நீ உருமாறி உள்ளாய் ?
இல்லை .
இல்லை,உன்னைப்பற்றியே உனக்கு தெரியாத வண்ணம் நீ ஆக்கப்பட்டுள்ளாய் .
நான் விவாதத்திற்கு வரவில்லை .எனக்கு பயமாக இருக்கிறது .நான் கொல்லப்பட்டுவிடுவேன் என.நான் எங்குள்ளேன்?.உங்களை நான் எங்கும் பார்த்ததில்லையே .நான் எந்த தப்பும் செய்யவில்லை.தவறு என்னுடையதும் இல்லை.ஆனால் , உங்களுக்கு அப்படி தெரிகிறது.எனக்கு ஒன்னும் தெரியாது.இது தான் உண்மை .
தம்பி ,யாரோ கேட்கப்போகும் கேள்விகளை ,இதாகத்தான் இருக்கும் என ,கேள்விகளை நீயே உருவாக்கிக்கொண்டு ,அதற்கான பதிலை என்னிடம் சொல்லிக்கொண்டுள்ளாய் .நான் கேள்விகளை உன்னிடம் கேட்கவேயில்லையே.
அப்படினா நீங்கள் யார் ?
ம் ...இது தான் எனக்கான கேள்வி . எம்மை எங்கும் பார்த்ததில்லை என்று சொன்னாய் .அது தான் நீ உருமாறி உள்ளவன் என்பதன் அடையாளம் .சரி ,50 லட்சம் மக்கள் அநியாயமாக கொல்லப்பட்ட வரலாறு உனக்கு தெரியுமா ?.அதற்குப் பின்னிட்டும் மீதமிருந்த அந்த இனத்திற்கு தொடர்ந்து ஊறு செய்துவந்தவர்களின் பட்டியலை பார்த்திருக்கின்றாயா ? .அந்த இனம் யாரால் மீண்டது ,எவ்வாறு மீண்டது என்பதை நீ அறிவாயா ? .உமக்கும் எமக்குமுள்ள வேற்றுமைகள் என்னவென்று உமக்கு தெரியுமா ?.இவைகளைப்பற்றிய உனது அறிதல் என்ன ? சொல் .அப்பொழுது தான்நான் யார் என உனக்கு செல்வதற்கு சரியாக இருக்கும் .
எனக்கு ஒன்றும் தெரியாது .
ம்.அவ்வளவு தூரம் சென்றுவிட்டார்களா ? .சரி என் கதை கேட்பது இருக்கட்டும் உன் நிலை பற்றி முதலில் சொல் .பிறகு நான் என்னைப்பற்றி சொல்லுகிறேன் .
என் பெயர் சேப்பா
.
எனது நாவலின் - டாலரன்ஸ் பேச்சுவார்த்தை என்னும் பாகத்தில் -
என் பெயர் சேப்பா அத்தியாயத்தின்-முதல் பக்கம் .
. Download As PDF
Tweet |
|
16 கருத்துகள் :
சேப்பாவின் கதை தொடருமா.......வாழ்த்துக்கள்.
all the best
நாவல்.. வாழ்த்துகள்!
அன்பின் நண்டு
நாவல் துவங்குகிறதா ! நன்று நன்று - நல்வாழ்த்துகள் நண்டு - நட்புடன் சீனா
உங்கள் கதை நன்றாக ஆரம்பிக்கிறது.. சேப்பா முழுமை பெற வாழ்த்துக்கள் ...
வாழ்த்துகள்!
ஆஹா அருமையான தொடக்கம்.நன்றாக வரும் போல் தெரிகிறது.ஆவலாக உள்ளேன் அடுத்த் தொடருக்கு
உங்க நாவலா, தல சொல்லவேயில்ல
எனது நாவலின் - டாலரன்ஸ் பேச்சுவார்த்தை என்னும் பாகத்தில் -
என் பெயர் சேப்பா அத்தியாயத்தின்-முதல் பக்கம் .
.......அருமைங்க..... சந்தோஷமாக இருக்குதுங்க.... வாழ்த்துக்கள்!
முழுவதும் வாசிக்கும் ஆர்வத்துடன்
தொடருங்கள்.
தொடருங்கள் வாழ்த்துகள்!
நாவல் நல்லமுறையில் வளரட்டும். வாழ்த்துகள்
எனது வலைப்பூவிற்கு வருகை தந்து
தமிழ்மணம் மற்றும் இன்ட்லி யில் வாக்களித்தவர்களுக்கும்
பின்னூட்டமிட்டவர்களுக்கும்
எனது மனமார்ந்த நன்றி கலந்த வணக்கத்தை
தெரிவித்துக்கொள்கிறேன் .
Latest Tamil Movies review,Tamil cinema latest News in Tamil
www.cineikons.com
Latest Tamil Movies review,Tamil cinema latest News in Tamil
www.cineikons.com
கருத்துரையிடுக
" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "