//ஜெயலலிதா என்பவர், அரசியல் மாறுபாடுகளைத் தாண்டி, இந்த தேசத்து மாநிலம் ஒன்றின் முதல்வர். ஒரு கொலைகாரன், சர்வதேச சமுதாயத்தில் வெறுத்து ஒதுக்கப்படும் நிலையிலுள்ள ஒரு நபர், தமிழக மக்களின் ஏகோபித்த பிரதிநிதியான ஜெயலலிதாவை அவமானப்படுத்தும் விதத்தில் பேசுகிறான்… இதை மத்திய அரசு வேடிக்கைப் பார்க்கிறதா?//
//இலங்கையில் நடந்த போரை நிறுத்துவதற்கோ, இலங்கைத் தமிழர்களை பாதுகாக்கவோ முதல்வர் கருணாநிதி நடவடிக்கை எடுக்கவில்லை. கடைசி வரை நாடகம் ஆடினார். தன் பதவியை காப்பாற்றிக் கொள்ள, //
//“உடனடியாக இந்த விஷயத்தில் மத்திய அரசு நடவடிக்கை வேண்டும். இந்தப் போர்க்குற்றவாளிகளின் வாலாட்டலை இனியும் மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது. //
தமிழக முதல்வரை ஒரு கொலைகாரன் விமர்சிப்பதா?
இதுகுறித்து ஹெட்லைன்ஸ் டுடே டிவிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில்,
இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மற்றும் ஜெயலலிதா கூறியுள்ள கருத்துக்கள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை, அரசியல் ஆதாயம் தேடும் முயற்சி. இது காரணமே இல்லாதது. இலங்கையில் வசிக்கும் மக்கள் அவர்கள், சிங்களர்களோ அல்லது தமிழர்களோ, அவர்கள் இலங்கையர்கள். எங்களது மக்களைப் பற்றி மற்றவர்களை விட நாங்கள்தான் அதிகம் கவலைப்படுகிறோம்.
உண்மை புரியாமல் தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இலங்கைத் தமிழர்களின் நலன் மீது ஜெயலலிதாவுக்கு அக்கறை இருக்குமானால், முதலில் அவர் தனது மாநில மீனவர்களை இலங்கை கடற்பகுதிக்குள் ஊடுறுவக் கூடாது என்று தடை செய்ய வேண்டும். இலங்கை கடற்பகுதியில் ஊடுறுவி பெருமளவில் மீன்பிடிப்பது தமிழக மீனவர்கள்தான். இலங்கைத் தமிழ் மீனவர்களின் உரிமைகளை அவர்கள் தட்டிப் பறித்து வருகிறார்கள்.
எனவே முதலில் தமிழக மீனவர்களை ஜெயலலிதா தடுத்து நிறுத்த வேண்டும். தனது பகுதிக்குட்பட்ட தமிழர்கள் குறித்து அவர் கவலைப்படட்டும். இதைத்தான் அவர் முதலில் செய்ய வேண்டும்.
தனது வேலையை ஜெயலலிதா கவனிக்கட்டும்
தனது வேலையை ஜெயலலிதா முதலில் கவனமாக செய்யட்டும். இலங்கையில் போர் பாதித்த பகுதிகளில் தமிழ் மக்களின் நிலைமை குறித்து அவர் கவலைப்படத் தேவையில்லை.
இலங்கையில் போரால் பாதிக்கப்பட் பகுதிகளில் வசிக்கும் தமிழர்களின் மறு சீரமைப்பு மற்றும் மறுவாழ்வு குறித்து நாங்கள் உண்மையான கவலையில் உள்ளோம். அதுகுறித்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இதை தமிழக அரசுக்கு சுட்டிக் காட்ட விரும்புகிறோம். இவர்கள் மீது ஜெயலலிதாவுக்கு உண்மையான அக்கறை இருக்குமானால், சர்வதேச விசாரணையை அவர் கோரக் கூடாது. அதனால் என்ன பயன் கிடைத்துவிடும்?
சர்வதேச விசாரணையைக் கோருவதில் எந்தவிதமான நியாயமும் இல்லை. சர்வசே தலையீடால் இந்தப் பிரச்சினை எப்படித் தீரும். இது இறையாண்மை மிக்க நாடு. நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை. சர்வதேச சமுதாயத்திற்கு இங்கு வேலையில்லை. அப்படி ஒரு தலையீடு தேவை என்பது தவறான எண்ணமாகும்.
உலகில் சில நாடுகள் வேண்டுமானால் இந்தக் கோரிக்கையுடன் வலம் வருபவர்களுக்கு ஆதரவாக செயல்படலாம். ஆனால் பிற நாடுகள் அனைத்தும் எங்களுக்கு ஆதரவாகவே உள்ளன. ரஷ்யா முதல் சீனா வரை, ஏன், இந்தியாவே கூட எங்களுக்குத்தான் ஆதரவாக உள்ளன. தமிழகம் இந்தியாவுக்குள் இருக்கும் ஒரு மாநிலம்தான். பாகிஸ்தானும் எங்களுக்கு ஆதரவாகவே உள்ளது. ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு, தென் கிழக்கு ஆசிய நாடுகளும் எங்களுக்கு உதவி வருகின்றன. அதுதான் உண்மையான சர்வதேச சமுதாயம். உலகில் உள்ள சிலர் கூடி பேசிவிட்டால் அது சர்வதேச சமுதாயமாக மாறி விடாது.
தமிழ் மக்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்க முடியாது
தமிழ் மக்களுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள அரசியல் அதிகாரங்களை விட கூடுதலான அதிகாரங்கள் வழங்குவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவே. அதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை என்றும் கூறலாம்.
தற்போது உள்ள இலங்கை அரசியல் சட்டம், அனைவரும் இணைந்து வாழத் தேவையான அம்சங்களை உள்ளடக்கியதாகவே உள்ளது. இதை விட அதில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வர முடியாது என்றே நான் கருதுகிறேன். இப்போது விடுதலைப் புலிகள் இல்லை, எனவே வேறு எந்த மாற்றமும் தேவையில்லை என்று நான் நினைக்கிறேன்.
இதை விட இவர்களுக்கு (தமிழர்களுக்கு) வேறு என்ன செய்து விட முடியும். இப்போதும் கூட நாங்கள் உள்ளாட்சித் தேர்தலை சிறப்பாக நடத்தி முடித்துள்ளோம். விரைவில் மாகாணத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. புதிய முதல்வர்கள் வரவுள்ளனர். அமைச்சர்கள் வரவுள்ளனர். எனவே இதைத் தாண்டி வேறு எந்த அதிகாரமும் தமிழ் மக்களுக்குத் தேவையில்லை.
தமிழர்களுக்கு நிறைய செய்து விட்டோம்
நாங்கள் தமிழ் மக்களுக்கு நிறையச் செய்து விட்டோம். எனவே இதற்கு மேலும் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை,” என்று கூறியுள்ளார் கோத்தபயா.
என்ன செய்யப் போகிறது மத்திய அரசு?
ஜெயலலிதா என்பவர், அரசியல் மாறுபாடுகளைத் தாண்டி, இந்த தேசத்து மாநிலம் ஒன்றின் முதல்வர். ஒரு கொலைகாரன், சர்வதேச சமுதாயத்தில் வெறுத்து ஒதுக்கப்படும் நிலையிலுள்ள ஒரு நபர், தமிழக மக்களின் ஏகோபித்த பிரதிநிதியான ஜெயலலிதாவை அவமானப்படுத்தும் விதத்தில் பேசுகிறான்… இதை மத்திய அரசு வேடிக்கைப் பார்க்கிறதா?
எங்களுக்கு இந்தியா போதும், தமிழகத்தின் எதிர்ப்பு பற்றி அக்கறையில்லை என்றால் என்ன அர்த்தம்? இந்தியாவுக்குள் பிரிவினையை தூண்டும் விதத்தில் பேசியுள்ள இந்த கயவனை என்ன செய்யப் போகிறது மன்மோகன் சிங் அரசு?
தமிழகத்தைப் போன்ற மாநிலங்கள்தான் இந்தியா… அவர்கள் இல்லாவிட்டால், இந்த நாடே இல்லை என்பதை எப்படிப் புரிய வைக்கப் போகிறார்கள்?
முதல்வர் ஜெயலலிதா தனிப்பட்ட முறையில் இலங்கை ஆட்சியாளர்களையோ இலங்கையையோ விமர்சிக்கவில்லை. ஐநா அறிக்கை அடிப்படையில் போர்க்குற்றச் சாட்டுகள் குறித்த விசாரணை கோரியுள்ளார். போர்க்குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை தர வேண்டும். அதுவரை இலங்கையுடன் பொருளாதார உறவு வேண்டாம் என்றார். சட்டம் அனுமதித்த வழியில் இனக் கொலையாளிகளுக்கு தனது எதிர்ப்பை காட்டியுள்ளார், தமிழக அரசின் தலைமை அமைச்சராக.
இதில் இம்மியளவும் யாரும் தவறு காணமுடியாது.
கோத்தபயவின் பேச்சை ஒரு பைத்தியக்காரனின், கொலை வெறிபிடித்த மிருக்கத்தின் உளறலாகவும் எடுத்துக் கொள்ள முடியவில்லை. இலங்கை அரசின் குரலாகவே அவர் பேசியிருக்கிறார்.
“உடனடியாக இந்த விஷயத்தில் மத்திய அரசு நடவடிக்கை வேண்டும். இந்தப் போர்க்குற்றவாளிகளின் வாலாட்டலை இனியும் மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது. தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவமானப்படுத்தியுள்ள கோத்தபய மீது மத்திய அரசு உடனடி நடவடிக்கை அவசியம்,” என கட்சி பேதமின்றி குரல்கள் எழ ஆரம்பித்துவிட்டன இப்போதே. வைகோ, பழ நெடுமாறன் போன்றவர்கள் கோத்தபயவை கண்டித்துள்ளனர்.
வழக்கம்போல ஊமைச்சாமியாக இல்லாமல், நடவடிக்கையில் இறங்குவாரா மன்மோகன்சிங்?
Comments
Responses to “தமிழக முதல்வரை ஒரு கொலைகாரன் விமர்சிப்பதா?” தினகர் says:Tweet |
|
இந்தியாவிற்குள் வந்து இந்திய தொலைக்காட்சியில், இந்தியாவின் ஒரு மாநில முதல்வரை பழித்து பேசுவது, எந்த வெளியுறவு கொள்கைக்கும் ஏற்புடையதல்ல.. அவர்கள் சீனாவிற்கு ஆதரவாக போய்விடுவார்கள் என்ற ஒரே காரணத்திற்காக எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டிருக்க தேவையில்லை. அப்படி பூச்சாண்டி காட்டிக்கொண்டிருக்கும் ஒரு நாட்டை எத்தனை நாள் ’ நட்பு நாடாக’ வைத்துக்கொண்டிருக்க முடியும்.
தென்னிந்தியாவின் மூத்த அரசியல்வாதி கலைஞர் இதற்காக முதல் குரலை கொடுக்கவேண்டும்..
Ilango says:
இவன் இந்த அளவு கீழ்த்தரமாக பேசியதற்காக ஜெயலலிதா எந்த ரியாக்ஷனும் காட்ட வேண்டாம். இப்போது குரல் கொடுக்க வேண்டிய கடமை அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் மக்களுக்கே உள்ளது. நமது உரத்த குரல் மத்திய அரசின் உறக்கத்தையும் இலங்கை அரசு மீதான மயக்கத்தையும் கலைக்கட்டும்.
தினகர் ஐயா முதல் குரல் கொடுக்க முடியாது வேண்டுமானால் கடிதம் எழுதட்டுமா அல்லது மனித சங்கிலி பேரணி நடத்தட்டுமா அல்லது முன்று மணி நேர உண்ணாவிரதம் நடத்தட்டுமா அல்லது திமுக எம்பி க்கள் ராஜினாமா நாடகம் நடத்தட்டுமா ஒரு நாள் பந்த் என்று அறிவித்து விட்டு கோட்டைக்கு பணிக்கு செல்லட்டுமா இதில் எதை செய்ய வேண்டும் தினகர் சொல்லுங்கள். சார் உங்கள் கருத்தை இப்படி வேண்டுமானால் எழுதுங்கள் ““தென்னிந்தியாவின் மூத்த ****ட அரசியல்வாதி கலைஞர் இதற்காக முதல் குரலை கொடுக்கவேண்டும்..என்று. கடந்த 30 வருடங்களாக இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுத்து வரும் நெடுமாறன் அவர்கள் கூட இன்று அம்மாவைத்தான் நம்பியிருக்கிறார் இன்று. இதோ அவரது அறிக்கை
சென்னை மெமோரியல் ஹால் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதை நாம் தமிழர் கட்சி ஊடகவியலாளர் கா.அய்யநாதன் தொடங்கி வைத்தார்.
உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் பேசுகையில், விடுதலைப் புலிகளுக்காகவும், இலங்கை தமிழர்களுக்காகவும் போராடிய பிரபாகரனுக்கு, முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பல்வேறு வகையில் உதவி செய்துள்ளார். அதேபோல், முதல்வர் ஜெயலலிதாவும் ஈழத்தமிழருக்கு ஆதரவாக எல்லா வகையிலும் உதவிகளை செய்ய வேண்டும் என்றார்.
இலங்கையில் நடந்த போரை நிறுத்துவதற்கோ, இலங்கைத் தமிழர்களை பாதுகாக்கவோ முதல்வர் கருணாநிதி நடவடிக்கை எடுக்கவில்லை. கடைசி வரை நாடகம் ஆடினார். தன் பதவியை காப்பாற்றிக் கொள்ள, காங்கிரஸ் அரசின் கூட்டு சதிக்கு உறுதுணையாக செயல்பட்டார்.
:இலங்கையில் போர் நடந்து கொண்டிருந்தபோது, போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கும், இலங்கைத் தமிழர்களை பாதுகாப்பதற்கும் நடவடிக்கை எடுப்பதாக பொய் சொல்லி, இலங்கை – இந்தியா இடையேயான கூட்டு சதிக்கு, பலர் உறுதுணையாக செயல்பட்டனர். அவர்களில், தமிழக முதல்வர் கருணாநிதிக்கு முக்கிய பங்கு இருக்கிறது.இலங்கையில் போர் உச்சகட்டத்தை எட்டியிருந்தபோது, இந்தியாவில் லோக்சபா தேர்தல் நெருங்கிக் கொண்டிருந்தது. காங்கிரஸ் அரசுக்கு எதிராக, தமிழகத்தில் எழுந்த கடும் எதிர்ப்புகள், கருணாநிதிக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தின. கருணாநிதியின் எதிர்காலமும், கேள்விக்குறியாக இருந்த நிலையில், போர் நிறுத்தத்தை வலியுறுத்தும் வகையில், கருணாநிதி நாடகம் ஒன்றை ஆரம்பித்தார்.
டில்லிக்கு தந்தி அனுப்புதல், ஆர்ப்பாட்டம் நடத்துதல், மனிதச் சங்கிலி பேரணிகளை நடத்துதல் என நீண்டுகொண்டே சென்ற கருணாநிதியின் போர் நிறுத்த நாடகம், அக்டோபர் 14ம் தேதி மத்திய அரசுக்கு கெடு விதிக்கும் காட்சியாக மாறியது. “இலங்கையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், தி.மு.க., எம்.பி.,க்கள் கூண்டோடு ராஜினாமா செய்வர்’ என அறிவித்தார்.இதற்கு ஒரு வாரம் முன், இலங்கைத் தமிழக மக்களின் தன்னாட்சியுரிமையை அங்கீகரித்து, ஜெயலலிதா ஒரு அறிக்கையை வெளியிட்டார். இரு தலைவர்களின் நடவடிக்கைகளைக் கண்டு, இலங்கைத் தமிழர்கள் மத்தியில் பெரும் நம்பிக்கை ஏற்பட்டது. 1980களில் எம்.ஜி.ஆருடன், புலிகள் நெருங்கிப் பழகிய ஒரே காரணத்திற்காக, விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் கருணாநிதி ஈடுபட்டார். இவரைப்பற்றி புலிகள் நன்கு அறிந்து வைத்திருந்தபோதும், மூத்த அரசியல் தலைவர் என்ற வகையில், அவருடன் நல்லுறவை வைத்துக்கொள்ள புலிகள் பெரிதும் விரும்பினர்.
போரை நிறுத்த நடவடிக்கை எடுக்கக்கோரி, புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் நடேசன், முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் எழுதினார். அதற்கு, கருணாநிதி எவ்வித பதிலும் அளிக்கவில்லை. இதற்கிடையே, எம்.பி., பதவியை ராஜினாமா செய்து, கருணாநிதியிடம் கடிதம் கொடுத்தார் கனிமொழி. இது, இலங்கைத் தமிழர்களிடையே இருந்த நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியது.இதற்காக, கனிமொழிக்கும் புலிகள் தரப்பில் ஒரு கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால், எம்.பி.,க்கள் யாரும் ராஜினாமா செய்யவில்லை. தந்தையிடம் கொடுத்த ராஜினாமா கடிதத்தை திரும்ப பெற்றுக் கொண்டு, தன் பதவியை தக்க வைத்துக்கொண்டார் கனிமொழி. இதன்மூலம், கூண்டோடு ராஜினாமா என்ற கருணாநிதியின் அறிவிப்பு, முழுக்க முழுக்க நாடகம் என்பது உறுதியானது.
கருணாநிதி, தன் பதவியை பாதுகாப்பதற்காக, மத்திய அரசின் கூட்டுச் சதிக்கு திரைமறைவில் உறுதுணையாக இருந்தார். போரை நிறுத்தவோ, இலங்கைத் தமிழர்களை பாதுகாக்கவோ கடைசிவரை, கருணாநிதி நடவடிக்கை எடுக்காமல் நாடகம் ஆடினார். இலங்கைத் தமிழர்களை பாதுகாப்பதில், கருணாநிதி துரோகம் செய்துவிட்டார்.
(தினகர்)
அன்றே சொன்னார் ஒபாமா:
“மன்மோகன் சிங் பேசினால் அதை உலகமே நின்று கேட்கும்”
மன்மோகன் அவ்வளவு powerful என்ற பொருளில் எடுத்துக் கொள்ளலாம்.
வேறொரு (சரியான) பொருளும் உண்டு. “மன்மோகன் எப்போதாவது
தான் பேசுவார். பேசினாலும் சிறிய வாக்கியங்கள் தான் பேசுவார்.
மெல்லிய குரலில் தான் பேசுவார், அதுவும் காதில் விழாது.
அதனால் அதை நின்று கேட்டால் தான் அவர் சொன்ன வருகிறார்
என்பது புரியும்”.
நண்பர்களே – சோனியாவை கன்சல்ட் பண்ணாமல் மன்மோகன் எதுவும்
செய்ய மாட்டார். சிதம்பரம் என்ன செய்வார் என்று தெரியல. அதனால்
சிதம்பரம் ஏதாவது குரல் கொடுத்தால் நல்லது. சிதம்பரமும்
சோனியா காந்திக்கு வெயிட் செய்தால் எதுவும் எதிர்ப்பு குரல் வராது.
குறைந்த பட்சம் மூத்த அரசியல்வாதியான கலைஞர் குரல் கொடுக்கலாம்.
குறளுக்கு பொருள் தந்த கலைஞர் பொருள் தரும் குரல் கொடுப்பார்
என வேண்டுகிறோம்.
-=== மிஸ்டர் பாவலன் ==-
100 % உண்மை !! இருப்பினும், இப்போது ஒருமித்த குரல் வேண்டும்.
குறளோவியம் கண்டவர் குரல் ஓவியம் தருகிறாரா பார்ப்போம்..
-=== மிஸ்டர் பாவலன் ==-
ஜெயலலிதா நமது மாநில முதல்வர் என்பது மட்டுமல்ல, நமது சட்ட மன்றம் இயற்றிய தீர்மானத்தை ‘இந்தப்பய’ விமரிசித்திருக்கிறார். கண்டித்திருக்கிறார். தமிழர்களைக் கொன்றதுக்கு மேல் எதுவும் செய்ய இல்லை என்று சொல்வதாகத்தான் இவர் பேசியதைப் பொருள் கொள்கிறேன்.
நாஞ்சில் மகன் கருணாநிதி பற்றிக் கூறியுள்ள கருத்துக்களுடன் முழுக்க உடன்படும் அதே வேளையில் நாம் நமது எதிரி “இந்தப்பய”தான் என்பதிலிருந்து கவனம் சிதற விடக்கூடாது.
மன்மோகன் குறித்து மிஸ்டர் பாவலன் சொல்வது மிகச்சரி. அவர் எங்கே வாயைத் திறக்கப் போகிறார். சோனியா வேறு படுத்துக் கிடக்கிறார். எப்படி உத்தரவு வாங்குவது?
*** சமீபத்தல ஒரு 50 பேரு சென்னை வந்து(அதுவும் சிங்கள் T-Shirt போட்டுகிட்டு) அடி வாங்கிட்டு போனதா நியூஸ் வந்தது…
*** எப்ப்தும் இல்லாம இப்ப வந்து ஒரு இந்திய பத்திரிக்கு இந்த நாதாரி பெட்டி கொடுக்குது, அதுவும் தமில் நாட்டு தலைவரைப்பத்தி.
***கொஞ்சநாளுக்கு முன்னாடி ஹிலாரி கிளிண்டன் வந்து TN CM -ஐ பார்த்துட்டு போனாங்க, அதுவும் இலங்கை விசயமா பேசினதா நியூஸ் வந்தது.
டேய் கோத்த பயபுள்ள என் இனம் அங்கு இருக்கும் வரைக்கும்தான் இயற்கை அன்னை சும்மா இருப்பாள்.ஒருவேளை அவர்கள் உன் கொடுமை தாங்காமல் வெளியேறினால் உன் நாட்டுக்கு அந்த அன்னை கொடுக்க போகும் தண்டனை சுனாமிதான்.
..............................
நன்றி : என் வழி
http://www.envazhi.com/
................................
இந்தியா இலங்கைக்கு உடனடியாக ஒரு கண்டனத்தை இந்திய நாட்டின் சார்பாக கொடுக்கவேண்டும் என்பதுவே எமது வேண்டுகோள்.
.