தலையிலிருந்து மூளை ஒழுகிவிட்ட உணர்வுடன்
படுக்கையிலிருந்து எழுந்த சிவா பதற்றத்துடன்
அவசர அவசரமாக தனது கைக்கடிகாரத்தில்
10 p.m. என 4 a.m என்றிருந்ததை மாற்றம் செய்தான் .
இருக்காதாபின்னே 10 p.m . க்கு டான்னு எழுந்து விடும்
சிவாவை யார் ஏமாற்ற முடியும் .
ஏன் இவ்வளவு fast -ஆ ஓடுகிறது என்று நினைத்துக்கொண்டே
ஹாலுக்கு வந்தவனை ஹாலில் இருந்த கடிகாரமும் 4 a.m. என காட்ட
லேசா தலையை சுத்த அதனுடனே
ஹாலில் இருந்த கடிகாரத்தை சரிசெய்து கொண்டிருந்தவனை
என்னப்பா , என்ன ஆச்சு? எனக்கேட்டவரிடம்
ஒன்னுமில்லை ,ஏன் இவ்வளவு fast -ஆ எல்லாம் ஓடுது .
சரியா வீட்டில் யாரும் எதையும் கவனிக்கறதே இல்லை .
எல்லாத்தையும் நான் தான் பாக்கனூமா ?
என்னமோ ..... போங்க....
இப்போ 10 p.m. தான் ஆகுது ..ஷும் ..என்றான் கண்கள் சிவந்தபடி.
தனது கைக்கடிகாரம் 4 a.m . என காட்டியது கண்டு
சிலிர்த்து நின்றார் சுப்பிரமணி.
- - - - -
டாக்டர் ஜீவானந்தம்
தலைமை இயக்குனர்,
எஸ்ரா மனித அகழ்வாராய்ச்சி மையம் ,
ஈரொடு .
மதிப்பிற்குரிய ஜனாதிபதி அவர்களுக்கு ,
-தங்களின் மேலான பார்வைக்கும் ,
துரித நடவடிக்கை வேண்டியும் அனுப்பும் வருத்தத்திற்குரிய செய்தி -
ஐயா,
தற்பொழுது கணினித்துறையில் பணிபுரிபவர்களுக்கு ''சென்ரல் நர்வசிஸ் மெமரி எராஸ் '' ( CENAME ) எனும் நோய் வந்து கொண்டிருக்கின்றன .நோய் வருவதற்கு காரணம் , கணினித்துறையில் பணிபுரிபவருக்கு முறையான ஓய்வு அளிக்கப்படா நிலையில் , மிகக்குவிந்த செயல்பாட்டுக்கட்டளைகளுக்குட்பட்டு வேலைப்பளுவுடன் , மன அழுத்தத்துடன், நிரந்திரத்தன்மையற்ற பீதியுடன் ,இரவு பகல் என பாராமல் பணி் செய்யும் நிலைக்கு உட்படுத்தப்படுவதால் ,அவர்களின்
மூளையின் காலக்கணிப்பு நரம்பு தனது பிரிக்கப்பட்ட நேரங்களை
அழித்து,அழித்து முற்றிலும் பாதித்து முன்பின் முரண்பட்ட நினைவினிற்கு
அவர்களை கொண்டு சென்று விடுவதே .இதனை நோய் முற்றிய நிலையிலே அறியப்படக்கூடியதாக இருப்பதால் . நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் பல இன்னல்களுக்கு ஆளாவதோடு, இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப
பல வருடங்கள் ஆகலாம் அல்லது திரும்பாமலும் போகலாம் .நோய் மிகவும் முற்றிய நபர்களின் செயல்பாடுகள் வரையறுக்க முடியாதது .எனவே, கணினித்துறையில் பணிபுரிபவர்களுக்கு முறையான ஓய்வுடன்,வேலைப்பளுவற்ற ,உத்திரவாத்த்துடன் கூடிய பணிப்பாதுகாப்பான நாடைமுறையை ஏற்படுத்திக் கொடுத்தால் மட்டுமே இதுபோன்ற நோய்கள் வருவதை தடுக்க முடியும் . அதனால் நோய் வராமல் பார்த்துக்கொள்வதே சாலச்சிறந்தது. இன்று கணினித்துறையில் தான் அனேக இளைய தலைமுறையினர் பணிபுரிகின்றனர்.
எனவே, தாங்கள் உடனடியாக இது குறித்து துரித நடவடிக்கை மேற்கொள்வதன்மூலம் இளைய தலைமுறையினர் பலரின் வாழ்க்கையை
ஒளியோற்றி வைப்பதோடு '' CENAME '' எனும் நோயின் கொடுரத்தினின்று பலரை காப்பாற்றியவராவீர் .
எவ்வளவுக்கு எவ்வளவு முடியுமை அவ்வளவுக்கு அவ்வளவு
துரித நடவடிக்கையை வேண்டுகிறேன் .
என
வருத்தத்துடன்
டாக்டர் ஜீவானந்தம்
25.09.2019 .
(ஈமெயில் )
- - - - - - -
ச. சுப்பிரமணி,
326 ,கச்சேரி வீதி,
ஈரோடு -1.
மாண்பமை சுகாதாரத்துறை அமைச்சர் ஐயா அவர்களுக்கு ,
- ''சோப்லீஸ்''மருந்தைபயன்படுத்த அனுமதிகோரும் விண்ணப்பம் .-
ஐயா ,
ஈரோடு -1,326 ,கச்சேரி வீதியில் குடியிருக்கும் ச. சுப்பிரமணி
வேண்டும் அனுமதிகோரும் விண்ணப்பம்
எனது மகன் சிவா ,வயது 24 ,கம்யூட்டர் இஞ்சினியர் ,
கடந்த 3 மாதங்களாக '' CENAME '' எனும் நோயின் கொடுரத்திற்கு ஆளாகி
எஸ்ரா மனித அகழ்வாராய்ச்சி மையத்தில் மிகவும் ஆபத்தான நிலையில்
உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறான் .அவனுக்கு உலகில் பயன்படுத்த தடைசெய்யப்பட்ட ''சோப்லீஸ்'' எனும் மருந்தை கொடுத்தால் ஒருவேலை அவன் பிழைத்துக்கொள்ள சாத்தியக்கூறுகள் 2% இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர் . ஆனால் ,அந்த மருந்தையும் ,அதைப்பயன்படுத்த அனுமதியையும் தரப்பினர்களே அரசிடமிருந்து பெற்றுத்தந்தால் மட்டுமே மருத்துவ நிர்வாகம் ''சோப்லீஸ்'' எனும் மருந்தை பயன்படுத்தும் என கூறிவிட்டனர் .எனவே, எனது மகனைக் காப்பாற்ற கடைசி முயற்சியாக எனக்கு இதைத்தவிர்த்து வேறு உபயம் எதுவும் தெரியவில்லை .இல்லாது போனால் அவன் இறப்பது 100% உறுதியாகிவிடும் .இம்மருந்தை என் மகனுக்கு மட்டுமே பயன்படுத்துவேன் , தவறாக வேறு எதற்குப் பயன்படுத்த மாட்டேன் என உறுதியும் கூறுகின்றேன் .
எனவே ,எனது மகனின் உடல்நிலை மிகவும் மோசமாகிக்கொண்டுவரும் இச்சூழலில் எனக்கு ''சோப்லீஸ்'' மருந்தையும் ,அதைப்பயன்படுத்த அனுமதியையும் பெற்றுத்தருமாறு மிகவும் பணிவுடன் தாங்களை வேண்டுகிறேன் .
இப்படிக்கு ,
உங்களின் அனுமதி வேண்டி நிற்கும் ,
ச. சுப்பிரமணி
இடம் : ஈரோடு ,
நாள் : 03.10.2019.
(பேக்ஸ் )
. Download As PDF
Tweet |
|
15 கருத்துகள் :
fiction?? -good try
இந்த மாதிரி எதாச்சும் வருமுங்க.
[[முறையான ஓய்வு அளிக்கப்படா நிலையில் , மிகக்குவிந்த செயல்பாட்டுக்கட்டளைகளுக்குட்பட்டு வேலைப்பளுவுடன் , மன அழுத்தத்துடன், நிரந்திரத்தன்மையற்ற பீதியுடன் ,இரவு பகல் என பாராமல் பணி் செய்யும் நிலைக்கு உட்படுத்தப்படுவதால் ,அவர்களின்
மூளையின் காலக்கணிப்பு நரம்பு தனது பிரிக்கப்பட்ட நேரங்களை
அழித்து,அழித்து முற்றிலும் பாதித்து முன்பின் முரண்பட்ட நினைவினிற்கு
அவர்களை கொண்டு சென்று விடுவதே]]
கவலைக்குறிய விஷயம்...
இளம் வயதிலேயே இப்ப இருதய நோய்களும்...
The various scenes depicted in the sci-fiction of Aldous Huxley proved to be reality in later years of scientific advancement. Likewise,to the discomfort and annoyance of Humanity, yours may also appear on the scene soon ...! The dangers could have been described in more frightening and gruesome details ...
The usage of English words like a.m, p.m could have have been averted. Only when there is no other option/choice should English words be used frugally, sparingly and minimally. It is encouraging to note that you have rightly notified the name of the medicine 'Sonablis' in Thamizh...!
The dangers of using the Net as merely a tool for self-promotion in unalloyed materialistic terms and for seeking purely selfish pleasures is real and imminent. The painting needs to be applauded too..
Good work. Carry on.
//நோய் வருவதற்கு காரணம் , கணினித்துறையில் பணிபுரிபவருக்கு முறையான ஓய்வு அளிக்கப்படா நிலையில் , மிகக்குவிந்த செயல்பாட்டுக்கட்டளைகளுக்குட்பட்டு வேலைப்பளுவுடன் , மன அழுத்தத்துடன், நிரந்திரத்தன்மையற்ற பீதியுடன் ,இரவு பகல் என பாராமல் பணி் செய்யும் நிலைக்கு உட்படுத்தப்படுவதால் ,அவர்களின்
மூளையின் காலக்கணிப்பு நரம்பு தனது பிரிக்கப்பட்ட நேரங்களை
அழித்து,அழித்து முற்றிலும் பாதித்து முன்பின் முரண்பட்ட நினைவினிற்கு
அவர்களை கொண்டு சென்று விடுவதே//
வருங்காலத்தில் இந்நிலை வருவதற்கான சாத்தியக்கூறுகள் நிறையவே உள்ளன.
அய்யா ஒரு வித்தியாசமனா கண்டு பிடிப்புதான். விரைவில் இந்த நோய் சில பேருக்கு வரும்.. வாழ்த்துக்கள் தோழரே
முன்னெச்சரிக்கை கட்டுரை ரொம்ப நல்லாருக்கு.. இனி வரும்காலத்தில் இப்படி ஆனாலும் ஆகிடும் போல..
கண்டிப்பாக அப்படி ஒரு நிலை வரத்தான் போகிறது.... நல்ல பதிவு
சார்,நல்ல கருத்து நிறைந்த பதிவு.வாழ்த்துக்கள்
ஏன் சார் இப்படி பயமுறுத்துகிறீர்கள்..........கண்டிப்பாக விழித்துக் கொள்ள வேண்டிய நேரம்தான். பகிர்வுக்கு நன்றிங்க.
விஞ்ஞான வளர்ச்சியை நன்மை எனபதா தீமை என்பதா !
புதுபுது வியாதிகள் வருது.. நீங்கள் சொல்கிறபடி இன்னும் ஒன்பது ஆண்டுகளில் இந்த வியாதி வந்தாலும் வரும் ...
ம்ம். கூடும். கூடவே செல்ஃபோனும்
கருத்து நிறைந்த பதிவு
Brainy.....
கருத்துரையிடுக
" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "