வியாழன், 28 அக்டோபர், 2010

நாத்திக சொத்தைகளே கேளுங்கள் .

ஊரிலிருந்து வந்த தாத்தா ,
என்ன செய்யர? என படித்துக்கொண்டிருந்த என்னை கேக்க .
 தாத்தா திருக்குறளுக்கு உரை எழுதறத்துக்காக படிச்சிக்கிட்டிருக்கேன்னு சொன்னேன் .
அதுக்கு அவர் தம்பி ,நல்ல விசயம் தான் ;ஆனா,திருக்குறளை வள்ளுவர் எந்த சூழலில் எழுதினார் தெரியுமா. அதத்தெரிஞ்சுக்கோ முதல்ல .அதையும் அவர் குறளாக்கியுள்ளார் தெரியுமா   என புதிர்போட்டார் .
சொல்லுங்க என்றேன் .
செம்பான் ,செம்பானு ஒருத்தன் இருந்தான் அவன் வாழ்ந்த காலத்தே நாத்திகவாதம் தழைத்தெழ ஆரம்பித்திருந்தது. அவன் ஏதெச்சையாக அந்தக்கோஸ்டியில் சேர்ந்தான் .அது அவனுக்கு அனுகூலமான சில உபயங்களை அளித்தது .அவன் மெல்லமெல்ல பேமஸ் ஆனான் .பணமும் தாராளமாக கிடைத்தது. அதையோ பொழப்பாக்கிக்கொண்டான் . அதனால் ,அந்தக்கால கட்டத்தில், அரசனிடம் அவனுக்கு மரியாதை இருந்ததால் அரசனின் அபிமானத்தைப்பெற கடவுள் ஒருவன் உண்டு என புலம்ப ஆரம்பித்தான் .நாளாக ,நாளாக அரசனனுக்கு அனுக்கமாகி அவரவருக்கு ஒவ்வொரு கடவுள்கள் என்றான் .ஒரு நிலையில் தன்னை திரும்பிப்பார்த்தான் .எப்படி நம்மால் இவ்வளவு உயரமுடிந்தது ? என பகுத்தறிவேட சிந்தித்தான் .ஏதோ ஒன்று தான் இதற்குக்காரணமாக இருக்கமுடியும் என முடிவு செய்தான் .பின் கடவுளுக்கும் எமக்கும் பிரச்சினையில்லை என சற்று இழுத்தான். இப்படி நாத்திகத்தனத்தினால் உயர்ந்து பிறகு நாத்திகம் பேசியே ஆத்திகக்கூட்டத்தில் ஆத்திகநாத்திகனாகி ஆதாயம் பார்த்து அளப்பரிய ஆளாகிவிட்டான்.அவனை ஒரு நாள் திருவள்ளுவர்
சந்தித்தார்.அவனை தெரிந்துகொள்கின்றார் . உடனே அவனைப்பார்த்து அடே மடையா முதலில் பற்றற்றான் என்ற பற்றினை பற்றினாய் .உண்மையில் அப்பற்றினைப்பற்றுவது அதனை இது போல் விடுவதற்கு அன்று அது மடத்தனத்திற்கொல்லாம்  தலையான மடத்தனம் என நகையாடி

''பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு''

என பாடினார் தெரிஞ்சுக்கோ என்றார் .
நிலை உயரும்பொழுது ,தன் நிலை துறப்பவரை எவ்வாறு வள்ளுவர் சாடுகின்றார் பாத்தாயா .இப்ப எல்லா நாத்திகமும் இப்படித்தான் இருக்கு .திருவள்ளுவர் சொல்றத எவன் கோக்குரானுக .வாய் கிழிய திருவள்ளுவர் ,திருவள்ளுவருனு மட்டும் சொல்லுவானுங்க சொத்தப்பசங்க என்று குண்டைப்போட்டு  பொக்கைவாயில் நமட்டுச் சிரிப்புடன் என்னைப்பார்த்தார் .
என்னையும் உண்மை சுட்டது .
பற்றற்றான் என்று பகுத்தறிவுப்பற்றை பற்றவேண்டும் ,அப் பகுத்தறிவுப்பற்றைப் பற்றுவது மட்டும் சிறப்பல்ல அதனை விடாமல், மற்றவர்கள் பற்றுவதற்கும் முன்னேடியாகும் படி, பற்றவேண்டும் .
.


வள்ளுவர் அறியப்படவேண்டிய உண்மைகள் ....
மீள்வு ...தொடரும் ...
.


.
.
. Download As PDF

17 கருத்துகள் :

எல் கே சொன்னது…

nalla pagirvu nanbare

ரோகிணிசிவா சொன்னது…

//பற்றற்றான் என்று பகுத்தறிவுப்பற்றை பற்றவேண்டும் ,அப் பகுத்தறிவுப்பற்றைப் பற்றுவது மட்டும் சிறப்பல்ல அதனை விடாமல், மற்றவர்கள் பற்றுவதற்கும் முன்னேடியாகும் படி, பற்றவேண்டும்//

Radhakrishnan சொன்னது…

பகுத்தறிவு வாழ்த்து என்றல்லவா திருவள்ளுவர் குறிப்பிட்டு எழுதி இருக்க வேண்டும்.

விளக்கம் எல்லாம் சரி, ஆனா விளக்கம் நல்லா இல்லை. :)

பரிமள ராசன் சொன்னது…

நாத்திகனுக்கு எல்லா காலத்துகான பொது நூலோ பொது விதியோ இல்லை.மாறுதல் என்பதே மாறாதது என்பதே விதி.அதற்காக வோட்டு பொறுக்க போனவன் கதை ஒரு பக்கம் இருக்கட்டும்.இதுவே விதி(rule)என்றும் அதை மீறியவர்கள் கடவுள் பேச்சை கேட்காதவர்கள் என்று சொல்லும் எல்லா மதங்களை நம்புவர்கள் அந்த விதிகளை கடை பிடிக்கிறார்களா?அதனால் மதங்களை இழிவு படுத்துபவர்கள் மட மதவாதிகளே........

பொன் மாலை பொழுது சொன்னது…

சொம்பு தூக்குவதே, ஊர் சொத்தை வளைத்து போடுவதே, பதவியில் இருப்பவர் காலை நக்கி பிழைப்பதே பகுத்தறிவாளர்கள் வாழும் வாழும் வழி இன்றும். சோறு தின்ன பலருக்கு பல வழிகள்.

வள்ளுவனாவது.....பகுத்தறிவாவது....... நமக்கு ஏன் இந்த வீண் வேலை தோழரே!

cheena (சீனா) சொன்னது…

அன்பின் நண்டு

சிந்தனை செல்லும் திசை அருமை - இருப்பினும் விளக்கம் சரியான திசையில் செல்வதாகத் தெரிய வில்லை. நல்வாழ்த்துகல் நண்டு - நட்புடன் சீனா

எண்ணங்கள் 13189034291840215795 சொன்னது…

நிலை உயரும்பொழுது ,தன் நிலை துறப்பவரை எவ்வாறு வள்ளுவர் சாடுகின்றார் பாத்தாயா .இப்ப எல்லா நாத்திகமும் இப்படித்தான் இருக்கு

-----------

மிக சரி

Mathuvathanan Mounasamy / cowboymathu சொன்னது…

//எப்படி நம்மால் இவ்வளவு உயரமுடிந்தது ? என பகுத்தறிவேட சிந்தித்தான் .ஏதோ ஒன்று தான் இதற்குக்காரணமாக இருக்கமுடியும் என முடிவு செய்தான் . //

பகுத்தறிவோட சிந்திக்கிறானாம்.. என்னென்றே தெரியாமல் ஏதோ ஒன்றுதான் இதற்குக் காரணம் என்று முடிவு செய்கிறானாம்.

இது பகுத்தறிவா?

பக்கத்து வீட்டுக்காரன் நாத்திகன் என்று நானும் நாத்திகனாகுவோம் எனும் பேர்வழிகளை விட்டுவிடுங்கள்.

Jerry Eshananda சொன்னது…

தொடரட்டும்.

priyamudanprabu சொன்னது…

.இப்ப எல்லா நாத்திகமும் இப்படித்தான் இருக்கு
////////

same to aththiakm also ??

unga post la "naththiakam" nnu vsrum idathula "aththiakm" -nnu poddu parunga appavum same blood varum

iis it correct ?

பெயரில்லா சொன்னது…

super

தேவன் மாயம் சொன்னது…

weldone friend!1

goma சொன்னது…

நல்ல குறள் முத்து

Unknown சொன்னது…

வாழ்த்துக்கள் தோழா

ulagathamizharmaiyam சொன்னது…

நண்டு சொல்வது நன்று;நன்றல்லது
நண்டு சொல்வது அன்று;

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

எனது வலைப்பூவிற்கு வருகை தந்து
தமிழ்மணம் மற்றும் இன்ட்லி யில் வாக்களித்தவர்களுக்கும்
பின்னூட்டமிட்டவர்களுக்கும்
எனது மனமார்ந்த நன்றி கலந்த வணக்கத்தை
தெரிவித்துக்கொள்கிறேன் .

Jayadev Das சொன்னது…

\\\\பற்றற்றான் என்று பகுத்தறிவுப்பற்றை பற்றவேண்டும் ,அப் பகுத்தறிவுப்பற்றைப் பற்றுவது மட்டும் சிறப்பல்ல அதனை விடாமல், மற்றவர்கள் பற்றுவதற்கும் முன்னேடியாகும் படி, பற்றவேண்டும் .\\ ஹா....ஹா...ஹா... ம்ம்.... நீங்க வழக்கறிஞர் என்பதை நிரூபிச்சிட்டீங்க. [தொழிலே பொய்யை உண்மையாக்குவதுதானே, அது நல்லா வருது]. இதாவது பரவாயில்லை, ஊன் உண்ணாமை, வாய்மை, பிறன் மனை நோக்காமை என்று எல்லாத்துக்கும் இதே மாதிரி வியாக்கியானம் எழுதி, எல்லாமே பண்ணலாம் தப்பில்லை என்று சொன்னீங்கன்னா நிலைமை என்னத்துக்காகும், யோசிச்சீங்களா?

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "