புதன், 28 ஜூலை, 2010

கருத்துரிமையும் தண்டனையும் .

இப்ப அதிகமாக கதைக்கும் சொல்லாக இருக்கிறது கருத்துரிமை என்பது .
ஆதலால் ,அதைப்பத்தி தெரிந்துகொள்வது நல்லது எனப்பட்டதால் சில விசயங்களை இங்கு .

இது என் கருத்து ,நான் நினைக்கிறேன் ,இது தான் என்னும் வரை எந்த பிரச்சனையும் இல்ல .அது அவர் கருத்து அவருடன் அவ்வளவே அம்மட்டே.அது எத்தகைய கருத்தாக இருந்தாலும் அதற்காக யாரையும் எதனாலும் எதுவும் என்னவும் செய்யமுடியாது .சுருக்கமா சொல்லனுமுனா தண்டிக்கவே
முடியாது .

கருத்துரிமை ,கருத்துரிமைனு கதைக்கக்காரணம் தண்டிக்கப்படுவதால் .அதனால் அதைப்பத்தி முதலில் பார்த்தேன் .கொஞ்சம் கஷ்டம் தான் .

முதலில் குற்றம்னா என்னானு பாத்தா
''பொது உரிமைகளையும் கடமைகளையும் மீறும் செயல் குற்றமாகும் ''
அப்படினா குற்றம் என்பது செயல் ஒன்றை குறிக்கிறது .ஆனால் அப்படிப்பட்ட ஒருசெயலை செய்தவர் அதற்காக குற்றவாளியாகமாட்டார் .அச்செயல் குற்றமனத்துடன் செய்யப்பட்டிருந்தால் மட்டுமே குற்றம் என்றும் ,அதனை செய்தவரை குற்றவாளி என்றும் சட்டம் கூறுகிறது .


குற்றமனத்திற்கு அடிப்படை கருத்து .தொடரும் ...

.

.

.

Download As PDF

6 கருத்துகள் :

Jey சொன்னது…

சார் ஒன்னும் புரியலை.

ஹேமா சொன்னது…

//இது தான் என்னும் வரை எந்த பிரச்சனையும் இல்ல .அது அவர் கருத்து அவருடன் அவ்வளவே அம்மட்டே.//

உண்மைதான்.கருத்துச் சொல்பவர் புரிந்துகொள்பவராக இருந்தால் எதிர்க்கருத்துச் சொல்லிப் பார்க்கலாம்தானே !

எம்.ஏ.சுசீலா சொன்னது…

தஸ்தாயெவ்ஸ்கியின் உலகப் புகழ் பெற்ற நாவலாகிய ‘குற்றமும் தண்டனையும்’ நாவலை நான் மொழிபெயர்த்துள்ளது பற்றி நீங்கள் அறிந்திருக்கக் கூடும்.
அதை ஒட்டி எனக்கு வந்த சில கடிதங்கள் உங்களது இந்தப் பதிவுக்குப் பொருத்தமெனத் தோன்றுவதால் அந்த இணைப்பு இதோ.
http://masusila.blogspot.com/2009/03/blog-post_24.html

ரோகிணிசிவா சொன்னது…

waiting to hear more frm u

சாந்தி மாரியப்பன் சொன்னது…

//அச்செயல் குற்றமனத்துடன் செய்யப்பட்டிருந்தால் மட்டுமே குற்றம் என்றும் ,அதனை செய்தவரை குற்றவாளி என்றும் சட்டம் கூறுகிறது //

இது உதைக்குதே!!!!!

ஒரு குற்றத்தை செஞ்சுட்டு, 'நான் குற்றமனதோடு செய்யவில்லை'ன்னு சொன்னா சரியாயிடுமா???

cheena (சீனா) சொன்னது…

அன்பின் நண்டு

சட்டத்தினையும் - குற்றத்தினையும் - தண்டனையையும் பற்றி விளக்காமாக எடுத்துரைக்கத் துவங்கப்பட்ட தொடரென நினைக்கிறேன். தொடர்க தொடர்க. நல்ல செயல் - நல்வாழ்த்துகள் நண்டு நட்புடன் சீனா

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "