திங்கள், 4 அக்டோபர், 2010

காந்தி ஜெயந்தி விடுமுறையும் ,அரசுக்கு வேண்டுகோளும் .


சட்டத்தை மதித்து நடக்கவேண்டியது அனைவரின் தலையான கடமையாகும் .

எனினும் ,

தலைவர்களின் பிறந்த தினங்களில் கடும்குற்றச்செயல்கள் செய்த குற்றவாளிகளைக்கூட விடுதலை செய்யும்பொழுது,தலைவர்களின் பிறந்த நாளில் அவர்கள் பிறந்த நாளை காரணமாக வைத்து ஒருவரை குற்றம் செய்தார் என குற்றவாளியாக்குவது மனதை நெருடுகிறது .

இது காந்தியின் தேசம் ,
தனது தேசத்தில்  தனது மக்கள்  தனது பெயரால் குற்றவாளிகளாக நிற்பதை  காந்தியார்  விரும்பவே மாட்டார் .


ஆதலால் ,

மகாத்மா காந்தி விசயத்தில் நடவடிக்கை எடுக்கும் தருணங்களில் சில விசயங்களை அரசு மிகவும் யோசனை செய்து முடிவெடுக்கவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன் .

அது தான் காந்தியார் அவர்களுக்கு நாம் செலுத்தும் மரியாதையாக இருக்கும் என எண்ணுகிறேன்.


குற்றமற்ற சமுதாயத்தையே காந்தி விரும்பினார் .

குற்றமற்ற இந்தியாவையே படைக்கவிரும்பினார் .மேற்கண்ட பத்திரிக்கை செய்தியை படித்ததும் எழுத்தோன்றியது இது அவ்வளவே.
. Download As PDF

10 கருத்துகள் :

Unknown சொன்னது…

அரசு பொதுவிடுமுறை விடும் நாளில் நிறுவனங்களுக்கு விடுமுறை விடாதது குற்றமாக கருத வேண்டியது இல்லை...

எண்ணங்கள் 13189034291840215795 சொன்னது…

உங்க நல்லெண்ணம் புரியும் அதே நேரத்தில் , குற்றம் பார்ப்பது என்பதே குற்றம் செய்யாமல் தடுக்கும் ஒரு ஒழுங்குமுறை கொண்டு வர என நினைக்கலாமோ?..

ஆ.ஞானசேகரன் சொன்னது…

நீங்கள் சொல்வதும் சரிதான்... இதை கண்டுக்காமல் விட்டால் நீண்டுகொண்டே போகுமே

பவள சங்கரி சொன்னது…

இது காந்தியின் தேசம் ,
தனது தேசத்தில் தனது மக்கள் தனது பெயரால் குற்றவாளிகளாக நிற்பதை காந்தியார் விரும்பவே மாட்டார் .
உண்மைங்க..........

cheena (சீனா) சொன்னது…

அன்பின் நண்டு

சிந்தனை நன்று - உடன்படுகிறேன் கருத்துக்கு - அரசு நிறுவனங்களைக் கட்டுப்படுத்துவது சரியல்ல - குற்றவாளிகள் ஆக்கப்படுவதும் சரியல்ல

நல்வாழ்த்துகள் நண்டு
நட்புடன் சீனா

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

நல்ல சிந்தனை சார்.எங்க ஊர்க்காரரு கலக்கறத நினைச்சா பெருமையா இருக்கு சார்,ம்ம் ம்ம்ம் நடத்துங்க

Jeyamaran சொன்னது…

*/தலைவர்களின் பிறந்த தினங்களில் கடும்குற்றச்செயல்கள் செய்த குற்றவாளிகளைக்கூட விடுதலை செய்யும்பொழுது,தலைவர்களின் பிறந்த நாளில் அவர்கள் பிறந்த நாளை காரணமாக வைத்து ஒருவரை குற்றம் செய்தார் என குற்றவாளியாக்குவது மனதை நெருடுகிறது .

இது காந்தியின் தேசம் ,
தனது தேசத்தில் தனது மக்கள் தனது பெயரால் குற்றவாளிகளாக நிற்பதை காந்தியார் விரும்பவே மாட்டார் . /*

Nalla karuthu anna..........

சௌந்தர் சொன்னது…

அந்த தினத்தில் வந்தால் தனி சம்பளம் கொடுத்து விடுவார்கள்

ஆயிரத்தில் ஒருவன் சொன்னது…

காந்தி அவர்கள் நம் தேசபிதா உலகின் பல்வேறு நாடுகள் இந்தியாவை காந்தி தேசமே என்று தான் அழைக்கிறது நமது ரூபாய் நோட்டுகளில் காந்தி உருவம் படம் போட்டே அவருக்கு மரியாதை செய்கின்றோம். இப்படி இருக்க அவரின் பிறந்த நாளுக்கு கண்டிப்பாக விடுமுறை அளிக்க வேண்டும். நண்பர் கே.ஆர்.பி.செந்தில் கூறுவது தவறு காந்தி ஒன்றும் மூன்றாம் தர மனிதரில்லை நம் தேச பிதா நினைவில் கொள்ளுங்கள்

lawyercbl சொன்னது…

If the government really makes those "erring people" to understand the importance of paying our respects to mahatma Gandhji by punishing them I think it can be appriciated.... Barbara

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "