வியாழன், 25 நவம்பர், 2010

நீ மட்டும் ஏன் தமிழா இப்படி இறக்கின்றாய் ?

அந்த நீண்ட நெடுந் தெருவில்
துரத்திக் கொண்டு வந்த கும்பலின்
கோரப்பிடியினின்று  தப்ப
என்னை நோக்கி
ஓடி வந்தவளை
நினைத்துப் பார்க்கின்றேன்


உடைகளை கிழித்தன
வெறி கொண்ட நூறு கைகள் .
நிர்வாணமாகிக் கொண்டிருந்த அவள்
''ஐயோ... அம்மா... '' என்ற குரலுடன்
நிமிடத்தில் தீர்க்கப்பட்டாள் .

சகதியில் சொட்டும்
அவளின் இரத்தத்தில்
ஈக்கள் மொய்க்கும்
இன்னும் சில நிமிடங்களில்.

இதோ
காந்தி பாலத்தின் மேல் நான்
தமிழனைத் தேடி ஓடும்
கும்பலைப் பார்த்தபடி .

என்றென்றும்
என்றென்றும்
நீ மட்டும்
ஏன் தமிழா இப்படி இறக்கின்றாய் ?

...

என்றென்றும்
என்றென்றும்
நீ மட்டும்
ஏன் தமிழா இப்படி இறக்கின்றாய் ?

...

நான் மட்டும் எப்படி தப்பித்தேன் ?

முண்டங்களுக்கு 
என்றும்
வாழ்வுமில்லை
சாவுமில்லையே .

. Download As PDF

8 கருத்துகள் :

Jeyamaran சொன்னது…

ithuthan anna inraiya naattin nilai thatti ketpavargal than intha thavarugalai seikirargal thadumarum makkalin nilaithan kelvi kuri.............

cheena (சீனா) சொன்னது…

அன்பின் நண்டு - ஆதங்கம் புரிகிறது - என்ன செய்வது - இதுதான் இயல்பென ஆகி விட்டது. சிந்தனை அருமை - கவிதையும் அருமை

பெயரில்லா சொன்னது…

Nenju kanakuthaiya. SATHI

Unknown சொன்னது…

எப்பவோ நம் உணர்வெல்லாம் செத்துபோச்சு ...

priyamudanprabu சொன்னது…

:((

ஹேமா சொன்னது…

இன்னும் இன்னும் அழ வைக்கிறீர்கள் !

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

எனது வலைப்பூவிற்கு வருகை தந்து
தமிழ்மணம் மற்றும் இன்ட்லி யில் வாக்களித்தவர்களுக்கும்
பின்னூட்டமிட்டவர்களுக்கும்
எனது மனமார்ந்த நன்றி கலந்த வணக்கத்தை
தெரிவித்துக்கொள்கிறேன் .

பெயரில்லா சொன்னது…

Ariyvai tholaithal...

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "