ஞாயிறு, 31 அக்டோபர், 2010

முட்டாள் மடையன் மூடன்களிடம் பொய்கூறாதீர்கள் மதவாதி்களே

நொரண்டு :  மதவாதி்களின் சேட்டைகள் வரவர தாங்க முடியல  .

நண்டு : ம் ...ம் ...

நொரண்டு : .இறைவனை நினைத்தலும், வாழ்த்துதலும் , அவன் நெறி நின்றலும் செய்தார் தான்  வீடு பெறுவர் எனகூறி  சமுதாயத்தை  ஏமாற்றி அவர்களை மடையர்களாக்கி, மதவாதிகளாக்கி கடைசியில்  அதித குணம் கொண்ட இளைஞர்களை தீவிரவாதிகளாக்கி சமுதாயத்தை சீரழிக்கின்றனர் ....

நண்டு : இப்பொழுது மட்டுமல்ல எக்காலத்திலும் அவர்கள் அப்படித்தான் .

நொரண்டு :ஓ ..

நண்டு : அதற்குத்தான் வள்ளுவர்

'' பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார். ''


என்ற குறளில் சூடு போடுகின்றார்

நொரண்டு :அப்படியா .

நண்டு : ஆம்


நொரண்டு : உன் கருத்துரை

நண்டு :


'' பொறிவாயில் ஐந்தவித்தான் தான் நீடுவாழ்வார் என பொய் கூறாதீர்

ஒழுக்க நெறியில்  நின்பவர்கள்  தான்  நீடுவாழ்வார்கள்
''



நொரண்டு : பொருள் ..

நண்டு :  நீ ஏற்கன வே மதவாதி்கள் கூற்றாக சொன்னதுதான் 'பொறிவாயில் ஐந்தவித்தான் '  என்பதற்கு விளக்கம்.

நொரண்டு : சுருக்க கூறு ..

நண்டு : ''கடவுள் வழியிலே நின்றவர்கள் தான் நீடுவாழ்வார் என பொய் கூறாதீர் .''

நொரண்டு : அப்ப வள்ளுவர் ''பொய் கூறாதீர்கள் மதவாதி்களே '' என்கின்றார்

நண்டு : அதுமட்டுமல்லாமல்  ,இப்படி பொய் சொல்லியோ  நீங்க  ஒழுக்கம் கெட்டு  ,நீதி நெறி தவறி வாழரீங்க .சமுதாயத்தையும்  சீரழிக்கிறீங்க . அப்பாவிகளை பாடாய் படுத்திரீங்க .இனி இப்படிப்பட்ட பொய்யெல்லாம் கூறாது வாழ முயற்சி செய்யுங்க .எங்காளை விடுங்க என்கிறார் 

நொரண்டு : ஓ .ஆமா ,மடையர்கள் என்று யாரை சொல்கிறாய் .

நண்டு :  நம் தமிழர்களைத்தான்  .

நொரண்டு :  ....

நண்டு : மடத்தில் ஒழுகும் தமிழன் மடையன் .

நொரண்டு :  ஓ.

நண்டு : மட விசுவாசம் கொண்டு   மடத்தில் முடங்கிக்கிடப்பவன்   மூடன்.

நொரண்டு : அப்ப முட்டாள் என்பவன் .

நண்டு : இதையெல்லாம் அறிந்து ,புரிந்து ,தெரிந்து வாழாமல்  ,இனத்திற்குள்ளே முட்டிக்கொண்டு அடுத்தவனுக்கு காவு ஆகும் மந்தை போன்ற உன்னைப்போன்றவர்கள் .

நொரண்டு :  ம் ...

நண்டு :

மடையனும் மூடனும் மடத்திலே .

முட்டாள் மட்டும்  தெருவிலே .













. Download As PDF

10 கருத்துகள் :

பவள சங்கரி சொன்னது…

Me the first !!!! அப்பா...... தத்துவ மழை...வாழ்த்துக்கள்.

cheena (சீனா) சொன்னது…

அன்பின் நண்டு

குறள் என்ன கூறுகின்றதென்றால் - ஐம்புலன்களையும் அடக்கி ஆள்பவன் நல்வழி நின்று நிலைத்து வாழ்வான் என்பதுதான். பொதுவாக ஐம்பொறிகளையும் அடக்கியவன் இறைவன் ஒருவனே ! அவனை நினைத்தலும், வாழ்த்துதலும், அவன் நெறி நின்றலும் தவறில்லை. பொய்தீர் என்பது பொய் கூறாதீர் எனப் பொருளல்ல

நல்வாழ்த்துகள் நண்டு - நட்புடன் சீனா

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

பரிமேலழகர் உரை :
கடவுள் வழியிலே நின்றவர்கள் நீடூழி வாழ்வார்கள்

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

டாக்டர் மு.வரதராசனார் உரை :
ஐம்பொறி வாயிலாகப் பிறக்கும் வேட்கைகளை அவித்த இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர் ,நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வார் .

பெயரில்லா சொன்னது…

மனசை டச் பண்ணிருச்சி அதனால ஓட்டு போட்டாச்சி

தமிழ்போராளி சொன்னது…

நல்லதொரு விளக்கம். வாழ்த்துக்கள் தோழரே

Unknown சொன்னது…

தாங்கள் செய்வதை பற்றிய தெளிவு எதுவும் இல்லாமலே வாழ்பவர்கள்தான் நாம். ஈழப் பிரச்சினையில் வாய்மூடி மௌனியாக நடந்த கொடுமைகளுக்கு துணைபோனவர்கள் நாம். சாமியார்கள். சினிமாக்காரர்கள், அரசியல்வாதிகள் பின்னால் செல்லும் மனதை ஆடுகள் நாம்.

பெயரில்லா சொன்னது…

திருக்குறள் அனைவருக்கும் பயன்படும் படியே வள்ளுவர் எழுதியுள்ளார் என்பதில் ஐயமில்லை. ஆனால் தமது விளக்கத்தில் சிறு திருத்தம் ... ஐம்புலன்களையும் அடக்கி வைப்பனின் தூய்மை படுத்தும் வழி நிற்பவர் நீண்டு வாழ்வார் என்பதே. இது அப்பட்டமான சமண சமயக் கருத்தாடல். இருப்பினும் இது சமண சமயத்தைக் கடந்து எந்த சமயத்துக்கும் பொருந்தும், பொய்தீர் ஒழுக்கம் கிறித்தவம், இஸ்லாம், பௌதாம் என எதைவேண்டுமேன்றாலும் எடுத்துக் கொள்ளலாம் ... . ஐபுலங்களியும் அடக்கி வாழ்பவர் கடவுள் மட்டுமே, மனிதரும் அடக்கி வாழும் பட்சத்தில் அவரும் கடவுள் ஆகின்றார்.

Radhakrishnan சொன்னது…

ஹா ஹா! கலக்கல்.

புதுசு புதுசா திருக்குறள் எழுதறாங்க. ஆனால் எழுதப்பட்ட திருக்குறளுக்கு புதுசு புதுசா விளக்கம் எல்லாம் சொல்றீங்க.

பொய்தீர், ஒழுக்க நெறி இவை இரண்டும் எப்போது சாத்தியம்?

பொறிவாயில் ஐந்தவித்தான் எனும்போது மட்டுமே சாத்தியம்.

அந்த பொறிவாயில் ஐந்தவித்தான் யார்?

மனிதர்களில் காண்பது அரிது.

இதன் காரணமாகவே இறைவனை ஒரு காரண பொருளாக்கி வள்ளுவர் பெருந்தகை குறிப்பிட்டு இருப்பதாக வரதராசனார், பரிமேழகர் சொல்லி இருக்கிறார்கள்.

ஆனா ஒன்னு, இந்த கால நிலைமையை அற்புதமா கையாண்டு

நல்லா பொரிகடலை மெல்றீங்க :) ரசித்தேன்.

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

எனது வலைப்பூவிற்கு வருகை தந்து
தமிழ்மணம் மற்றும் இன்ட்லி யில் வாக்களித்தவர்களுக்கும்
பின்னூட்டமிட்டவர்களுக்கும்
எனது மனமார்ந்த நன்றி கலந்த வணக்கத்தை
தெரிவித்துக்கொள்கிறேன் .

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "