நொரண்டு : ஈரோட்ல விழாவா ?.
நண்டு : ம் ...
நொரண்டு : இது சிசனா ?
நண்டு : ஆமாம் .
நொரண்டு :என்ன ஒன்னும் சொல்லாம ...ம் ...ம் ...னு ?
நண்டு : என்ன எதிர் பாக்கர .
நொரண்டு :மாரியம்மன் திருவிழா இந்த சிசனுல கொண்டாராங்களே ஏன் ?
நண்டு :உனக்கு எதப்பத்தி தெரிஞ்சுக்கனும் .
நொரண்டு :இல்லப்பா மாரியம்மன் வழிபாடு பற்றி சொல்லேன் .
நண்டு : ம் ...
நொரண்டு :ஆனால்,ஒரு கண்டிசன் .
நண்டு :என்ன ? .
நொரண்டு :உன் பாணாயில் சொல்லு .மந்தவங்க மாதிரி வேண்டாம் .
நண்டு :நான் எப்பவும் நானாத்தான் பேசுவேன் .ஏன் என்ன ?
நொரண்டு :இல்லப்பா சிலர் ஆபாசமா பேசுகிறார்கள் அதான் .
நண்டு :புரியல ...!!!
நொரண்டு :அதாம்பா ,லிங்கத்த சொன்னா அது ஆண்குறியின் அடையாளம் அப்படி இப்படினு ...
நண்டு :இது பேச்சுரிமைக்கு ,கருத்துரிமைக்கு நாம் கொடுத்துவரும் மிகப்பெரிய மரியாதை .லிங்கம் மற்றவர்கள் சொல்வது போல ஆண்குறியை அடையாளப்படுத்துவது அல்ல .
நொரண்டு :அப்ப சிவன் உண்டுனு சொல்ல வரையா .
நண்டு :நான் கடவுள் விசயத்துக்கு வரலா .ஆனால் ,சிவலிங்க அடையாளத்திற்குப்பின் உள்ள விசயத்திற்கு வரேன் .
நொரண்டு :அப்ப லிங்க வழிபாடு சரிதானா .
நண்டு : சரியா,தவறா என்பதைப்பற்றி நான் பேசவரல .ஆனால் ,அவர்களின் வழிபாட்டில் உள்ள தன்மைகளை விளக்குவதன் மூலம் ,அவர்களிடம் ஒரு விழிப்புணர்வையும் ,சரியான பாதைகளையும் தேர்ந்தெடுக்க ஒரு சிறு முயற்சியே .
நொரண்டு :ஆபாசம பேசராங்களே இது பகுத்தறிவா ?
நண்டு : நல்ல கேள்வி ,உங்களுக்கு கடவுளின் மீதுள்ள நம்பிக்கையில் கடவுளின் மீது நம்பிக்கையில்லாதவர்களின் குரலை மட்டுமே கேட்டுக்கொண்டு அவ்வாறு சொல்லுகின்றீர் .ஆனால் ,உண்மையில் ஆத்தீகவாதிகள் சொன்னதைத்தான் நாத்தீகர்கள் அப்படியே சொல்கின்றனர் .ஆத்தீகர்கள் சொல்வது உங்களுக்கு ஒலிக்கும் ஓங்காரத்தில் மறைக்கப்பட்டுவிடுகிறது .
நொரண்டு :என்ன தான் இருத்தாலும் பகுத்தறிவாதிகள் பகுத்தறிவுடன் ஆபாச பேச்சை தவிர்க்கலாமே .என்ன தான் இருந்தாலும் இப்படி பேசுவது பகுத்தறிவா ? .கடவுள் இல்லை எனச்சொல்ல அறிவியல் ரீதியான பல வழிகள் இருக்க இன்னும் ஆபாசமாக பேசுவது நாகரிகமா ? .ஆபாசமாக பேசுவது ,எழுதுவது என்பதெல்லாம் அறிவுஜிவித்தனம் என ஒத்துக்கொண்டால் ,அவர்கள் ஆடை உடுத்துவது எதற்காக ? .ஆடை என்றது எதற்காக தொன்றியது என்பது அவர்களுக்கு தெரியாத ஒரு கூறா ? .இல்லை அது பற்றிய அவர்களின் அறியாமையா ? .
நண்டு :நல்ல கேள்விகள் தான் . நாகரிகத்தின் ஒரு அடையாளம் தான் ஆடை .இது எப்படி அவர்கள் பேசிவரும் ஆபாசத்தின் குறிகள் மறைக்கின்றதோ அதுபோலவே அது போலவே அவர்களின் எழுத்தும்,மொழியும் எழுத்து,மொழி என்ற நாகரிகத்தில் அப்படிப்பட்ட வார்த்தைகள் கட்டாயம் தவிர்ப்பதே பண்புடைய தன்மை .அத்தகைய எழுத்துக்களே அறிவுப்பூர்வமானவை ,உயர்ந்தவை ,சிறந்தவை,மனிதனை மனிதனாக்குபவை .இப்படிப்பட்ட பேச்சு,எழுத்துக்களை தவிர்ப்பது அவர்களின் பண்பாக வேண்டும் .இல்லேயெனில் அப்படிப்பட்டவர்களைத் தவிர்ப்பது நமது பண்பாகவேண்டும்.
நொரண்டு :ம் ...லிங்க வழிபாடு பத்தி ஏதோ சொல்ல வந்த .
நண்டு :புதிய வெளிப்பாட்டின் குறியீடு.
நொரண்டு :புரியல
நண்டு :புதிய உதயத்தின் குறியீடு.
நொரண்டு :இன்னும் புரியல .
நண்டு :மேல இருக்க படத்த பார் .
நொரண்டு :யார் வரச்சது .
நண்டு :நான் தான் .
நொரண்டு :ஓ ........
நண்டு :படத்த நல்லா பாரு முதலில் .யார் வரஞ்சா என்ன .
நொரண்டு :ம் .......
நண்டு : புரிஞ்சுச்சா .
நொரண்டு :ம் ....நான் கேள்விப்பட்டதெல்லாம் .லிங்கம் ஆண்குறியின் அடையாளம் அப்படினு .
நண்டு :சரி கேள்விப்பட்டாய் அல்லவா ,அதோடு அதற்குப்பின்னால் உள்ள நிகழ்வுகளையும் தெரிந்துகொண்டாயா ? .உணர்ச்சி வசமா மட்டும் பேசத்தெரிஞ்சுப்பிட்ட .அதனால் அறிவ விட்டுட்டு தேடுர .என்ன சொல்ல .இயல்பைப்பற்றிய அறிவில்லாமல் இருக்க பக்குவப்படுத்தப்பட்டுள்ளாய் .எதுக்கொடுத்தாலும் .
நொரண்டு :விடுப்பா ,பெரிய இவன் மாதிரி பேசாத ,அதப்பத்தி நீ சொல்லவரத சொல்லு .
நண்டு :ஆதி மனிதன் ...
தொடரும் ....
. Download As PDF
Tweet |
|