செவ்வாய், 9 ஆகஸ்ட், 2011

சமச்சீர் கல்வி ...யாருக்கு வெற்றி ? .இன்று உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பு ,
சமச்சீர் கல்வி வழக்கில்  .


இதில் வேடிக்கை என்னவென்றால்
தி.மு.க . இதை தனது வெற்றியாக கொண்டாடுவது தான் .

உண்மை என்னவென்று அறியாத மூடர்களாக தமிழர்களை இன்னும் தி.மு.க.நினைத்து இதனை கொண்டாடுவது தான்  எனக்கு மிகவும் வியப்பாக உள்ளது .

ஒன்றை நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன் .

கருணாவால் 
ஈழத்தில் தமிழர்கள்
தங்களின் நாட்டையும்,அடையாளத்தையும் அடைய இருந்த காலகட்டத்தில் அதனை தனது ஊழல் சாம்ராஜ்யத்தின் பணத்தின் மீதான பற்றினால் சுயநலத்திற்காக குழிதோண்டி புதைத்ததோடு
அதனை மூடி மறைக்கும் முகமாக
தமிழக தமிழர்களை திசை திருப்ப கொண்டுவரப்பட்ட
ஒரு வேண்டா வெறுப்பான முறையே 
தமிழகத்தில் சமச்சீர் கல்வி முறையாகும் என்பதுவே உண்மையாகும்.
இந்த சமச்சீர் கல்வி முறை வருவதற்கு கலைஞர் தந்த முட்டுக்கட்டைகள்  என்ன என்ன  என்று எத்தனை பேருக்கு தெரியும்.
தினமணியில் இதற்காக ஆரம்பிக்கப்பட்ட கட்டுரை யுத்தங்களையும் , இதற்காக போராடிய போராளிகளின் செயல்பாடுகளையும், அவர்களைப்பற்றியும் யாருக்கேனும் நினைவிருந்தால் நினைவு கூறுங்கள் ... 
தொடர்கிறேன் ....தொடரும் ....
Download As PDF

14 கருத்துகள் :

பெயரில்லா சொன்னது…

தோல்வி..இத்தனை நாள் பாடம் தொலைத்த மாணவர்களுக்கே....

கோகுல் சொன்னது…

இப்பவும் கூட சமச்சீர் கல்வி நடைமுறைக்கு வந்ததின் வெற்றியாக கொண்டாடாமல் ஜெயாவுக்கு கிடைத்த தோல்வியாகவே கொண்டாடுகிறார்கள்.

இதையெல்லாம் புரிந்துகொள்ள முடியாதவர்கள் அல்ல தமிழர்கள்.

Jeyamaran சொன்னது…

waiting 4 next post...........

goma சொன்னது…

எனக்கும் இது புரியவே இல்லை.
இதில் வரூத்தம் என்னவென்றால் ,பள்ளிக் குழந்தைகளையும் போராட்டத்தில் ஈடுபடுத்தி....விளையும் பயிர்களை நாசமாக்கும் பணியை இந்த சமச்சீர் கல்வியின் so called ஆதரவாளர்கள் அருமையாக செயல் படுத்தி விட்டனர்

பெயரில்லா சொன்னது…

;-(

Sivaranjani சொன்னது…

As a student, My opinions on Education in India..

www.theblossomingsoul.blogspot.com

cheena (சீனா) சொன்னது…

அன்பின் நண்டு - ஒரு முடிவு வந்து விட்டது - விளைவுகளைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

எண்ணங்கள் 13189034291840215795 சொன்னது…

இப்பவும் போராடியது தி.மு.க இல்லையே.. வேறு வழக்கறிஞர்கள் தானே.. அவர்களுக்கான செலவை ஏற்குமா திமுக.?. இதற்காக சிறை சென்றவர்களை விடுவிக்குமா?..


தொடருங்கள் , அறிய காத்திருக்கோம்..

ஜோதிஜி சொன்னது…

யாருக்கு வெற்றியோ தோல்வியோ இனி பள்ளிக்கூட மாணவர்களை வாத்தியார்கள் போட்டு நெம்பி எடுத்து அவசரம் அவசரமாக படிக்க வைத்து படாய் படுத்தப் போகிறார்கள்.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

எப்படியோ ஸ்டூடண்ட்ஸ் படிப்பாங்க இனி

Chitra சொன்னது…

உண்மை என்னவென்று அறியாத மூடர்களாக தமிழர்களை இன்னும் தி.மு.க.நினைத்து இதனை கொண்டாடுவது தான்


.... தமிழ்நாட்டுக்கு வந்த சோதனையா? சாபமா?

கூடல் பாலா சொன்னது…

இது போன்றதொரு பாதிப்பு அரசியல் வாதிகளால் மாணவர்களுக்கு இனியும் ஏற்படக்கூடாது....

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

அரசியல்வாதிகளின் கையில் பொம்மையாய்

கல்வியும் - மாணவர்களும்!

P.S.Narayanan சொன்னது…

indha paazhum needhi mandram innum oru aandu sendrapin theerppu aliththirukkalaam. kuzhandaigal oru aandukkaagavenum viduthalai petru magizhchiyaaga iruppaargal.

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "