இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த மனிதர் அன்னா ஹசாரே ஆவார்.
அவரால் தான் ,இதை யாராலும் சரிசெய்யவே முடியாது என வெம்பிக்கொண்டு வாழ்வை கழித்துவந்த 120 கோடி இந்தியர்களின்
உள்ள குமுறலுக்கு , வெளிப்படுத்த முடியா அவலத்திற்கு,
ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது .இன்றைய ஆட்சியாளர்களின் கையாலாகாத தனத்தினால் அன்று நாமக்கு சுதந்திரம் பெற்றுக்கொடுத்தவர்களை நாம் இன்றுதிட்டித்தீர்த்துக்கொண்டும்,
சுதந்திரமே வேண்டாம் ...போ... என்று தள்ளப்பட்ட மனநிலையில் ,
நொந்து ,நம்மவனின் சுரண்டலிலும் ,சூழ்ச்சியிலும் சுண்ணாம்பாகி ஏதோ வாழ்கின்றோம் சுதந்திரம் என்று முணுமுணுப்புடன் அடுத்தவனுக்கு அடிமையில்லாமல் வாழ்கின்றோமே அதுவே போதும் என்ற சமாதானத்துடன் உழன்று அதிலும் மெல்ல மெல்ல நமக்கு நாமே உயர்ந்து உயர்ந்து உயரத்தை அடைய அதிலும் எங்கும் ,எதிலும் ஊழலலால் எப்பொழுதும் அல்லல்பட்டு அல்லல்பட்டு .சரி விடு ,நடப்பது நடக்கட்டும் என்று நடந்து நடந்து அனைத்தையும் சகித்து பின் தனித்தனி தனி நபர்களின் கடின உழைப்பினால் நாமாக உயர்ந்த போதிலும் அடாவடி அராஜக அரசியல்வாதிகளாலும் நாம் சொத்துகள் அபகரிக்கப்பட்டு , உரிமைகள் மறுக்கப்பட்டு நம் உழைப்பு உறிஞ்ப்பட்டு மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்டத்திற்கு தள்ளப்பட்ட நிலையில் அன்னா ஹசாரே அவர்கள் அதனை முன்னெடுக்க ஒவ்வொரு இந்தியனும் இந்த இரண்டாம் சுதந்திர போராட்டத்தில் தம்மை இணைத்து சுதந்திர போராட்ட வீரராகியுள்ள வரலாறு இன்று நிகழ்ந்துள்ளது.இதன் மூலம் அகிம்சை வழி போராட்டத்தின் உன்னதத்தினை , வலிமையை நிரூபித்துள்ளனர் .
ஆயுதப் போராட்டத்தாலும், தீவிரவாதத்தினாலும் அமைதியற்றுப்போயுள்ளது இன்றைய உலகம் .
உலகில் அமைதி வழி போராட்டத்தினால் தான் உண்மையான
மன நிறைவான மனிதனை மனிதன் துன்புறுத்தாத ,மனிதனை மனிதன் கொன்றொழிக்காத மனித மாண்பை போற்றும் பரிபூரணமான நிம்மதியான வெற்றியினை அடையமுடியும் என்பதை ஊக்குவிக்கும் முகமாக
உலகின் மிக உயரிய விருதான
நோபல் பரிசினை அமைதிக்காக
அன்னா ஹசாரேவிற்கு இந்த ஆண்டு அளிப்பது மிகவும் சரியாக இருக்கும் என்பது எனது கருத்து. இதை விருப்புபவர்கள் அதற்கான பரிந்துரைகளை செய்யலாம் .
வாழ்க பாரதம் .
வாழ்க மகாத்மா .
.
Tweet |
|
19 கருத்துகள் :
பரிந்துரை செய்யலாம் கூடவே பாரதத்தின் ஊழல் சாம்ராஜ்யத்தையும் உலகுக்கு நாமே வெளிச்சம் போட்டு காட்டணும் .[இல்லேன்னாலும்....]
எனது விருப்பமும் அதே அண்ணா அவருடைய முயற்சி மிகவும் சிறந்தது
good
அசாரேவுக்கு எதிராக அருந்ததி ராய், அருணா ராய்: சுற்றுலா போராளிகளுக்கு உண்மை போராளிகள் எதிர்ப்பு!
http://arulgreen.blogspot.com/2011/08/blog-post_22.html
மிகவும் சரியாக இருக்கும்.
இயந்திர மனிதர்கள்
மீண்டும் மனிதர்களாக வாழ இவ்விருது ஒரு முன் மாதிரியாக அமையும் எனக் கருதுகிறேன் நண்பா.
நோபல் பரிசா????
தப்பித்தவரியேனும் குடுத்துரக் கூடாது..
இப்போதே.. இவருக்கு கெடச்ச பப்லிசிடி`ய பாத்து சாமியாரெல்லாம் கெளம்பிட்டானுங்க...
நோபல் பரிசும் கெடச்சா, வேலை வெட்டி இல்லாதவனெல்லாம் உண்ணாவிரதம் இருக்க ஆரம்பிச்சுடுவானுங்க...
அன்பின் நண்டு - நோபல் பரிசெல்லாம் தர மாட்டார்கள் - பரிந்துரையும் செய்ய மாட்டார்கள்.
பரிந்துரை செய்யலாம் .
கொடுக்கலாம்; தப்பில்லை! :-))
நோபல் பரிசை இவ்வளவு கேவலப்படுத்த வேண்டாம்.நகர்வாலா தொடங்கி பா.ஜ.க.வின் ஆயுதபேர ஊழல் வரை நடைபெற்றபோது இந்த ஹசாரே இந்தியாவில்தானே இருந்தார்?அப்போது என்ன செய்து கொண்டிருந்தார்?உண்ணாவிரதம் என்பது அகிம்சை வழி அல்ல;அது சண்டித்தனம்.ஹசாரே செய்வது அடாவடித்தனம்.நான் சொல்வதைத்தான் கேட்கவேண்டும் என்று சொல்வதற்குப் பெயர் சர்வாதிகாரம்.இவர் அமைதியாக மட்டுமா இருக்கிறார்?தேவைப்பட்டால் ஆயுதம் ஏந்துவோம் என்று இரண்டு நாளுக்கு முன்னாள் பேசினாரே கேட்கவில்லையா?வறுமை,வேலையின்மை,சுற்றுச்சூழல்,தீண்டாமை, சமூகநீதி மறுப்பு,மதவாதம் இப்படி எண்ணற்ற கொடுமைகள் நிலவும் இந்தியாவில் ஊழல் என்று சொல்லி போலித்தன போராட்டம் நடத்துபவருக்கு நோபல் பரிசா? வெட்கம்;வெட்கம்.
- மணிமகன்
அன்னா அவரது கிராமமான ராலேகான் சித்தியில் என்ன செய்துகொண்டிருக்கிறார் என்று தெரியுமா? தெரிந்தால் அவரை நோபல் பரிசுக்கு மட்டுமல்ல, அவ்ரது உண்ணாவிரதத்தை கூட ஆதரிக்க மாட்டீர்கள்! காந்தியின் அகிம்சை எங்கே, இவர் எங்கே?
எனது விருப்பமும் அதே...அவருடைய முயற்சி மிகவும் சிறந்தது
ஆயுதப் போராட்டத்தாலும், தீவிரவாதத்தினாலும் அமைதியற்றுப்போயுள்ளது இன்றைய உலகம் . உண்மைதான் நண்பரே
nalla therivu marrum atharkuriya vilakkamum arumai.. vaalththukkal
வணக்கம் அண்ணாச்சி,
ஹசாரேக்கு நோபல் பரிசு கொடுப்பதென்பது நீண்ட விவாதத்திற்குரிய விடயம் என்று தான் நினைக்கின்றேன்.
மிகச் சரியான கருத்து
ஊழலின் உச்சத்தில் நாடு போய்க்கொண்டிருக்க
அதனால் முன்னேற்றமெல்லாம் நாசமாகப்
போய்க்கொண்டிருக்க
யார்தான் பிரச்சனையை முன்னெடுத்துச் செல்வது என
கலங்கிக்கொண்டிருந்த வேளையில்
மிகச் சரியான நேரத்தில் தனிமனிதனாய்
பொறுப்பெடுத்துக்கொண்ட இவருக்கு தராமல்
வேறு யாருக்குத்தான் தருவது?
நல்ல தரமான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
இந்த விஷயத்துக்கு பல ஆதரவு, எதிர்ப்புகள் இருந்தாலும்....ஒரு தனி மனிதன் பேச்சுக்கு இந்த சமுதாயம் உண்மையான மதிப்பளிப்பது வெகு நாட்களுக்கு பிறகு இப்போது நடக்கிறது....பகிர்வுக்கு நன்றி!
மாற்றுக்கருத்துக்கள்,பதிவுகளின் ஹிட் எண்ணிக்கையில் நம்பிக்கை கொண்டவர்களைத் தவிர உலகளவிலான பத்திரிகைகள் அன்னா ஹசாரேவின் போராட்டத்தை வரவேற்றுள்ளன.
நியாயமான கார்பரேட் பிசினஸ்காரர்களைக் கேட்டால்It's hard to do business with Indian Bureaucracy என்றே சொல்வார்கள்.இதையே சாகித் பல்வா போன்றவர்களிடம் கேட்டுப்பாருங்கள்.நான் பார்த்துக்குறேன் அரசாங்க பைல்களில் கையெழுத்து வாங்குவதை என்று சொல்லி விடுவார்கள்.
அன்னா ஹசாரே நோபல் பரிசுக்கு தகுதுயானவரே!
பகிர்வுக்கு நன்றி.
நல்ல பதிவு.
கருத்துரையிடுக
" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "