்டார புகார் ஆணையத்திற்கு பரிசீலனைக்கு அனுப்பப்பட்ட வேண்டும்.

இவ்வாறு பெறப்பட்ட புகார்களைப்பற்றிய விவரங்களையும் , நடவடிக்கைகளையும் கண்காணிக்கவும் ,மேல் நடவடிக்கை எடுக்கவும் வட்டார புகார் ஆணையம் ஒன்று அமைக்கப்படவேண்டும்.அது அந்த அந்த வட்டாரத்தில் பெறப்பட்ட புகார் மனுக்கள் சம்பந்தாமான அனைத்து விசயங்களையும் அவைகள் பரிசீலிக்கவேண்டும் .அவைபற்றிய அனைத்து விபரங்களையும் வட்டார புகார் ஆணையத்தின் அலுவலக அறிவிப்புப்பலகையில் கட்டாயம் ஒட்டப்படவேண்டும் .வட்டாச்சியர் வட்டார புகார் ஆணையத்தினை வழிநடத்தவேண்டும்.

வட்டார புகார் ஆணையம் தான் பெற்றவைகள் மற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட விவரங்களை 15 நாட்களுக்கு ஒரு தடவை மாவட்ட புகார் ஆணையத்திற்கு பரிசீலனைக்கு அனுப்பப்பட்ட வேண்டும்.அங்கு அவைகள் பரிசீலணைக்கு உட்படுத்தப்பட்டு அது சம்பந்தமாக எடுக்கப்பட்ட விபரங்களை  தனது அறிக்கையாக 30 நாட்களுக்கு ஒரு முறை மாநில புகார் ஆணையத்திற்கு பரிசீலனைக்கு அறிக்கை அனுப்பப்பட்ட வேண்டும்.மாவட்ட ஆட்சியர் மாவட்ட புகார் ஆணையத்தினை வழிநடத்தவேண்டும்.

மாநில புகார் ஆணையம் தம்முன் கொண்டுவரப்பட்ட புகார் மனுக்கள் சம்பந்தாமான அனைத்து விசயங்களையும் பரிசீலிக்கவேண்டும் . மேலும் பத்திரிக்கை ,செய்தி நிறுவனங்கள் மற்றும் இணையதளம் ஆகியவற்றின் மூலம் 45 நாட்களுக்கு  ஒரு முறை புகார் மனுக்கள் பற்றிய அனைத்து விபரங்களையும் வெளியிட வேண்டும் .அது சம்பந்தமான மத்திய புகார் ஆணையத்திற்கு பரிசீலனைக்கு அறிக்கை அனுப்பப்பட்ட வேண்டும்.மாநில தலைமை செயலர் மாநில புகார் ஆணையத்தினை வழிநடத்தவேண்டும்.

மத்திய புகார் ஆணையம் ஒன்றை அரசு ஏற்படுத்த வேண்டும் .அதன் மூலம் இந்தியாவிலுள்ள அனைத்து  மாநில புகார் ஆணையத்தினையும் வழிநடத்தவேண்டும்.மத்திய புகார் ஆணையத்தில்,ஒரு தலைமை புகார் ஆணையரும் மற்றும் 4 புகார் ஆணையர்களும் அதற்கான நாடாளுமன்றத்தால் உருவாக்கப்படும் சட்டத்துக்குக் கட்டுப்பட்டு குடியரசுத்தலைவரால் நியமிக்கப்படவேண்டும் .

இவ்வாறு அமைக்கப்படும் புகார் ஆணையத்திற்கு அரசியல் அமைப்பு  அங்கீகாரம் கொடுக்கப்படவேண்டும் .

இவ்வாறு ஒரு விரிவான அமைப்பை ஏற்படுத்தினால் தான் இந்தியா தூய்மைப்படும் .

எனவே  லோக்பாலுக்கு பதிலாக அதை விட வலிமையான WHITE BOX  எனும் புகார் ஆணையத்தை நிறுவுவதே நலம்.

எனவே




ஊழலற்ற இந்தியாவை விட



தூய்மையான இந்தியாவையே நான் விரும்புகிறேன் .














.



( படங்கள் உதவி கூகுள் ) .மீள்வு.
Download As PDF

செவ்வாய், 16 ஆகஸ்ட், 2011

Free Anna and Free India of Corruption

Dear friends,



It's outrageous! This morning, Anna Hazare was arrested as he set out to fast for the Jan Lokpal. The government is trying to repress our clamour to end coruption. Let's show the government we will not be silenced. Sign the urgent petition to free Anna and Free India of Corruption!
It’s outrageous! Anna Hazare has been arrested and is being held in an undisclosed location. But as he was taken away he said:

"Don't let my arrest stop this movement. This is the nation's second struggle for freedom."

Let’s heed his call to action -- if we all now stand with Anna and show that we will not be silenced, we will force the government to free him and listen to the demands of the people.

Sign the urgent petition to PM Manmohan Singh and Congress Leader Rahul Gandhi to Free Anna, then send this to everyone -- it will be delivered directly to them:

http://www.avaaz.org/en/free_anna/?vl

The government is trying to repress our nation-wide clamour to end corruption. This morning Anna Hazare was arrested by plain clothes policemen as he set out to begin his fast in support of the Jan Lokpal Bill. His top aides were also arrested and reports say over 3,000 people are being held in Chhatrasal stadium. Now protests are exploding across the country.

This is a shocking response from the government -- instead of upholding our legal right to fast and protest, and supporting our demands to end corruption, it is clamping down on our democratic rights and illegally arresting our brave non violent leaders.

But we are millions and we are determined to rid this country of repression and corruption. Let’s show the government the power of people power. Sign the urgent petition to Free Anna and Free India of Corruption now and send this to everyone:

http://www.avaaz.org/en/free_anna/?vl

Today we all have a choice -- stand by and watch the government stifle our democracy, or join this national movement to free India from the poison of corruption. Let’s make sure we all stand on the right side of history -- join the urgent call to Free Anna and Free India of Corruption now.

With hope and determination,

Ricken, Shibayan, Alice, Pascal and the entire Avaaz team

Sources:
India corruption: Hundreds held over Hazare protest
http://www.bbc.co.uk/news/world-south-asia-14542053

Anna Hazare fasts in police detention
http://timesofindia.indiatimes.com/india/India-against-corruption-Anna-Hazare-fasts-in-police-detention/articleshow/9620361.cms

Anna sent to 7-day judicial custody, taken to Tihar Jail
http://www.livemint.com/2011/08/16162110/Anna-sent-to-7day-judicial-cu.html?h=B
Download As PDF

ஜனநாயகப் படுகொலை



இன்று அண்ணா ஹசாரே  கைது செய்யப்பட்ட செயல்
மிகவும் கண்டிக்கக்கூடிய செயலாகும் .
இது காந்தியத்தின் மீதான ஜனநாயகப் படுகொலையாகும்.
எனது கடும் கண்டனத்தை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்.





.
Download As PDF

திங்கள், 15 ஆகஸ்ட், 2011

இந்தியாவின் தோல்வியும்,இந்தியர்களின் எதிர்பார்ப்பும்,சுதந்திர தினமும்.




சுதந்திரம் என்றால் என்ன?,.அதனை ஏன் பாதுகாக்கவேண்டும்?.நமக்கு அது என்ன தந்துள்ளது என்பது பற்றி 80 வயதிற்கு மேல் இருக்கும் ஒவ்வொரு இந்திய சுதந்திர தீரர்களுக்கும்,  அதன் தேவை அதன் அவசியம் பற்றி முள்வேலிகளிலும்,புலம்பெயர்ந்துள்ள சகோக்களுக்கும் மற்றும் அதற்காக போராடிவரும் உயர்ந்தோருக்கு மட்டுமே தெரியும்.மற்றபடி பெரும்பான்மையினருக்கு  அது பற்றி பேசவும்,எழுதவும் மட்டுமே முடியும் அவ்வளவே,அதனை மிகப்பெரிய வெளிப்பாடு என்று கூறுவதோடு ,அடுத்த நிலைக்குச்செல்  என்று கூறுவதை உரிமை மீறல் என மட்டும்கூறத்தெரியும் அது பேசியதை எழுதியதை கேட்டு படித்த மனன வெளிப்பாடு என்பதால்  இந்த நிலை.

சுதந்திரத்தைப்பற்றியும் ,அதன் தன்மைபற்றியும் ,இன்று நம் நாடு இப்படியாகிவிட்ட துரதிஷ்டமான சூழலுக்கு காரணம் பற்றியும் எத்தனை பேருக்கு சரியாக தெரியும.எனக்கு தெரிந்து அப்படிப்பட்டவர்கள் அரிதிலும் அரிதே.ஆனால், இதைப்பற்றி தங்களுக்கு தெரிந்தது போல காட்டிக்கொண்டு தமக்கும்,சமூகத்திற்கும்,ஏன் தனது சொந்த குடும்பத்தின் எதிர்காலத்திற்கே குழிதோண்டி புதைத்துவரும் அறிவுஜிவிகள் தான் இங்கு  அதிகம் . இவர்கள் யாரோ எழுதியதை படித்து ,கேட்டு யாவும் தமக்கு தெரிந்தது போல பேசியும், எழுதியும் வருவதோடு  தமக்கு தமக்கே சாவுமணி அடித்துக் கொண்டு  வாழ்ந்துவருபவர்கள்.இவர்களை தலைவானாக ,கருத்தாளன ஏற்று தங்களையும்,தங்களின் அறிவையும்,வாழ்வையும் மலுங்கடிக்கவிட்டுவிட்ட   பரிதாபத்திற்குரிய பாமரர்கள் இந்தியாவில் மிகமிக அதிகம்.

இன்றைய இந்தியாவின் இழிநிலைக்கான காரணத்தைப் பற்றி பார்த்தோமானால், இங்கு  கருத்துரிமை என்ற ஒன்று முற்றிலும் இல்லை , அதனால் தான் இந்தியா தனது வளர்ச்சியில் பின் தங்குகிறது, தேவையில்லாத  பல சிக்கல்களில் ஆட்படுது ,பல சிக்கல்களை உருவாக்குகிறது.

எந்த நாட்டில் பேச்சு சுதந்திரம்,எழுத்து சுதந்திரம் ,வெளிப்பாட்டு சுதந்திரம் மற்றும் பொதுவெளியில் சுதந்திரமாக செயல்படும் சுதந்திரம் ஆகியவைகள் தடுக்கப்படுகிறதோ அங்கெல்லாம் ஒரு தகுதியில்லாத அரசு செயல்படுகிறது என்பதுவே உண்மையிலும் உண்மை.அப்படிப்பட்ட ஒரு சூழல் இன்று இந்தியாவில் நிலவுவது மிகவும் வருத்தப்படக்கூடிய ஒன்றாக இருக்கிறது . இது சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய தோல்வியாகும்.அரசியல்கட்சிகள் தங்களை வளர்க்கும் சுயநலத்தில் நாட்டின் சுதந்திரத்தையும்  , ஜனநாயக மாண்பையும் காற்றில் பறக்கவிட்டுவிட்டதே இதற்கு காரணம் .அரசியல் கட்சிகளாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ள அனைத்து கட்சிகளும் இதில் அடங்கும்.

இவர்களை மக்களாட்சியின் காவலனாக இருப்பார்கள் என்று எதிர்பார்த்தவர்கள் மக்கள் . ஆனால் அரசியல்வாதிகள் அனைவரும் மன்னராட்சியின் நீட்சியாக மாறிவிட்ட கொடுமை இன்றைய இந்தியாவில். அதனால் தான் எங்கும் ஊழல், அதனால் தான் எங்கும் சுரண்டல்.அதனால்  தான் இங்கு கருத்துரிமை முடக்கப்படுகிறது .

அதனால் தான் மக்களுக்கு எங்கும் , எவரிடமும்  நம்பிக்கையில்லை , அதனால் தான் எங்கும் எவ்விடத்திலும் ஏமாற்றம்.அதனால் தான் இன்னும் ஏழை நாடாகவே இருக்கிறது இந்தியா.வருமையையும் , ஊழலையும் அனுமதிக்கிற அரசியல் கட்சிகள்  இந்தியாவிற்கு கேடு .


நமது இந்தியா மிகவும்  அற்புதமான நாடு.இந்தியர்கள் அனைவரும் மிகவும் நல்லவர்கள்.ஆனால்,பாதையின்றி  பயணிக்கின்றனர் பரிதாபமாக.

இன்று இந்தியர்களின் எதிர்பார்ப்பு எல்லாம் ஒரு உண்மையான தன்னலமற்ற தலைவனும்,சுதந்திர அரசுமேயாகும்  .

தன்னலமற்ற தலைவர் என யாரும் இந்திய அளவில் உருவாகவில்லை , இனி உருவாவார்கள் என்ற நம்பிக்கையில்  தனது பயணத்தை நடத்திவருகிறது  நமது பாரதம் .


இவர்கள் சுதந்திரம் பெற்று என்ன சாதிக்கப்போகிறார்கள் ?.அரசு , அரசியல், அரசாட்சி, மக்களாட்சி ,பொதுநலன் ,கண்ணியம் ,சேவை ,மனித நேயம் , போன்றவைகளைப்பற்றி இவர்களுக்கு என்ன தெரியும் ?. இவர்கள் அதனை சுதந்திரம் பெற்றால் பெறத்தான் போகிறார்களா ? .இவர்களுக்கு அந்த தகுதியும் இல்லை, தகுதியடையும் தகுதியும் இல்லை என்றும் ,இவர்கள் திருந்தப்போவதே இல்லை.அதனால் இவர்களுக்கு எதற்கு சுதந்திரம் ,வீண் என்ற உட்பொருள் பொதித்து பேசியவரை நாங்கள் உங்களின் நாட்டிற்கு அடிமையாக இருப்பதை விட எங்களின் சுதந்திர நாட்டில் நாங்கள் தகுதியில்லாதவர்களாகவே வாழ்ந்து மடிகிறோம்.தகுதி ,  தகுதியடையும் தகுதி பற்றி கவலைப்படவேண்டியது நாங்கள் தான் என பதிலடி கொடுத்து தனது பக்குவமான அரசியல் நடவடிக்கையினால் நமக்கு சுதந்திரத்தை பொற்றுக்கொடுத்துச்சென்ற அண்ணல் காந்திஜியை இந்த இனிய நாளில் அனைவரும் போற்றுவோம்.






இது நமது இந்தியா 
நமது தாய் நாடு 
நாமனைவரும் இந்தியர்கள் என பெருமைப்படுவோம்                                          




.
Download As PDF

வெள்ளி, 12 ஆகஸ்ட், 2011

தமிழக முதல்வரை ஒரு கொலைகாரன் விமர்சிப்பதா?

//செருப்பால அடிக்கணும் இந்த நாதாரிய. என்ன திமிரிருந்தால் இப்படி பேசுவான். ஜெயலலிதா ஒரு தனி நபரல்ல. ஏழரைக் கோடி தமிழர்களின் ஏக பிரதிநிதி. இவன் மட்டும் சரியான ஆம்பிளையாக இருந்தால்//

//ஜெயலலிதா என்பவர், அரசியல் மாறுபாடுகளைத் தாண்டி, இந்த தேசத்து மாநிலம் ஒன்றின் முதல்வர். ஒரு கொலைகாரன், சர்வதேச சமுதாயத்தில் வெறுத்து ஒதுக்கப்படும் நிலையிலுள்ள ஒரு நபர், தமிழக மக்களின் ஏகோபித்த பிரதிநிதியான ஜெயலலிதாவை அவமானப்படுத்தும் விதத்தில் பேசுகிறான்… இதை மத்திய அரசு வேடிக்கைப் பார்க்கிறதா?//


//இலங்கையில் நடந்த போரை நிறுத்துவதற்கோ, இலங்கைத் தமிழர்களை பாதுகாக்கவோ முதல்வர் கருணாநிதி நடவடிக்கை எடுக்கவில்லை. கடைசி வரை நாடகம் ஆடினார். தன் பதவியை காப்பாற்றிக் கொள்ள, //


//“உடனடியாக இந்த விஷயத்தில் மத்திய அரசு நடவடிக்கை வேண்டும். இந்தப் போர்க்குற்றவாளிகளின் வாலாட்டலை இனியும் மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது.  //


தமிழக முதல்வரை ஒரு கொலைகாரன் விமர்சிப்பதா?

Wednesday, August 10, 2011 at 12:01 am





அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறார் ஜெ.-கோத்தபயா விஷமப் பேச்சு-தமிழ் தலைவர்கள் கண்டனம்!
டெல்லி: ஈழப் போரின் கடைசிக் கட்டத்தில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை வேண்டும். இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளது அரசியல் ஆதாயம் தேடும் முயற்சி என்று  போர்க்குற்றவாளி ராஜபக்சேவின் தம்பியும், ஈழ மக்களை, சமாதானம் பேச வந்த புலிகளின் தலைவர்களை சரமாரியாக சுட்டுக் கொல்லும்படி உத்தரவிட்ட கொடியவனுமான கோத்தபயா ராஜபக்சே விஷமத்தனமாக கூறியுள்ளார்.
இதுகுறித்து ஹெட்லைன்ஸ் டுடே டிவிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில்,
இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மற்றும் ஜெயலலிதா கூறியுள்ள கருத்துக்கள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை, அரசியல் ஆதாயம் தேடும் முயற்சி. இது காரணமே இல்லாதது. இலங்கையில் வசிக்கும் மக்கள் அவர்கள், சிங்களர்களோ அல்லது தமிழர்களோ, அவர்கள் இலங்கையர்கள். எங்களது மக்களைப் பற்றி மற்றவர்களை விட நாங்கள்தான் அதிகம் கவலைப்படுகிறோம்.
உண்மை புரியாமல் தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இலங்கைத் தமிழர்களின் நலன் மீது ஜெயலலிதாவுக்கு அக்கறை இருக்குமானால், முதலில் அவர் தனது மாநில மீனவர்களை இலங்கை கடற்பகுதிக்குள் ஊடுறுவக் கூடாது என்று தடை செய்ய வேண்டும். இலங்கை கடற்பகுதியில் ஊடுறுவி பெருமளவில் மீன்பிடிப்பது தமிழக மீனவர்கள்தான். இலங்கைத் தமிழ் மீனவர்களின் உரிமைகளை அவர்கள் தட்டிப் பறித்து வருகிறார்கள்.
எனவே முதலில் தமிழக மீனவர்களை ஜெயலலிதா தடுத்து நிறுத்த வேண்டும். தனது பகுதிக்குட்பட்ட தமிழர்கள் குறித்து அவர் கவலைப்படட்டும். இதைத்தான் அவர் முதலில் செய்ய வேண்டும்.
தனது வேலையை ஜெயலலிதா கவனிக்கட்டும்
தனது வேலையை ஜெயலலிதா முதலில் கவனமாக செய்யட்டும். இலங்கையில் போர் பாதித்த பகுதிகளில் தமிழ் மக்களின் நிலைமை குறித்து அவர் கவலைப்படத் தேவையில்லை.
இலங்கையில் போரால் பாதிக்கப்பட் பகுதிகளில் வசிக்கும் தமிழர்களின் மறு சீரமைப்பு மற்றும் மறுவாழ்வு குறித்து நாங்கள் உண்மையான கவலையில் உள்ளோம். அதுகுறித்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இதை தமிழக அரசுக்கு சுட்டிக் காட்ட விரும்புகிறோம். இவர்கள் மீது ஜெயலலிதாவுக்கு உண்மையான அக்கறை இருக்குமானால், சர்வதேச விசாரணையை அவர் கோரக் கூடாது. அதனால் என்ன பயன் கிடைத்துவிடும்?
சர்வதேச விசாரணையைக் கோருவதில் எந்தவிதமான நியாயமும் இல்லை. சர்வசே தலையீடால் இந்தப் பிரச்சினை எப்படித் தீரும். இது இறையாண்மை மிக்க நாடு. நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை. சர்வதேச சமுதாயத்திற்கு இங்கு வேலையில்லை. அப்படி ஒரு  தலையீடு தேவை என்பது தவறான எண்ணமாகும்.
உலகில் சில நாடுகள் வேண்டுமானால் இந்தக் கோரிக்கையுடன் வலம் வருபவர்களுக்கு ஆதரவாக செயல்படலாம். ஆனால் பிற நாடுகள் அனைத்தும் எங்களுக்கு ஆதரவாகவே உள்ளன. ரஷ்யா முதல் சீனா வரை, ஏன், இந்தியாவே கூட எங்களுக்குத்தான் ஆதரவாக உள்ளன. தமிழகம் இந்தியாவுக்குள் இருக்கும் ஒரு மாநிலம்தான். பாகிஸ்தானும் எங்களுக்கு ஆதரவாகவே உள்ளது. ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு, தென் கிழக்கு ஆசிய நாடுகளும் எங்களுக்கு உதவி வருகின்றன. அதுதான் உண்மையான சர்வதேச சமுதாயம். உலகில் உள்ள சிலர் கூடி பேசிவிட்டால் அது சர்வதேச சமுதாயமாக மாறி விடாது.
தமிழ் மக்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்க முடியாது
தமிழ் மக்களுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள அரசியல் அதிகாரங்களை விட கூடுதலான அதிகாரங்கள் வழங்குவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவே. அதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை என்றும் கூறலாம்.
தற்போது உள்ள இலங்கை அரசியல் சட்டம், அனைவரும் இணைந்து வாழத் தேவையான அம்சங்களை உள்ளடக்கியதாகவே உள்ளது. இதை விட அதில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வர முடியாது என்றே நான் கருதுகிறேன். இப்போது விடுதலைப் புலிகள் இல்லை, எனவே வேறு எந்த மாற்றமும் தேவையில்லை என்று நான் நினைக்கிறேன்.
இதை விட இவர்களுக்கு (தமிழர்களுக்கு) வேறு என்ன செய்து விட முடியும். இப்போதும் கூட நாங்கள் உள்ளாட்சித் தேர்தலை சிறப்பாக நடத்தி முடித்துள்ளோம். விரைவில் மாகாணத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. புதிய முதல்வர்கள் வரவுள்ளனர். அமைச்சர்கள் வரவுள்ளனர். எனவே இதைத் தாண்டி வேறு எந்த அதிகாரமும் தமிழ் மக்களுக்குத் தேவையில்லை.
தமிழர்களுக்கு நிறைய செய்து விட்டோம்
நாங்கள் தமிழ் மக்களுக்கு நிறையச் செய்து விட்டோம். எனவே இதற்கு மேலும் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை,” என்று கூறியுள்ளார் கோத்தபயா.
என்ன செய்யப் போகிறது மத்திய அரசு?
ஜெயலலிதா என்பவர், அரசியல் மாறுபாடுகளைத் தாண்டி, இந்த தேசத்து மாநிலம் ஒன்றின் முதல்வர். ஒரு கொலைகாரன், சர்வதேச சமுதாயத்தில் வெறுத்து ஒதுக்கப்படும் நிலையிலுள்ள ஒரு நபர், தமிழக மக்களின் ஏகோபித்த பிரதிநிதியான ஜெயலலிதாவை அவமானப்படுத்தும் விதத்தில் பேசுகிறான்… இதை மத்திய அரசு வேடிக்கைப் பார்க்கிறதா?
எங்களுக்கு இந்தியா போதும், தமிழகத்தின் எதிர்ப்பு பற்றி அக்கறையில்லை என்றால் என்ன அர்த்தம்? இந்தியாவுக்குள் பிரிவினையை தூண்டும் விதத்தில் பேசியுள்ள இந்த கயவனை என்ன செய்யப் போகிறது மன்மோகன் சிங் அரசு?
தமிழகத்தைப் போன்ற மாநிலங்கள்தான் இந்தியா… அவர்கள் இல்லாவிட்டால், இந்த நாடே இல்லை என்பதை எப்படிப் புரிய வைக்கப் போகிறார்கள்?
முதல்வர் ஜெயலலிதா தனிப்பட்ட முறையில் இலங்கை ஆட்சியாளர்களையோ இலங்கையையோ விமர்சிக்கவில்லை. ஐநா அறிக்கை அடிப்படையில் போர்க்குற்றச் சாட்டுகள் குறித்த விசாரணை கோரியுள்ளார். போர்க்குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை தர வேண்டும். அதுவரை இலங்கையுடன் பொருளாதார உறவு வேண்டாம் என்றார். சட்டம் அனுமதித்த வழியில் இனக் கொலையாளிகளுக்கு தனது எதிர்ப்பை காட்டியுள்ளார், தமிழக அரசின் தலைமை அமைச்சராக.
இதில் இம்மியளவும் யாரும் தவறு காணமுடியாது.
கோத்தபயவின் பேச்சை ஒரு பைத்தியக்காரனின், கொலை வெறிபிடித்த மிருக்கத்தின் உளறலாகவும் எடுத்துக் கொள்ள முடியவில்லை. இலங்கை அரசின் குரலாகவே அவர் பேசியிருக்கிறார்.
“உடனடியாக இந்த விஷயத்தில் மத்திய அரசு நடவடிக்கை வேண்டும். இந்தப் போர்க்குற்றவாளிகளின் வாலாட்டலை இனியும் மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது. தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவமானப்படுத்தியுள்ள கோத்தபய மீது மத்திய அரசு உடனடி நடவடிக்கை அவசியம்,” என கட்சி பேதமின்றி குரல்கள் எழ ஆரம்பித்துவிட்டன இப்போதே. வைகோ, பழ நெடுமாறன் போன்றவர்கள் கோத்தபயவை கண்டித்துள்ளனர்.
வழக்கம்போல ஊமைச்சாமியாக இல்லாமல், நடவடிக்கையில் இறங்குவாரா மன்மோகன்சிங்?




Comments

Responses to “தமிழக முதல்வரை ஒரு கொலைகாரன் விமர்சிப்பதா?” தினகர் says:
  1. நமது மாநில முதல்வரை இன்னொரு நாட்டவன் பழித்து பேசுவதை ஏற்க முடியாது..தமிழகம் முழுவதுமிலிருந்தும் மன்மோகன்சிங்கிற்கு தகவல் அனுப்பி, இலங்கை அமைச்சரின் கருத்தை வாபஸ் பெற வைக்க வேண்டும்.
    இந்தியாவிற்குள் வந்து இந்திய தொலைக்காட்சியில், இந்தியாவின் ஒரு மாநில முதல்வரை பழித்து பேசுவது, எந்த வெளியுறவு கொள்கைக்கும் ஏற்புடையதல்ல.. அவர்கள் சீனாவிற்கு ஆதரவாக போய்விடுவார்கள் என்ற ஒரே காரணத்திற்காக எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டிருக்க தேவையில்லை. அப்படி பூச்சாண்டி காட்டிக்கொண்டிருக்கும் ஒரு நாட்டை எத்தனை நாள் ’ நட்பு நாடாக’ வைத்துக்கொண்டிருக்க முடியும்.
    தென்னிந்தியாவின் மூத்த அரசியல்வாதி கலைஞர் இதற்காக முதல் குரலை கொடுக்கவேண்டும்..
    Ilango says:
  2. செருப்பால அடிக்கணும் இந்த நாதாரிய. என்ன திமிரிருந்தால் இப்படி பேசுவான். ஜெயலலிதா ஒரு தனி நபரல்ல. ஏழரைக் கோடி தமிழர்களின் ஏக பிரதிநிதி. இவன் மட்டும் சரியான ஆம்பிளையாக இருந்தால் தமிழ்நாட்டுப் பக்கம் வந்து பார்க்கட்டும். ராஜபக்சே குடும்பமே அழியப் போகிறது. அதன் அறிகுறிதான் இது.
    இவன் இந்த அளவு கீழ்த்தரமாக பேசியதற்காக ஜெயலலிதா எந்த ரியாக்ஷனும் காட்ட வேண்டாம். இப்போது குரல் கொடுக்க வேண்டிய கடமை அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் மக்களுக்கே உள்ளது. நமது உரத்த குரல் மத்திய அரசின் உறக்கத்தையும் இலங்கை அரசு மீதான மயக்கத்தையும் கலைக்கட்டும்.
  3. நாஞ்சில் மகன் says:
    ///////தென்னிந்தியாவின் மூத்த அரசியல்வாதி கலைஞர் இதற்காக முதல் குரலை கொடுக்கவேண்டும்..//////
    தினகர் ஐயா முதல் குரல் கொடுக்க முடியாது வேண்டுமானால் கடிதம் எழுதட்டுமா அல்லது மனித சங்கிலி பேரணி நடத்தட்டுமா அல்லது முன்று மணி நேர உண்ணாவிரதம் நடத்தட்டுமா அல்லது திமுக எம்பி க்கள் ராஜினாமா நாடகம் நடத்தட்டுமா ஒரு நாள் பந்த் என்று அறிவித்து விட்டு கோட்டைக்கு பணிக்கு செல்லட்டுமா இதில் எதை செய்ய வேண்டும் தினகர் சொல்லுங்கள். சார் உங்கள் கருத்தை இப்படி வேண்டுமானால் எழுதுங்கள் ““தென்னிந்தியாவின் மூத்த ****ட அரசியல்வாதி கலைஞர் இதற்காக முதல் குரலை கொடுக்கவேண்டும்..என்று. கடந்த 30 வருடங்களாக இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுத்து வரும் நெடுமாறன் அவர்கள் கூட இன்று அம்மாவைத்தான் நம்பியிருக்கிறார் இன்று. இதோ அவரது அறிக்கை
    சென்னை மெமோரியல் ஹால் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதை நாம் தமிழர் கட்சி ஊடகவியலாளர் கா.அய்யநாதன் தொடங்கி வைத்தார்.
    உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் பேசுகையில், விடுதலைப் புலிகளுக்காகவும், இலங்கை தமிழர்களுக்காகவும் போராடிய பிரபாகரனுக்கு, முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பல்வேறு வகையில் உதவி செய்துள்ளார். அதேபோல், முதல்வர் ஜெயலலிதாவும் ஈழத்தமிழருக்கு ஆதரவாக எல்லா வகையிலும் உதவிகளை செய்ய வேண்டும் என்றார்.
  4. நாஞ்சில் மகன் says:
    தென்னிந்தியாவின் மூத்த அரசியல்வாதி கலைஞரின் துரோகத்தனங்கள்.
    இலங்கையில் நடந்த போரை நிறுத்துவதற்கோ, இலங்கைத் தமிழர்களை பாதுகாக்கவோ முதல்வர் கருணாநிதி நடவடிக்கை எடுக்கவில்லை. கடைசி வரை நாடகம் ஆடினார். தன் பதவியை காப்பாற்றிக் கொள்ள, காங்கிரஸ் அரசின் கூட்டு சதிக்கு உறுதுணையாக செயல்பட்டார்.
    :இலங்கையில் போர் நடந்து கொண்டிருந்தபோது, போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கும், இலங்கைத் தமிழர்களை பாதுகாப்பதற்கும் நடவடிக்கை எடுப்பதாக பொய் சொல்லி, இலங்கை – இந்தியா இடையேயான கூட்டு சதிக்கு, பலர் உறுதுணையாக செயல்பட்டனர். அவர்களில், தமிழக முதல்வர் கருணாநிதிக்கு முக்கிய பங்கு இருக்கிறது.இலங்கையில் போர் உச்சகட்டத்தை எட்டியிருந்தபோது, இந்தியாவில் லோக்சபா தேர்தல் நெருங்கிக் கொண்டிருந்தது. காங்கிரஸ் அரசுக்கு எதிராக, தமிழகத்தில் எழுந்த கடும் எதிர்ப்புகள், கருணாநிதிக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தின. கருணாநிதியின் எதிர்காலமும், கேள்விக்குறியாக இருந்த நிலையில், போர் நிறுத்தத்தை வலியுறுத்தும் வகையில், கருணாநிதி நாடகம் ஒன்றை ஆரம்பித்தார்.
    டில்லிக்கு தந்தி அனுப்புதல், ஆர்ப்பாட்டம் நடத்துதல், மனிதச் சங்கிலி பேரணிகளை நடத்துதல் என நீண்டுகொண்டே சென்ற கருணாநிதியின் போர் நிறுத்த நாடகம், அக்டோபர் 14ம் தேதி மத்திய அரசுக்கு கெடு விதிக்கும் காட்சியாக மாறியது. “இலங்கையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், தி.மு.க., எம்.பி.,க்கள் கூண்டோடு ராஜினாமா செய்வர்’ என அறிவித்தார்.இதற்கு ஒரு வாரம் முன், இலங்கைத் தமிழக மக்களின் தன்னாட்சியுரிமையை அங்கீகரித்து, ஜெயலலிதா ஒரு அறிக்கையை வெளியிட்டார். இரு தலைவர்களின் நடவடிக்கைகளைக் கண்டு, இலங்கைத் தமிழர்கள் மத்தியில் பெரும் நம்பிக்கை ஏற்பட்டது. 1980களில் எம்.ஜி.ஆருடன், புலிகள் நெருங்கிப் பழகிய ஒரே காரணத்திற்காக, விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் கருணாநிதி ஈடுபட்டார். இவரைப்பற்றி புலிகள் நன்கு அறிந்து வைத்திருந்தபோதும், மூத்த அரசியல் தலைவர் என்ற வகையில், அவருடன் நல்லுறவை வைத்துக்கொள்ள புலிகள் பெரிதும் விரும்பினர்.
    போரை நிறுத்த நடவடிக்கை எடுக்கக்கோரி, புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் நடேசன், முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் எழுதினார். அதற்கு, கருணாநிதி எவ்வித பதிலும் அளிக்கவில்லை. இதற்கிடையே, எம்.பி., பதவியை ராஜினாமா செய்து, கருணாநிதியிடம் கடிதம் கொடுத்தார் கனிமொழி. இது, இலங்கைத் தமிழர்களிடையே இருந்த நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியது.இதற்காக, கனிமொழிக்கும் புலிகள் தரப்பில் ஒரு கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால், எம்.பி.,க்கள் யாரும் ராஜினாமா செய்யவில்லை. தந்தையிடம் கொடுத்த ராஜினாமா கடிதத்தை திரும்ப பெற்றுக் கொண்டு, தன் பதவியை தக்க வைத்துக்கொண்டார் கனிமொழி. இதன்மூலம், கூண்டோடு ராஜினாமா என்ற கருணாநிதியின் அறிவிப்பு, முழுக்க முழுக்க நாடகம் என்பது உறுதியானது.
    கருணாநிதி, தன் பதவியை பாதுகாப்பதற்காக, மத்திய அரசின் கூட்டுச் சதிக்கு திரைமறைவில் உறுதுணையாக இருந்தார். போரை நிறுத்தவோ, இலங்கைத் தமிழர்களை பாதுகாக்கவோ கடைசிவரை, கருணாநிதி நடவடிக்கை எடுக்காமல் நாடகம் ஆடினார். இலங்கைத் தமிழர்களை பாதுகாப்பதில், கருணாநிதி துரோகம் செய்துவிட்டார்.
  5. மிஸ்டர் பாவலன் says:
    ///நமது மாநில முதல்வரை இன்னொரு நாட்டவன் பழித்து பேசுவதை ஏற்க முடியாது..தமிழகம் முழுவதுமிலிருந்தும் மன்மோகன்சிங்கிற்கு தகவல் அனுப்பி, இலங்கை அமைச்சரின் கருத்தை வாபஸ் பெற வைக்க வேண்டும்.///
    (தினகர்)
    அன்றே சொன்னார் ஒபாமா:
    “மன்மோகன் சிங் பேசினால் அதை உலகமே நின்று கேட்கும்”
    மன்மோகன் அவ்வளவு powerful என்ற பொருளில் எடுத்துக் கொள்ளலாம்.
    வேறொரு (சரியான) பொருளும் உண்டு. “மன்மோகன் எப்போதாவது
    தான் பேசுவார். பேசினாலும் சிறிய வாக்கியங்கள் தான் பேசுவார்.
    மெல்லிய குரலில் தான் பேசுவார், அதுவும் காதில் விழாது.
    அதனால் அதை நின்று கேட்டால் தான் அவர் சொன்ன வருகிறார்
    என்பது புரியும்”.
    நண்பர்களே – சோனியாவை கன்சல்ட் பண்ணாமல் மன்மோகன் எதுவும்
    செய்ய மாட்டார். சிதம்பரம் என்ன செய்வார் என்று தெரியல. அதனால்
    சிதம்பரம் ஏதாவது குரல் கொடுத்தால் நல்லது. சிதம்பரமும்
    சோனியா காந்திக்கு வெயிட் செய்தால் எதுவும் எதிர்ப்பு குரல் வராது.
    குறைந்த பட்சம் மூத்த அரசியல்வாதியான கலைஞர் குரல் கொடுக்கலாம்.
    குறளுக்கு பொருள் தந்த கலைஞர் பொருள் தரும் குரல் கொடுப்பார்
    என வேண்டுகிறோம்.
    -=== மிஸ்டர் பாவலன் ==-

  6. மிஸ்டர் பாவலன் says:
    ///கருணாநிதி, தன் பதவியை பாதுகாப்பதற்காக, மத்திய அரசின் கூட்டுச் சதிக்கு திரைமறைவில் உறுதுணையாக இருந்தார். போரை நிறுத்தவோ, இலங்கைத் தமிழர்களை பாதுகாக்கவோ கடைசிவரை, கருணாநிதி நடவடிக்கை எடுக்காமல் நாடகம் ஆடினார். இலங்கைத் தமிழர்களை பாதுகாப்பதில், கருணாநிதி துரோகம் செய்துவிட்டார்.////
    100 % உண்மை !! இருப்பினும், இப்போது ஒருமித்த குரல் வேண்டும்.
    குறளோவியம் கண்டவர் குரல் ஓவியம் தருகிறாரா பார்ப்போம்..
    -=== மிஸ்டர் பாவலன் ==-
  7. குமரன் says:
    கோத்தபாய சொல்லியிருப்பதைப் படிக்க ஆரம்பித்த உடன் இளங்கோ எழுதிய முதல் இரண்டு சொற்கள்தான் எனது மனதிலும் வந்தது. நேரில் கண்டால் நிஜமாகவே செய்துவிடுவேன்.
    ஜெயலலிதா நமது மாநில முதல்வர் என்பது மட்டுமல்ல, நமது சட்ட மன்றம் இயற்றிய தீர்மானத்தை ‘இந்தப்பய’ விமரிசித்திருக்கிறார். கண்டித்திருக்கிறார். தமிழர்களைக் கொன்றதுக்கு மேல் எதுவும் செய்ய இல்லை என்று சொல்வதாகத்தான் இவர் பேசியதைப் பொருள் கொள்கிறேன்.
    நாஞ்சில் மகன் கருணாநிதி பற்றிக் கூறியுள்ள கருத்துக்களுடன் முழுக்க உடன்படும் அதே வேளையில் நாம் நமது எதிரி “இந்தப்பய”தான் என்பதிலிருந்து கவனம் சிதற விடக்கூடாது.
    மன்மோகன் குறித்து மிஸ்டர் பாவலன் சொல்வது மிகச்சரி. அவர் எங்கே வாயைத் திறக்கப் போகிறார். சோனியா வேறு படுத்துக் கிடக்கிறார். எப்படி உத்தரவு வாங்குவது?
  8. hariharakrishnan says:
    “கோத்த பேயே ராஜபக்ஷே! சொன்ன ஒவோவுறு வாக்கியத்திற்கும் அவர் மன்னிப்பு கேட்கவேண்டும். முதலில் இந்தியா நமது முதல்வரை விட்டுகொடுக்காமல் நமது வெளியுறவுத்துறை அமைச்சர், கண்டிப்பாக இலங்கைக்கு கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்து, தமிழக முதல்வர் என்பது இந்தியாவின் ஒருபகுத்யின் முதல்வர், மாநிலத்தின் முதல்வர், என்பதை மறந்து விட்டதா! இலங்கைக்கு இந்தியா இனியும் சப்போர்ட் என்ற பெயரில் சப்பைக்கட்டு கட்டிகொண்டிருந்தால், இந்தியாவின் இறையாண்மை கேள்விக்குறியாகிவிடும். இதற்க்கு இடம் கொடுக்காமல், இந்தியா இலங்கைக்கு உடனடியாக ஒரு கண்டனத்தை இந்தய நாட்டின் சார்பாக கொடுக்கவேண்டும். செய்யும் செய்யவேண்டும் இது ஒவோவரு தமிழனின் வேண்டுகோள்.
  9. நமது முதல்வரை ஒரு கொலைகாரன் விமர்சிப்பதா? கூடாது. ஜெயாவை நமக்குப் பிடிக்கும் பிடிக்காது என்பதெல்லாம் இப்போது பார்க்காமல், அவரை அவமானப்படுத்திய இந்த கேடுகெட்ட நாயை கண்டிக்க வேண்டும். இந்திய அரசே, தமிழக மக்கள் உனது குடிகளா இல்லையா என்பதை இப்போதாவது உறுதிப்படுத்து.
  10. palPalani says:
    எனக்கு ஒரு டவுட்டு…
    *** சமீபத்தல ஒரு 50 பேரு சென்னை வந்து(அதுவும் சிங்கள் T-Shirt போட்டுகிட்டு) அடி வாங்கிட்டு போனதா நியூஸ் வந்தது…
    *** எப்ப்தும் இல்லாம இப்ப வந்து ஒரு இந்திய பத்திரிக்கு இந்த நாதாரி பெட்டி கொடுக்குது, அதுவும் தமில் நாட்டு தலைவரைப்பத்தி.
    ***கொஞ்சநாளுக்கு முன்னாடி ஹிலாரி கிளிண்டன் வந்து TN CM -ஐ பார்த்துட்டு போனாங்க, அதுவும் இலங்கை விசயமா பேசினதா நியூஸ் வந்தது.
  11. வேல் says:
    இது ஒரு வெறிநாய்யின் ஊழை, தமிழக முதல்வரை அவமானப்படுத்திய இந்த நாயை கண்டிக்கிறேன். ஒரு நாள் வரும்.
  12. ரஜினி விரும்பி says:
    அடடா ஆச்சரியமா இருக்கே.என்னப்பா இது வினோ சாரும் என்வழியும் அ.தி.முகவுக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்று யாரும் போடவில்லையே.ஒரு நண்பர் முன்பு ஒரு கமெண்டில் சுவிஸ் வங்கியில் உள்ள கலைஞர் சொத்து பற்றி ஒரு தலத்தில் வந்ததை இங்கே போட மாட்டீர்கள் ஆனால் ஜெயலலிதாவை பற்றி மட்டும் தப்பா போடுவீர்கள் என்று வினோ சாருக்கு டூ விட்டார்.இப்போ இந்த பதிவிற்கு அவர் கருத்தை ஆவலுடன் எதிர்பார்கிறேன்.
  13. ரஜினி விரும்பி says:
    யார் தமிழ்நாட்டை ஆண்டாளும் அவரை பற்றி இவன் இப்படி பேசுவது தவறு .
    டேய் கோத்த பயபுள்ள என் இனம் அங்கு இருக்கும் வரைக்கும்தான் இயற்கை அன்னை சும்மா இருப்பாள்.ஒருவேளை அவர்கள் உன் கொடுமை தாங்காமல் வெளியேறினால் உன் நாட்டுக்கு அந்த அன்னை கொடுக்க போகும் தண்டனை சுனாமிதான்.



    ..............................


    நன்றி : என் வழி 
    http://www.envazhi.com/


    ................................


    இந்தியா இலங்கைக்கு உடனடியாக ஒரு கண்டனத்தை இந்திய நாட்டின் சார்பாக கொடுக்கவேண்டும்  என்பதுவே எமது வேண்டுகோள்.




    .





Download As PDF

செவ்வாய், 9 ஆகஸ்ட், 2011

சமச்சீர் கல்வி ...யாருக்கு வெற்றி ? .



இன்று உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பு ,
சமச்சீர் கல்வி வழக்கில்  .


இதில் வேடிக்கை என்னவென்றால்
தி.மு.க . இதை தனது வெற்றியாக கொண்டாடுவது தான் .

உண்மை என்னவென்று அறியாத மூடர்களாக தமிழர்களை இன்னும் தி.மு.க.நினைத்து இதனை கொண்டாடுவது தான்  எனக்கு மிகவும் வியப்பாக உள்ளது .

ஒன்றை நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன் .

கருணாவால் 
ஈழத்தில் தமிழர்கள்
தங்களின் நாட்டையும்,அடையாளத்தையும் அடைய இருந்த காலகட்டத்தில் அதனை தனது ஊழல் சாம்ராஜ்யத்தின் பணத்தின் மீதான பற்றினால் சுயநலத்திற்காக குழிதோண்டி புதைத்ததோடு
அதனை மூடி மறைக்கும் முகமாக
தமிழக தமிழர்களை திசை திருப்ப கொண்டுவரப்பட்ட
ஒரு வேண்டா வெறுப்பான முறையே 
தமிழகத்தில் சமச்சீர் கல்வி முறையாகும் என்பதுவே உண்மையாகும்.
இந்த சமச்சீர் கல்வி முறை வருவதற்கு கலைஞர் தந்த முட்டுக்கட்டைகள்  என்ன என்ன  என்று எத்தனை பேருக்கு தெரியும்.
தினமணியில் இதற்காக ஆரம்பிக்கப்பட்ட கட்டுரை யுத்தங்களையும் , இதற்காக போராடிய போராளிகளின் செயல்பாடுகளையும், அவர்களைப்பற்றியும் யாருக்கேனும் நினைவிருந்தால் நினைவு கூறுங்கள் ... 
தொடர்கிறேன் ....



தொடரும் ....




Download As PDF

ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011

சூரியன் இரண்டாம் முறை உதித்தது.

If the radiance of a thousand suns
Were to burst at once into the sky,
That would be like the splendor of the Mighty One...
I am become Death,
The shatterer of Worlds.

என்ற கீதையின் வரிகளுடன்



Ferenc M. Szasz  ன்



The Day the Sun Rose Twice என்ற நூலும் ஞாபகத்திற்கு வந்து செல்லும்

ஹிரோஷிமா தினத்தை  நினைக்கும் பொழுது.

..................................






July 16 1945, 5:29:45 A.M. (Mountain War Time) Trinity Site Zero, Alamogordo Test Range,on the Jornada del Muerto (Journey of Death) desert, in the test named Trinity., 1st atom bomb explodes in New Mexico .


Twenty-one days after the test,



the B-29 bomber Enola Gay dropped the uranium bomb on Hiroshima, Japan. 



Three days later



the plutonium bomb was used to bomb Nagasaki. 


The two bombs killed approximately 150,000 people when they fell. Earlier in the year, intense bombing of Tokyo with conventional bombs had killed about 100,000 people without causing Japan to surrender, but on August 15, 1945, Japan officially surrendered, bringing an end to World War II.

----------------------------

இது பற்றி எழுத நிறைய இருந்தாலும்,

வரலாற்றை மிகமிக பயத்துடன் பார்க்க வைத்தது அறிவியல், 
இந்நிகழ்வின் மூலம்.இந்நிகழ்விலிருந்து மனிதன் இன்னும் மீளவில்லை என்பதுவும்,இன்றுவரை மீள்வதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை என்பதுவும்  கவலைக்கிடமான விசமான விசயமாகவே உள்ளது .



அறிவியலையும்
தனது வெறியால் அழிவின் முகட்டிற்கு அழைத்துச் செல்லும்
போரை கைவிடுவோம் .


ஆயுதமில்லா உலகு படைப்போம் .
மனிதர்களாக வாழ்வோம் .





.
Download As PDF

வெள்ளி, 5 ஆகஸ்ட், 2011

சானல் 4 காணொளியின் தமிழ்வடிவம் / கைபேசியில் பதிவு செய்ய...




சானல் 4 வெளியிட்ட காணொளி தமிழர்கள்மீது
சிங்கள அரசு நடத்திய இனப்படுகொலையைச்
சான்றுகளுடன் விளக்கியது. இக்காணொளியின்
தமிழாக்கத்தை தமிழ்த்தாய் இணையதளம்
உருவாக்கி வெளியிட்டுள்ளது. தமிழில்
கேட்கும் பொழுது இலங்கையில் நடந்த நிகழ்வின்
முழுச் செயற்பாடும் நம் கண்முன்னே நிழலாடுகிறது.
இந்தக் காணொளியின் 3ஜிபி வகையை கீழுள்ள
யு டியூப் இணைப்பிலிருந்து வலையிறக்கி உங்கள்
கைபேசியில் இணைத்துக் கேட்கவும்.
நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்

http://www.youtube.com/watch?v=krDcjvGGd78&feature=player_embedded




நன்றி : தமிழ்க்கனல்





.
Download As PDF

திங்கள், 1 ஆகஸ்ட், 2011

இது நண்பர்களுக்காக மட்டும்


 இது  நண்பர்களுக்காக மட்டும்





ONE FRIEND IN A LIFETIME IS MUCH
TWO ARE MANY
THREE ARE HARDLY POSSIBLE .


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


FRIENDSHIP NEEDS 
A CERTAIN PARALLELISM OF LIFE ,
A COMMUNITY OF THOUGHT ,
A RIVALRY OF AIM .


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

THINK 
WHERE MAN'S GLORY MOST BEGINS AND ENDS. 
AND SAY
MY GLORY WAS
I HAD SUCH FRIEND'S . 


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


TO FIND A FRIEND 
ONE MUST CLOSE ONE EYE 
TO KEEP HIM-TWO.




@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@






நன்றி நண்பர்களே
வாழ்த்துக்ள்








.
Download As PDF