நொரண்டு : ஆணாதிக்கம் என்றால் ?
நண்டு : ஆண்+ஆதிக்கம் =ஆணாதிக்கம் .
நொரண்டு :இது தெரியாதா . விளக்கம் கொடு .
நண்டு :ஆண் என்றால் விளக்கம் தர்ரேன் .
நொரண்டு : சரி .
நண்டு :தான் எத்தகைய உரிமைகளை சமுதாயத்தில் பெற்றுள்ளானோ அதன் அனைத்தையும் பெண்ணிற்கு தரும் பண்புள்ள மனிதன்
நொரண்டு :நல்ல ஆண் ?.
நண்டு :இல்லை இவர் தான் ஆண் .
நொரண்டு : அதான் சொல்ரேன் .இப்படிப்பட்டவர் நல்லவர் .
நண்டு :இதில் நல்லவர் ,கெட்டவர் என்ற பாகுபாடு இல்லை .
நொரண்டு : அப்படினா ?
நண்டு :தான் எத்தகைய உரிமைகளை சமுதாயத்தில் பெற்றுள்ளானோ அதன் அனைத்தையும் பெண்ணிற்கு தரும் பண்புள்ள மனிதன் ஆணாவான் .அவ்வளவே .
நொரண்டு :அப்ப ஆணாதிக்கமுனு ஒன்னு இல்லையா ? .
நண்டு : (:
நொரண்டு :திருவள்ளுவரை ஆணாதிக்கவாதினு சொல்ராங்களே ?.
நண்டு :எதை வைத்து ?
நொரண்டு :சொல்றாங்க ?
நண்டு : ஏதாவது ?
நொரண்டு :
''தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்பு ம் மழை.''
இந்த குறளை வைத்து சென்னதா ஞாபகம் .
நண்டு : ஓ . அப்படியா ?
நொரண்டு : ஆமாம் .
நண்டு : அப்படி சொல்ரவங்க கிட்ட நீ ஒன்னு கேள் .
நொரண்டு : என்னானு ?
நண்டு : நீங்க சமுதாயத்தில அனுபவித்துவரும் அனைத்து உரிமைகளையும் சக பெண்ணிற்கு தந்துவரும் பண்புள்ள மனிதரா என்று ?
நொரண்டு : ம் .
நண்டு : அதற்கு அவர் ஆம் என்றால் திருமணமானவரா என்று கேள் .
நொரண்டு :ம் .
நண்டு : அதற்கும் ஆம் என்றால் அப்ப நீங்க எப்படிப்பட்டவர் ? 'கொழுநன்' தானே எனக்கேள் .
நொரண்டு : 'கொழுநன்' னா என்ன அர்த்தம் ?.
நண்டு :தான் எத்தகைய உரிமைகளை சமுதாயத்தில் பெற்றுள்ளானோ அதன் அனைத்தையும் தனது துணைக்குத்தரும் பண்புள்ள மனிதன் 'கொழுநன் ' ஆவான் .
நொரண்டு :அதெப்படி ஆணாயிருந்து கொழுநனாகமல் இருப்பார்களா ?
நண்டு :பலர் இப்படித்தான் பேச்சுக்கு மனிதனாக பேசுவார்கள் .ஆனால் ,நிஜத்தில் அப்படியில்லை என்பதால்.
நொரண்டு :ஆமாம்,ஆமாம் .உண்மைதான் .
நண்டு : 'கொழுநன்' தான் எனில் அவரிடம் மேற்கூறிய குறளுக்கு விளக்கம் :
''தெய்வம் என்ற ஒன்றை போற்றது ,தனது 'கொழுநன்' போற்ற இருப்பவள் இல்லத்தில்
பெய் என்றவுடன் மழைபொழிந்தால் எவ்வளவு மகிழ்ச்சி உண்டாகுமோ
அவ்வளவு மகிழ்ச்சி இருக்கும் .'' எனச்சொல் .
நொரண்டு :மழை புரியல ...
நண்டு :கடும் கோடை மழைவந்தா நல்லாயிருக்கும்னூ நினைக்கிற .அப்ப உடனே மழை வந்தா உனக்கு எப்படி இருக்கும் ?
நொரண்டு : அப்படி நடந்தா ஆனந்த தாண்டவம் ஆடுவேன் . பக்கத்திருப்பவர்களை மகிழ்வுடன் ஆராதிப்பேன் . அந்த இன்பத்திற்கு ஈடு எங்காவது இருக்க முடியுமா ? ஐயோ .விவரிக்கமுடியாத ஒருவகையான ...என்ன சொல்லதுனே ... அப்படி ...
நண்டு :...அப்படித்தான் கொழுநனை பெற்ற இல்லத்தில் மகிழ்வான வாழ்வு இருக்கும் என்கிறார் வள்ளுவர் .
.
.
வள்ளுவர் அறியப்படவேண்டிய உண்மைகள் ... தொடரும் ...
. Download As PDF
Tweet |
|
14 கருத்துகள் :
அருமையான விளக்கம்
நல்ல விளக்கத்தோட உங்க குசும்பு நல்லாவேயிருக்கு !
அன்பின் நண்டு
புதிய விளக்கம் - ஏற்கத்தக்கது தான் - நல்வாழ்த்துகள் நண்டு
நட்புடன் சீனா
பகிர்வுக்கு நன்றி உங்கள் நோரண்டு உடன்
பகிர்வுக்கு நன்றி
குசும்பு....
நல்ல விளக்கம்தான்.
கேள்வி பதில்கள் அருமை.
சரியான தெளிவுரை .
Nice Nandu.
அவர்களிடமிருந்து உரிமையை எடுபதற்கு நாம் யார்? அதை குடுபதற்கு நாம் யார்? அது அவர்களுட்யைதுத்னே? என்னக்கு புரியவில்லை அண்ணே!!!நாம் செய்வது சரியா??
பட்டையை கிளப்பும் பகிர்வு நண்பா வாழ்த்துக்கள்.
அப்போ திருவள்ளுவர் உட்பட அனைவருமே ஆணாதிக்கவாதிகள் தான் இல்லையா?
தங்களின்
வருகைக்கும் ,பின்னூட்டத்திற்கும்
மிக்க மகிழ்ச்சி
புன்னகை தேசம். @
ஹேமா @
cheena (சீனா) @
ரோகிணிசிவா @
T.V.ராதாகிருஷ்ணன் @
கே.ஆர்.பி.செந்தில் @
வானம்பாடிகள் @
அம்பிகா @
பனித்துளி சங்கர் @
velusamymohan @
சுடர்வண்ணன் @
சசிகுமார் @
வால்பையன்
அவர்களே
மிக்க நன்றி .
கருத்துரையிடுக
" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "