செவ்வாய், 14 செப்டம்பர், 2010

நடிகர்களாகிப்போனவர்களை என்ன செய்ய

மனிதன் தன் வாழ்வை  இங்கும்அங்கும் ஓட்டி அலைந்து திரிந்து ஒன்றையும் புரிந்துகொள்ளமல் சக மனிதர்கள் மத்தியில் தவிக்கும்பொழுது அவனால்  கடினத்துடன் கூறும் வார்த்தை ''நாடகமே உலகம் '' .

 ''நாடகமே உலகம் ,நாமெல்லாம் நடிகர்கள் ''   என்ற நாடக வார்த்தை  நாடகவாதியால்   கூறுவதற்கு முன் இவ்வுலகம் பற்றிய கணிப்பு மதவாதக்கூற்றுகளின் படி இருந்தது .

 மனிதனை தனது சுயத்தினின்னு புறம் தள்ளி நாடக மனேபாவத்திற்கு கொண்டுசென்று,
மனிதர்களை நாமெல்லாம் நடிகர்கள் என நடிகர்களாக்கி ,அதன் முலம் தன்னை விட நன்றாக நடிப்பவனை உயர்ந்தவனாக நோக்க வைத்து ,மக்களை நடிகர்களின் மாயையில் ஆழ்த்தி ,நடிகனை  இலட்சியவாதியாகவும் ,தானக்கு தலைவனாகவும் எண்ண வைத்து  ,அவனை தொடர வைத்து ,சமுதாயத்தை சீரழித்து ,உலகையே கேள்விக்குறியாகவும்,கேலிக்குரியாதகவும் ,கேளிக்கைக்கோ உரியதாகவும் ஆக்கி விட்டதால்  உலகை பீடித்த உன்னதவரிகள்   ''நாடகமே உலகம் ,நாமெல்லாம் நடிகர்கள் '' என்கின்றேன்.

''நாடகமே உலகம் ,நாமெல்லாம் நடிகர்கள் ''  என்ன பதத்தை  பயன்படுத்தியவருக்கு உண்மையில் நாடகமே உலகமாக இருந்திருக்கிறது தான் .ஆனால் ,அதனை நிஜ உலகத்தில் புகுத்தி  உண்மையை கற்பனையாக்கி விட்டது தான் கவலைதருகிறது .மனிதனின்  இயல்பை நடிப்பாக ஆக்கிவிட்ட ,மாற்றிவிட்ட  மிகப்பெரிய கெடுதி  இது அல்லவா ?

ஆடல்பாடலுடன் ஆரம்பித்தது .ஆடல்பாடலுடன்  கலாச்சார சீரழிவும் அதிகமாகி தற்பொழுது நடிப்பாகவே அனைத்தும் .

இன்று,
நிஜ வாழ்வை தொலைத்து ,
எது வாழ்வு என புரியாமல்
'' நாடகமே உலகம் ''என
நடிகர்களாகிப்போனவர்களை என்ன செய்ய ?.
. Download As PDF

12 கருத்துகள் :

Unknown சொன்னது…

ஒன்றும் செய்ய முடியாது அவர்களாக நடிப்பிலிருந்து வெளியில் வரும் வரை.

சசிகுமார் சொன்னது…

உங்களுடைய பதிவு நாளுக்கு நாள் மெருகேறிக்கொண்டே செல்கிறது வாழ்த்துக்கள் nanbaa

தமிழ்போராளி சொன்னது…

அருமையான பதிவு தொடர்ந்து எழுதுங்கள்

நேசமித்ரன் சொன்னது…

அருமையான பதிவு

அம்பிகா சொன்னது…

அருமையான பதிவு

cheena (சீனா) சொன்னது…

அன்பின் நண்டு

வாழ்வின் இயல்பினை மறந்து நாடகமே உலகம் என - என்னவென்று தெரியாமலேயே நடித்துக் கொண்டிருக்கும் மனிதர்கள் எப்பொழுது திருந்துவது ? அவர்களை என்ன செய்வது ? ம்ம்ம்ம் - நல்ல சிந்தனியில் உருவான இடுகை.

நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா

Chitra சொன்னது…

விட்டால் மக்களுக்கு டைரக்டர் ஆக ஆசைத்தான்..... என்ன செய்ய? ம்ம்ம்ம்......

ஹேமா சொன்னது…

எங்காவது அவர்கள் நடிப்பே அவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கும் !

velusamymohan சொன்னது…

A post with a true concern Nandu,Who is leading a real life nowadays ?

priyamudanprabu சொன்னது…

துங்குபவனை எழுப்பலாம் , அனல் துங்குவதை போல் நடிப்பவனை ??
அவனா எழுந்தால் உண்டு

ஜெயந்தி சொன்னது…

நடிப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக்கிட்டுதான் போகுது. என்றைக்கு மாறுமோ?

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

தங்களின்
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்

மிக்க மகிழ்ச்சி

நந்தா ஆண்டாள்மகன் @

சசிகுமார் @

விடுத‌லைவீரா @

நேசமித்ரன் @

அம்பிகா @

cheena (சீனா) @

Chitra @

ஹேமா @

velusamymohan @

பிரியமுடன் பிரபு @

ஜெயந்தி

அவர்களே

மிக்க நன்றி .

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "