சனி, 4 செப்டம்பர், 2010

விஞ்ஞானிகளுக்கு தெரிந்த கடவுள்கள் .


என்னிடம் கடவுளைப்பற்றி விஞ்ஞானிகள் ஒவ்வொருவரும் என்ன என்ன கூறினார்கள் என்று விளக்கி நண்டு புலகாங்கிதம் கொண்டபொழுது நான் அதிர்ந்துபோனோன் .

விஞ்ஞானிகளும் இந்த நச்சு சமுதாயத்தில்தானே வளர்ந்து,வாழ்ந்து வந்திருகின்றனர் .இந்த கல்வி கட்டமைப்பிலிருந்து தானே கல்வி கற்று.
அப்படியிருக்க அவர்களிடம் எதைப்பற்றி என்ன கேள்வி கேட்டாலும் என்ன பதில் வரும் இந்த கட்டமைப்பை தாண்டி .
அவர்களுக்கு என்று சிறப்பாக வேறு ஒன்றும் இல்லையே .

பொதுவாக விஞ்ஞானிகள் தங்களின் வாழ்க்கைப்பாதையில், இளமையிலேயே அறிவியலின்பால் அதிக ஆர்வம்கொண்டு,
தங்களை அர்ப்பணித்ததன் காரணமாக, உலகிற்கு உன்னத கண்டுபிடிப்புகளை அளித்து மனிதகுலம் வளமாகவும், நலமாகவும், நிறைவாகவும் வாழ தங்களால் ஆன பங்களிப்பு செய்யப்படுகிறது.
அவர்களின் குறிக்கோள் முழுவதும் தங்கள் எடுத்துக்கொண்ட விசயத்தை அடைவதாகவே இருக்கும் .மற்றபடி அவர்களுக்கும் சமுதாயத்தில் புதைந்துகிடக்கும் பழக்கவழக்கங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை .
அது மூடத்தனம் என்றோ ,புரிந்துகொள்ளமுடியாது என்றோ அவர்களால் பிரித்துணர நேரம்,அவசியம் அவர்களுக்கு இல்லை .
நமது கல்விமுறை கற்றுக்கொடுத்த சமுதாயம் பற்றிய படிமம் அவர்களிடம் அதிகமாகவே விரவியிருக்கிறது .மேலும் , அவர்களிடம் கடவுளைப்பற்றி கேட்பது எனக்கு சரியாகப்படவில்லை.

விஞ்ஞானம் என்பது அனைவருக்கும் பொது .
அதனால் விஞ்ஞானிகள் பகுத்தறிவாதிகளுடன் ஒதுக்கப்படுகிறார்கள் ஆத்திகர்களால் பயத்துடன் .

பிரபஞ்ச ஆய்வில் ஈடுபடுபவர்கள் கூட பிரமிப்பில் தான் உள்ளனர். அவர்களுக்கு மனிதனைப்பற்றியும் ,அவனின் அறிவின் ஆகப்பெரிய தன்மை பற்றியும் எதுவும்தெரிவதில்லை.எளிமையாகக்கூறவேண்டுமேன்றால் சூரியனுக்கு கோடிகோடி ஒளியாண்டுகளுக்கு அப்பால் உள்ள
ஒன்றைப்பற்றி கூறும் ஒரு அறிஞருக்கு கழிவுநீரால் ஏற்படும் கேடு பற்றி தெரிவதில்லை.இதயநோய் ஆராய்ச்சியாளருக்கு பல் நோய் பற்றிய அறிவு போல் .இது போன்றுதான் அனைத்தும்.

இங்குதான் சிந்தனையாளர்கள் அனைவரையும் கடந்து நிற்கின்றனர் .
இங்குதான் மனித சமுதாயம் சிறக்கவும், மனிதநேயம்
பெருகவும் அனைவருக்கும் பொதுவான ஒரு பார்வையை வைக்கிறது
பகுத்தறிவு .
விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கின்றனர்.
பகுத்தறிவாளர்கள் பகிர்ந்தளிக்கின்றனர்.

எந்த ஒரு விஞ்ஞானப்படைப்பிலும் அந்த படைப்பினை மட்டுமே பார்க்கவேண்டும் .அதைப்படைத்தவன் அதற்குத்தரும் விளக்கத்தை அதைப்பொருத்து அதுசம்பந்தமாக மட்டுமே காணபெறவேண்டும் .
அப்பொழுதுதான் அப்படைப்பை அடுத்துவரும் தலைமுறையினர் மேலும் செலுமைப்படுத்துவர்.

அது தவிர்த்து மற்றவற்றில் அவர்களின் பார்வை மங்கலாகவே இருக்கும்.
பதிலும் மழுப்பலாகவே வரும். கடவுளும் அப்படித்தான் தெரிவர் .


-நொரண்டு .
மீள்வு .
. Download As PDF

15 கருத்துகள் :

தமிழ்போராளி சொன்னது…

அருமையான பதிவு.தொடர்ந்து இது போன்ற கட்டுரைகள் எழுதுங்கள். எனக்கும் புதிய தலைமுறை இளைஞர்களுக்கும் ஒரு அறியப்படாத செய்தி இது. இதன் மூலம் போது அறிவு வளர வாய்புண்டு..வாழ்த்துக்கள் தோரரே..

ஆர்வா சொன்னது…

வித்தியாசமான கோணத்தில் அலசி இருக்கிறீர்கள்

dheva சொன்னது…

//பிரபஞ்ச ஆய்வில் ஈடுபடுபவர்கள் கூட பிரமிப்பில் தான் உள்ளனர். அவர்களுக்கு மனிதனைப்பற்றியும் ,அவனின் அறிவின் ஆகப்பெரிய தன்மை பற்றியும் எதுவும்தெரிவதில்லை.எளிமையாகக்கூறவேண்டுமேன்றால் சூரியனுக்கு கோடிகோடி ஒளியாண்டுகளுக்கு அப்பால் உள்ள
ஒன்றைப்பற்றி கூறும் ஒரு அறிஞருக்கு கழிவுநீரால் ஏற்படும் கேடு பற்றி தெரிவதில்லை.//

நிதர்சனமான உண்மை தோழரே....!

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

அருமையான பதிவு

ஜெயந்தி சொன்னது…

ரொம்ப சரியா சொல்லியிருக்கீங்க.

மதுரை சரவணன் சொன்னது…

good post. thanks for sharing.

உங்களில் ஒருவன் சொன்னது…

சார்,
இந்த விஞ்ஞானிகளின் கடவுளின் வெறுப்புக்கு காரணம் கடந்த நூற்றாண்டுகளில் மெஷினரிகள் அறிவியல் ஆராய்ச்சிக்கு தடைப் போட்டதும் அப்படி ஆராய்ச்சி செய்தவர்கள் கொலை போன்ற கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டதும் தான் காரணம், அதனால்தான் விஞ்ஞானிகள் கடவுளுக்கு எதிராகவும் இந்த மெஷினரிகளுக்கு எதிராகவும் திரண்டனர், டார்வின் கூட நாத்திகர்தான்.

உலகம் உருவானது இயற்பியல் காரணிகளால்தான் என்னு ஸ்டீபன் ஹாக்கிங்ஸ், அவர் உயிர் வாழ்வதே ஒரு அதிசயம்தான், கருவிகளின் துணைகொண்டுதான் பேசமுடியும், அவர் இயங்கமுடியும், அவரை பார்த்தால் இவர் எப்படி உயிர் வாழ்கின்றார் என்பதே அதிசயமாக பார்ப்போம் அந்தளவுக்கு உயிர் மட்டுமே ஓடிக்கொண்டிருக்கும் ஒரு நபரை இறைவன் தன் வல்லமையை காட்டும் விதமாகவே அவரின் உயிரை ஓடச்செய்துள்ளான் என்பதை அவர் சிந்தித்திருக்கமாட்டார். இயற்பியல் காரணிகளால்தான் உருவானது என்றால் அந்த இயற்பியல் காரணி உருவாக காரண கர்த்தா யார்?

கடவுள் இந்த உலகத்துக்கு காட்சிதந்துதான் மனிதன் தன்னை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கடவுளுக்கு தேவையே இல்லை பிறகு பகுத்தறிவு என்ற ஒரு அறிவே மனிதனுக்குத் தேவை இல்லை. தூரத்தில் வரும் புகையை வைத்துக்கொண்டே அங்கு நெருப்பு இருக்கிறது என்று மனம் சொல்கிறது. அண்டசராசர்ங்களையும் பார்க்கும் விஞ்ஞானிகள் இதில் எப்படி மாறுபடுகிறார்கள் என்று தெரியவில்லை.

VELU.G சொன்னது…

நல்ல பதிவு

தேவன் மாயம் சொன்னது…

கடவுள் சர்ச்சைக்குரிய விசயம்தான்!!

தேவன் மாயம் சொன்னது…

நல்ல பதிவு!!தொடருங்கள்!

cheena (சீனா) சொன்னது…

அன்பின் நண்டு

ஒருவர் ஒரு செயலில் ஈடுபட்டு - அதனை முழுவதுமாக ஆராய்ந்து - அறிந்து கொள்ளும் போது மற்றவற்றில் கவனம் செல்லாது. விஞ்ஞானிகளின் செயல்கள் இப்படித்தான்.

நல்ல சிந்தனை
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

தங்களின்
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்

மிக்க மகிழ்ச்சி


விடுத‌லைவீரா @


கவிதை காதலன் @


dheva @


T.V.ராதாகிருஷ்ணன் @


ஜெயந்தி @


மதுரை சரவணன்

அவர்களே


மிக்க நன்றி .

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

முற்றிலும் தவறான புரிதல் தங்களுடையது .
முதலில் வரலாற்றை நன்கு தெரிந்துகொள்ளலாமே?
பிறகு மற்றவற்றை பார்த்தல் நலமாக இருக்குமே .

தோழர் Shafiq அவர்களே .

தங்களின்
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்

மிக்க மகிழ்ச்சி

மிக்க நன்றி .

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

தங்களின்
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்

மிக்க மகிழ்ச்சி


VELU.G @


தேவன் மாயம் @


cheena (சீனா)


அவர்களேமிக்க நன்றி .

Jayadev Das சொன்னது…

நம்மாளுங்க அமர்தியா சென் அவர்களிடம் "இந்தியா பொருளாதாரம் முன்னேற என்ன பண்ணலாம்" என்று கேட்பார்கள், அவரும் ஏதேதோ சொல்லுவர். [நமகெல்லாம் அது எட்டதுங்கோ!]. அதே மாதிரி வெங்கி ராமகிருஷ்ணன் கிட்ட, "இந்திய மாணவர்களுக்கு உங்க அறிவுரை என்ன?" என்று கேட்டனர். [அந்த கூட்டத்துல நானும் நெருக்கியடிச்சுகிட்டு, உட்கார இடமில்லாம கேலரி படிகட்டுல உட்காந்துகிட்டு பாத்தேனுங்கோவ்!] அதுக்கு அவரு, "நான் ஏதோ இந்த ரிபோசோம்களோட பிராப்ளத்தை சால்வ் பண்ணிட்டேங்கிறதால மாணவர்களுக்கு அறிவுரை சொல்ற ஞானம் வந்துட்டதா அர்த்தமா?", என்று கேட்டுவிட்டு "மாணவர்களுக்கு அறிவுரை ஒன்றுமில்லை" சொல்லி முடிச்சிகிட்டார். நம்மாளுங்க இப்படி போட்டு குழப்பிகிறாங்க. இதே ஸ்டீபன் ஹாக்கிங்க்ஸ் கிட்ட போய் பெரு வெடிப்பு நடந்ததுன்னு சொல்றீங்களே அதுக்கு முன்னாடி என்னாங்க இருந்துச்சுன்னு கேளுங்களேன், கம்பியூட்டர்ல நம்ம மூஞ்சி மேல குத்துறதுக்கு ஒரு கமாண்டை டைப் பண்ணுவாரு. ஐன்ஸ்டீன் ஒரு வார்த்தை சொல்வாரு, ஆயிரம் சோதனை முடிவுகள் நீங்கள் கண்டுபிடிச்ச அறிவியல் விதிப் படியே வந்தாலும், அந்த விதி உண்மை என்பதற்கு நிரூபணம் அல்ல, ஆனால் ஒரு பரிசோதனை முடிவு எதிராக வந்தாலும் உங்கள் அறிவியல் விதி தூக்கியடிக்கப் படும்னு. விஞ்ஞானிங்க எல்லாம் தெரிஞ்ச ஞானிகள் அல்ல, இன்னொருத்தர் வந்து தப்புன்னு சொல்ற வரைக்கும் ஓடிக்கிட்டு இருக்குமாறு ஒரு அறிவியல் கோட்பாட்டை உண்டு பண்ணுபவர்கள். இவங்க கண்டுபிடிப்பால நாசம்தான் வந்ததே தவிர ஆக்கம் ஒன்றுமில்லை.

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "