வியாழன், 3 ஜூன், 2010

ABALSYZ தத்துவங்கள்












.


.
எந்த நாவலும் எட்டாத சிகரத்தை தொட்ட பிரசித்திபெற்ற"RAISING OF NEW HORISION '' என்ற நாவலை எழுதிய'' ABALSYZ " யை பேட்டிகாணவேண்டும் என்ற செய்தி கிடைத்ததும் வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் இருந்தது .இதுவே தலைப்புச்செய்தியாக அனைத்துத்தளங்களிலும் .அதுவும் உலகில் மிக உயர்ந்த இடத்தில் இருப்பவரும் , இதுவரை எவருக்கும் பேட்டி தராதவரும் ,
பேட்டிகாணவே முடியாதவர் என்று கருதப்பட்டவரும் ,அதற்கு மேலாக ஆண்கள் என்றாலே பார்க்கக்கூட விரும்பாதவருமான ஒருவரை ,அதுவும் முழுக்க முழுக்க ஆண்களுக்காக போராடிவரும் "MANGO'' ராஸின் ஆதரவளாரான என்னை ...


.....


என்னை சந்திக்க வந்த காரணம் ?
ABALSYZ ....
ம்...
எத்தகைய கருத்துக்களையும் ,தரவுகளையும் எதிர்பார்க்கின்றீர்கள் ?.
அனைத்தையும் .
முதலில் ABALSYZ என்ற வார்த்தைக்கு சரியான அர்த்தம் "கன்நீடு " அதாவது கன்னியாகவே நீடித்திருத்தல் என்று எடுத்துக்கொள்ளலாம் .
VANDY என்பவர் தரும்விளக்கம் என்னவெனில்
ABALSYZ ல்
AB என்பது எப்படி ஆங்கில மொழியில்
AB முதல் அதுபோல்
நாங்கள் தான் உலகின் முதலானவர்கள் -ஆரம்பம் என பொருள் ,
ALஎன்பது -எல்லாவற்றிற்கும் ,ALL என்பதன் சுருக்கம்,
SY என்பது முன்னால் SEXY - EX - SEXY ல் பொதுவாகவுள்ள
EX யை நீக்க கிடைப்பது ,
Z என்பது எப்படி ஆங்கில மொழியில் முடிவான எழுத்தோ
அதுபோல் நாங்கள் தான்
உலகின் முடிவானவர்கள் என பொருள்.
ஆதி அந்தமான காமம் நீங்கிய அனைத்துமானவர்கள் என்பதைக்குறிக்கும் பதம் என்பதுவே.

புரியவில்லை ?

எழுத்துக்கள் ,வார்த்தைகள் தோன்றுவதற்கும் ,
அவை தோற்றுவிக்கும் அர்த்தங்களுக்கும், அவற்றை நாம் புரிந்துகொள்வதற்கும் அதன் பயன் மற்றும் பயன்பாடு தான் முக்கியமேயொழிய அதன் வழிமுறைகள் காரணமாக அமைவது இல்லை .

நீங்கள் ஏற்றுக்கொள்கின்றீர்களா ?.

ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று அது .
ABALSYZ கள் தோன்றக்காரணமானவர் VANDY என்பவர் ."திருமணம் என்பது காம வெறிபிடித்த ஆண்வர்க்கம் தங்களின் காமஇச்சையை தீர்த்துக்கொள்ள அவர்களுக்குள்ளே ஏற்படுத்திக்கொண்ட நயவஞ்சக ஏற்பாடு '' ,
'' பெண்கள் மட்டுமே உள்ள சமுதாயத்தை மட்டுமே நான் விரும்புகின்றேன்'' ,
''எனக்கு ஒர் கனவு உண்டு அது நான் இறப்பதற்குள்
பெண்கள் மட்டுமே உள்ள உலகத்தை நான்
பார்க்கவேண்டும் '',
''பெண்கள், பெண்கள் பெண்கள் மட்டுமே ''
என்று உணர்ச்சிகரமாகப்பேசி பெண்ணினத்தை தன்பால்கவர்ந்தவர் . VANDY யின் ''THE DEGREE'' பத்திரிக்கை ஆண்களின் பாலியல் வக்கிரங்களால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான பெண்களுக்கு வடிகாலானது .VANDY யால் V1 என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது .உலக அளவில் அதிக உறுப்பினர்களைக்கொண்ட அமைப்பாக அது இருந்தது .அந்த அமைப்பினர் ஆண்களை முற்றிலுமாக வெறுத்தனர் . அதன் நீட்சியாக தங்களிடம் உள்ள இயற்கை தன்மையை கூட முற்றிலும் ஒடுக்கும் அளவிற்கு சென்றுவிட்டனர் .முடிவாக மரபணுத்தொழில்நுற்பத்தைகப்பயன்படுத்த ஆரம்பித்தனர் . தமது உடம்பிலுள்ள ஜீன்களில் படிந்துள்ள ஆண்மை சார்ந்த அனைத்து அம்சங்களையும் ஜீன்ரைட்டரின் மூலம் அழித்து முழுக்க முழுக்க இயற்கைக்கு நியதிக்கு வேறான உயிரினத்தை படைத்தனர். அதற்குப்பின்னிட்டுத்தான் நாங்கள் "MANGO'' அமைப்பை ஏற்படுத்தினோம் .அப்படி ஜீன்ரைட்டரின் மூலம் உருவானவர்தான் நீ பேட்டிகாணப்போகும் ''ஜீடோ ''என்றழைக்கப்படும் மனித கூறுகளில் ஜீன்களால் உருவாக்கப்பட்ட ஜீன் உரு .அவைகளுக்கு இயற்கை தன்மை கிடையாது .சமுதாயம் ,சமயம் ,வாழ்க்கை நியதி என எதுவும் கிடையாது .ஆறாம் அறிவே இல்லே ,அற்றது. ABALSYZ என்பது ''ஜீடோ '' ஜீன்களின் இரகசிய குறியிடாக விஞ்ஞானிகள் வைத்துள்ளது என்ற கருதுகோள் ஒன்றும் இருக்கிறது . அவ்வளவே .

ABALSYZ யை பேட்டிகான ஏதுவாக அவர்களைப்பற்றிய சரியான புரிதலுக்காக தங்களின்
உதவியை நாடினேன் .எனக்காக இவ்வளவு நேரம் ஓதுக்கியது மகிழ்ச்சியளிக்கிறது ராஸ் அவர்களே .தங்களுக்கு மிக்க நன்றி .

.

.......


பேட்டியை ஆரம்பிக்கலாமா?
ம்...
ABALSYZ உங்களின் பெயரைப்பற்றி ....?
ABALSYZ களில் முதலாவதாக நான் உதித்தேன்
அதனால் பெயராகியது .

தத்துவங்கள் பற்றி தங்களின் கருத்து ?

தத்துவங்கள் அனைத்தும் மதம் சார்ந்ததாகவும் ,மதங்கள் அனைத்தும் ஆணாதிக்கத்தை போற்றி
பாதுகாப்பதாகவும் இருப்பதால் நான் மதம் சார்ந்த தத்துவங்களை விலக்குகின்றேன் .

பகுத்தறிவு பற்றி ...

இது அனைத்தையும் கடந்த ஒன்று .
இதை அடைந்துவிட்டதா யாரும் கூறமுடியாது .
ஏனெனில் ,இது ஒவ்வொறு நிலையிலும் அதனை புதுப்பித்துக்கொண்டே செல்லும் . இது
உயிரினங்கள் அனைத்திற்கும் பொதுவானது .
எப்பொழும் இப்பதம் இறந்த காலத்தைத்தான் குறிப்பதாக உணர்கின்றேன் .

இறந்த காலம் என்றால் ?

நான் பகுத்தறிவாதி என்றால் ,
இந்தக்கணத்திற்கு முன்பு என்று மட்டுமே
எடுத்துக்கொள்ள வேண்டும் ,அதுபோல .

தாங்கள் எதிரியாக நினைப்பது யாரை ?

யாரையும் அன்று .
நாங்கள் ஒடுக்கப்பட்டு இருந்தோம் . எங்களுக்கு போடப்பட்ட விலங்குகளை நாங்களே
உடைத்துக்கொண்டு வெளி வந்துள்ளோம் .
அந்தப்பயணத்தில் சந்தித்த எதிர்ப்புகளை நாங்கள் கண்டு அஞ்சியது கிடையாது .எங்களின் பயணத்தில் குறுக்கிட்டவர்களை எதிரியாக நினைத்தது கிடையாது .
எங்களின் பயணத்தில் குறுக்கிட்டவர்களை புறம் தள்ளி எமது லட்சியத்தை முன்வைத்து சென்று
கொண்டிருக்கின்றேம் .

உங்களின் லட்சியம் என்ன ?

முதலில் எமது மூதாதையர்களின் நிலையைக்கூறுகின்றேன் .
அவர்கள்
''ஆண்கள் எல்லாம் கணவர்கள் ,
பெண்கள் எல்லாம் மனைவிகள் ''
என்ற கேவலமான கட்டமைப்பினால் கடுமையாக ஒடுக்கப்பட்டனர் .
ஆணாதிக்க சக்திகளால்
உடலாலும் ,மனதாலும்
சுரண்டப்பட்டார்கள் .
வீடு என்னும் சிறையில் கைதிகளாக இருந்தனர் .

வீடு சிறைச்சாலையா?

ஆம் , அவர்கள் காலத்தில் .
மேலும் ,
அவர்களின் மனித சக்திகள் மண்ணேடு மண்ணானது .
அவர்களின் அழுத்தப்பட்ட ஆத்திரம் , துக்கம் ,கோபம்
அடுத்த தலைமுறை ஜீன்களை பாதித்தது . தட்டுத்தடுமாறி முன்னேறியவர்கள் வேலைக்குச்சென்ற
நிலையில் அங்கும் ஆண்களின் காம வெறியாட்டத்தால் தவித்தனர் .
கடும் போராட்டத்திற்கு
மத்தியிலும் ,
அடிவாங்கி ,அடிவாங்கி
கோபம் கொண்டெழுந்த கூட்டம்
ஆணின் காமத்தினின்று தப்பிக்க எண்ணியது . நிலைமை மோசமாகிப்போன காலகட்டத்தில்
உதிர்த்தவர்தான்
எமது விடிவெள்ளி VANDY
அவர் ஆண்களின் மரபோ ,அம்சங்களே சிறிதும் கலக்காத முழுக்க முழுக்க
VAND
என்ற ஜுன்களை உருவாக்கினார் .
அதன் தொடர்ச்சியான நீச்சியில் உருவானவர்கள் தான் V1 மறபினர் . அவர்கள் ''மேனேஸ் '' கட்டளையில்லாமல் பிறந்ததால் கற்பப்பை இல்லாத சுகத்தை அனுபவித்தனர் .

பிறகு எப்படி உங்களின் V1 மறபினரின் பிறப்புக்கள் !!!?.

நாங்கள் ஆய்வகத்தில் பிறக்கின்றேம் . ஆணின் அகந்தைகள் அகற்றப்பட்டு .

அப்படியெனில் ஆணினத்திற்கு எதிரிகளா?

அது தான் முன்னமே கூறிவிட்டேனே .

இயற்கை விதிகளை மீறுகின்றீர்கள் என்று எடுத்துக்கொள்ளலாமா ?

அது நீங்கள் கற்பித்துக்கொண்ட இயற்கை விதி .
அது உங்களுடையது .
அதைப்பாதுகாப்பது உங்களின் கடைமையாக நினைத்து அழிந்து போய்க்கொண்டுள்ளீர் .

இல்லை ,தவறான புரிதல் உங்களிடம் தென்படுகிறது .
மரம்,செடி ,விலங்கினங்கள் ,பறவைகள் முதலியவற்றை பாருங்கள்
இயற்கை எதைக்கூறுகிறது என?

இனவிருத்தியை கூறுகின்றீர்களா .
ஏன் ,நாங்கள் பிறக்கவில்லையா .
எக்கலப்பும் இல்லாமல் நாங்கள் மட்டும் நாங்களாக தனித்தன்மையுடன் .

நீங்கள் இப்படி செய்தால் ஆணினம் அழிந்து விடாதா ?

''அதிகாரத்துடன் ,
சுரண்டிக்கொண்டும் ,
ஒடுக்கிக்கொண்டும் தான் இருப்போம்
என ஒரு இனம்
செயல்பட்டால்
அதன்
அழிவினை
அது விரைவில்
அடைந்துதான் தீரும் ''.
அதற்கு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது .


ஆண்களே இல்லாத சமுதாயம் தான் உங்களின் செயல்பாடுகள் என்கின்றீர்களா ?


எமது சமுதாயத்தின் மலர்ச்சி தான் எமது லட்சியமே தவிர்த்து வேறு ஒன்றும் கிடையாது . மனித இனம் மட்டுமல்ல மற்ற அனைத்து உயிரினங்களிலும் எம்மைப்போன்ற ஆண் தன்மையற்ற அமைப்பினை ஏற்படுத்தி
நாங்கள் மட்டுமே உள்ள ABZ உலகை அமைப்பதுதான் எமது லட்சியம் .
எங்களின் VANDY ன் கனவும் அதுவே .
அதுவரை எமது பயணம் தொடரும் .

...

.

.

.


.

Download As PDF

11 கருத்துகள் :

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

அறிய தகவல்களும் ABALSYZ தத்துவங்களையும் அறிந்து கொண்டேன். நன்றி ராஜசேகர்.

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
ஸ்டார்ஜன் அவர்களே
மிக்க நன்றி

ஹேமா சொன்னது…

நல்லதொரு பதிவு...சிந்தனை...தத்துவம்.

இந்தப் பக்கமும் வாங்க ஒருக்கா.

http://santhyilnaam.blogspot.com/

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
உலவு.காம் அவர்களே
மிக்க நன்றி

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
ஹேமா அவர்களே
மிக்க நன்றி

ரோகிணிசிவா சொன்னது…

m , good one , thanks for sharing ,

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
ரோகிணிசிவா அவர்களே
மிக்க நன்றி

jillthanni சொன்னது…

எனக்கு புரியல இவை வெறும் தத்துவங்களா இல்லை நடைமுறையா

ஆணாதிக்கத்தினால் இப்படியும் ஆகுமா
நன்றி

நேசமித்ரன் சொன்னது…

மிக நல்ல புனைவு நண்பரே

நீண்ட நாட்களுக்குப் பிறகு திருப்தியான இடுகை உங்களிடம் இருந்து

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

//வெறும் தத்துவங்களா இல்லை நடைமுறையா
ஆணாதிக்கத்தினால் இப்படியும் ஆகுமா//
இது அறிவியல் புனைவு .
சாத்தியக்கூறுகள் மனிதனின் செயல்களினால் முடிவுசெய்யப்படும்

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
நேசமித்ரன் அவர்களே
மிக்க நன்றி

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "