நிமிர்ந்த நடை ,நேர் கொண்ட பார்வை என நாம் படித்திருக்கிறோம் .
நிமிர்ந்த நடை -நல்ல எண்ணங்களுடன் சமுதாயத்தில் உயர்ந்த முதிர்ந்த பண்புடையவராக உலாவவேண்டும் என்பது .ஆனால்,நான் இங்கு சொல்லவந்தது நமக்கு நமது வாழ்வில் ஏற்படும் ஆஸ்ட்டியோபொரோஸிஸ் (Osteoporosis )என்னும் வியாதி பற்றியும் அதனை நாம் நமது பழக்கவழக்கத்தால் வெற்றிகொள்வதையும் பற்றியதுமே யாகும் .
நாம் அப்பப்ப கேட்டிருப்போம், எங்க பாட்டி பாத்ரூமில் விழுந்திட்டாங்க எலும்பு உடைச்சிருச்சு ... சும்ம தடுக்கி விழுந்தார் எலும்பு சுக்கலா ஒடுஞ்சிருச்சுப்பா ..என .
இதற்கு காரணம் ஆஸ்ட்டியோபொரோஸிஸாக கூட இருக்கலாம் .
அதாகப்பட்டது நம்ம மனிதர்கள் வளர்ந்து வரும் காலங்களின் எலும்புகள் உருவாகியும் ,உதிர்ந்தும் கிட்டத்தட்ட 30-35 வயது வரை இருக்கும் .இதில் உதிர்வதை விட உருவாகுவது அதிகப்படி .அதற்கப்புறம் எந்தவித மாற்றமுமின்றி சில வருடங்கள் இருக்கும் .பிறகு 40-50 வயதுகளின் தேய ஆரம்பிக்கும் .அதனால் எலும்பு அதன் தன்மையை இழக்க ஆரம்பிக்கும் .அதன் காரணமாக எலும்பு தனது ஆதி வலுவை இழந்துவிடும் .
இவ்வாறு வலு இழந்த எலும்புகள் எளிதா உடையக்கூடிய நுண்துளைகள் உடையதாகவும் ,உடையக்கூடியதாகவும் ஆகி எலுப்பு முறிவை ஏற்படுத்துகிறது .
இது தான் ஆஸ்ட்டியோபொரோஸிஸ் என்னும் வியாதி .
இந்த வியாதி ஒருவருக்கு இருப்பது தெரியாது .இதனால் சிலருக்கு முதுகு வடத்தில பலமுறை முறிவு ஏற்பட்டு உயரம் குறையலாம் .கூனை விளைவிக்கலாம் .இது ஒரு Silent Disease .எலும்பு ஒடஞ்ச பிறகு தான் தெரியும் .
அதனால் இந்த நோயை வருமுன் காப்பது சாலச்சிறந்தது .
அதனால் தினமும்
கால்சியம் அதிகம் இருப்பதை சாப்பிடுங்கள் பால்,பச்சை காய்கறிகள் ,மீன் ,சோயா இப்படி ஏதோ ஒரு வடிவில் .
கால்சியம் நன்றாக வேலை செய்ய வைட்டமின் D தேவை அதனால் சூரிய ஒளி பட ஒரு 20 நிமிசம் இருங்க .
வைட்டமின் C யும் தேவை அதனால் நெல்லி ,கொய்யா... இப்படி ஏதாவதொன்றை சேர்த்துக்கொள்ளவும் .
கோலா ,ஜங்க் உணவுகளை தவிர்க்கவும் .
புகை பிடித்தல் ,மது அருந்துவதை தவிர்க்கவும் .
மேலும்
சரியான உடற்பயிற்சி மிகவும் முக்கியம் .
அதனால் தினமும் குறைந்தது 30 நிமிட முறையான வேக நடை (Brisk Walking ).
எடை தூக்குதல் (Weight Lifting).
இவற்றை செய்யவும் .அவ்வளவு தான் .நோய் அண்ட பயப்படும் .
சரி இந்த நோய் வந்துட்டா ...
மேற்கண்ட உணவுமுறைகளையும் ,உடற்பயிற்சியையும் தொடருங்கள் கீழ்க்கண்டவற்றை கடைப்பிடித்து .
நிறைய நார்ச்சத்து உள்ளவை ,நிறைய சோடியம் உள்ளவைகளை தவிர்க்கவும் .
சரியான காலணிகளை அணியுங்கள் .
பழவீனமானவர்கள் கைத்தடிகளை பயன்படுத்துங்கள் .
வழுக்கும் தரைகளில் நடக்காதீர் .
வீட்டில் குளியலறையை மற்றும் கழிவறைகளை உலர்ந்து இருக்கும் படியும் ,கைப்பிடிகள் இருக்கும் படியும் ,வெளிச்சம் இருக்கும்படியும் பார்த்துக்கொள்ளுங்கள் .
கீழே விழுவதையும் ,எலும்பு முறிவுகள் ஏற்படுவதையும் தவிருங்கள் .
கண் பரிசோதனை செய்துகொள்ளவும் .
ஏரோபிக்ஸ் தவிர்க்கவும் .
ரோயிங் மெசினை தவிர்க்கவும் .
மேலும் மருத்துவரை அணுகி அவரின் ஆலோசனைப்படி கட்டாயம் நடந்துகொள்ளுங்கள் .
பெண்கள் கவனிக்க
பெண்கள் எலும்புகளின் உச்ச வளர்ச்சியை 18 வயதிலே அடைந்துவிடுகின்றனர் .(அது ஆண்களுக்கு 20 ல் நேருகிறது .)
மேலும் ,எஸ்ட்ரோஜென் பெண்களின் எலும்புகளில் கால்சியம் படிவதற்கு உதவுகிறது .மாதவிடாய் நின்று போகக்கூடிய நிலையில் இதன் அளவு குறைவதாலும் எலும்பு பலவீனம் அடைகிறது .அதோடு மாதவிடாய் நின்ற பிறகு எலும்பின் தேய்வு விகிதம் சாதாரணமாக ஓராண்டிற்கு இருக்கும் 0.4% தை விட 2.5% அதிகரிக்கிறது.அதனால் பெண்களுக்கு ஆஸ்ட்டியோபொரோஸிஸ் வாய்ப்புகள் அதிகம் .
அதனால் ,
64 வயதிற்கு மேலான பெண்கள் ,
எலும்பு முறிவுள்ள மாதவிடாய் நின்றுபோன பெண்கள் ,
சீக்கிரமே மாதவிடாய் நின்றுபோன பெண்கள் ஆகியோர் முறையான மருத்துவப்பரிசோதனை மேற்கொள்வது மிகவும் நலம் .
வருமுன் காத்துக்கொள்வது நலம் பயக்கும் தானே .
அக் 20 World Osteoporosis Day
இதனை முன்னிட்டு பொது நலன் கருதி
நண்டு @ நொரண்டு
. Download As PDF
Tweet |
|
8 கருத்துகள் :
THANKS
வைட்டமின் C யும் தேவை அதனால் நெல்லி ,கொய்யா... இப்படி ஏதாவதொன்றை சேர்த்துக்கொள்ளவும் .
கோலா ,ஜங்க் உணவுகளை தவிர்க்கவும் .////
மிகவும் பயன்வுள்ள தகவல்
நல்ல விழிப்புணர்ச்சி பதிவு.
//கால்சியம் அதிகம் இருப்பதை சாப்பிடுங்கள் பால்,பச்சை காய்கறிகள் ,மீன் ,சோயா இப்படி ஏதோ ஒரு வடிவில் .// yaar ketppaa... naalla pathivu . vaalththukkal.
அன்பின் நண்டு
அருமையான இடுகை - பயனுள்ள இடுகை - பகிர்வினிற்கு நன்றி நண்டு - நல்வாழ்த்துகள் நண்டு - நட்புடன் சீனா
பயனுள்ள தகவல்
அவசியமான பதிவுங்க. நன்றி.
எனது வலைப்பூவிற்கு வருகை தந்து
தமிழ்மணம் மற்றும் இன்ட்லி யில் வாக்களித்தவர்களுக்கும்
பின்னூட்டமிட்டவர்களுக்கும்
எனது மனமார்ந்த நன்றி கலந்த வணக்கத்தை
தெரிவித்துக்கொள்கிறேன் .
கருத்துரையிடுக
" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "