செவ்வாய், 21 செப்டம்பர், 2010

ரோஜா வனம்



வான் தொடும் உயரத்தில்
வளைத்து நெளித்து
அழகாக
கட்டப்பட்டது

அக் கோட்டை

வருடங்கள் பத்து ஆனதாம்
வலுவாக கட்ட

அக் கோட்டைக்கு

வலுவினை சோதித்த
வடிவனும் 
வலுவின் காலம்
ஆயிரம் என்றானாம்

"ரோஜா வனம்" என பெயரிட்டு


சிறு அழகிய
செடி ஒன்று
வாழ முளைத்தது
அதன் மீது
சுதந்திரமாய்

வருத்தப்பட்டது நீரின்றி

இறப்பைக் கண்டு பயந்த அது
வலுவிழந்த வேர் கொண்டு
இறங்கி வந்தது
மேலிருந்து
நீர் குடிக்க

மெது மெதுவாய்

நீரை
இறங்கி ருசிப்பதற்குள்
வேரின்
வேறின் வீரியத்தால்
இடிந்து போனதாம்
அக்கோட்டை

ஒரு நூறில்






.






( வேறின் - வேறு ஒன்றின்  )


.
Download As PDF

14 கருத்துகள் :

அருண் பிரசாத் சொன்னது…

nice

ரோகிணிசிவா சொன்னது…

அழகு

சசிகுமார் சொன்னது…

உங்கள் படைப்பு அருமை

பெயரில்லா சொன்னது…

பெரும் சாம்ராஜியங்களே சிறு நிகழ்வினால் சிதறியிருக்கிறதே என்னும் பொருளில் புரிந்து கொண்டேன் இக்கவிதையை.. சரிதானா?

Menaga Sathia சொன்னது…

nice kavithai!!

Unknown சொன்னது…

கோட்டை அதிகாரம் ... செடி சுதந்திரம் ...

சிறு வேறென்றாலும் அதிகாரத்தை அது அசைக்கவே செய்யும் ....

ceekee சொன்னது…

Reminds me of Thamizh Eezham
and the resurgence of Thamizhs in the present and future ...

I envy you -
not only your skill in expression
but also
your ability to deftly catch and present highly suggestive photos and paintings to suit your literary work so aptly ...

பவள சங்கரி சொன்னது…

ரோஜா வனம் அருமை........வரிக்கு வரி அருமை....வாழ்த்துக்கள்.

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

Nice

அம்பிகா சொன்னது…

அருமை.
அருமையான கருத்தும்.

Unknown சொன்னது…

///வேரின்
வேறின் வீரியத்தால்
இடிந்து போனதாம்
அக்கோட்டை//மிக அழகு வீரியத்துடன்.

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

super

ஹேமா சொன்னது…

வேறு...வேரின் அவதி ரோஜாவனத்தில் அழகாய் !

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

தங்களின்
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்

மிக்க மகிழ்ச்சி


அருண் பிரசாத் @

ரோகிணிசிவா @

சசிகுமார் @

Balaji saravana @

Mrs.Menagasathia @

கே.ஆர்.பி.செந்தில் @

ceekee @

நித்திலம்-சிப்பிக்குள் முத்து @

T.V.ராதாகிருஷ்ணன் @

அம்பிகா @

நந்தா ஆண்டாள்மகன் @

Starjan ( ஸ்டார்ஜன் ) @

ஹேமா

அவர்களே

மிக்க நன்றி .

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "