வெள்ளி, 10 டிசம்பர், 2010

இனி நோபல்பரிசுக்கு குட்பை - கன்பூசியஸ்பரிசை போற்றுவோம்


இன்று  நோபல்  நினைவு  நாள் .
இவர் டைனமைட்டை உருவாக்கியவர்.
ஆயுதத்தயாரிப்பாளர் .
Bofors ன் உரிமையாளர் .
இவரின் கண்டுபிடிப்பால் கோடிக்கணக்கான மனிதர்கள் மண்ணில் புதைந்துள்ளார்கள் இன்றுவரை.

அவரின் உயிலின் படி நோபல் பரிசுகள் அளிக்கப்பட்டு வருகின்றது .

அவரின் பரிசின் நோக்கம்  கண்டுபிடிப்புகள் தவறான வழிகளில் பயன்பட்டு மக்களை காவுவாங்கக்கூடாது என்பதுவே .

அவர் நோபல் பரிசை தோற்றுவித்ததன் நோக்கம் சரியானதாக இருந்தாலும் ,அதனை பல சமயங்கள் சரியாக கொடுக்கப்படவில்லை என்பதுவே பொதுவான கருத்தாக இருந்து வருகிறது .அப்பரிசு கொடுப்பதில் ஒரு குறுகிய பார்வை இருப்பதாகவே என்னால் அறியப்படுகிறது .

உலகு மார்க்ஸியத்தால் விரிவடைந்து வந்துகொண்டிருக்கின்ற  நிலையில் இப்பரிசு வழங்குவதில் முதலாளித்துவ ஆளுமை அதிகம் இருப்பதுடன்  முதலாளித்துவத்துக்கு எதிரான போக்கை மட்டுப்படுத்துவதிலும் அதிக கவனம் செலுத்தப்பட்டு செயல்பட்டு வருவதாகவே உணர்கிறேன் .நோபல் பரிசுப்பட்டியலை பார்த்தாலே இதனை தெரிந்துகொள்ளலாம் .

அதோடு மேற்கத்தியவர்கள் மற்றும் மேற்கத்திய சிந்தனைகளை ஏற்றுக்கொண்டவர்கள் அதனை ஆதரிப்பவர்களுக்கே முன்னுரிமை தரப்படுவதாகவும் உள்ளது .

உதாரணமாக காந்தியடிகளுக்கு இப்பரிசு கொடுக்கப்படாததை சொல்லலாம் . காந்திக்கு இப்பரிசு கொடுக்காததுக்கு  காரணம் அவர்கள் பல சொன்னாலும் ,அவர்கள் கட்டாயம் தந்திருக்கவே மாட்டார்கள் ,ஏனெனில் காந்தியின் சித்தாந்தத்தை அவர்கள் கண்டு அஞ்சியதே .காந்திக்கு பரிசு கொடுக்கப்பட்டால் காந்தியம் உலகம் முழுதும் 2 ம் உலகப்போர் முடிந்த சமயத்தில் பார்க்கப்பட்டிருக்கும் .அப்ப ஒரு குழப்பமான சூழல் உலகில் நிலவியது .அப்பொழுது காந்தியத்தை உலகநாடுகளுக்கு வெளிப்படுத்தினால் முதலாலித்துவ சிந்தனைகள் அடிபட்டுப்போய்விடும் .காந்தியம்  ஐரோப்பாவிலும் அமேரிக்காவிலும் மற்றைய நாடுகளிலும் எளிதாக பரவிவிடும் அதோடு காந்தி ஆசியாவிலும் மிகப்பெரிய மனிதராகிவிடுவார் .இந்தியப்பிரிவினையும் மறுபரிசீலனைக்கு  உட்படுத்தவும் படலாம் .இது எல்லாம் நடந்துவிட்டால் காந்தி உலக சிருஷ்டி ஆகிவிடுவார் .காந்திய உலகம் ஏற்பட்டாலும் ஏற்பட்டுவிடும் .இதுக்கு விடுவார்களா மேற்கத்தியவர்கள்.அதனால அதச்சொல்லி இதச்சொல்லி மலுப்பிட்டாங்க .

இப்பொழுது சீனா இனி நோபல் பரிசுக்கு குட்பை கன்பூசியஸ் பரிசை போற்றுவோம் என அமைதிக்கான ஒரு உன்னத பரிசை அறிவித்துள்ளது .இது வரவேற்கத்தக்கது .

எத்தனை நாளைக்குத்தான் உலகும் இந்த ஒத்த பரிசையே பெரிசா பேசிக்கிட்டு.நீங்களும் அவங்க மாதிரி யில்லாம பாத்துக்குங்க .இல்லைனா அடுத்த யாராவது இதே போல ஒரு பரிசை அறிவிப்பார்கள் .

இனி வரும் காலத்தில் ஏகப்பட்ட உலக பரிசுகள்  கொடுப்பது உறுதியாகிவிட்டது.அப்ப நோபல் பரிசு மற்றவற்றுடன் 10 தோட நீ ஒன்னு அத்தோட நான் ஒன்னு என்ற நிலைக்கு ஆளாகப்பட்டுவிடும் .இந்த மாற்றத்திற்கு அச்சாரம் போட்ட சீனாவை வாழ்த்தலாம் .

இறுதியா ,அமைதிக்கான ஒரு உன்னத பரிசை அறிவித்துள்ள சீனாவே அதனை கன்பூசியஸ் என்ற உன்னதரின் பெயரில் ஆரம்பித்தது உண்மையில் மகிழ்ச்சியளிக்கிறது .இனி தாங்கள் ஆசியாவில் அமைதி நடவடிக்கைக்கு முன்னுரிமை கொடுப்பீர்கள் என இதன் மூலம் நம்புகிறேன் .. Download As PDF

18 கருத்துகள் :

Robin சொன்னது…

//இனி தாங்கள் ஆசியாவில் அமைதி நடவடிக்கைக்கு முன்னுரிமை கொடுப்பீர்கள் என இதன் மூலம் நம்புகிறேன் .// :)

Jerry Eshananda சொன்னது…

confusion award.

குறையொன்றுமில்லை. சொன்னது…

நோபல் பரிசுகொடுப்பதிலும் இவ்வளவு விஷயங்கள் இருக்கா?

sathishsangkavi.blogspot.com சொன்னது…

:)

Unknown சொன்னது…

அமைதி பரிசு வழங்குதலில் புது முயற்சி.
புதிய பாதை.

பொருத்திருந்து பார்ப்போம் இது அவசர முடிவா?
அழகான முடிவா?

கார்த்திக் பாலசுப்ரமணியன் சொன்னது…

நல்ல பதிவு. பகிர்வுக்கு நன்றி.

கார்த்திக் பாலசுப்ரமணியன் சொன்னது…

காந்திக்கு வழங்கப்படாத நோபல் பரிசு குறித்த எனது பதிவு இதோ :
http://kanakkadalan.blogspot.com/2010/10/blog-post_09.html

தேவன் மாயம் சொன்னது…

நல்ல சிந்தனை !

nis சொன்னது…

நோபல் பரிசு பற்றி நல்ல ஒரு ஆய்வு

cheena (சீனா) சொன்னது…

ஆழ்ந்த பார்வை இல்லாமல் எதையும் புரிந்து கொள்ள முடியாது. உண்மை உண்மை . நோபல் பரிசு பல் ஆண்டுகளாகக் கொடுக்கப்பட்டு வரும் ஒன்று. சீனா புதியதாக ஆரம்பித்தால் நோபல் பரிசு நின்று விடுமா என்ன ? இரண்டுமே இருக்கும். இன்னும் பல பரிசுகள் வரவும் வாய்ப்பிருக்கிறது. பொறுத்திருந்து - பல ஆண்டுகள் பொறுத்திருந்து பார்ப்போம்.

அஙகிதாவர்மா சொன்னது…

பெயரளவில் அமைதிப் பரிசைக் கொடுத்தால் போதுமா, கான்ஃபூசியச் என்னும் உயர்ந்த மனிதரின் பெயரில் இவ்விருது கொடுக்கப்படுவது பாராட்டுக்குறியது என்றாலும், கான்ஃபூசியசின் தத்துவங்களை காலில் போட்டு மிதித்து அதன் மேல் முளைத்த சீனா மக்கள் குடியரசு, தன்னைக் காத்துக்கொள்ள கான்ஃபூசியசின் பெயரைப் பயன்படுத்தியுள்ளது அவ்வளவே. இன்று உலகில் ஆயுத விற்பனையில் அமெரிக்காவை விட முன்னணியில் இருப்பது சீனா, முதலில் அதனை நிறுத்தட்டும், பின்னர் அமைதி விருதுக் கொடுக்கும் போது ஏற்றுக் கொள்வோம். மனித உரிமைகளை மதிக்க தெரியாத ஒரு நாட்டில் இருந்து விருதினை வாங்குவது நிச்சயம் கேலிக்குறிய செயலாகத் தான் இருக்கும்.

Unknown சொன்னது…

சீனாவுக்கு எந்த அருகதையும் இல்லை.. உயரிய விருதுகள் கொடுக்க.. சிறுபான்மை திபெத்திய மக்களை ஒடுக்கியது.. கருத்து சுதந்திரமில்லாத சர்வாதிகாரம் கொண்ட நாடு அது.. இலங்கை தமிழர்களை கொன்றொழிக்க ஆயுதங்கள் கொடுத்தது.. மிக கொடூரமாக மாற்று கருத்துக்கள் கொண்டோரை ஒடுக்கி கொன்றொழித்தது.. தவிர வேறு எந்த அருகதையும் கிடையாது சீனாவுக்கு.. உலகமயமாக்கலில் அயோக்கியர்கள் எல்லாம் நல்லவன் முகத்தை காட்டுகிறார்கள்.

தமிழ்போராளி சொன்னது…

பல அறியாத செய்திகளை உங்கள் கட்டுரையினால் அறிந்தேன்..நன்றி தோழரே..

kavinsandron சொன்னது…

நீங்கள் சொல்வது உண்மை. மேற்கத்தியவர்கள் தம் சுயநலத்திற்க்காகவும், மற்ற நாட்டில் குழப்பம் ஏற்ப்படுத்தவும் நோபல் பரிசை சில சமயங்களில் தரப்படுகிறது.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

யாரப்பா அது இதுக்கு கூட மைனஸ் ஓட்டு போடரது

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

பிரபல பதிவர் ஆனாலே மைனஸ் ஓட்டு விழறது சகஜம்தான்

ceekee சொன்னது…

Nobel Prize has been plagued by controversies for quite some time now. Not only that it failed to recognize noble and lofty personalities, organizations and movements but that it accorded recognition to undeserving persons like Henry Kissienger for peace. It is also accused of being biased in favour of/ partisan to Western (read American and European) thought and ideologies and has scant respect and understanding of those differ from it ( read Capitalism).
China's record of political human rights is no better than that of United State of America's where the barbaric and inhuman death penalty is carried out even on minors and women !(check Amnesty International's Annual Reports).Remember that China was as enthusiastic as India in Srilankan Government conducting the unimaginably horrid mass slaughter ( including the use of internationally banned chemical weapons on civilians which included women, aged, injured, sick patients, school going children of tender years, pregnant women and suckling babies) and genocide of Thamizhs in Srilanka recently.

What do we have now ?
Intellectuals of integrity all over the world who are lovers of peace and Humanity must join together to found an organization that accords recognition and Awards to those personalities, movements and organizations who/which lessen the sufferings and contribute to the betterment of Humanity....

Thanks for bringing up this most important topic for discussion.

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

எனது வலைப்பூவிற்கு வருகை தந்து
தமிழ்மணம் மற்றும் இன்ட்லி யில் வாக்களித்தவர்களுக்கும்
பின்னூட்டமிட்டவர்களுக்கும்
எனது மனமார்ந்த நன்றி கலந்த வணக்கத்தை
தெரிவித்துக்கொள்கிறேன் .

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "