திங்கள், 14 ஜூன், 2010

பிரபல காந்தியவாதி சுட்டு்ப்படுகொலை சத்தீஷ்கரில் இன்று.















பிரபல காந்தியவாதி சுட்டு்ப்படுகொலை தண்டகாரண்யாவில் இன்று.

சத்தீஷ்கர் தண்டகாரண்யாவில்
பிரபல காந்தியவாதி சுட்டுக்கொல்லப்பட்டார் .1000 குண்டுகள் துளைக்கப்பட்ட நிலையில்
அவரது டலம் கண்டுபிடிக்கப்பட்டது .

சத்தீஷ்கர் ,ஜீன் 14- பிரபல காந்தியவாதியும்,காந்தியுடன் கடைசி வரை இருந்தவரும் ,காந்தியடிகளாலே துப்பாக்கி சித்தன் என அன்பாக அழைக்கப்பட்டவரும் ,காந்தியடிகளின் கடைசி ஆன்மா என உணரப்பட்டவருமான சித்தரஞ்சன் துரை என்பவரின் உடல் சுமார் 1000 குண்டுகள் துளைக்கப்பட்ட நிலையில் நள்ளிரவு தண்டகாரண்யா காட்டுப்பகுதியில் இருந்து மிகவும் சிதறிய நிலையில் ....

எனக்கு கையும் ஓடல ,காலும் ஓடல ...
பிரபல காந்தியவாதி கொல்லப்பட்டாரா ?! ...
கொல்வதற்கு ...எப்படி மனது வந்தது ?!... முடியுமா ?...என்ன மனிதம் ? ...
இது உண்மையா இருக்குமா ?...
இன்றைய ஊடகங்களில் உண்மை செய்திகள் இல்லை என போன மாசம் ராமசுப்பு சந்திச்சப்ப சொன்னாறாம் காந்தித்தாத்தா .
இந்தச்செய்தியும் அதுபோலவே இருக்கவேண்டும் என மனம் துடித்தது .

.
ஊடகங்கள் மிது இப்ப எனக்கு நம்பிக்கையில்ல. உண்மையான ஜனநாயகக்கடமைகளை அவைகள் ஆற்றுவதில்லை .ஜனநாயகத்தின் ஆற்றல் மிகுந்த தூண்களாக அவைகள் இப்பொழுது இல்லை .அவைகள் மக்களின் உண்மை நிலையை பிரதிபலிப்பதில்லை .அவைகள் மக்களுக்கும் ஜனநாயகத்திற்கும் பாலமாக செயல்படுவதில்லை .அரசு விளம்பரங்களுக்காக அரசிதழ்களாகவும் ,பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக்கும் விளம்பரப்பலகைகளாகவும் மாறிவிட்டன .மக்களுக்கு
ஜனநாயகக்கடமையாற்றுகின்றோம் என்று கூறிக்கொண்டு மக்களுக்கு செய்தி தருகின்றோம் என்ற போர்வையில் பணம் சுரண்டுகின்ற சுரண்டல்வாதிகளாகிவிட்டன .இவைகள் ஊடகங்களே இல்லை.அந்த பதத்தையே கொச்சைப்படுத்துகின்றனர். இன்றைய ஊடகங்கள் உண்மையை வெளியிடுவதில்லை ,அவைகளில் வருபவை உண்மையில் செய்திகளே இல்லை , உண்மையான செய்திகளும் இல்லை என மிகவும் வருத்தப்பட்டுச்சொன்னாராம் .
நானாயிருந்தா எல்லா ஊடகங்களும் அப்படியானு கேட்டிருப்பேன் .
ஆனா,ராமசுப்பு எப்பவும் காந்தித்தாத்தாவின் விசிறி .
அவர் சொல்றதெல்லாத்துக்கும் தலைய ஆட்டுவான் .நேரு போல .

காந்தித்தாத்தா ,
இவரை நாங்க இப்படித்தான் கூப்புடுவோம்.
ஏன்னா?
இந்தத்தாத்தா எப்பவும் மகாத்மா காந்திஜியப்பத்தியே பேசிக்கிட்டுருப்பார் அதனால.
எங்க ஊர்ல கடைசி வீடு ,வயக்காட்ட ஒட்டி இவருது தான்.
காந்தி குடில்னூ பேர்.
முன்னாடி ஒரு சின்ன தோட்டம் பிறகு தியானக்குடில் ,அதுக்குப்பக்கத்தில ஒரு நூலகம் .முழுக்க மகாத்மா ஜி புத்தகமா .அப்புறம் ஆட்டுப்பட்டி , பிறகு வீடு .
மொதமொத தாரணி அக்கா கூட்டிட்டு போச்சு .
நான் 7வது தாரணியக்கா 8 வது .அன்னைக்கு காந்தி ஜெயந்தி ,காந்தித்தாத்தா வருச வருசம் புத்தகம் ,மிட்டாய் எல்லாம் தருவாராம்
வருசாவருசம்.எங்கப்பவுக்கு காந்தித்தாத்தாவ புடிக்காது .அதனால விடமாட்டார் .தாரணியக்கா வானு கூட்டீட்டு போனதால போனேன் .நாங்க போரதுக்கு முன்னாடியே ஏங் கிளாஸ் பாபு ,ரவி ,8ம் கிளாஸ் அண்ணா அக்கா... நிறைய பேர் இருந்தாங்க .

காந்தி தாத்தா சட்டை போடலைல ...
அப்ப நீங்கள்ளாம் சட்டை போட்டுக்கிட்டு அவரேட இருந்தீங்களே உங்களுக்கு அது என்னவோ போல தெரியலையா ?
அமைதியாக என்னைப்பார்த்து புன்னகைத்தார் காந்தி தாத்தா .
இல்லப்பா அப்பெல்லாம் அவரின் கட்டளைகளை நிறைவேற்றத்துக்கே எங்களுக்கு நேரம் இருக்காது .இந்த யோசனையே வந்ததில்லை என்றார் .
எனக்கு என்னமோ மழுப்புறார்னு தோனுச்சு , எங்கப்பாகிட்ட இதச்சொன்னேன்.ஏப்பா +2 படிக்கற பையன் அவருகிட்டப்போய் ஏப்ப பேசிக்கிட்டிருக்க சுதந்திரமா வாங்கப்போறோம் .படிக்கப்பா போப்பா னார் . எனக்கு விடைகிடைக்காமல் மண்டை குடைந்தது .

சீனீயர்ஸ் இன்னைக்கு வெல்கம் பார்ட்டீனாங்க . அப்பத்தான் ராமசுப்புவ கல்லூரியில் பாத்தேன் .
ஊஞ்சப்பாளையமா நீ காந்தித்தாத்தாவை எனக்கு ரொம்ப புடிக்கும் .வாரம் ஒரு தடவை வருவேன் .நான் மாணிக்கம்பாளையத்துல இருக்கேன் . இந்த வாரம் வருவேன் .அங்க பாக்கலாம் னு ஏதே பல நாள் பழகியது போல பேசிட்டு போனது எனக்கு என்னமோ போலிருந்துச்சு .

துப்பாக்கி வேட்டையாட கண்டுபிடிக்கப்பட்டது ,அப்பொழுது மனிதன் விலங்கினத்திற்கு மிக அருகில் இருந்தான் .ஆனால் இப்பொழுது எவ்வளவே தூரம் பயணித்தாகி விட்டது இனியும் ஆதி மனிதனாகவே இருக்கவேண்டுமா ? வேறுபட வேண்டாமா ? அப்படியே இருப்பது காட்டுமிராண்டித்தனம் எனவே தான் நான் எதற்காகவும் எப்பவும் எங்கும் துப்பாக்கிய யாரும் எதற்கும் யாருக்கும் எதிராகவும் பயன்படுத்தக்கூடாதுனும் .அது மனித குலத்துக்கே விரோதமானது என்றும்.ஆயுதம் தாங்கா சமுதாயமே சிறந்த சமுதாயம்.ஆயுதங்கள் பயன்படுத்தா அரசே நல்லரசு என்ற கொள்கையுடையவானாக இருந்தேன் .அப்படிப்பட்ட அரசு அமைவதை லட்சியமாகக் கொண்டு கத்தியின்றி ரத்தமின்றி யுத்தத்தை மேற்கொண்ட காந்தியின் தலைமையை மனசிகமாக ஏற்று பிரச்சாரங்கள் மேற்கொண்டு வந்தேன் .அதை அறிந்த காந்தியடிகள் ராஜன் மூலம் என்னையழைத்தார் .உங்க பெயரென்ன என்றார் அண்ணல். சித்தரஞ்சன் துரை என்றேன் .அப்படியா இன்றிலிருந்து எனக்கு நீங்கள் துப்பாக்கி சித்தன் என்றார். அன்றிலிருந்து இத்தப்பேர் .
ராம சுப்புவும் ,நானும் ஒன்றாகச்சேர்ந்து சென்ற முதல் நாள் அன்று ஏன் இந்தப்பேர் என நான் கேட்டதிற்கு காந்தித்தாத்தா இத சொன்னார் .
அதன் ஆழமான தத்துவம் இப்பொழுது போல் அப்போது புரியவில்லை எனக்கு .
அதற்குள் காலங்கள் ஓடிவிட்டது.


காந்தியடிகளின் போராட்டங்கள் எல்லாம் எளிய போராட்டங்கள் தானே ?
அதனால் எப்படி வெற்றிபெற்றிருக்கமுடியும் ?.
ம்ம்ம்...
அவைகள் எல்லாம் எளிய போராட்டங்களா என்ன ? எளிய வடிவ போராட்டங்கள் .
எனக்கும் முதலில் அப்படித்தான் தோன்றியது .
ஆனா,அனுபவத்தில் அவைகள் தான் உண்மையான போராட்டங்கள் என்பதை போகப்போக நேரில் கண்டு வியந்தேன் .அதில் தான் வெற்றியின் இரகசியமே இருந்தது. அதனால் தான் வெற்றி மேல் வெற்றி அவரால் கிட்டிட முடிந்தது .நமக்கு சுதந்திரமும் கிட்டியது இரத்தம் சிந்தாமல்.இதற்கு முன்பு மற்ற போராட்டங்கள் எல்லாம் வெரும் வெத்து வேட்டு தான் .அதனை நன்கு உணர்ந்ததால் தான் காந்தியடிகள் அகிம்சை வழியில் எளிய முறையிலான உருவில் தனது போராட்டங்களை வடிவமைத்துக்கொண்டார் .
வெற்றியையும் பெற்றுத்தந்தார்.
நான் துடிப்புள்ள போர்குணமுள்ள இளைஞனாக சட்டக்கல்லூரியில் வலம்வந்தபொழுது இப்பதில் என்னை மிகவும் பாதித்தது .என்னுள் ஏற்றப்பட்டுள்ள துடிப்புள்ள இந்த போர்க்குணம் மிருகத்தனத்திற்கு என்னை இட்டுச்செல்லும் என்பதனை உணர்த்தியது .நான் அதிலிருந்து விடுபட முயன்ற பொழுது நயவஞ்சக ஓநாய்களின் இரத்தவெறியை என் உடலில் உணர்ந்தேன்


என்ன நடந்தது ராமசுப்பு ?

ராம் ...காந்திதேச இழிநிலையை பார்...
இதனால் தான் காந்தியடிகள் 125 வருடத்திற்கும் மேல் வாழ விரும்பினார் போலும்.
சுடப்படாமல் இருந்திருந்தால் வாழ்ந்திருப்பார்.
அப்படிப்பட்ட தூய உடலும் ,உள்ளமும் அவரிது .
அப்படி அவர் வாழ்ந்திருந்தால் இன்னைக்கு இந்தியாவில் இத்தனை கட்சிகள் தோன்றியிருக்காது .
கட்சிகளே இருந்திருக்காது .
ஆமா ,இருந்திருக்காது .சாத்தியக்கூறுகளே இல்லை. இன்று இந்தியாவில் இத்தனை பிரச்சனைகளுக்கு காரணம் இந்த அரசியல் கட்சிகள் தான் .
மக்களை மாக்களாக்கி விட்டனர் இன்றைய கட்சித்தலைவர்கள்.
நம் மக்கள் மிகவும் நல்லவர்கள் .ஆனால் மோசமான தலைவர்களை கொண்டிருக்கின்றோம் .
நம்ம நாடு இப்ப சரியான பாதையில் போவதா எனக்குத் தெரியல .
இரத்தம் சிந்தாமல் பெற்ற சுதந்திர பூமிய இப்ப இரத்தக்காடாக்க பாக்கராங்க அரசியல்வாதிங்க.
இதுக்குத்தான் காந்தி அவ்வளவு கஷ்டப்பட்டாரா ?
இங்க எந்த கட்சியும் சரியில்ல .
அத்தனை பேருக்கும் கட்சி மோகம் .கட்சிய காப்பதனுமுனு முதலாளிகளை காப்பாத்தமட்டுமே பாக்கராங்க .
நாட்டையோ,மக்களையோ யாரும் பாக்கரதில்லை.
ஏதோ வானத்திலிருந்து வந்தவர்கள் போல அவரவர்கள் நினைத்க்கொண்டு மக்களை இரத்தத்தில் மிதக்கவிடுகின்றனர் .
செல்லும் இடங்களில் எல்லாம் பழங்குடி மக்களை அழித்தொழி்க்கும் ஐரோப்பிய இனவாதம் இன்று இங்கு்ம் பரவி வருகிறது .
அரசு என்பது குடும்பம் என்ற அளகிலிருந்து உதயமாகிறது .எப்பொழுது குடும்பம் என்ற அமைப்பு சிதைகிறதோ அப்போதே அரசு என்ற தத்துவம் நீர்முலமாகி விடுகிறது.குடும்பம் என்ற அமைப்பு சிதைந்தால் அரசு என்பது ஒன்று பாசிச ஆளுமையாக இருக்கும் அல்லது கனவாக இருக்கும் .
இன்று குடும்பங்கள் சிதைகிறது .
அது காந்தீயம் அல்ல.
முட்டாள்களினால் காந்தீயம் இன்று வேட்டையாடப்பட்டு வருகின்றது .இப்படியே சென்றால் காந்தியின் பெயரை உபயோகிக்கக்கூட அருகதையில்லாத அயோக்கிய நாடாக அசிங்கப்பட்டுவிடுவோம் உலக அரங்கில் வரலாறு நெடுகிலும்.
இது மக்களுக்கான காந்தியின் தேசம் .
காந்தியின் மக்களின் மீது ஆயுதங்களை பயன்படுத்துவது காந்திக்குச்செய்யும் மிகப்பெரிய துரோகம் .
இதை இனியும் பார்த்துக்கொண்டிருந்தேன் என்றால் நான் ஒரு கோழை .காந்தியின் பெயரைச்சொல்லிக்கொண்டு வாழும் அயோக்கியன் .
மக்களுக்கு எதிரான அனைத்து ஆயுதங்களையும் தூக்கி எறிந்து அவர்களுக்கு உரியதை அவர்களுக்கு தருவதுதான் காந்திக்கு காந்தியின்தேசத்தில் அரசு அவருக்குச்செய்யும் முதல் மரியாதையாகும் .
அதுவரை தண்டகாரண்யாவில் சாகும் வரை உண்ணாவிருதம் இருக்கப்போறேனு ....
(மிக நீண்ட மவுனத்திற்குப் பின்)
DNA சோதனைக்குப் பின் தான் முடிவு தெரியமாம் ...
உடம்பு பூராம் குண்டுடா ...
கசகசனு...
தா...த்தா.......
(அழும் குரல் )
தொடர்பை துண்டிக்கிறது தானாக கைகள்
என்ன செய்வதென்று தெரியாமல் .




....................................................................
காந்தீய வேட்டை - சிறுகதை / புனைவு
....................................................................
.


.

.



.
. Download As PDF

22 கருத்துகள் :

goma சொன்னது…

ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய கருத்தான கதை.சேர வேண்டியவர்களுக்குச் சேருமா ...

Unknown சொன்னது…

காந்தீயம் நிறைய பேருக்கு பிடிப்பதில்லை ஆனால் அவர்கள் காந்தியை நேசித்தனர்.
ஒரு அற்புதமான பாடம் காந்தி நமக்கு.. பெரும்பாலும் அவரைப் பற்றிய புரிதல் நிறைய பேருக்கு இல்லை,
இன்றைய எதார்த்த உலகில் துப்பாகிகள் மௌனிக்கப் படுகின்றன..
காந்தியம் இப்போதுதான் புரிய ஆரம்பிகிறது,,, ஆனால்
காந்தியக் கொள்கை கொண்ட காங்கிரஸ் ஆட்சியில்தான் நக்சல்கள் தங்கள் உரிமைக்காக போராடுகின்றனர்,
விரைவில் அவர்கள் நசுக்கப் படுவார்கள், சுயநலம் என்றால் என்னவென்றே தெரியாத அந்த அப்பாவி மக்கள்
பொருளாதார மேதைகளின் சுயநலத்திற்கு பலியாவார்கள்.

cheena (சீனா) சொன்னது…

அன்பின் நண்டு

கதை அருமை - சிந்தனை அருமை - என்ன செய்வது - ஒன்றும் செய்ய இயலாது.

நல்வாழ்த்துகள் நண்டு
நட்புடன் சீனா

J.P Josephine சொன்னது…

நண்பா அநியாயத்துக்கு சுத்தி சாவடிக்கிங்கா. காந்தி தாத்தா நல்லவரா?.இந்த அநியாய அரசியலுக்கு வித்திட்டவர் அவர்தான். சுருக்கமா தெளிவா சொன்ன நன்னாயிருக்கும்.

பெயரில்லா சொன்னது…

என்னுடைய வலைப்பதிவுக்கு வருகை தாருங்கள்.

pichaikaaran சொன்னது…

நல்ல எண்ணம் புரிகிறது.... வாழ்த்துக்கள்... விரிவான விவாதம் தேவை...

vasu balaji சொன்னது…

Good one.

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

நல்ல கருத்தாழமிக்க கட்டுரை.

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

சொல்லுவது நம் கடமை
goma அவர்களே
மிக்க நன்றி

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

ஆமாம்
கே.ஆர்.பி.செந்தில் அவர்களே
மிக்க நன்றி

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
cheena (சீனா) அவர்களே
மிக்க நன்றி

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
பார்வையாளன் அவர்களே
மிக்க நன்றி

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

//காந்தி தாத்தா நல்லவரா?.இந்த அநியாய அரசியலுக்கு வித்திட்டவர் அவர்தான். //
தாங்களைப்போன்று தெளிவாக எனக்கு வரலாறு தெரியாது . தாங்கள் சுருக்கமா தெளிவாக கூறினால் அறிந்துகொள்வேன் அறியாமையை
J.P Josephine அவர்களே
மிக்க நன்றி

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

//விரிவான விவாதம் தேவை.//
தேவையாக உள்ளது
பார்வையாளன் அவர்களே
மிக்க நன்றி

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
வானம்பாடிகள் அவர்களே
மிக்க நன்றி

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
Starjan ( ஸ்டார்ஜன் ) அவர்களே
மிக்க நன்றி

நேசமித்ரன். சொன்னது…

காந்தியை தவிர்த்து இந்த இடுகை பிடித்திருக்கிறது நண்பா

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

(:
NESAMITHRAN

Unknown சொன்னது…

வலையுலகில் இன்றைய டாப் இருபது பதிவுகளை WWW.SINHACITY.COM இல் வாசியுங்கள்

Paleo God சொன்னது…

//அவைகள் எல்லாம் எளிய போராட்டங்களா என்ன ? எளிய வடிவ போராட்டங்கள் .//

அருமை!!

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ அவர்களே
மிக்க நன்றி

ரோகிணிசிவா சொன்னது…

//இவைகள் ஊடகங்களே இல்லை.அந்த பதத்தையே கொச்சைப்படுத்துகின்றனர். இன்றைய ஊடகங்கள் உண்மையை வெளியிடுவதில்லை ,அவைகளில் வருபவை உண்மையில் செய்திகளே இல்லை , உண்மையான செய்திகளும் இல்லை //
any media is te same .,onee is better than other,no one gives te exact news they exploit us this trend is seen in blogs too .,

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "