வியாழன், 16 டிசம்பர், 2010

உளவுத்துறையில் ஊழல்கள்

விக்கிலீக் ...எங்களை மீறி எதுவும் நடந்துவிடாது என்ற இறுமாப்புடன் இருந்த அனைத்து உலக உளவுத்துறைகளின் கர்வத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்த ஒரு  சாதனை .

இதிலிருந்து  ஒவ்வொரு உளவுப்பிரிவுகளும் எவ்வாறு தவறுதலாக செயல்பட்டுக்கொண்டிருந்துள்ளன என்பதுவும் .இவ்வாறு இருந்த காரணத்தினால் தான் தீவிரவாதிகள் சுதந்திரமாக நடமாட முடிந்துள்ளது என்பதையும்  அறிந்துகொள்ள முடிகிறது .

உளவுப்பிரிவுகள் என்று அரசியல் வயத்துடன் அரசியல் பார்வையுடன் அரசின் பார்வையுடன் செயல்படுகிறதோ அப்பொழுதே அங்கு ஊழல் மலிந்துவிடுகிறது .(இங்கு ஊழல் என்பது அரசியல் ஆதாயம் ஆகும்).இது மிகவும் தவறாக கொள்கை என்பதுடன் மக்களாட்சி தத்துவம் கொண்ட நாடுகளில் மக்களைக் காக்கும் பாங்கும் இதுவன்று .

ஒரு உறவுப்பிரிவு எப்படி இருக்கவேண்டும் என்பதை வள்ளுவர் மிக அழகாக விளக்கியுள்ளார் .

ஒற்றெற் றுணராமை ஆள்க உடன்மூவர்
சொற்றொக்க தேறப் படும்.     589


உளவுத்துறை ஒன்று இருக்கின்றது என மக்கள் உணராதபடி இருக்கவேண்டும் .அதனுடன் மூன்றுவகையான உளவுகளில்  அடிப்படையில் உள்ள ஒற்றுமைகளை தெரிந்தெடுத்து அவைகளில் உள்ள  உண்மையைத் தெளிவுறவேண்டும் என்கிறார் வள்ளுவர் .

இங்கு கவனிக்கப்படக்கூடிய விசயம் என்னவெனில் தவறான மற்றும் ஊகத்திலான தகவலில் கவனம் செலுத்தி கற்பனைக்கு இடம் தந்து எந்த உளவின் முடிவும் இருக்கக்கூடாது என்பதுடன் உளவின் முடிவு ஆழ்ந்த பார்வையுடனும் கவனத்துடனும் இருக்கவேண்டும் என்கிறார்  வள்ளுவர் .
வள்ளுவர் அறியப்படவேண்டிய  உண்மைகள் ...
தொடரும் .....


. Download As PDF

11 கருத்துகள் :

மங்குனி அமைச்சர் சொன்னது…

கிரேட் சார்

sakthi சொன்னது…

புதிய பார்வை தங்களுடையது

தேவன் மாயம் சொன்னது…

நல்ல பார்வை ! வள்ளுவரின் குறளும் சிறப்பு!

Jeyamaran சொன்னது…

namma naatla ulal illatha thuraiye illa ithula ulavuthurai mattum vithi vilakka!!

Anbu சொன்னது…

நல்ல பதிவு அண்ணே..

cheena (சீனா) சொன்னது…

அன்பின் நண்டு - உண்மை உண்மை - வள்ளுவர் கூறுவது தான் சரி. - ஒருவரை ஒருவர் அறியாமல் மூவர் ஒற்றராக்ப் பணி புரிந்து உண்மையினைக் கண்டு பிடிக்க வேண்டும். அதன் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டும்.

Jerry Eshananda சொன்னது…

தொடர்கிறேன்.

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

நல்ல பார்வை

nis சொன்னது…

உளவுத்துறையும் அரசியல்வாதிகளிடம் சிக்குண்டு விட்டது :((

செல்வா சொன்னது…

ரொம்ப உண்மையான வரிகள் அண்ணா .!!

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

எனது வலைப்பூவிற்கு வருகை தந்து
தமிழ்மணம் மற்றும் இன்ட்லி யில் வாக்களித்தவர்களுக்கும்
பின்னூட்டமிட்டவர்களுக்கும்
எனது மனமார்ந்த நன்றி கலந்த வணக்கத்தை
தெரிவித்துக்கொள்கிறேன் .

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "