திங்கள், 11 அக்டோபர், 2010

நாம் வாழ அழியும் உயிர்கள் .

வீட்டுக்கு வா வீட்டுக்கு வா என மிகவும் வற்புறுத்தி
நேற்று என் நண்பர் அவரின் வீட்டிற்கு அழைத்துச்சென்றார் .அவர் ஒரு இயற்கை ஆர்வலர் .அதோடு மட்டுமல்லாமல் கானுயிர்களை கலை நயத்துடன் புகைப்படம் எடுப்பதில் வல்லவர்.அதனால்,என்னமோ விசேசம் இருக்கும் போல என நினைத்துச்சென்றேன் .அதுபோலவே அவருக்கு சிறந்த புகைப்படத்துக்கான பரிசொன்றை அவர் எடுத்த புகைப்படத்திற்கு அளித்திருந்தனர் .அவருக்கு பரிசு வாங்கிக்கொடுத்த வனவிலங்குகளின்  புகைப்படத்தைக் காட்டினார் .உண்மையில் மிகவும் அழகாக கலைநயத்துடன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.அதிலும் யானைகள் என்னை மிகவும் கவர்ந்தது .படங்களை பார்த்த பின்னர் அவருக்கு கொடுக்கப்பட்ட பரிசைக் காண்பித்தார் .அழகிய சீல்டு ஒன்று .அதில் கலை அழகு வேலைப்பாடு.அது அரசின் விற்பனை நிலையத்திலிருந்து வாங்கப்பட்டதாம் .
யானையின் புகைப்படத்திற்கு யானையே பரிசு .

சிலர் தங்களை கலா ரசிகர்களாக பிறரிடம் காட்டிக்கொள்ள தங்களின் வீடுகளில் கலைவடிவமான இது போன்ற பொருட்களை வாங்கி அடுக்கி மகிழ்கின்றனர் .
அரசு நடத்தும் கதர் நிலையங்கள் மற்றும் பிற அரசு துணை நிறுவனங்களின் கலைப்பொருட்கள் விற்கும் அங்காடிகளில் இது போன்ற பொருட்களில் வன உயிர்களின் சிதைகளைக்காணலாம் .தனியார் அங்காடிகளிலோ கேட்கவும் வேண்டுமோ .
காந்தியின் பெயரால் நடத்தப்படும் அங்காடிகளிலும் இந்தகைய பொருட்கள் ஆக்கிரமித்து காந்தியத்தை கேலி செய்கின்றன .

செம்மொழி மாநாட்டிற்காக தஞ்சாவூர் ஓவியங்கள் வரைய தூரிகையாக அணில் வாலைப் பயன்படுத்தி உள்ளனர் என்பது செய்தி.

கலைப்பொருட்கள் தான் என்றில்லை .
நாம் அன்றாட  பயன்படுத்தும் அழகுப்பொருட்களும் எவ்வளவு தீங்கை பிற உயிரினங்களுக்கு அளித்து நம்மை அழகு பார்த்து  மகிழ்விக்கின்றன என்பதை அறிந்தால் உண்மையில் கண்ணீர் தான் வரும்


அழகிய இந்த மங்கையின் உதட்டுச்சாயம் ..
துப்பாக்கியால் கிட்டத்தட்ட 10 கூரிய அம்புகளை திமிங்கிலத்தின் மீது வேட்டையாடிகள் பாய்ச்ச,அதனால் உடல் காயமுற்ற அது ,பல மணிநேரம் இரத்தம் கொஞ்சம் ,கொஞ்சமாக வெளியேறுவது தாங்கமுடியாமல்  வேதனையுடன் அழுதுகொண்டே வலியுடன் துடிதுடித்து  உயிரிழக்க.அதற்காக காத்திருத்த வேட்டையாடிகள் அதன் உடலிலிருத்து "AMBERGRIS" என்னூம் பொருளை சேகரித்து  உதட்டுச்சாயம் தயாரிப்பதற்காக அனுப்பப்பட்டதிலிருத்து தயாரிக்கப்பட்டது .







முகச்சவரம் செய்து ,ஆவ்டர் சேவ் லேசன் போட்டு,தலைக்கு டை அடிச்சு,சாம்பு போட்டு ஜம்முனு இருக்கார் இந்த அழகிய ஆடவர். ஆனால் அதுக்காக முயலும் .குரங்கும் பட்டபாடு தெரியுமா .

கண்ணீர் சுரப்பி முயலுக்கு கிடையாது .அதனால் சாம்பை நாம பயன்படுத்தினால் ஏற்படும் பக்கவிளைவுகளை அறிய முயலின் கண்களில் விட்டுப்பார்ப்பர் .அதனால் கண்களில் எரிச்சல் தாங்கமுடியாமல் துடிதுடியென துடிக்குமாம்.நாளடைவில் இந்தகைய முயல்கள் குருடாகிவிடுமாம்.

அதோடு விட்டார்களா  ஆவ்டர் சேவ் லேசனை பரிசோதிக்க முயலின் தோல் உரிக்கப்பட்டு அதில் காயம் ஆற,ஆற லேசனை விட்டு விட்டு அது துடிதுடிக்க ...என்ன சொல்ல .

இந்த லிப்டிக் ,டை முதலியன மனிசனுக்கு  தெரியாம உடலுக்குள் போச்சுனா என்ன பாதிப்ப தருனு பாக்கறதுக்காக குரங்கின் தொண்டையில டியூப்ப வச்சு உட்செலுத்தி சோதிப்பார்களாம் . இந்த சோதனையில் பெரும்பாலும் வேதனையால் அனேகமாக இறந்துவிடுமாம் .

இது போலவே அனேக உயிர்கள் ...

புனுகு,கஸ்தூரி ,செல்போன் கவர்,பர்ஸ்,பெல்ட், கைப்பை,செருப்பு என  ...

இவ்வாறே நாம்
அழகிய உலகை
அழகு என்னும் மடமையில்
அழிக்கின்றோம் .

இந்த உயிர்களை நாம் உயிராக மதிப்போமானால் இப்படிப்பட்ட பொருட்களை நாம் நம் வாழ்வில் தவிர்ப்போமாக .











.
Download As PDF

17 கருத்துகள் :

பனித்துளி சங்கர் சொன்னது…

மிகவும் சிறப்பானப் பதிவு நண்பரே . பல தகவல்களை அறிந்துகொண்டேன் அதிலும் உதட்டு சாயம் பற்றியத் தகவல் என்னை மிகவும் வியக்க செய்ததது . பகிர்வுக்கு நன்றி

Jeyamaran சொன்னது…

Arumaiyaana thagaval anna................

*/துப்பாக்கியால் கிட்டத்தட்ட 10 கூரிய அம்புகளை திமிங்கிலத்தின் மீது வேட்டையாடிகள் பாய்ச்ச,அதனால் உடல் காயமுற்ற அது ,பல மணிநேரம் இரத்தம் கொஞ்சம் ,கொஞ்சமாக வெளியேறுவது தாங்கமுடியாமல் வேதனையுடன் அழுதுகொண்டே வலியுடன் துடிதுடித்து உயிரிழக்க.அதற்காக காத்திருத்த வேட்டையாடிகள் அதன் உடலிலிருத்து "AMBERGRIS" என்னூம் பொருளை சேகரித்து உதட்டுச்சாயம் தயாரிப்பதற்காக அனுப்பப்பட்டதிலிருத்து தயாரிக்கப்பட்டது ./*

Theriya paduthiyathakku nanri.......

வின்சென்ட். சொன்னது…

கானுயிர்கள் படும் சிரமங்களை எடுத்துக் கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளீர்கள். வாழ்த்துக்கள். இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன்.

Unknown சொன்னது…

இப்ப சோதனை எலிகளா அமெரிக்கா காரன் புது வியாதிகளை நம்ம மேலேயே ஏவி டெஸ்ட் பண்றான் ...

Chitra சொன்னது…

இங்கே பல பொருட்களில் (ஷாம்பூ) பாட்டிலில் மேல் உள்ள labels இல் "Not tested on Lab animals" என்று போட்டு இருக்கும். அதை பார்த்து வாங்குவோம். விழிப்புணர்வுடன், வாங்கும் பொருட்களில் ஒரு கவனம் எல்லோருக்கும் இருக்க வேண்டும். நல்ல பதிவு.

அருண் பிரசாத் சொன்னது…

நல்ல பதிவு. யோசிக்கவேண்டிய விஷயம்

எம்.ஏ.சுசீலா சொன்னது…

//அழகிய உலகை
அழகு என்னும் மடமையில்
அழிக்கின்றோம்//
அர்த்தச்செறிவான வரிகள்.வாழ்த்துக்கள்

cheena (சீனா) சொன்னது…

அன்பின் நண்டு

அய்யோ - இப்படி எல்லாம் நடக்கிறதா - நாம் தவிர்க்க முயல்வோம் - ஒரு பேரியக்கம் ஆரம்பித்தால் ஒழிய தவிர்க்க இயலுமா ?

நல்வாழ்த்துக்ள்
நட்புடன் சீனா

ஹேமா சொன்னது…

நானும் லிப்டிக் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
மற்றைய தகவல் புதிது.இன்னொரு உயிரை அழித்தே வாழப் பழகிக்கொள்கிறான் மனிதன் !

அந்தப் படத்தில் இருப்பவர் நீங்கதானே ?

துளசி கோபால் சொன்னது…

Body shop என்ற கடைகளில் வாஆன்ங்கும் அழகுசாதனங்களில், எந்த விலங்கினசம்பந்தம் உள்ள பொருட்களும் சேர்க்கப்படாதது.

அருமையான இடுகை.

goma சொன்னது…

விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் நல்ல பகிர்வு

எண்ணங்கள் 13189034291840215795 சொன்னது…

. இந்த சோதனையில் பெரும்பாலும் வேதனையால் அனேகமாக இறந்துவிடுமாம் .

-----------------

விலங்குதானே என்ற அலட்சியம்..

மனிதன் மனிதர்களையே ஈவு இறக்கமின்றி கொல்லும் காலமிது...:((

ஆனாலும் ஒருபக்கம் ப்ளூ க்ராஸ் போன்றவர்களின் சேவை வளருது ..

Jerry Eshananda சொன்னது…

Brilliant Write up.

சசிகுமார் சொன்னது…

ஆடம்பரத்திற்கு அடிமையாகிப்போன இந்த உலகில் இது போன்று எவ்வளவோ உயிர்கள் மடிகின்றன. நல்ல பதிவு நண்பரே வாழ்த்துக்கள்.

suneel krishnan சொன்னது…

இந்த சுட்டியை நேரம் இருந்தால் காணுங்கள் ,
http://en.wikipedia.org/wiki/Tuskegee_syphilis_experiment
அமெரிக்கா நடத்திய விபரீத மனித விளையாட்டு குறித்து தகவல் இருக்கிறது .
மனிதரின் சுயநலத்திற்கு எல்லையே கிடையாது ..
நல்ல பதிவு , சீன மருத்துவத்தில் புலியின் பாகம் உபயோகபடுவதால் புலிகள் காணமால் போகின
மண்ணுளி பாம்பு , மணியன் பாம்பு , நட்சத்திர ஆமை எல்லாம் காணமல் போகிறது வேற என்ன சொல்ல :(

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

தங்களின்
வருகைக்கும் ,பின்னூட்டத்திற்கும்
மிக்க மகிழ்ச்சி

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ @

Jeyamaran @

வின்சென்ட். @

கே.ஆர்.பி.செந்தில் @

Chitra @

அருண் பிரசாத் @

எம்.ஏ.சுசீலா @

cheena (சீனா) @

ஹேமா @

துளசி கோபால் @

goma @

பயணமும் எண்ணங்களும் @

ஜெரி ஈசானந்தன். @

dr suneel krishnan

அவர்களே

மிக்க நன்றி .

ப.கந்தசாமி சொன்னது…

மிகவும் வேதனையாக இருக்கிறது.

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "