இன்றைய நாளிதழில் வந்த செய்திகளில் .
1.வீணாகும் உணவு தானியங்களை ஏழைகளுக்கு வழங்க முடிவு .
2.சூப்பர் பக் ஆய்வு செய்த விஞ்ஞானிகளுக்கு நோட்டீஸ் .
இவற்றை படித்ததும் எழுதத்தோன்றியது .
1.உச்சநீதி மன்றம்
வீணாகும் உணவு தானியங்களை ஏழைகளுக்கு இலவசமாக வழங்கும்படி கூறி பிறகும்
மத்திய அரசு ஏன் விலைக்குத்தான் கொடுப்போம்னு அடம்பிடிக்கிறது என்றே தெரியவில்லை .
வழக்கு தொடராமல் இருந்திருந்தால் இவைகள் அனைத்தும் வீணாத்தான் போக்கியிருப்பார்கள் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது .
வீணா போனாலும் போகுமேயொழிய மக்களுக்குத் தர தயாராயில்லாத அவர்களை மக்கள் எவ்வாறு நம்புவார்கள் இனி .
இத்தனைக்கும் இவைகள் மக்களின் சொத்துக்கள்.
அவைகளை மக்களுக்கு கொடுப்பதற்கு ஏன் இத்தனை தயக்கம் ?.
மக்கள் நல்லா பொழச்சிறுவாங்க என்ற அச்சமா ? .
ஆமா,இவ்வளவு தானியங்கள் வேஸ்டாகரவரைக்கும் பொருளாதார மாமேதைகள் என்னசெஞ்சுக்கிட்டிருந்தாங்க ?.
உலக வங்கியில கடன் வாங்க கையொழுத்து போட போய்ட்டாங்களா ?
அடடே ,இவங்கள நம்பில்ல நாடு இருக்கு .
எத்தனையோ இலவசங்களை அறிவிக்கிறீங்க .
வீணா போயிருக்கரத ஏங்க விக்கப் பாக்கிறீங்க .
வீணாப்போரதையே விக்கப்பாக்கிற நீங்க ...?
எதிர் கட்சிகதான் குரல் கொடுக்கல ,
வலைப்பதிவர்களாவது இதற்கு குரல் கொடுப்பார்கள் என நம்புகிறேன் .
2.ஒரு நாட்டில் அதன் அனுமதியில்லாமல் குடிமக்களை மருத்துவ ஆய்வுகள் செய்வது மிகவும் கடுமையான தண்டனைக்குறிய குற்றமாகும் .
அதையும் தாண்டி தேசத்தின் பெயருக்கே களங்கம் ஏற்படும் படியாக நடந்து கொண்டதற்கு ?.
மருந்து கட்டுப்பாட்டுத்துறை
விஞ்ஞானிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது .
தாமதமாக செயல்பட்டாலும் நல்ல ஆரம்பம் .
அது மட்டும் போதாது
இந்த ஆய்வுக்கு இந்தியாவிற்கு வந்தவர்கள் யார் , யார் ?
அவர்களின் நோக்கம் என்ன ?
இது மாதிரி யார் ,யார் இன்னும் உள்ளனர் ?
அவர்களின் நோக்கம் என்ன ?
எதற்காக ,யாரால் இவர்கள் வந்தார்கள் ?
எப்படி வந்தார்கள் ?
அவர்களின் பின்னணி எது ?
போன்றவற்றை கண்டுபிடிப்பதோடு இனிவரும் காலங்களில் இப்படி நடக்காதபடி கடுமையான நடவடிக்கைகளை தயவுதாட்சணியம் இன்றி உடனே எடுக்க வேண்டும் .
இல்லாது போனால்நம் நாட்டின் நலத்திற்கு மிகப்பெரிய பாதகமாக எதிர்காலத்தில் அமைந்துவிடும் இப்படிப்பட்ட செயல்கள்.
இதில் நம் நாட்டின் கவுரவம் மட்டுமல்ல பாதுகாப்பும் அடங்கியுள்ளது .
. Download As PDF
Tweet |
|
6 கருத்துகள் :
//எதிர் கட்சிகதான் குரல் கொடுக்கல ,
வலைப்பதிவர்களாவது இதற்கு குரல் கொடுப்பார்கள் என நம்புகிறேன் .//
எனது கண்டனத்தையும் தெரிவித்து கொள்கிறேன்.
கண்டிக்க வேண்டிய செயல் தான்
நடக்கும் ஆனா நடக்காது.
நண்பரே!
தேவையான பதிவு. பகிர்வுக்கு நன்றி.
வீணாகும் உணவு தானியங்கள் குறித்து சாய்நாத் அவர்கள் எழுதிய கட்டுரையை எனது வலைப்பக்கத்தில் பகிர்ந்திருந்தேன்.
ஆபத்தை விதைத்து பசி அறுவடை
அன்பின் நண்டு
அருமை - சிந்தனை அருமை - பயனுள்ள பகிர வேண்டிய இடுகை
நல்வாழ்த்த்துகள்
நட்புடன் சீனா
தங்களின்
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்
மிக்க மகிழ்ச்சி
சசிகுமார் @
அருண் பிரசாத் @
ஜெரி ஈசானந்தன். @
மாதவராஜ் @
cheena (சீனா)
அவர்களே
மிக்க நன்றி
கருத்துரையிடுக
" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "