புதன், 22 செப்டம்பர், 2010

தற்கொலை செய்து கொண்டுதான் பேசுகிறேன் .




ஒரு வழக்கு விசயமாக கோபி கோர்ட்டிற்கு இன்று சென்றேன் .
வழி நெடுக உணவுமக்கள் உழவு பணி செய்வது கண்டு மனம் அதில் லயித்தது .
அதிலும் பரம்படித்த நிலத்திலிருந்து வந்த அந்த மண்ணின் வாசனை உள்ளத்தையும் நெஞ்சத்தையும் அள்ளிச்சென்றது .

நான் சின்னப்பையனா இருந்தப்ப எங்க வெங்கிடு மாமா என்ன அவர் முதுகில் தூக்கிவச்சுக்கிட்டே  பாட்டுப்பாடிட்டு ஏர் ஒட்டுவாரு .அவ்வளவு பாசம் ஏன் மேல .அது ரொம்ப சந்தோசமா இருக்கும் . இப்ப அவருக்கு வயசாச்சு ,அவரால் விவசாயம் செய்யவும் முடியில அதோட விவசாயம் செய்யரதுக்கு ஆட்களும் வரமாட்டேங்கராங்க  .ம்...என்ன செய்ய .

எனக்கு விபரம் தெரிஞ்சப்பறம் , எங்க மாமா பையன் பழனிச்சாமி ஏரோட்ட கத்திக்கொடுத்தான் .
ஏரோட்டறது எனக்கு மிகவும் பிடித்தமானத ஒன்று . சால் பாத்து ஏரோட்டும் இன்பம் எப்படி யிருக்கும் தெரியுமா பட்டம் விடும்பொழுது மனது மிதக்குமே அதுபோல அவ்வளவு லேசா இருக்கும் .சூரியன் இருப்பதே அறியாத  கணங்கள் அவை .

பரம்படிக்கும் பொழுது அதில் உருண்ண்டு பெறண்ண்ட  இன்பத்தைச்சொல்ல ஓராயிரம் வார்த்தைகள் வேண்டும் .

விவசாயம் இயந்திரம் வயப்பட  வயப்பட பல தமிழ்  சொற்கள் காணாமல் போய்க்கொண்டிருப்பதை  நினைத்தபொழுது  எனக்குள் ஞபகத்திற்கு வந்த சிலவற்றை நினைத்துப்பார்த்தேன் .

அவைகள் ...

கருக்குத்தடி - ஏர் பூட்டுதலில்  கலப்பையை தவிர்த்து இருக்கும்  பிற பகுதி  .நீளமான கட்டை .

கலப்பை - உழ பயன்படுத்தப்படும் கருவி .

மோழி -ஏரின் கைப்பிடி பகுதி .

நுகத்தடி -மாட்டு வண்டி ,ஏர் பூட்டுதலின் போது மாடுகளை கட்ட பயன்படும் கட்டை .

தலைக்கயிறு - தலையைச்சுற்றி கொம்பில் கட்டும் கயிறு .

முளைக்குச்சி - மாடு,ஆடு அகியவற்றை கட்டுத்தறியில் கட்ட பயன்படும் குச்சி .பூமியில் புதைக்கப்பட்டிருக்கும் .

அணப்பு -ஒரு கட்டுவாய் ,நாலு பக்கம் வரப்பு இருப்பது .

பட்டி - ஆடு,மாடுகள் அடைத்து வைக்கும் இடம் .

மயிளை காளை -மயிலை, வெள்ளை மாடு சற்று கருமை கலந்ததையும் அழைப்பர் .

காரி  காளை-கருப்பு மாடு .

செவளை -சிவலை ,சிவப்பு மாடு .

கிடாரி - கெடாரி,கடாரி ,பெண் மாடு .

பிறவை - பெண் ஆடு .

கிடா -ஆண் ஆடு .

காளை -7 வயது ஆண் மாடு .

எருது  -2 வயது ஆண் மாடு .

வெடை -பெண் கோழி .

கொடாப்பு - கோழி அடைக்கும் கூண்டு .

குடுசு - ஆடு அடைத்து வைக்கப்பட்டு அதிலே இடையர்களும் தங்கும்  வசதிகொண்ட இடம் .

பட்டறை -போர் வைக்கும் இடம் .அதன் அடிப்பாகம் .

குதிர் - தானியங்கள் சேமிப்பு  கலம் .

தாலி -கழுநீர் பானை .

பரம்பு அடித்தல்  -உழுத நிலத்தை விவசாயம் செய்ய பக்குவப்படுத்துதல் .

இவைகளை   நாம்  இனி ...


திரும்பும் பொழுதும் அதே காட்சிகள்  மனதில் பல யோசனைகளுடன் கவுந்தப்பாடியை நெருங்கிய பொழுது வேகமாக மிகவும் லாவகமாக என்னை ஒரு இளைஞர் முந்தி சென்றார் . ஏன்  இப்படி  வண்டி ஓட்றாங்க பசங்க என எண்ணிக்கொண்டே அவரை உத்துப்பாத்தேன் . என்ன ஆச்சரியம் அது எனது இனிய நண்பர்  ''உன்னதம்'' இதழ் ஆசிரியர் ''கௌதம சித்தார்த்தன்''  .மிகவும் மகிழ்ந்து போனேன் .
நாங்க எப்ப சந்தித்துக்கொண்டாலும் எதை பேசுகின்றோமோ  இல்லையோ ,கட்டாயம் இலக்கியம் பற்றி பேசுவோம் .இருவருக்கும் அவ்வளவு  இது பற்றி ஒரு சிறு பொறுப்பு  அவ்வளவே . நாங்கள் பேசியதினின்று சிறு துளிகள் .

தமிழ் இலக்கியம்  சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் மிகப்பெரிய வீச்சை நோக்கிய ஒரு பயணத்தை மேற்கொண்டது . ஆனால் ,அது அப்படியே தவிடுபொடியாகி இன்று ஒன்றும் இல்லாத நிலையில் உள்ளது .

தமிழ் இலக்கியவாதிகள்  கிரிமினல்கள்  என அவர் குறிப்பிட்டார் .

நான் சொன்னேன்  ,நீங்கள் இப்படி கூறிக்கொள்வதன் மூலம்  உங்ளின் அயோக்கியத்தனத்திலிருந்து தப்பிக்க  ஒரு பாதுகாப்பான ஏற்பாட்டை ஏற்படுத்திக்கொண்டு ,அதனை பயன்படுத்தி பெண்களை தவறாக உங்களின் இலக்கிய அறிவின் தன்மையால் பயன்படுத்திக்கொள்கின்றீர்கள் .நான் அயோக்கியன் ,என்னுடன் பழகினால் அயோக்கியத்தனமாகவே நடந்துகொள்வேன் என்ற ஒரு அனுமானத்தை இதன் மூலம் ஏற்படுத்தி நீங்கள் மோற்கொண்ட  பெண்களுக்கு எதிரான குற்றத்தினின்று தப்பிக்கொண்டு வருகின்றீர்கள் என்றேன் .
நீங்கள் எதிராக பேசுகின்றீர்கள் என்றார் .
இல்லை,இல்லை ,நீங்கள் எதிராகப்போனதால் அப்படி தோன்றுகின்றது என்றேன் .
ஏன் இன்னும் ''இனப்பெருக்க  இன்பர்களாக '' இருக்கின்றீர்கள் என்றேன் .
இலக்கியவாதி அல்லவா ஆச்சரியத்துடன் என்ன சொன்னீர்கள் என்றார் .
''இனப்பெருக்க  இன்பர்களாக ''  என்றேன் .
யோசித்தார் .

பின் தமிழில் தற்பொழுது இலக்கியம் உருவாகாமல் இருக்கிறது என்றார் .

நான் சென்னேன் ஆத்மாநாம்  எவ்வளவே முயற்சிகள் இலக்கியத்தில் மேற்கொண்டும் முடியாமல் இந்த சமுதாயம் திருந்தவே திருந்தாது என முடிவெடுத்து மனம் நொந்து கிணத்தில்விழுந்து தற்கொலை செய்துகொண்டான்  .அது போலத்தான் இன்றைய சுழலில் இலக்கியம் பற்றி நான் தற்கொலை செய்து கொண்டுதான் பேசுறேன் என்றேன்  .


அவர் சொன்னார் ,நண்பா, நானும்  இலக்கியத்தில் தற்கொலை செய்து தான் வாழ்கின்றேன் .
என்ன செய்ய ,நான் இப்பொழுது சராசரி மனிதனாகிவிட்டேன் .மன்னிக்கவும் ,என்னால் முடியவில்லை  என்றார் .

உண்மையில் அதற்கான ஒப்புதலான எனது நண்பனின் பதில் என்னை மிகவும் யோசிக்க வைத்தது .

எப்பவும் சித்தார்த்தன் இயல்பாக  உண்மையை பேசக்கூடியவர் .அவருடன் நெருங்கி பலகிய சிலருக்கே  இது தெரியும் .

திடிரென காஞ்சிக்கோயிலிலிருந்து ஒரு கட்சிக்காரர்  அவசரமாக அழைக்க விடைபெற்று விரைந்தேன் .

''இனப்பெருக்க  இன்பர்கள்''   இந்த வார்த்தை நான் முதல்முதல் பயன்படுத்தியது . இது குறித்து மீண்டும் மீண்டும்  யோசித்தேன் .

எனக்கு கிடைத்த பதிலை உங்களிடம் பகிர்ந்து கொள்கின்றேன் .

இனப்பெருக்க  இன்பம் கொண்ட இத்தகைய நபர்கள் மிகவும் எச்சரிக்கையாக தங்களின் நகர்வை எதிர் இனத்தின் மீது பிரயோகப்படுத்துவர் .இவ்வாறு  பெண்கள் மீதான வக்கிரம ....













. Download As PDF

15 கருத்துகள் :

Unknown சொன்னது…

தமிழ் விளக்கங்கள் எனக்கு பிடித்திருக்கிறது.. மற்றபடி தொடரில் தொடர்கிறேன்

Unknown சொன்னது…

///பரம்படிக்கும் பொழுது அதில் உருண்ண்டு பெறண்ண்ட இன்பத்தைச்சொல்ல ஓராயிரம் வார்த்தைகள் வேண்டும் .///அழகான அந்த நாட்கள் ஏன் வாழ்வில் இனி வருமா என ஏங்குகிறேன்?
////அவர் சொன்னார் ,நண்பா, நானும் இலக்கியத்தில் தற்கொலை செய்து தான் வாழ்கின்றேன் .
என்ன செய்ய ,நான் இப்பொழுது சராசரி மனிதனாகிவிட்டேன் .மன்னிக்கவும் ,என்னால் முடியவில்லை என்றார் ///
வாழும் வாழ்கையில் நடைபிணமாக வாழ்பவர்கள் பலர் என்னைபோல!!
////'இனப்பெருக்க இன்பர்கள்'' இந்த வார்த்தை நான் முதல்முதல் பயன்படுத்தியது . இது குறித்து மீண்டும் மீண்டும் யோசித்தேன் .///
நானும் இந்த வார்த்தை பிரயோகத்தை யோசிக்கிறேன் !!ரசிக்கிறேன் !!

ரோகிணிசிவா சொன்னது…

nalla pagirvu , niraiya tamil varthaikal arinthukondaen , nandri

Chitra சொன்னது…

நல்லா எழுதுறீங்க..... தொடர்ந்து அசத்துங்க.

ஹேமா சொன்னது…

கொடாப்பு,செவளை...மலையகத் தமிழர்கள் நடுவில் பழகி நானும் இந்தச் சொற்கள் பாவித்துக்கொள்வேன்.

ப.கந்தசாமி சொன்னது…

"அந்த நாளும் வந்திடாதோ" என்று பழைய பாட்டு ஒன்று உண்டு. அது ஞாபகத்திற்கு வருகிறது.

நேசமித்ரன் சொன்னது…

நீ சொல்வது முற்றிலும் தவறு என்றாலும்,
அதில் எனக்கு உடன்பாடில்லாவிட்டாலும் ,
அதை சொல்லும் உனது கருத்துரிமையை காக்க
நான் என் உயிருள்ளவரை போராடுவேன் //

வழிமொழிகிறேன்

ஆட்டையாம்பட்டி அம்பி சொன்னது…

நன்றாக இருக்கு. நீங்க திருநெல்வேலியா?

வாழ்த்துக்கள்...
நன்றி! உங்கள் விமர்சனத்திற்கு....

நான் இந்தப் படத்தை பார்ப்பேன்....


என்றும் எப்போதும் அன்புடன்,

ஆட்டையாம்பட்டி அம்பட்டன் அல்லது அமெரிக்கா அம்பட்டன்!

அம்பிகா சொன்னது…

பல தமிழ்சொற்கள் கேள்விப்பட்டதெனினும், இவை வழக்கொழிந்து கொண்டுதானிருக்கின்றன. நல்ல பகிர்வு.

மதன்செந்தில் சொன்னது…

மிக நன்று தோழர்,
ஏர் உழாமல் வந்து கீபோர்டை உழும் எனக்கு கழப்பையின் பாகங்களே, இனப்பெருக்க இன்பத்தை தந்தது..

www.narumugai.com

எண்ணங்கள் 13189034291840215795 சொன்னது…

இனப்பெருக்க இன்பம் கொண்ட இத்தகைய நபர்கள் மிகவும் எச்சரிக்கையாக தங்களின் நகர்வை எதிர் இனத்தின் மீது பிரயோகப்படுத்துவர் .இவ்வாறு பெண்கள் மீதான வக்கிரம ....

----------------

என்ன ஒரு வரிகள்...!!!!

ஆனால் பெண்கள் இன்று புரிந்துகொண்டு வருகின்றனர்..

சசிகுமார் சொன்னது…

வித்தியாசமான பகிர்வு நண்பா, சில பெயர்களுக்கு அர்த்தம் இன்று தான் தெரிந்தது.

ஆ.ஞானசேகரன் சொன்னது…

விளக்கம் அழகு

cheena (சீனா) சொன்னது…

அன்பின் நண்டு வழக்கத்திற்கு மாறாக நீண்டதொரு இடுகை நன்று நன்று - பல தமிழ்ச் சொற்கள் - அறிந்து கொண்டேன் - இனப்பெருக்க இன்பர்கள் - புதிய சொல்லாட்சி - ம்ம்ம்ம் வாழ்க நல்வாழ்த்துகள் நண்டு நட்புடன் சீனா

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

தங்களின்
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்

மிக்க மகிழ்ச்சி


கே.ஆர்.பி.செந்தில் @

நந்தா ஆண்டாள்மகன் @

ரோகிணிசிவா @

Chitra @

ஹேமா @

T.V.ராதாகிருஷ்ணன் @

DrPKandaswamyPhD @

நேசமித்ரன் @
ஆட்டையாம்பட்டி அம்பி @

அம்பிகா @

மதன்செந்தில் @

Journey & Thought @

சசிகுமார் @

ஆ.ஞானசேகரன் @

cheena (சீனா)

அவர்களே

மிக்க நன்றி .

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "