திங்கள், 29 நவம்பர், 2010

ஸ்பெக்ட்ரம் ஊழல் யார் குற்றவாளி


This Report for the year ended March 2010 has
been prepared for submission to the President
under Article 151 of the Constitution என்று ஸ்பெக்ட்ரம் விவகாரத்தின் தணிக்கை குழு அறிக்கை லோக் சபாவில் தாக்கல் செய்யப்பட்டது. 

இங்கு நாம் கவனிக்கப்படவேண்டிய மிக முக்கியமான விசயம் எது எனில் Article 151 of the Constitution . நாம் முதலில் இதனை விரிவாக பார்ப்போம் .

Article 148 ன் படி குடியரசுத்தலைவரால் நியமிக்கப்படும் இந்திய தலைமைத்தணிக்கையாளர் பதவி மிகவும் அதிகாரம் நிறைந்ததும் ,பொறுப்பு மிகவும் அதிகம் கொண்டதுமான ஒரு பதவி .அதனால் தான் இவரை எளிதில் பதவி நீக்கம்  செய்யமுடியாத படி அரசியல் சாசனம் எழுதப்பட்டது . ஒரு தேர்தல் ஆணையர் , ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதி ஆகியோரை எவ்வாறு பதவி நீக்கம் செய்ய நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிறதோ அத்தகைய நடைமுறைகள் கடைப்பிடித்து தான் இவரை பதவி நீக்கம் செய்ய முடியும் .நாடாளுமன்றத்த கூட்டி 2 சபையிலும் விவாதம் செய்து 3ல் 2 பங்குக்கு மேல் வாக்களித்து பிறகு குடியரசுத்தலைவரால் நீக்கப்படுவார் .அவ்வளவு முக்கியமான பொறுப்புள்ள பதவி .

இவரின் வேலை என்னானா  .மத்திய மற்றும் மாநில அரசுகளின் வரவு செலவு கணக்குகளை ஒரு தணிக்கையாளர் என்ற முறையில் தணிக்கை செய்யவார் .Article 150 ன் படி மத்திய மற்றும் மாநில அரசுகளின் கணக்குகள் அனைத்தும் ,தலைமைத்தணிக்கையாளரைக் கலந்தாலோசித்துக் குடியரசுத்தலைவர் வகுத்துக்கொடுக்கும் படிவத்தில் வைத்து வரப்பட்டு அதனை Article 151 ன் படி குடியரசுத்தலைவர் நாடாளுமன்றத்தின் 2 அவைகளிலும் தாக்கல் செய்யவேண்டும் .

அவ்வாறு தாக்கல் செய்யப்படும் அறிக்கைகளில் ஏதாவது முறைகேடுகளோ அல்லது தவறுகளே இருந்தால் அவைகள் நாடாளுமன்றத்தின் 2 அவைகளிலும் விவாதிக்கப்பட்டு பின் சம்மந்தப்பட்ட துறையினரிடமும் ,அதற்கு பொருப்பு வகிக்கும் அமைச்சரிடமும் விளக்கம் கேட்டு முறைகோடோ ,தவறோ இருந்தால் துறைரீதியான நடவடிக்கைகள் எடுக்க நாடாளுமன்றம் தகுந்த ஆவன செய்யவேண்டும் .அதில் பிரச்சனைக்குறிய அமைச்சர் ராஜினமா மற்றும் பிற நடவடிக்கைகள் அடங்கும் .
இது முழுக்க முழுக்க  Article 77 கூறும் இந்திய அரசின் அலுவலக செயல்பாடுகளில் வரும் .Article 77(4) இந்திய அரசின் அலுவல்களைச் செயல்படுத்துவதற்கான விதிமுறைகளைத் தம் முன்னர் கொண்டுவரப்பட வேண்டும் என்று கேட்கும் அதிகாரம்  ,எந்த நீதிமன்றத்துக்கும் மற்றும் வேறு எவருக்கும் கிடையாது  என்கிறது .


இப்ப ஸ்பெக்ட்ரம் விவகாரத்திற்கு வருவோம் ...

அரசியல் சாசன நெறிமுறைகள் இதில் கடைப்பிடிக்கப்படவேயில்லை என்பது தான் எனது வாதமே .

முதலில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் வரவு செலவு கணக்குகளை ஒரு தணிக்கையாளர் என்ற முறையில் இது சம்பந்தமாக இந்திய தலைமைத்தணிக்கையாளர்  வருடாவருடம் குடியரசுத்தலைவரிடம் தாக்கல் செய்திருக்க வேண்டும் .

இரண்டாவது அவைகள் நாடாளுமன்றத்தில் உடனே தாக்கல் செய்யப்பட்டு விவாத்த்திற்கு உட்படுத்தியிருக்க வேண்டும்

அதனை ஏன் 2003-04 இருந்து செய்யவில்லை .

நாட்டிற்கு இழப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்வது தானே அவரின் அரசியல் சாசனப்படியான கடமை .அதற்குத்தானே அவ்வளவு கவுரவம் .எந்த நிமிடம் நாட்டிற்கு இழப்பு ஏற்படுகிறதோ அந்த நிமிடமே அவர் செயல் படவேண்டியது அவரின் ஜனநாயகப்பொறுப்பள்ளவா ? நாட்டை இழப்பின்றி கொண்டு செல்லவேண்டியது அவரின் அரசியல் சாசன கடமையல்லவா ?.

அதை செய்யாமல் விட்டதால் தானே  இவ்வளவு இழப்பு
அதை விடுத்து 2010 ல் ராசா மீது குற்றம் சுமத்துவது எவ்வாறு ஏற்புடையது என்று  எனக்குத்தெரியவில்லை.

உண்மையில் இந்த விசயத்தில் ஜனநாயகத்தூண்கள் அனைத்தும் இந்திய ஜனநாயகத்தையும் ,நமது அரசியலமைப்புச்சட்டத்தையும் கேலி செய்து அசிங்கப்படுத்தி வருகிறதோ என்ற அச்சம் எனக்கு ஏற்பட்டுள்ளது .

முறையான நடைமுறைகள் பின்பற்றமல் ஜனநாயக்க்கடமையை செய்யாமல் இழப்பு ஏற்பட  காரணமாக இருந்துள்ளது இந்திய தணிக்கைத்துறை .அதனை சரிப்படுத்த  எந்த  நடவடிக்கைகளையும் எடுக்காமல் நாடாளுமன்றத்தை முடக்கி... வேதனையாக உள்ளது .இது நிதி சம்பந்தப்பட்ட விசயம் பொறுப்புடன் அரசியல் வாதிகள் நடந்துகொள்ளவேண்டும் .
அல்லாது போனால் இதுவே முன்னுதரணமாகி ...
நஷ்டம் அரசியல்வாதிகளுக்கு அல்ல நாட்டிற்குத்தான் .

இங்கு அரசியல் அமைப்புச் சட்டம் இருக்கிறது ஆனால் அது பற்றிய அறிவு இருக்கிறதா இல்லையா என்பதே எனது கேள்வியாக இப்பொழுது இருக்கிறது.

முறையான நடைமுறைகள் பின்பற்றப்படாத்தால் தான் இந்த இடுகை .

அதற்கு பலிகடா ஒரு அப்பாவித் தமிழன் என்பதோடு நமது ஜனநாயகமும் அரசியலமைப்புச்சட்டமும் என்பது தான் மிகவும் வேதனையாக உள்ளது . 
முறையான நடைமுறையின்றி யாரும் தண்டிக்கப்படக்கூடாது  .


. Download As PDF

26 கருத்துகள் :

ரோகிணிசிவா சொன்னது…

mm , ithum sariya irkira mathiri than iruku ,
lets wait and watch

Jeyamaran சொன்னது…

anna neengalum soundarum spectama pathi eluthirukkinga 2m arumai.........

payanulla pathivu vaalthugal

பெயரில்லா சொன்னது…

//அதற்கு பலிகடா ஒரு அப்பாவித் தமிழன் //
??????????????????????????????????????????

சௌந்தர் சொன்னது…

எனக்கும் இந்த விஷயத்தில் இவர் மீது தவறு இருக்காது என்றே தோன்றுகிறது

cheena (சீனா) சொன்னது…

mmmm சட்ட நுணுக்கங்கள் - சட்ட வல்லுனர்கள் - பேச வேண்டியவை இவை - என்க்குப் புரிய வில்லை - பொறுத்திருந்து பார்ப்போம்.

மலாக்கா முத்துக்கிருஷ்ணன் சொன்னது…

அருமையான பதிவு. மலேசியாவில் கூட ஸ்பெக்ட்ரம் விவகாரத்தைப் பற்றி நிறைய பேர் பேசுகிறார்கள். ஊழல் இல்லாத நாடு எதுவுமே இல்லை. மலேசியாவிலும் ஊழல்கள் இருக்கவே செய்கின்றன. ஆனால், ஸ்பெக்ட்ரம் ஊழல் மாதிரி உலகத்திலேயே வேறு பெரிய ஊழல் இருக்கவே இருக்காது. கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறச் செய்யலாம்.
மலேசியாவிலிருந்து முத்துக்கிருஷ்ணன்.

பித்தனின் வாக்கு சொன்னது…

// அதற்கு பலிகடா ஒரு அப்பாவித் தமிழன் என்பதோடு நமது ஜனநாயகமும் அரசியலமைப்புச்சட்டமும் என்பது தான் மிகவும் வேதனையாக உள்ளது . //

இந்த தமிழன் ஒரு வார்த்தை எவ்வளவு கேவலமானது என்பது 1960 களில் இருந்து தான் மாறிப் போனது. அதுக்கு முன்னல நல்லாதான் இருந்தது. சி.எஸ், இராஜாஜி, காமராஜர், கக்கன், தோழர் ஜீவா, அருணாச்சலம், கிருஷ்ணசாமி சுந்தர்ஜி, மேஜர் பரமேஸ்வரன். ஏ ஆர் ரஹ்மான்.இவங்க எல்லாம் ஆப்பிரிக்காவுல புடிச்சவுங்க, அதுனாலதான் அவங்க எல்லாம் டெல்லியில மதிப்பும் மரியாதையுடன் இருந்தனர்.

ஆனா ஒரு டெர்ம்ல இருந்த நடத்தையைப் பார்த்தே இரண்டு தி மு.க மந்திரிகளை பிரதமரே வெறுக்கும் அளவுக்கு இருந்தது, அடுத்த டெர்ம்ல வேண்டாம் என்று சொல்லி விட்டார். டெலிகாம் இராசா என்று டெல்லியில நக்கலாக கூப்பிடும் ஒருவரை எப்படி கொஞ்சம் கூட வெக்கம் மானம் சூடு சுரணை எதும் இல்லாம உங்களால் தமிழன் என்று சப்பைக் கட்டு கட்ட முடியுது.மொத்த படிச்சவன் தான அப்புறம் எப்படியா அப்பாவித் தமிழன் ஆனார். அவரு மாதிரியே நீங்களும் அப்பாவித் தமிழரா பதிவு போட்டுடிங்களா.
இன மான தன்மான உணர்வுகள் வேண்டியதுதான், அதுக்காக சுரண்டல்கள் எல்லாம் நியாயப் படுத்தக் கூடாது.

goma சொன்னது…

என்ன செய்றதுன்னே தெரியலை யாரை நம்புறதுன்னும் புரியலை...

bandhu சொன்னது…

// அதற்கு பலிகடா ஒரு அப்பாவித் தமிழன் என்பதோடு நமது ஜனநாயகமும் அரசியலமைப்புச்சட்டமும் என்பது தான் மிகவும் வேதனையாக உள்ளது . //அப்பாவியா? யப்பா யப்பா யப்பா! என்னமா குடுக்கறீங்க சௌண்டு!

ராஜ நடராஜன் சொன்னது…

நண்டு!ஊழல் செய்வது எப்படியென்று உலகுக்கே கற்றுக்கொடுக்கும் திறன் வாய்ந்தவர்கள் தமிழக அரசியல்வாதிகள்.இங்கேயே அடிப்படை நம்பிக்கை புட்டுகிட்டுப் போய் விடுகிறது.

அடுத்து டெலிகாம் அமைச்சகத்திலிருந்து ஸ்பெக்ட்ரம் குறித்த ஆ.இராசாவின் கடிதங்களும் பிரதமர் சிபாரிசுகளும் கூட புறக்கணிக்கப்பட்டு ஸ்பெக்டரம் டெண்டரின்றி First come first served திட்டமும் கடைசி தேதியை ஒரு வாரத்திற்கு முன்பே கொண்டு வந்து எல்லாமே வித்துப்போச்சுன்னு அறிவித்ததும் தவறானவை.

தணிக்கை குழுவின் அறிக்கை ராசாவுக்கு சார்பாக இருக்கிறதா?

உங்கள் வாதத்தில் முழுமை இல்லை என்பது மாதிரி தோன்றுகிறது.இல்லையென்றால் பாராளுமன்றம் விடாக்கண்டன் கொடாக்கண்டன் மாதிரி இருவாரமும் முடங்குவதற்கும் எதிர்க்கட்சிகளுக்கு அரசியலமைப்பு படி உரிமை இல்லையென்பதும்,மடியில் கனமில்லை என்று ஆளும் கட்சியும் பாராளுமன்றம் நடக்க JPCக்கு சம்மதிக்கிறோம் என்பதும் நிகழ்ந்திருக்கும்.

ஸ்பெக்ட்ரத்தின் ஒரே நன்மை நட்டத்திலும் திட்டம் பரவலாக்கப்பட்டது மட்டுமே.

ஆகா!க்ளைமாக்ஸ் கொண்டு வந்து நிறுத்துனீங்களே அப்பாவி தமிழனென்று.விட்டா அந்த பாழா போனவன் அஜ்மல் கூட அப்பாவி,தெரியாம மாட்டிகிட்டான்னு பதிவு போடுவீங்க போல இருக்குதே.

பிரபாகர் சொன்னது…

முழுக்க புரிந்துகொள்ளாமல் எழுதியிருக்கிறீர்களோ எனப்படுகிறது.

பிரபாகர்...

பிரபாகர் சொன்னது…

//
'ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது '
//

சரியாய் எழுதவும் முடியாது.

பிரபாகர்...

தமிழ்போராளி சொன்னது…

இந்த கூத்து எதுவரை போய் நிற்கும் என்று பொருத்து இருந்துதான் பார்க்க வேண்டும்....

மோகன் காந்தி சொன்னது…

"என் மீது விமர்சனங்கள் வரலாம்; ஆனால், தொலைதொடர்புத் துறையில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளேன்'
ராஜா

பெயரில்லா சொன்னது…

உங்க கற்பனை வளம் நல்லாருக்கு ....பேசாம திமுக ல சேருங்க ..................கலைங்கருக்கு பேச ஆள் இல்லையாம்

அருள் சொன்னது…

ஸ்பெக்ட்ரம் பணத்தில் அனுஷ்காவுக்கு பங்கு! அதிர்ச்சி தகவல்.

http://arulgreen.blogspot.com/

பெயரில்லா சொன்னது…

அதற்கு பலிகடா ஒரு அப்பாவித் தமிழன்

Ada kala kodumaiyee....thamizannaley appaviya...

ada pavi makka

Ravi kumar Karunanithi சொன்னது…

hiyyo

ராவணன் சொன்னது…

நண்டு என்ன சொல்கின்றார் என்று புரியாமல் அனைவரும் பதிலுரை எழுதியுள்ளார்கள்.

அதுதான் நண்டுவிற்குக் கோவம்...யாருக்கும் பதில் சொல்லவில்லை...சரியா நண்டு?

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

ராவணன் said...
//நண்டு என்ன சொல்கின்றார் என்று புரியாமல் அனைவரும் பதிலுரை எழுதியுள்ளார்கள்.

அதுதான் நண்டுவிற்குக் கோவம்...யாருக்கும் பதில் சொல்லவில்லை...சரியா நண்டு? //
என்ன செய்ய நமது இரத்தங்களை பக்குவப்படுத்தும் பணியும் நம்மிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது என நினைக்கின்றேன்.
எதையும் சிறப்பாக செய்வோன் .
இதையும் அப்படியே செய்வோன்
என்ற நம்பிக்கையுடன் இயங்குகின்றேன் .
ராவணன் அவர்களே

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

எனது வலைப்பூவிற்கு வருகை தந்து
தமிழ்மணம் மற்றும் இன்ட்லி யில் வாக்களித்தவர்களுக்கும்
பின்னூட்டமிட்டவர்களுக்கும்
எனது மனமார்ந்த நன்றி கலந்த வணக்கத்தை
தெரிவித்துக்கொள்கிறேன் .

velu சொன்னது…

then tell how to punish the nonsense.
the question is why he fixed the sept 25th as last date.
how some companies like swan unitech and rcom was able to take DD for 1600 odd crore rupess with in the within 45 min of the cut off time.
It is shame to track the word TAMILAN on this issue Mr. Advocate.
nothing will happen if the parliment proceeds without intreuption

velu சொன்னது…

ராவணன் said...
//நண்டு என்ன சொல்கின்றார் என்று புரியாமல் அனைவரும் பதிலுரை எழுதியுள்ளார்கள்.

அதுதான் நண்டுவிற்குக் கோவம்...யாருக்கும் பதில் சொல்லவில்லை...சரியா நண்டு? //
என்ன செய்ய நமது இரத்தங்களை பக்குவப்படுத்தும் பணியும் நம்மிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது என நினைக்கின்றேன்.
எதையும் சிறப்பாக செய்வோன் .
இதையும் அப்படியே செய்வோன்
என்ற நம்பிக்கையுடன் இயங்குகின்றேன் .
ராவணன் அவர்களே
we did not understand what u said.
but explain my earlier questions and TATA himself wants the spectrum to be auctioned
STEL offers RS. 24000 cr for pan India licence.
if he did not take any bribery he must be an insane.then he will deserve ur argument

பெயரில்லா சொன்னது…

Sabaash sariyaana peyar! Nandu! Where are you?Are you watching the current development

பெயரில்லா சொன்னது…

//யார் குற்றவாளி?//
வேறு யார்?தி மு க கழிசடைகளுக்கு காசு வாங்கிக் கொண்டு ஓட்டு போட்ட திராவிட தமிழ் முண்டங்கள் தான்.

P.S.Narayanan சொன்னது…

Appaavi Thamizharaa? Who is that? You cannot differentiate a Tamil thief from a Hindi thief or a Bengali thief. A rascal has to be called rascal. Periyaar did this monumental error of condoning the corruption among non-Brahmins citing the monumentally corrupt Brahmins. In any stretch of imagination, Mu Ka can never be called a Sudra. He can conduct upanayanam even to Jayendra Saraswathy.

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "