செவ்வாய், 19 அக்டோபர், 2010

போதையும் இலக்கியமும் .

எனக்குத்தெரிஞ்சு  இலக்கியவாதிகள் எல்லாரும் பெரிய போதக்காரைங்க .
அவரு தண்ணியடிச்சுட்டார்னா கவிதைய அருவி மாதிரி கொட்டுவாறு  பாரு. அவருக்கு விஸ்கி சாப்பிட்டாத்தான் கவிதையே வரும் .கண்ணதாசன் கவிதை எழுத வேண்டிய ஒன்றுகளில் தண்ணியும் ஒன்னூ தெரியுமா?. விவேகானந்தர் சாப்பிடுவாராம் போதைக்கு .பாரதியாரை காந்தியடிகள் பாக்காததுக்கு இது தான் காரணமுனு செவிவழிச்செய்தி .அவனுக்கு அதச்சாப்பிட்டாத்தான் அது வரும்  ...அவன் என்ன எழுதி கிழுச்சான் .நீ டாப்புப்பூ . ஆமா ,நான் இருக்கேன் ,அருமையா வந்திருக்கு உனக்கு .நீ பெரியவன் .டாப்பாயிட்ட ...இப்படிப்பட்ட பேச்சுக்களுடன்  தண்டியடிச்சுட்டு தாறுமாறா தங்களை இலக்கிய வியாதியா பீத்திக்கிட்டு தம்பட்டம் அடித்துக்கொண்டு எழுதும்  ஜந்துக்களின் மத்தியில் எனக்கும் ஊத்திக்கொடுத்து  நானும்  அப்படியே எனது  மேதாவித்தனத்தை காட்டி  இலக்கியவியாதி  என  3/4 புல் காலி ...திடீர்னு வானு அவன் கூப்பிடுவான் .போனா ஒரு வாசகன் கிட்ட போய் 500 ருபாய் வாங்குவான் .அப்புறம் அதை நாங்க தண்ணியடிச்சு அவனை கேலி செய்து...அவன் மீட்டிங்க மரத்தில வச்சான் ஒருதடவை .கேட்டா புதுமையாம்.அதையும் ரசித்து தண்ணி வாங்கிக்கொடுத்தாங்க அவ்வளவு இலக்கிய ஆர்வம் ...என என தனது இலக்கிய பயணத்தில்  இலக்கிய கூட்டம் கூட்டமாய் போதையில் பயணித்ததை  நினைத்துப்பார்த்து  ஏமாத்துக்காரப்பசங்கப்பா  என இப்ப   மருந்தடிமை வியாதியுடன் புலம்பும் என்   இனிய நண்பரின் புலம்பலை என்ன சொல்ல .


சரி விசயத்துக்கு வருவோம் .போதைக்கும் இலக்கியத்திற்கும் என்ன தொடர்பு .

மனிதன் தனது மூளையை தன் வாழ்நாளில் முழுமையாக பயன்படுத்துவதில்லை.மிகவும் குறைவாகவே பயன்படுத்துகின்றான் .அவைகள் அப்படியே வாழ்க்கை முழுதும் இருக்கும் .ஆனால் மனித மூளையின் செயல்பட்டுவரும் பகுதிக்கு பாதிப்பு ஏற்படும்பொழுது மூளையின் பயன்படுத்தாத பகுதிகள் அவற்றை சரிக்கட்ட சில செயல்களை மேற்கொண்டு மூளையை ஒரே நிலையில் பதனப்படுத்துகிறது .இதற்கு ''தூதுவம் ''என்று பெயர்.

இவ்வாறுதான் போதையினால் மூளையில் சதாரணகாலங்களில்  செயல்படாத பகுதிகளில்  சில உள்கட்டமைகள் இயக்கம் ஆரம்பிக்கின்றன .ஏனெனில் போதை மூளையின் செயல்பாட்டை முடக்குகிறது .அதோடு மூளை தனது செயலை போதையால் கொஞ்சம் கொஞ்சமாக இழக்கிறது.ஒருவர் பயன்படுத்தும்போதைப் பொருளைப் பொறுத்து மூளையின் முடங்கும் பகுதிகள் மாறுபடும் .எனவே ,இதனைத்தடுக்க மூளை மனிதன் பயன்படுத்த தனது மீதி பகுதிகளை இயக்கி சரிசெய்ய முயற்சிக்கிறது .  அப்படி அது இயங்கும் போது உருவாகும் சுரப்புகளினால் புதிய வித்தியாசமான காட்சிகள், நினைவுகள் ,எண்ணங்கள் ,நிலைகள் ஆகியவை ஏற்படுகிறது .இந்த தூதுவ நிலை அவரவர் தொழில் ,உடல் ,மற்றும் மூளையைப்பயன்படுத்தியுள்ள அளவிற்கேற்ப மாறுபடும் .இந்த தூதுவ நிலை சில காலங்கள் மட்டுமே ,பிறகு மூளை தனது மையத்தை நோக்கி நகர ஆரம்பித்துவிடும் .( அதனைப்பற்றி விளக்கம் பிறகு பார்ப்போம் .)இந்த தூதுவ நிலையில் ஏற்படுபவற்றை எழுதும் யுத்தி கைவரப்பெற்றவர்கள்.தங்களின் இயல்பான நிலையில் அதனை தங்களின் எழுத்து வித்தையுடன் இயல்பில் புகுத்தி இலக்கியம் என்றாக்கி விடுகின்றனர் .

உண்மையில் அவைகள் இலக்கியங்களே இல்லை . அவைகள் இலக்கியம் என்னும் போர்வையில் எடுக்கும் வாந்தியாகும்.அவ்வளவே. கட்டுடைத்துப்பார்த்தால் அவைகளின் உண்மைத்தன்மை எளிதில் வெளிப்பட்டுவிடும்.

(தூதுவ நிலை சில காலங்கள் மட்டுமே என்பதால் தெடர்ந்து இயங்கமுடியாமல் ஒதுங்கிவிடுப்படி யாகிவிடுகின்றனர் .
இலக்கிய ஓய்வு எனக்கூறி . என் நண்பர் போல .)

இங்கு ஏன் இதனை தெரிவிக்கின்றேன் எனில் ,எனது வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவத்தினால் .நான் பெற்ற அறிவை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்காகவே .ஏனெனில் ,இன்று இலக்கியத்தை நோக்கி வரும் இளைஞர்கள் இந்த தண்ணிவண்டி மற்றும் போதை இலக்கியவியாதிகளின் போதைக்கு ஊறுகாயாகி ,திசை மாறி மேற்சொன்ன எனது நண்பர் போன்று  ஆகிவிடாமல் இருப்பதற்கே.

வலைப்பதிவிற்கு வரும் புதியவர்களுக்கும் இதையே நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அவ்வளவே . போதை  தவிர்  ..
Download As PDF

18 கருத்துகள் :

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! சொன்னது…

நல்ல பதிவு நண்பரே...

goma சொன்னது…

நன்
ராகச் சொல்லியிருக்கிறீகள்....

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

பள்ளி,கல்லூரி மாணவர்கள்
45 சதவீதம் பேர் மது குடிக்கின்றனர்
அகில இந்திய சர்வேயில் அதிர்ச்சி தகவல் .
இன்றைய(19.10.10) தினமலரில் தலைப்புச்செய்தி

எண்ணங்கள் 13189034291840215795 சொன்னது…

அவைகள் இலக்கியம் என்னும் போர்வையில் எடுக்கும் வாந்தியாகும்.அவ்வளவே. கட்டுடைத்துப்பார்த்தால் அவைகளின் உண்மைத்தன்மை எளிதில் வெளிப்பட்டுவிடும்.
----------------------------

:))

//விவேகானந்தர் சாப்பிடுவாராம் போதைக்கு//

புது தகவல்..!!!!

அம்பிகா சொன்னது…

பலருக்கு இந்த தவறான புரிதல் இருக்கிறது. மிக அவசியமான பதிவு.

ரோகிணிசிவா சொன்னது…

(;

நாடோடி சொன்னது…

ரெம்ப‌ அவ‌சிய‌மான‌ ப‌திவு சார்.. என்னிட‌மும் சில‌ர் இது ப‌ற்றி விவாதித்திருக்கிறார்க‌ள்..

வெட்டிப்பேச்சு சொன்னது…

இது உண்மையும், எச்சரிக்கையும் கூட.

நல்ல பதிவிற்கு நன்றி நன்பரே.

cheena (சீனா) சொன்னது…

அன்பின் நண்டு - அறிவுரை நன்று - ஏற்க வேண்டுமே ! என்ன செய்வது -நடப்பது நடக்கட்டூம் - நல்வாழ்த்துகள் நண்டு - ந்டபுடன் சீனா

Unknown சொன்னது…

அப்படி பொத்தாம் பொதுவாக சொல்லிவிட முடியாது. படைப்பாளிகளின் படைப்பை மட்டும் பாருங்கள் படைப்பாளிகளின் தனிப்பட்ட அந்தரங்கத்தில் தலையிடும் உரிமை யாருக்கும் இல்லை. கண்ணதாசனை நாம் அவ்வளவு சுலபமாக ஒதுக்கிவிட முடியுமா?

தனி மனித ஒழுக்கம் என்பதற்கு இந்திய தேசத்தில் குறிப்பாக தமிழகத்தில் கட்டுபெட்டித்தனமான மேற்கோள்களால் ஆளப்படுகின்றன.. படைப்புகளை மட்டுமே விமர்சிப்பதுதான் சரியான பார்வை.. இந்த கட்டுரையில் நான் உங்களிடம் இருந்து மாறுபடுகிறேன்..

பவள சங்கரி சொன்னது…

தூதுவ நிலை........அறிந்து கொள்ள வேண்டிய தகவல்.... நன்றி.

ஜெயந்தி சொன்னது…

போதை சிலருக்கு பாதிப்பில்லாமல் இருக்கலாம். பலருக்கு பொருளாதாரம், உடல் நலம் என்று பல பாதிப்புகள் ஏற்படுத்துகிறது. தேவையான பதிவு.

Myooou Cyber Solutions சொன்னது…

எதுவும் அளவோடு இருந்தால் மருந்துதான் .

Kousalya Raj சொன்னது…

'தூதுவம் ' என்பதை பற்றி தெரிந்து கொண்டேன்....போதை தவிர்க்க வேண்டும் என்ற உங்களின் அறிவுரை அவசியமான ஒன்று...நன்றி.

velji சொன்னது…

தூதுவம்..புதிதாய் கேள்விப்படுகிறேன்.

அவசியமான பதிவு!

Radhakrishnan சொன்னது…

அளவோடு இருந்தால் எல்லாமே நல்லதுதான் என்கிறது. நல்ல பதிவு.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

என்னாது, காந்தி பாரதியாரை சந்திக்காததன் காரணம், போதையா...........???!!!
புதுசா இருக்கே........
அண்ணே நீங்க காமடி கீமடி பண்ணலையே..........

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

எனது வலைப்பூவிற்கு வருகை தந்து
தமிழ்மணம் மற்றும் இன்ட்லி யில் வாக்களித்தவர்களுக்கும்
பின்னூட்டமிட்டவர்களுக்கும்
எனது மனமார்ந்த நன்றி கலந்த வணக்கத்தை
தெரிவித்துக்கொள்கிறேன் .

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "