எண்ணிய எண்ணங்கள்
எதிர்மறையாய் வரும்பொழுது
எதிர்மறையில் சில எண்ணங்கள்
எழாமல் இருப்பதில்லை.
வளைந்து வளைந்து
பாதை சென்றாலும்
பாதை பாதையினின்று
வளைந்து சென்றதில்லை .
வளமான பாதையில்
சுழல நினைத்தாலும்
சுழலும் பாதையில் சுகம்கண்டதால்
வளமான வாழ்விற்கு வக்கில்லை.
எப்பொழுதும் எல்லோர்க்கும்
எப்பொழுதும் வாய்ப்பதில்லை
எப்பொழுதென்பது எப்பொழுது என்றாலும்
எப்பொழுதென்பது எப்போதும் இங்கில்லை.
சோக ரேகை
மனதினில் தோன்ற
சோம்பல் ரேகை
முகத்தில் தொலைவதில்லை .
மறக்கும் எண்ணம்
நினைவினில் தோன்ற
நினைக்கும் எண்ணம்
மறப்பதை தொலைப்பதில்லை.
எதற்காகவோ வாழ்வு என்றாலும்
எதற்காக வென்பதே
நமக்காகும் போது
நமக்கா வென்பது ஏதும் இங்கில்லை.
இல்லை யென்பது
இங்கில்லை யென்றாலும்
இல்லை இல்லாமல்
இங்கொன்றும் இல்லை .
எண்ணிய எண்ணங்கள்
எதிர்மறை யென்றாலும்
எதிர்மறை எண்ணங்கள்
எண்ணாமல் முடிவதில்லை.
.
Tweet |
|
9 கருத்துகள் :
கவிதை வரிகள் அனைத்தும் அருமை. வாழ்த்துக்கள் நண்பரே ... !
தமிழனின் வெற்றிக்கு உதவுவோம் - Please Help
http://vandhemadharam.blogspot.com/2010/10/please-help.html
வரிகள் அனைத்தும் அருமை...
வளமான பாதையில்
சுழல நினைத்தாலும்
சுழலும் பாதையில் சுகம்கண்டதால்
வளமான வாழ்விற்கு வக்கில்லை.
உண்மை.......செக்கு மாடு போல சுழலும் பாதையிலேயே சுழன்று.....போக்கிடம் தெரியாமல் வளமான வாழ்வை தொலைப்பதுதானே நிதர்சனம்.
migavum arumai anna
எதிர்மறை எண்ணங்கள் சமயங்களில் நமக்கு கைகொடுக்கும் ...
எதிர்மறையில் சில எண்ணங்கள்
எழாமல் இருப்பதில்லை.natural
பாதை பாதையினின்று
வளைந்து சென்றதில்லை .its true
சுழலும் பாதையில் சுகம்கண்டதால்
வளமான வாழ்விற்கு வக்கில்லை.experience
எப்பொழுதென்பது எப்பொழுது என்றாலும்
எப்பொழுதென்பது எப்போதும் இங்கில்லை.PHILOSOPHY
well done dear.
அன்பின் நண்டு /r
அருமை அருமை - சிந்தனை அருமை - எதிர்மறைச் சிந்தனைகளும் தேவை தான் - அவைகளை நேர்மறைச் சிந்தனைகளாக மாற்ற வேண்டும் - நல்வாழ்த்துகள் நண்டு - நட்புடன் சீனா
எனது வலைப்பூவிற்கு வருகை தந்து
தமிழ்மணம் மற்றும் இன்ட்லி யில் வாக்களித்தவர்களுக்கும்
பின்னூட்டமிட்டவர்களுக்கும்
எனது மனமார்ந்த நன்றி கலந்த வணக்கத்தை
தெரிவித்துக்கொள்கிறேன் .
கருத்துரையிடுக
" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "