வியாழன், 21 அக்டோபர், 2010

அம்மா இரவு

 .












எனதறைக்கு பக்கத்தறை

அவள் படுக்கையறை

நித்தமும் இரவு முணுமுணுப்பாள்

ஏதாவதொன்றை

அவள் கண்ட கனவை

காலம் கடந்து விட்டதை

சமைக்க இயலாததை

வாழ்வில் வராததை

ஏற்றதை ஏற்காததை

உடம்பின் வலிகளை

இதனுடன்

என் இரவு கண்விழிப்பை

நித்தம் என்னை அழைத்து

'பகலில் படி கண்கெட்டுவிடும்" என்பாள்.

அவள் குரல் கேட்டு

பின் நகர்ந்து செல்லும் என் இரவு

அவள் குரலில்லை யென்றாள்

எனக்கிரவில்லை

ஆதலால்

அம்மா இறக்கக் கூடாதென

நித்தம் ஏங்குகிறேன்.

















.

 
Download As PDF

12 கருத்துகள் :

பெயரில்லா சொன்னது…

அம்மாவின் அன்பு வாழும் நாளெல்லாம் தொடரவேண்டும் என்று நினைக்கும் ஒவ்வொரு மகனி(ளி)ன் வேண்டுதல்.
அருமை அண்ணா!

வருணன் சொன்னது…

புத்தன் ஆசைபடாதே என்றபோதும் நம்மால் இது போன்ற தருணங்களில் நிச்சயம் முடிவதில்லை நண்பா. ஒரு தாயின் அக உலகம் முழுமையும் வியாபித்திருபது அவளது பிள்ளைகள் குறித்த கனவுகளே ! நேரமிருப்பின் எனது வலைப்பூவிற்கும் வருகை தாருங்கள்.

priyamudanprabu சொன்னது…

அருமை

Chitra சொன்னது…

அவள் குரலில்லை யென்றாள்

எனக்கிரவில்லை

...very touching.

Kousalya Raj சொன்னது…

மிக அருமையாக மனதை நெகிழ செய்யும் வரிகள்..

சாந்தி மாரியப்பன் சொன்னது…

அருமையான நெகிழவைக்கும் கவிதை..

அருண் பிரசாத் சொன்னது…

உண்ர்வுபூர்வமாக உள்ளது

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

அருமை

Gaanz சொன்னது…

cute man..........!

தாராபுரத்தான் சொன்னது…

அம்மா இறக்கக் கூடாதென...அருமைங்க

Unknown சொன்னது…

Superb!!!

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

எனது வலைப்பூவிற்கு வருகை தந்து
தமிழ்மணம் மற்றும் இன்ட்லி யில் வாக்களித்தவர்களுக்கும்
பின்னூட்டமிட்டவர்களுக்கும்
எனது மனமார்ந்த நன்றி கலந்த வணக்கத்தை
தெரிவித்துக்கொள்கிறேன் .

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "