நொரண்டு : வணக்கம் நண்டு .
நண்டு : வணக்கம் ,என்ன விசேசம் ?
நொரண்டு : எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் ?
நண்டு : உண்மை தெரிஞ்சாகனும்னா ,இப்ப பொய்களை தெரிஞ்சு வச்சிருக்கைனு பொருள் .அப்படித்தானே .
நொரண்டு : கொழப்பாதே
நண்டு : சரி ,விசயத்துக்கு வா .
நொரண்டு : இராமர் பிறந்த இடம் எதுனு தெரியுமா ?
நண்டு : இது வந்து இராமர் பிறக்கவில்லை ,இராமர் பிறந்தார் என்பது சரியா என்று கேக்கரதுக்கு பதிலா கேக்கர அப்படித்தானே .
நொரண்டு : அது ....வந்து ...
நண்டு : சரி விடு ,முதலில் இராமர் உனக்கு எப்படி அறிமுகமானார் .
நொரண்டு : ம்..வந்து ...முதல சாமியா வீட்ல ,அப்புறம் பள்ளியில் பாடமா ....அப்புறம் ...
நண்டு : அது உன் தனிப்பட்டவனைப்பொறுத்து .ஆனால்,சமுதாயத்தில் எப்படி அறிமுகனார் ,ஆகியுள்ளார் என தெரியுமா .
நொரண்டு : நீ கேக்கரது ஓன்னும் புரிலையே .
நண்டு : அங்க தான் சிக்கலே ஆரம்பம் .
நொரண்டு : என்ன சிக்கல் ?
நண்டு : இராமரை இங்கு சரியா யோசிக்கல .
நொரண்டு : எப்படி ?
நண்டு : முதலில் நாம் நம்முடைய புரணங்கள் மற்றும் இதிகாசங்களை சரியாகப் புரிந்துகொள்ளாமல் இயங்குகின்றோம் .நாம் இன்றைய சூழலில் இதிகாசங்கள் ,இலக்கியங்கள் மற்றும் கலைகள் அனைத்தையும் மறுஆய்வு செய்யவேண்டியது அவசியமாக உள்ளது .
நொரண்டு : அப்படினா ?
நண்டு : அப்படினா ,இன்றுள்ள கலை ,பண்பாடு,கலாச்சாரம்,இலக்கியம் போன்றவைகளின் நகர்வுகளை ஆய வேண்டியுள்ளது .
நொரண்டு : புரியல
நண்டு : முதலில் நாம் நமது இதிகாசங்கள் ,இலக்கியங்கள் மற்றும் கலைகள் இவற்றிற்கும் மேற்கத்திய இதிகாசங்கள் ,இலக்கியங்கள் மற்றும் கலைகள் இவற்றிற்குமான வித்தியாசத்தை அறிந்துகொள்ளவேண்டும் .
நொரண்டு : அப்படினா ?
நண்டு : மேற்கத்திய இதிகாசங்கள் ,இலக்கியங்கள் மற்றும் கலைகள் இவற்றின் உள்ளாக்கங்கள் ,உட்கூறுகள் வேறு .நமது இதிகாசங்கள் ,இலக்கியங்கள் மற்றும் கலைகள் இவற்றின் உள்ளாக்கங்கள் ,உட்கூறுகள் வேறு .
நொரண்டு : புரியர மாதிரி சொல்லு .
நண்டு : மேற்கத்திய இதிகாசங்கள் ,இலக்கியங்கள் மற்றும் கலைகள் ஆகியவை கற்பனையில் உருவாகி அதில் உண்மை ஒளிந்திருக்கும் .
நொரண்டு : அப்ப நம்மது ?
நண்டு : நமது இதிகாசங்கள் ,இலக்கியங்கள் மற்றும் கலைகள் ஆகியவை உண்மையில் உருவாகி கற்பனை மிகுந்திருக்கும் .
நொரண்டு : அப்படினா
நண்டு : நம்மது உண்மைக்குப் பின்னால் கற்பனை இருக்கும் .அவர்களது கற்பனைக்குப் பின்னால் உண்மையிருக்கும் .இது ஒரு யுத்தி .
நொரண்டு : ஓ..
நண்டு : ஆனால் ,இங்கு கற்பனை மிகைப்படுத்தப்பட்டிருக்கும் .அங்கு சம அளவில் இருக்கும் .
நொரண்டு : அப்படியா ..
நண்டு : ஆமாம் ,ஒரு சின்ன உதாரணம் .இராமனுக்கு ஒரே மனைவி ,தசரதனுக்கு பல மனைவிகள் .ஏன் இந்த முரண். 1000 மனைவிகள் என கூறுவேறும் உளர் . நன்றாக சிந்தித்தால் .இராமனின் குணத்தை மிகவும் சிறப்பிக்க கூறப்பட்ட மிகையே அது .
நொரண்டு : ஓ ...
நண்டு : மற்ற ஒன்றை சொல்கிறேன் கேள்.சீதையை இராவணன் கொண்டுசென்றதை பலர் பல மாதிரி எழுதியுள்ளனர் .இதற்குக்காரணம் அவர்அவர்கள் தங்களுக்குள் கற்பனையில் மிகுந்தவர்கள் என காண்பிக்கவே தவிர வேறு இல்லை .
நொரண்டு : ஓ...
நண்டு : இது போலத்தான் இராவணனுக்கு 1000 தலைகளும் .
நொரண்டு : அப்ப அப்படியில்லையா ?
நண்டு : என்ன முட்டாள் தனமான கேள்வி ? அப்படி இருக்க முடியுமா ? அது சாத்தியமா ?
நொரண்டு : ஆமாம் உண்மை தான் .
நண்டு : இதுவும் இராவணனின் குணத்தை கற்பனையில் மிகுதியாகக்காட்டவே தவிர வேறு ஒன்றும் இல்லை .
நொரண்டு : சரி அத விடு ,விசயத்துக்கு வா .
நண்டு : அதத்தான் சொல்ல வரேன் .
நொரண்டு : எப்படி ?
நண்டு : முதல்ல உனக்கு ஜதகம் இருக்கா ?
நொரண்டு : ஏன் கேக்கிர
நண்டு : சொல்லு சொல்லரேன் .
நொரண்டு : எங்க அப்பிச்சி நான் பிறந்தப்ப அவரின் ஆஸ்தான ஜோசியரிடம் போய் எழுதி வாங்கி வந்த பழைய ஜதகம் ,அந்த ஜதகம்நோட்டு கிழியர மாதிரி ஆனதால் கம்யூட்டர் ஜாதகம் வேற போட்டு வச்சேன் .இங்க பாரு ,பிறந்த ஊர் ,நாள் ,டயம் மட்டும் தான் சொன்னேன் .என்ன ஒரு ஆச்சரியம் பழைய ஜாதகத்த விட துல்லியமா கணித்து கையில 10 தே நிமிசத்தில தன்திடுச்சு .உலகம் எவ்வளவு பாஸ்டா போகுது பாரு . அங்க இருக்கிற ஜோசியர் என் ஜாதகம் இராமர் ஜாதகம் மாதிரினு சென்னார் .அவர் கிட்ட இராமர் ஜாதகம் ,கிருஷ்ணர் ஜாதகம் எல்லாம் இருக்கு பாத்தேன் .
நண்டு : ஓ ,அப்படியா ...
நொரண்டு : என்ன தெரியாத மாதிரி கேக்கிர
நண்டு : அப்ப பிறந்த ஊர் ,வருசம், நேரம் தந்தா ஒருத்தரின் ஜாதகம் கிடைத்து விடும் .
நொரண்டு : ம்...
நண்டு : அப்ப ஒருத்தரின் ஜாதகத்தை வைத்து அவரின் பிறந்த வருசம் ,ஊர் ,நேரம் ஆகியவற்றை கணித்துவிடலாம் அல்லவா .
நொரண்டு : ஆமாம்.ஆமாம் கட்டாயம் ,கண்டிப்பாக . அது சாத்தியமாகும் பொழுது இதுவும் சாத்தியம் ஆகும் தானே .அது தானே உண்மை .
நண்டு : ஒரு ஜாதகத்தைப்பார்த்து அவரின் பிறப்பிடத்தை அறியமுடியும் தானே .
நொரண்டு : ஓ..முடியுமே ,ஏன் முடியாது .
நண்டு : அப்படினா நீ முதலில் இராமரின் ஜாதகத்த வச்சிருக்கர அந்த ஜோசியர் கிட்ட போய் அத வச்சு இராமரின் பிறப்பிடத்தை கண்டுபிடி .உனக்கு புண்ணியமா போகும் .
நொரண்டு : ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! !
நண்டு : (: (: (: (: (: (: (: (: (: (: (: (: (: (:
.
Download As PDF